சேலத்தில் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. சிங்காரம், சீனியர்களை ஓரங் கட்டுவதால் ஒட்டுமொத்த மூத்த ர.ர.க்களும் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

Advertisment

கடந்த பாராளு மன்றத் தேர்தலின்போது, மொரப்பூர் தொகுதி அ.தி. மு.க. முன்னாள் எம்.எல். ஏ.வான சிங்காரத்தை, சேலம் மாநகரப் பொறுப் பாளராக நியமித்தார் அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. அவரும் வந்த வேகத்தில் சூட்டோடு சூடாக வார்டு மற்றும் பகுதிகளைப் பிரித்து இளைஞர்களைச் செயலாளர்களாக நியமித்தார். 

Advertisment

கடந்த 10 ஆண்டாக மா.செ.வாக வலம்வந்த வெங்கடாசலத்தைக் கட்டம் கட்டிவிட்டு, முன்னாள் கவுன்சிலர் ஏ.கே.எஸ்.எம்.பாலுவை மா.செ.வாக கொண்டுவந் தார். சிங்காரத்தின் தடா லடிகளும், 'சுருக்' பேச்சும் கட்சி சீனியர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது.  

சேலம் மாநகர அ.தி.மு.க.வில் நடக்கும் மோதல்கள் குறித்து மூத்த நிர்வாகிகள் நம்மிடம் விரிவாகப் பேசினார்கள். "தங்களிடம் எடுபிடியாக இருந்துவந்த பலரை தங்க ளுக்குச் சமமாக வார்டு செயலாளர் பொறுப்பில் நியமித்துவிட்டாரே என சிங்காரத்தின்மீது மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைந்தனர். இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் 41-வது வார்டு செயலாளராக இருந்த முன்னாள் கவுன்சிலர் அன்பழகன், ஆதரவாளர்கள் 30 பேருடன் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டார். அம்மாபேட்டை ப.செ. எல்.வி.பிரகாஷ், அஸ்தம்பட்டி ப.செ. கே.ஆர்.சரவணன் ஆகியோரின் பதவிகளையும் பறித்துவிட்டு அவர்களை 'டம்மி' பதவிகளில் அமர்த்தினார். 

Advertisment

இந்நிலையில், 56-வது வார்டில் பூத் கமிட்டி பணிகளை மேற்கொள்ள சிங்காரம் 9 பேர் குழுவை நியமித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வார்டு து.செ. ஜினோத் குமார் சம்பத், காலங் காலமாக இப்பணி களை மேற் கொண்டுவரும் எங்களைப் போன்ற சீனி யர்களுக்கு தான் பூத் கமிட்டி பணி களை ஒதுக்க வேண்டும் என்று சிங்காரத்திடம் வெளிப்படையாகவே மோதினார். கடந்த அக். 6-ஆம் தேதி நடந்த கூட்டத்தில், கவுன்சிலர் கே.சி.செல்வராஜ் தனது வட்டச் செயலாளர் பதவியைப் பறித்து சுந்தரபாண்டியன்வசம் வழங்கியதைக் கண்டித்து சிங்காரத்திடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இப்படி சீனியர்கள் பலருக்கு 'செக்' வைத்த சிங்காரம், சேலம் தெற்கு எம்.எல்.ஏ. பாலசுப்ரணியம் வசமிருந்த 46-வது வட்டக்கழக செயலாளர் பதவியையும் தட்டித் தூக்கினார். இதுகுறித்து பாலசுப்ரமணியம் எம்.எல்.ஏ., எடப்பாடியிடம் புலம்பித்தள்ள, அவருக்கு மாநில அளவில் ஒரு டம்மியான பொறுப்பு கொடுத்து அமைதிப் படுத்தியிருக்கிறது கட்சித் தலைமை'' என்கிறார்கள் மூத்த ர.ர.க்கள். 

இதுதொடர்பாக சேலம் தெற்கு எம்.எல்.ஏ. பாலசுப்ரமணியத்திடம் கேட்டோம்...  

"கட்சி நிர்வாகிகளை, ஏதோ பண்ணையத்தில் வேலைசெய்பவர்களைப் போல மரியாதைக்குறை வாக நடத்துகிறார். என்னை வட்டச் செயலாளர் பதவியைவிட்டு நீக்கியது குறித்து கட்சித் தலைமையிடம் முறையிட்டேன். 46-வது வார்டில் நான் கட்சியை வளர்த்திருப்பதால்தான் எம்.பி. தேர்தலில் என் வார்டில் கூடுதல் ஓட்டு வாங்கியிருக்கிறோம். காண்ட்ராக்டர்களிடம் கமிஷன் வாங்காமல் நேர்மையாக பணிகளைச் செய்துவருகிறேன். புறநகரைச் சேர்ந்த வினோத் என்பவரை சிட்டிக்குள் கொண்டுவந்து பொறுப்பு வழங்கியிருக்கிறார். சிங்காரம் வெளியேறினால்தான் சேலம் மாநகர அ.தி.மு.க. உருப்படும்'' என கொந்தளித்தார் எம்.எல்.ஏ. பாலசுப்ரணியம்.  

துணைச்செயலாளர் ஜினோத்குமார் சம்பத் கூறுகையில், "கட்சிப் பொதுச்செயலாளர் இருக்கும் ஊரிலேயே பொறுப்பாளர் போடவேண்டிய தேவையென்ன வந்தது? நான் ரியல் எஸ்டேட் தொழில் செய்துதான் சம்பாதிக்கிறேனே தவிர, ஒருபோதும் கட்சிப் பணத்தை கையாடல் செய்யவில்லை. என்னைப் போன்ற சீனியர்களை ஒதுக்கிவிட்டு புதியவர்களை பூத் கமிட்டிக்கு நியமித்தது தவறு'' என்றார்.  

இதுபற்றி சிங்காரத்திடம் விளக்கம் கேட்ட போது, "சேலம் மா.செ.வாக இருந்த வெங்கடாசலம் தொடர்ந்து 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.வாக இருந்து பலநூறு கோடி சொத்துகளைக் குவித்துவிட்டார். ஆனால் கட்சி அலுவலகம் இருந்த இடம் அவருடை யது என்பதால் அலுவலகத்திற் குப் பூட்டுப் போட்டு விட்டுப் போய்விட் டார். அப்படிப்பட்டவர் எதற்கு மா.செ. ஆக நீடிக்க வேண்டும்? 

எம்.எல்.ஏ. பாலசுப்ரமணி யம், சொந்த வார்டில்கூட கட்சியை வளர்க்க வில்லை. அதனால்தான் அவருடைய வார்டு செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இப்போது அந்த வார்டு முழுக்க புதிய நிர்வாகிகள் நியமிக் கப்பட்டு, கட்சி வேலைகள் ஜரூராக நடக்கின்றன. 

மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலின்போது கட்சித் தலைமை கொடுத்த 30 லட்சம் ரூபாயை சுருட்டிக்கொண்ட ஜினோத்குமார், வாக்கு எண்ணிக்கை அன்று ஒகேனக்கல்லுக்கு டூர் சென்றுவிட்டார். வரும் தேர்தலிலும் கட்சிப் பணத்தை சுருட்டுவதற்காகத்தான் பூத் கமிட்டி பணிகளை நாங்கள்தான் செய்வோம் என்று பிரச்னை செய்கிறார். 

பூத் கமிட்டி பணிகளுக்காக பூத்துக்கு 2000 ரூபாய் கொடுத்து வேலைசெய்யும்படி ப.செ. ஜெகதீஸ்குமாருக்கு சொல்லப்பட்டது. ஆனால் அவர் செலவுசெய்ய முடியாது என்று சொல்லி விட்டார். இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவராகவே ஒதுங்கிக்கொண்டார். கட்சித் தலைமை எனக்குக் கொடுத்த வேலைகளை நேர்மையாகச் செய்கிறேன். வரும் தேர்தலில் அ.தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தவேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறேன். எனக்கு கட்சியில் வேலை செய்யக்கூடிய ஆள்கள்தான் வேண்டும். போட்டோஷூட் நடத்தும் ஆள்கள் வேண்டாம்'' என்றார்.  

சிங்காரத்திற்கு எதிராக அதிருப்தி கோஷ்டி யினர் என்னதான் புகார் மனுக்களை தட்டிவிட் டாலும், எடப்பாடி பழனிசாமியோ பாராமுகமாக இருப்பதாக புலம்புகின்றனர் சீனியர்கள். வரும் தேர்தலில் இதற்கான விலையை அ.தி.மு.க. கொடுத்தே தீரும் என வெளிப்படையாகவே புலம்பிவருகின்றனர் அதிருப்தியிலுள்ள ர.ர.க்கள்.