Advertisment

சிறுமியைச் சீரழித்த கும்பலில்  தி.மு.க. நிர்வாகி!

dmkperson

திருச்சிராப்பள்ளி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற நிலையில் பாலியல்ரீதியான துன்புறுத்தல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகளை காலாண்டு ஆய்விற்காக பரிசீலனை செய்தனர். அப்பொழுது திருச்சியைச் சேர்ந்த 15 வயது  சிறுமி, தாயாரின் உறவினர்களாலும் இன்னும் பலராலும் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட வழக்கு அவர்களது கவனத்தை ஈர்த்தது. 

Advertisment

சிறுமியிடம் உரிய விசாரணை மேற்கொண்டு சிறுமியை பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உட்படுத்திய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் கடந்த 03.01.2026-ல் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் திருச்சி தென்னூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம்  விசாரணை மேற் கொண்டனர். 

Advertisment

விசாரணையில் அவர் தெரிவித்ததன்படி, கரூர் மாவட்டம் செல்லிபாளையம் மனவாலி கிராமத்தில் சிறுமி தாயுடன் வசித்து வந்திருக் கிறார். கடந்த 202

திருச்சிராப்பள்ளி குழந்தைகள் நலக்குழுவின் தலைவர், உறுப்பினர்கள் கடந்த அக்டோபர் மாதத்தில் புதிதாகப் பொறுப்பேற்ற நிலையில் பாலியல்ரீதியான துன்புறுத்தல்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகளை காலாண்டு ஆய்விற்காக பரிசீலனை செய்தனர். அப்பொழுது திருச்சியைச் சேர்ந்த 15 வயது  சிறுமி, தாயாரின் உறவினர்களாலும் இன்னும் பலராலும் பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட வழக்கு அவர்களது கவனத்தை ஈர்த்தது. 

Advertisment

சிறுமியிடம் உரிய விசாரணை மேற்கொண்டு சிறுமியை பாலியல் ரீதியான தாக்குதலுக்கு உட்படுத்திய நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்திட அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் கடந்த 03.01.2026-ல் திருச்சி மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் திருச்சி தென்னூரைச் சேர்ந்த 15 வயது சிறுமியிடம்  விசாரணை மேற் கொண்டனர். 

Advertisment

விசாரணையில் அவர் தெரிவித்ததன்படி, கரூர் மாவட்டம் செல்லிபாளையம் மனவாலி கிராமத்தில் சிறுமி தாயுடன் வசித்து வந்திருக் கிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு 6-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது திருச்சி தென்னூர் ஆப்பக்காரத் தெருவில் குடியிருந்து வந்தார். அரையாண்டுத் தேர்வு விடுமுறையின்போது பரமத்திவேலூரிலுள்ள தனது தாத்தாவின் இரண்டாவது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால் அவரை கவனித்துக்கொள்ள அழைத்துச்செல்லப்பட்டார். அப்போது சிறுமி ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பாடு வாங்கச் சென்றுவரும்போது அங்கு வேலைசெய்யும் சப்ளையர் ரவியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த ரவி, பாட்டி வீட்டிலில்லாதபோது சிறுமியுடன் பல முறை தவறாக நடந்துகொண்டிருக்கிறார். அதைப் பாட்டியிடம் சொன்னபோதும் பாட்டி கண்டுகொள்ளவில்லை. 

சிறுமி 7-ஆம் வகுப்பு படிக்கும்போது அவரது அம்மா வேலைக்குச் சென்றபின் வீட்டுக்குப் பின்னால் வேலை செய்யவந்த முடவரான தாத்தா சிறுமியின் வீட்டில் வைத்து சிறுமியிடம் மூன்று முறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். சிறுமியின் தாத்தா வனராஜும் அவரது தம்பி காளையும் (திருச்சி 27-வது வார்டு தி.மு.க. வட்டச் செயலாளர்) ஆகியோர் திருச்சி தென்னூரில் வசித்துவருகின்றனர். அவர்களுக்கு அம்மா அடிக்கடி சாப்பாடு கொடுத்து அனுப்பிவைத்ததாகவும், சாப்பாடு கொடுக்கச் சென்றிருந்தபோது சிறுமியின் சின்ன தாத்தா காளையும், அவருடைய நண்பர்கள் செல்வராஜ், சரண்ராஜ்குமார், மோகன்ராஜ், சரவணன், சந்திரன், சிறுமியின் தாய்மாமா மணிகண்டன் ஆகியோரும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டிருக்கின்றனர். 

கரூர் நீலமேட்டிலுள்ள சிறுமியின் அத்தை வீட்டிற்குச் சென்றிருந்தபோது அவரது மகன் அஸ்வின் அவருடைய வீட்டில் வைத்து வன்புணர்வில் ஈடுபட்டிருக்கிறார். கரூர் கோவில் திருவிழாவிற்கு மைக்செட் கட்ட வந்திருந்த கவின் என்பவர் மைக் செட் வைத்திருந்த கூடத்தில்வைத்து அத்துமீறி யிருக்கிறார். இந்நிலையில் சிறுமி கர்ப்பமாக, திருச்சி ஜெனட் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். சிறுமி கர்ப்பிணியாக இருப்பதாகவும், சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லவும் தாயிடம் கூறியுள்ளனர். சிறுமியின் தாயார் அரசு மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிற்கு அழைத்துச்சென்றுவிட்டார்.  இந்நிலையில் கடந்த 14-08-2023ஆம் தேதி சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் திருச்சி ஜெனட் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. மருத்துவமனையில் குழந்தையை விட்டுவிட்டு யாருக்கும் தெரியாமல் சிறுமியும், அவரது அம்மாவும் கரூருக்குச் சென்றுவிட்டனர். பின்னர் 5 நாட்கள் கழித்து போலீசார் கரூரிலிருந்து சிறுமியை அழைத்துவந்து குழந்தைகள் நலக் குழுமத்தில் ஆஜர் செய்தனர்.

குழந்தை பிறந்த பிறகும், 2025-ஆம் வருடம் ஜனவரி மாதத்தில் சிறுமி தனது அம்மாவுடன் கரூரில் தங்கியிருந்தபோது, அம்மாவுக்குத் தெரிந்த கரூர் வெடிமருந்து கம்பெனியில் வேலை பார்க்கும் செல்லத்துரை என்பவர் சிறுமியுடன் பழகிவந்திருக்கிறார். அவரும் லிங்கத்தூர் காட்டுப்பகுதியில் வன்புணர்வு செய்ததாக சிறுமி விசாரணையில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் மாவட்ட குழந்தை பாது காப்பு அலகு அதிகாரி ராகுல்காந்தி கொடுத்த புகாரினடிப்படையில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 16 வயது சிறுமியை கடந்த 6 ஆண்டுகளாக உற வினர்களே பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக் கியது தொடர்பாகத் தாத்தா, தாய்மாமன் உள்ளிட்ட 15 பேர்மீது போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என மிரட்டப்பட்டதால், இத்தனை ஆண்டுகளாகச் சிறுமி இந்த நரக வேதனையை மௌனமாகச் சகித்துவந்துள்ளார். ஸ்ரீரங்கத்தில் அரங்கேறியுள்ள இந்த மனிதாபிமானமற்ற செயல் ஒட்டுமொத்த தமிழகத்தையே அதிரவைத்துள்ளது. 

புகாரையடுத்து, ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் சிறுமியின் குற்றச் சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, தாத்தா, தாய்மாமன், அத்தை மகன் மற்றும் தாத்தாவின் நண்பர்கள் உட்பட மொத்தம் 15 பேர் மீது போக்சோ (டஞஈநஞ) சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய பலரைத் தனிப்படை போலீசார் வலைவீசித் தேடிவருகின்றனர். 

nkn140126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe