துரையில் ஒரே குடும்ப உறவு களுக்கிடையே 23 வருஷமாக பழிக்கு பழியாக குலை நடுங்கவைக்கும் கொலைகளின் இரத்த சரித்திரம் இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்கிறது. கடந்த ஜனவரி 23ஆம் தேதி, பெரம்பலூரில்  வெள்ளைக்காளியை அழைத்துச்சென்ற போலீஸ் வாகனத்தின்மீது நாட்டு வெடிகுண்டு வீசி  சினிமா பாணியில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

மதுரையின் பிரபல ரவுடி வெள்ளைக் காளியை கொலைவழக்கிற்காக நீதிமன்றம் அழைத்துச்சென்ற போலீஸார், வரும் வழியில் பெரம்பலூர் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே ஹோட்டலில் ரவுடி வெள்ளைக்காளியுடன் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த 15 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி கைதி காளியை வெட்ட முயன்றனர். இதனை போலீசார் தடுக்க முற்பட்டுள்ளனர். அப்போது போலீஸ் ஜீப் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. வெள்ளைக்காளியை காப்பாற்றுவதற்காக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய நிலையில், சினிமா பாணியில் தோட்டாக்கள் படாமல் 2 கார்களில் கொலைக்கும்பல் தப்பியோடியுள்ளது. 

Advertisment

madurai1

காயமடைந்த போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மங்களமேடு காவல் நிலையத்தில், கொலை முயற்சி மற்றும் வெடிகுண்டு வீசியதற்கான வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசா ரணைக்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டுவந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீசாருக்கு, சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி கள் ஊட்டியில் பதுங்கி யிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின்பேரில், அங்கு விரைந்த தனிப்படை போலீசார் அழகுராஜா என்பவரை கைதுசெய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலீஸாரை தாக்க முற்பட்டதால் அழகுராஜா சுடப்பட்டார். போலீஸாருக்கு காயமேற்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றது போலீஸ் தரப்பு. 

இதுகுறித்து திருச்சி சரக காவல்துறை ஐ.ஜி. பாலகிருஷ்ணன் கூறியதாவது, "வெடிகுண்டு வீசி தப்பிச்சென்ற வாகனத்தைப் பறிமுதல் செய்தபோது அதிலிருந்த கைரேகை அழகுராஜாவின் கைரேகையோடு ஒத்திருந்ததால் அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் வி.கே.குருசாமியின் உறவினர் மற்றும் அவரின் ஆதரவாளர் என்றும், நடந்த சம்பவத்தில் சூத்திரதாரியாக செயல்பட்டதை ஒத்துக்கொண்டு சம்பவத்தன்று பயன்படுத்திய ஆயுதங்களை பதுக்கிவைத்திருப்பதாக அழகுராஜா அளித்த தகவலின்பேரில் அங்கு அழைத்துச்சென்று ஆயுதங்களை பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது, அழகுராஜா நாட்டு வெடிகுண்டை போலீசார்மீது வீசித் தாக்கியதில், காவல்துறை வாகனம் சேத மடைந்திருக்கிறது. இதனையடுத்து அழகுராஜாவைப் பிடிக்கமுயன்ற குன்னம் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரை, அழகுராஜா கையில் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றார். இதனால் தற்காப்பு கருதி மங்களமேடு இன்ஸ்பெக்டர் தனது துப்பாக்கியால் ஒரு ரவுண்டு சுட்டதில் கொட்டு அழகுராஜா தலையில் குண்டடிபட்டு இறந் துள்ளார். 

Advertisment

madurai2

மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப் படுவார்கள் எனத் தெரிவித்தனர் போலீசார். சம்பவம் நடந்ததைக் கேள்விப்பட்டு அங்கு வந்த வெள்ளைக்காளியின் அக்கா சத்தியஜோதி, “"இதற்கு முழுக்க முழுக்க வி.கே. குருசாமியின் ஆட்கள்தான் காரணம். எங்க அண்ணனை 23 வருடத்திற்கு முன் பறிகொடுத் தோம். இப்ப என் தம்பிக்கு குறிவைக்கிறார்கள். என் தம்பி வெள்ளைக்காளியின் உயிருக்கு ஆபத்து உள்ளது. பாதுகாப்பு கொடுங்கள் என்று ஏற்கனவே மனுகொடுத்துள்ளேன். சிறைச் சாலையிலேயே வைத்துக்கொள்ளுங்கள் வெளியே அழைத்து வந்தால் அவன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை. எலக்ஷனுக்குள் அவனை கொலை செய்ய வேண்டும் என்று ஸ்கெட்ச் போட்டிருப்பதாக தகவல் வருகிறது. காளியை வெளியே கூட்டிவராதீர்கள் என்று பலமுறை போலீஸிடம் கூறியுள்ளோம்''’என்றார். 

யார் இந்த வெள்ளைக்காளி? ஏன் உறவினர்களான இவர்கள் 23 வருடங்களாக மாறி மாறி 23 உயிர்களை காவுகொடுத்தும் கொலைவெறி அடங்காதிருக்கின்றனர். இந்த இரத்த சரித்திரத்தின் பின்னணியைப் பார்ப்போம். 

மதுரையில் 23 ஆண்டுகளுக்கு முன் தி.மு.க.வைச் சேர்ந்த வி.கே. குருசாமி, அ.தி.மு.க.வைச் சேர்ந்த இராஜபாண்டி என்ற இரு உறவுக்காரர்களுக்கிடையே கட்சி போஸ்டர் ஒட்டுவதில் ஆரம்பித்த சண்டை இது. 2003-ல் இராஜபாண்டியின் உறவினர் சின்னமுனுசு, வி.கே.ஜி.யை தாக்கி, கட்சியை கேலிசெய்து போஸ்டர் ஒட்டினார். அதைக் கண்டித்த வி.கே குருசாமியின் ஆட்களோடு முனுசு வாய்த்தகராறில் ஈடுபட, அடிதடியில் இருதரப்பும் இறங்கினர். அதில் பலத்த காயங்களுடன் சின்னமுனுசை விட்டுவிட்டு வி.கே.ஜி. குரூப் செல்ல, "என்னை இப்படி குற்றுயிரும் குலையியுருமா விட்டுட்டுப் போகாதீங்கடா, நான் பிழைச்சுவந்தேன் உங்க அண்ணன் வி.கே.ஜி. உயிரோடு இருக்க மாட்டார்'' என்று சொல்ல, சின்னமுனுசை வி.கே.ஜி. குரூப் காலிசெய்தது. இதற்கு பழிவாங்க இராஜபாண்டியின் அண்ணன் முனுசாமியின் அக்கா மகன் வெள்ளைக்காளி வி.கே .குருசாமியின் உறவினர்களான மூர்த்தி, ரமேஷ், மாரிமுத்து ஆகிய மூவரையும் கொலைசெய்ய, அன்றிலிருந்து இருதரப்பிற்கும் இடையே தற்போதுவரை  கொலைகள் மாறி மாறி நடந்து, இரு தரப்பைச் சேர்ந்த 24 பேர் பலியாகி யுள்ளனர். இதற்கிடையே இராஜபாண்டி  இயற்கையாக மரணமடைந்தார்   தொடர்ந்து கொலைகள் நடந்துவந்ததால் அவர்களது சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள், இருதரப்பிடமும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வி.கே.குருசாமி, "வெள்ளைக்காளிக்கு நான் ரெண்டு கோடி ரூபாய் கொடுத்துவிடுகிறேன். இனி கொலைகள் வேண்டாம்'' என்று கூறியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.  

madurai3

அதை ஒத்துக்கொள்ளாத வெள்ளைக் காளி "எங்களுக்கு பணமெல்லாம் வேண்டாம். வி.கே. குருசாமியை போட்டுவிட்டு அந்த குடும் பத்துக்கு இரண்டு கோடி ரூபாய் கொடுக் கிறோம்'' என அடாவடியாகப் பேசியிருக்கிறார். இந்த தகவல் குருசாமி காதுக்குச் சென்றதும் மீண்டும் இரண்டு தரப்பும் ஒருவரை ஒருவர் கொலை செய்ய திட்டமிட்டு, நேரம்பார்த்து வந்துள்ளன. இந்த நிலையில் 2023 செப்டம்பர் மாதம் வி.கே.குருசாமி, நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பெங்களூருக்குச் சென்றார். அப்போது பெங்களூரிலுள்ள ஹோட்டலில் வைத்து  வி.கே. குருசாமியை 10 பேர் கொண்ட கும்பல் முகம், தலை என பல இடங்களில் வெட்டிப் போட்டுவிட்டுச் சென்றனர். வி.கே.குரு சாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று உயிருடன் திரும்பிவந்தார். 

இந்த சூழ்நிலையில் நக்கீரன் இதழில் வி.கே.குருசாமியிடம் சென்று நடந்தவைகளைக் கேட்டு செய்தி வெளியிட்டிருந்தோம். 2025-ல் ராஜபாண்டி தரப்பு வி.கே.குருசாமிக்கு வலதுகரமாக இருந்த அவரது சகோதரி மகன் கிளாமர் காளி என்ற காளீஸ்வரனைக் கொலைசெய்தது. இந்த வழக்கிலும் வெள்ளைக்காளியை போலீஸ் குற்றவாளியாகச் சேர்த்தனர். வெள்ளைக்காளியின் மீது இதுவரை 9 கொலை வழக்குகள், எட்டு கொலை முயற்சிகள் வழக்குகள் என 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில்தான் கடந்த ஜனவரி 23 அன்று பெரம்பலூர் டோல்கேட் அருகே வெள் ளைக்காளியை அழைத்துச்சென்ற போலீஸ் வாகனத்தின்மீது நாட்டு வெடிகுண்டு வீசி  சினிமா பாணியில் தாக்குதல் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக வி.கே.ஜி.யின் உறவினரும் ஆதரவாளருமான அழகுராஜா என்கவுன்டர் செய்யப்பட்டார். இந்த பதட்டமான சூழ்நிலையில் வி.கே.குருசாமியின் மதுரை கீரைத்துறை பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் பகை, 25 வருட குடும்பப் பகையாக மாறி, "தேவர்மகன்' சினிமா படத்தையெல்லாம் மிஞ்சுமளவுக்கு தொடர் கொலைகள் நிகழ்ந்துகொண்டிருக் கிறது. இதற்கு காவல்துறை முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.