Advertisment

அரசியல் களத்தில் அறிவுத் திருவிழா!

DMK-arivu-fest

ர் அரசியல் கட்சி தேர்தல் நெருங்கிவரும் நேரத் தில் என்னென்ன செய் யும்? தன் கட்சியைப் பலப்படுத்தும், உறுப் பினர்களை அதிகமாக் கும். மக்களிடம் பிரச் சாரம் செய்யும். கூட்டணியை வலிமைப்படுத்தும். அதிக தொகுதியில் வெற்றி பெறுவதற்கு என்னென்ன வேலைகள் செய்யவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்படும். தி.மு.க. என்பது 75 ஆண்டுகால அரசியல் கட்சி. இப்போதும் ஆட்சியில் இருக்கிற கட்சி. ஆறு மாதத்தில் தேர்தலை எதிர்கொள்கிற கட்சி. இந்த நிலையில், தி.முக.வின் இளைஞரணி, அரசியல் களச் செயல்பாடுகளைத் தாண்டி இளைய தலைமுறை யினரிடம் தமிழ்நாட்டின் பண்பாட்டுப் பெருமைகளை -திராவிட இயக்கத்தின் வரலாற்றை -அதன் போராட்டங்களை -ஆட்சிக்கால சாதனைகளை கொண்டுபோய் சேர்க்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அறிவுத் திருவிழாவை நடத்தி அசத்திக்காட்டியிருக்கிறது. 

Advertisment

2025 நவம்பர் 8, 9 ஆகிய இருநாட்களும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற அறிவுத் திருவிழாவும், அதனுடன் ஒட்டிய 9 நாட் கள் முற்போக்கு புத்தகக் காட்சியும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வெளி யிடப்பட்ட "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' என்கிற தி.மு.க.வின் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட 1125 பக்க கட்டுரைகள் தொகுப்பும் இளைஞரணிச் செயலாளரான துணை முதலமைச்சர் உதயநிதியின் தொலைநோக்குப் பார்வையுடனான புதிய பாய்ச்சலைக் காட்டுவதாக அமைந்தது. 

Advertisment

நவம்பர் 8ஆம் தேதி வள்ளுவர் கோட்டத் தில் முதல் நிகழ்ச்சியாக முற்போக்கு புத்தகக் காட்சியைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இந்தப் புத்தகக் காட்சியில் அரசியல் தத்துவங்கள் சார்ந்த புத்தக அரங்குகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. திராவிடம், கம்யூனிசம், தலித்தியம், பெண்ணியம் உள்ளிட்ட முற்போக்கு சிந்தனைகளைக் கொண்ட புத்தகங்களை வெளியிட்டு வரும் நக்கீரன் உள்ளிட்ட பல பதிப்பகங்கள் பங்கேற்றன. தொடக்க விழாவில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் இந்து என்.ராம், நக்கீரன் ஆசிரியர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

இதனைத் தொடர்ந்து, வள்ளுவர் கோட்டம் அரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வரலாற் றுப் புகைப்படக் கண்காட்சியை தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் திறந்து வைத்தார். 

வள்ளுவர் கோட்டத்தின் அரங்கம் நிறைந் திருந்த விழாவில், "காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' என்ற புத்தகத்தை முதலமைச்சர் வெளியிட்டார். இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தலைமையில் அமைந்த ஆலோசனைக் குழுவில் திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு, பத்திரிகையாளர்கள் விஜயசங்கர், திருமாவேலன், கோவி.லெனின் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்து இந்தப் புத்தகப் பணியை மேற்கொண்டுள்ளனர். அன்பகம் பொறுப்பாசிரியர் குழு, புத்தக ஆக்கத்தை மேற்கொண்டது. முதன்முதலாக தி.மு.க.வின் சார்பில் அதன் வரலாற்றை மிகப் பெரிய தொகுப்பாக அதிகாரப் பூர்வமாக வெளியிடும் நிகழ்வாக இது அமைந்தது.  தோழமைக் கட்சித் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றதுடன், சோனியா, ராகுல் உள்பட இந்தியா கூட்டணியின் தலைவர்களின் பார்வையில் தி.மு.க.வைப் பற்றிய கட்டுரைகளும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. 

புத்தக வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து ‘"இருவண்ணக் கொடிக்கு வயது 75'’ என்ற தலைப்பிலான இரண்டு நாட்கள் கருத்தரங்கத்தின் முதல் அமர்வு தொடங்கியது. ஒரு நிமிட ரீல்ஸைத் தாண்டி, பேச்சைக் கேட்கத் தயங்கும் தலைமுறையினரிடம் இரண்டு நாட்கள் பேச்சு என்பது மிகவும் சவாலானது. எனினும், தி.மு.க என்பது பேசி வளர்ந்த இயக்கம். 1951ஆம் ஆண்டு நடைபெற்ற தி.மு.கவின் முதல் மாநாடு 4 நாட்கள் சென்னையில் நடைபெற்றது.   பல்வேறு தலைப்புகளில் தி.மு.க பேச்சாளர்கள்  உரையாற்றினர். அதன்பிறகு முன்னணித் தலைவர்கள் உரையாற்றிய பின், அண்ணாவின் சிறப்புரை நிகழ்ந்தது.

தி.மு.க.வின் பொதுக்கூட்டங்கள் மாலை நேரக் கல்லூரிகள் என்றால், தி.மு.க. நடத்தும் மாநாடுகளும் கருத்தரங்குகளும் திறந்த வெளிப் பல்கலைக்கழகங்கள். ஒன்றும் அறியாத பாமரர்களும் அரசியல் தெளிவு பெறுவார்கள். மெத்தப் படித்ததாக நினைத்திருப்போரும்கூட, இதை நாம் அறியாமல் போய்விட்டோமே எனும் அளவில் புதிய செய்திகளைத் தெரிந்து கொள்வார்கள். அப்படித்தான் பத்து அமர்வுகள்- 44 சொற்பொழிவாளர்களைக் கொண்ட முதல் அமர்வு அமைந்தது. 

DMK-arivu-fest1

முதல் அமர்வுக்குத் தலைமை தாங்கியவர் திராவிட இயக்க ஆய்வாளரான க.திருநாவுக்கரசு. அவர் தனது உரையில், முதலமைச்சர் வெளியிட்ட புத்தகத்தின் சிறப்பையும், அதில் தி.மு.க.வின் பன்முகத்தன்மை வாய்ந்த பங்களிப்பு பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றிருப்பதையும் எடுத்துக் கூறி, “"முன்பு புத்தர் அறிவியக்கத்தைத் தொடங்கினார். பின்னர், தந்தை பெரியார் அவர்கள் அறிவியக்கத்தைத் தொடங்கினார். தி.மு.க.வைத் தொடங்கிய அண்ணா கட்சியின் தலைமைக் கழகத்திற்கு அறிவகம் என்று பெயர் சூட்டினார். எனவே அறிவியக்கத்தைச் சேர்ந்த நாம் அறிவுத் திருவிழாவை நடத்துவதில் ஒன்றும் வியப்பில்லை. இந்தப் பெயரை சூட்டியது உதயநிதி என்பதால் நாம் இரட்டிப்பு மகிழ்ச்சி அடையவேண்டும். அவர் தன் தந்தையைக் காட்டிலும், தாத்தாவைக் காட்டிலும், அண்ணாவைக் காட்டிலும், பெரியாரைக் காட்டிலும் இந்தக் காலத்தில் இத்தகைய பெரும் பாய்ச்சலுடன் இருப்பதற்கு நாம் நமது பாராட்டையும் மகிழ்ச்சி யையும் தெரிவிக்கிறோம்'' என்று கூறி அந்த அமர்வின் சொற் பொழிவாளர்களைப் பேச அழைத்தார். 

"வரலாறாய் வாழும் இயக்கம்' என்ற தலைப்பில் பேரா சிரியர் இரா.தி.சபாபதிமோகன்- "இன்றைக்கு மகாராஷ்ட்ராவிலே என்ன நடக்கிறது? தமிழ்நாட் டைப் பார். அங்கு ஆளும் மு.க.ஸ்டாலினைப் பார். அவர் மகன் உதயநிதியைப் பார். இந்தியை எதிர்க்கிறார்கள். சனாதனத்தை எதிர்த்து நிற்கிறார்கள். அவர்கள் எதிர்ப்ப தால்தான் இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து தாய்மொழியைக் காப்பாற்றியிருக்கிறார்கள். அதுபோல நாமும் எதிர்த்தால் நம்முடைய தாய்மொழியான மராட்டியத்தைக் காப்பாற்ற முடியும் என்று போராடு கிறார்கள் என்றால் தி.மு.க.வின் வரலாறு மற்ற மாநிலங்களுக்குப் பாடமாக அமைகிறது. நம்முடைய மாநில சுயாட்சிக் கொள்கையை நிறைவேற்ற வேண்டிய காலத்தில் உதயநிதி இருக்கிறார்'' என்றார். 

"தேசிய அரசியலில் தி.மு.க.' என்ற தலைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, "இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இந்தியா என்பது இறையாண்மை மிக்க, மதச்சார்பின்மை, சமத் துவ, ஜனநாயக குடியரசு என்று குறிப்பிடப் பட்டுள்ளது. அரசியல் சட்டத்தின் இந்த அம்சங்களை காத்த ஒரே இயக்கம் இந்தியாவில் திராவிட முன்னேற்றக் கழகம்தான். 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் போர் நடந்தபோது தமிழ்நாட்டின் சார்பில் இந்தியாவிலேயே யாரும் தராத வகையில் 6 கோடி ரூபாய் நிதி திரட்டி பிரதமர் இந்திராகாந்தியிடம் தந்தவர் அன்றைய முதலமைச் சர் கலைஞர். 1999ல் கார்கில் போர் நடந்தபோது அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் தமிழ்நாட்டின் சார்பில் 100 கோடி ரூபாய் நிதி திரட்டித் தந்தவரும் கலைஞர்தான். இதன்மூலம் இந்தியாவின் இறையாண்மையை நிலைநாட்டினார். 

DMK-arivu-fest2

வாஜ்பாய் ஆட்சியில் பங்கேற்றபோதும் பா.ஜ.க.வின் ராமர் கோவில், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் பறிப்பு, பொது சிவில் சட்டம் ஆகிய வற்றை குறைந்தபட்ச பொது செயல்திட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தி மதச்சார்பின்மையைக் காப்பாற்றியவர் கலைஞர். முதலாளிகளுக்கு மட்டுமே பயன்பட்ட வங்கிகளை ஏழைகளுக்கும் பயன்படும் வகையில் பிரதமர் இந்திரா தேசியமய மாக்க முயற்சித்தபோது அதை எதிர்த்தவர் நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய். அந்த நேரத்தில், நீங்கள் நாட்டுடைமையாக்குங்கள். தி.மு.க உங்க ளுக்கு ஆதரவளிக்கும் என்று சொல்லி, அதனை நிறைவேற்றி சமத்துவம் காத்தவர் கலைஞர். மிசா காலத்தில் சிறை சென்றவர் இன்றைய முதலமைச்சர். அந்த நேரத்தில் அதை எதிர்த்து நின்றதுடன், இந்திய அளவில் ஒரு கூட்டணியை உருவாக்கி, அதனை ஆட்சிக்கு கொண்டுவந்து ஜனநாயகத்தைக் காத்தவரும் கலைஞர்தான். பெரியார், அண்ணா, கலைஞர் காலத்தில் இல்லாத பலம் இன்று பா.ஜ.க.வுக்கு நாடாளுமன்றத்தில் உள்ள நிலையிலும், குடியரசுக்குரிய மாண்பை காக்கும் வகையில் தமிழ்நாட்டின் தொகுதிகள் பறிபோகக்கூடாது என்றும், தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமை பறிபோகக்கூடாது என்றும் போராடி, தமிழ்நாடு எப்பவும் டெல்லிக்கு அவுட் ஆஃப் கன்ட்ரோல்தான் என அறிவித்து குடியரசைக் காத்திருக்கிறார் இன்றைய முதலமைச்சர்'' என்றார். 

"மொழிப்போர் அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் திருச்சி சிவா, "அரசியல் நிர்ணய சபையிலே பல மாதகாலம் விவாதங்களுக்குப் பிறகு இந்தி ஆட்சி மொழி என்றும், ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. ஆனாலும், அரசியல் சட்டத்தின் 343வது பிரிவின்படி, வேறெந்த சட்ட திருத்தமும் கொண்டுவராவிட்டால் 15 ஆண்டுகளில் இந்தியாவின் ஆட்சிமொழியாக்க வேண்டும் என்பது சேர்க்கப்பட்டது. அதனால்தான், 1950ல் இந்தியா குடியரசான நிலையில், 1965ல் இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்ற நிலை உருவானது. அதற்கு முன்பே 1963ல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்தி ஆதிக்கத்திற்கு எதிராக அண்ணா பேசினார். இந்தியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சி மொழியாக நீடிக்கும் என்று ஆட்சி யாளர்கள் சொன்னார்கள். அதை மீறி, அரசியல் சட்டத்தில் உள்ள இந்தியை வளர்க்க வேண்டும் என்ற பிரிவை முன்னிறுத்தி ஆட்சியாளர்கள் செயல்பட்ட காரணத்தால்தான் 1964-65ஆம் ஆண்டுகளில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது. மாணவர்களும் இளைஞர்களும் தீக்குளித்தனர். துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாயினர். கலவரத்தை அடக்க முதன்முறையாக ராணுவம் வந்தது. கலைஞர் தனிமைச் சிறையில் அடைக்கப் பட்டார்.

DMK-arivu-fest3

அண்ணா ஆட்சிக்கு வந்தபிறகு இருமொழிக் கொள்கை சட்டத்தை நிலைநாட்டி, தமிழ்நாட்டில் இந்திக்கு இடமில்லை எனச்செய்து, மாநில அரசின் வலிமையைக் காட்டினார். ஆனாலும் இந்தித் திணிப்பை எதிர்க்கும் போராட்டம் முடியவில்லை. முரசொலி மாறன் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த தனிநபர் தீர்மானம், அதன்பிறகு 30 ஆண்டுகள் கழித்து நான் கொண்டு வந்த தனிநபர் தீர்மானம் ஆகியவை தோற்கடிக்கப்பட்டாலும், இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளையும் ஆட்சி மொழியாக்குவதுதான் மொழிப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு'' என்றார்.

-கீரன்

(கருத்தரங்கம் தொடரும்...)

nkn191125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe