"அன்னிக்கு எங்க வீட்டு மூத்தவரை இழந்தோம். வலியை எப்படி அனுபவிச்சிருப்போம். அவரை எப்படி செஞ்சாங்களோ அதே மாதிரி இப்ப நாங்க செஞ்சிருக்கோம்'' எனச் சொன் னது, பழிக்குப் பழியாக கணவன், மனைவியை பலிவாங்கிய கும்பல்.
வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் திண்டுக்கல் நத்தம் சாலையிலுள்ள ஆர்.எம்.டி.சி. காலனி அருகே டூவீலரில் வந்த ஒருவரை இடித்துத்தள்ளி நிலைதடுமாற வைத்தது ஒரு கார். டூவீலரில் வந்தவர் விழுந்து எழுந்து சுதாரிக்குமுன் காரிலிருந்து இறங்கிய கும்பல், தங்களிடமிருந்த வாளால் வெட்டி தலையை சிதைத்துவிட்டு, உயிரில்லையென்பதை உறுதி செய்துவிட்டு நிதானமாக அங்கிருந்து புறப்பட்டது. தொடர்ச்சியாக, பலியானவரின் இரண்டாவது மனைவி தீபிகாவை, யாகப்பன்பட்டியிலுள்ள அவரது வீட்டிற்குள் புகுந்து, அவரை வெளியே இழுத்துவந்து வெட்டிச் சிதைத்து வெறியை தீர்த்துக் கொண்டது அதே கும்பல்.
இதனை தடுக்கச் சென்ற அவரது மகன் ம

இதனை தடுக்கச் சென்ற அவரது மகன் மற்றும் உறவினர் மகளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. ஒரே நேரத்தில் அடுத்தடுத்து கணவன், மனைவி என இருவரும் கொலையானதால் அவசர அவசரமாக வந்த திண்டுக்கல் தாலுகா போலீஸ், கொலைக்கு காரணமானவர்களை தேடிக் கைது செய்ய ஆரம்பித்தது.
தலை சிதைக்கப்பட்டு கொலையானவர் பெயர் சேசுராஜ். அவரது மனைவி தீபிகா. நத்தம் சாலையிலுள்ள யாகப்பன்பட்டியில் வசித்துவரும் சேசுராஜ், கொலை ஒன்றிற்காக இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். நீதிமன்ற முன்னெடுப்புகளால் சமீபத்தில் ஜாமீனில் வெளிவந்திருக்கிறார். ஜாமீனில் வெளிவந்தவர், திண்டுக்கல் நீதிமன்றத்தில் கண்டிஷன் பெயில் போட்ட நிலையில், பாதுகாப்பு கருதி சொந்த ஊரான யாகப்பன் பட்டியில் தங்காமல் அருகிலுள்ள கொசவப்பட்டியில் தங்கியிருக்கின்றார். மீன் வியாபாரத்திற்காக கொசவப்பட்டியில் கடை பார்த்துவிட்டு ஆர்.எம்.டி.சி. காலனி வழியாக டூவீலரில் வந்த பொழுது காரால் இடித்துத் தள்ளிவிடப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
இரு தரப்பிற்கும் இருந்த பகையால் கடந்த 2024-ம் ஆண்டு, மே 23-ம் தேதி இரவு, யாகப்பன்பட்டியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் மாயாண்டி ஜோசப் கொலை செய்யப்பட்டார். அந்த கொலையை செய்த 9 குற்றவாளிகளில் சேசுராஜ் தான் முதன்மைக் குற்றவாளி. இதில் சேசுராஜுக்கு இரட்டை ஆயுள் தண்ட னையை வழங்கியது திண்டுக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றம். மதுரை சிறையிலிருந்த சேசுராஜை இரண்டாவது மனைவியான தீபிகா, மதுரை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டு, சிறையிலிருந்த தனது கணவரை 19.12.25 அன்று பிணையில் எடுத்தார். இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர் ஜாமீனில் வெளியில் வந்து மீன் கடை வைத்து தொழில் நடத்தப்போவதாக அறிந்த மாயாண்டி ஜோசப்பின் உறவினர்கள், ஆத்திரமடைந்து, இருவரையும் கொலை செய்துள்ளனர் என்றது போலீஸாரின் முதற்கட்ட விசாரணை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/kolai1-2026-01-12-17-38-37.jpg)
தொடர்ச்சியான விசாரணையின் அடிப்படையில், மாயாண்டி ஜோசப்பின் தம்பி உள்ளிட்ட உறவினர்களை கைது செய்துள்ளது திண்டுக்கல் தாலுகா போலீஸ். ஜாமீனில் வெளியே வந்த சேசுராஜின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததை, உளவு போலீஸார் எச்சரித்தும், தாலுகா போலீஸார் கண்டும் காணாமல் இருந்ததால் இரண்டு கொலைகள் நடந்துள்ளது என்கின்றனர் மாவட்ட உளவுப்பிரிவு போலீஸார்.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்த நிலையில், "இந்த வழக்கினைப் பொறுத்தவரை இருதரப்புமே உறவினர்கள். யாகப்பன்பட்டியில் மாதா கோவில் ஒன்று இருக்கின்றது. ஊரின் நாட்டாமையாக தேர்ந்தெடுக்கப்படுபவர் மாதா கோவில் திருவிழாவினை தலைமை தாங்கி நடத்துவது வழக்கம். கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் நாட்டாமையாக இருந்து தற்பொழுது கொலையான சேசுராஜ், ஊர் கணக்கு விவகாரங்களில் கொள்ளை அடித்திருக்கின்றார் என மாயாண்டி ஜோசப் தரப்பு புகாரளிக்க, அதனடிப்படையில் நாட்டாமை பதவியிலிருந்து சேசுராஜ் நீக்கப்பட்டார். நம்மை அவமானப் படுத்தி விட்டார்களே என்ற எண்ணக் கொந்தளிப்பில், 2024-ம் ஆண்டு தனக்கு சொந்தமான டாஸ்மாக் பார் கடைக்கு சென்று திரும்பிய வேளையில், மாயாண்டி ஜோசப் வந்த டூவீலரை இடித்துத் தள்ளி அவரை கொலை செய்தனர். கொலைக்குற்றவாளிகளாக சேசுராஜ் கென்னடி, டேனியல்ராஜ், அலெக்ஸ் பிரிட்டோ, காளீஸ்வரன், பிரவீன்குமார் ஸ்டாலின் ஆகியோரைக் கைது செய்தது போலீஸ். அதனடிப்படையில் தண்டனையையும் விரைவாக அறிவித்தது நீதிமன்றம். ஆனால் சேசுராஜ் ஜாமீன் பெற்று வந்தார். எப்படி எங்களால் இதனை பொறுத்துக்கொள்ள முடியும்? அதனால் தான், எப்படி எங்களது வண்டியை இடித்து கொலை செய்தார்களோ, அதே பாணியில் நாங்களும் கொலை செய்தோம். அதுபோல் அந்த குடும்பத்தில் யாரும் மீண்டு வரக்கூடாது என்பதால் அவரது மனைவியையும் கொலை செய்தோம் என்றிருக்கிறது கொலைக்கும்பல்.
இதனின் நீட்சியாக மீண்டும் பழிக்குப் பழியாக கொலைகள் விழ வாய்ப்பிருக்கின்றது என எச்சரிக்கின்றனர் யாகப்பன்பட்டி மக்கள். காவல்துறை அதனை தடுக்கவேண்டு மென்பதுதான் மக்களின் கோரிக்கை. தடுக்குமா காவல்துறை?
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us