கரூர் நெரிசல் மரண விவகாரத்தில் சி.பி.ஐ. தனது விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கும் நிலையில், ஏ1 குற்றவாளி ஆதவ் அர்ஜூனாதான் எனவும், அவருக்கு பின்னணியில் பா.ஜ.க.வின் சில முக்கியப்புள்ளிகள் இருப்பதாகவும் கசியும் தகவல்கள் த.வெ.க. தலைவர்களை மட்டுமல் லாது, ஒட்டுமொத்த அரசியல் அரங்கையும் அதிரவைத்துள்ளன.
Advertisment
கடந்த செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி கரூரில் நடந்த த.வெ.க. தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி குழந்தைகள் உட்பட 41 பேர் மரணமடைந்தனர். பலர் காயமடைந் தனர். கரூரில் நடந்த துயர நிகழ்ச்சி இந்தியாவெங்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலை யில்... த.வெ.க. தலைவர், பொதுச் செயலாளர் முதல் அக்கட்சி யின் முக்கிய நிர்வாகிகள் அனைவருமே ஒரு மாதத் திற்கும் மேலாக ‘எஸ்கேப் பான சம்பவம் பொது மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசும், அரசியல் கட்சிகளும் நிவாரணத் தொகை வழங்கியதுபோல, முன்னெப்போதும் இல்லாத வகையில் ஒன்றிய அரசும் அவசர, அவசரமாக நிவாரணத் தொகை வழங்கிய விவகாரம் அரசியல் கட்சிகளிடையே பேசுபொருளாகியது. இந்நிலையில், “கரூர் விவகாரத்தில் நடந்தது இதுதான்” என ஆதாரத்தோடு கூறுகிறார்கள் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை உற்று நோக்கும் பாராளுமன்ற மூத்த உறுப்பினர்கள் சிலர்.
Advertisment
இதுகுறித்து, ‘தங்களின் கருத்துக்கள் மட்டும் போதும், பெயர்கள் வேண்டாம்’ என்ற நிபந்தனையோடு பேசிய அவர் கள், “"கடந்த ஜனவரி 13 -பிப்ரவரி 26 வரை உத்தரப்பிரதேசம் பிரக்யாராஜில் நடைபெற்ற மஹா கும்பமேளாவின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் இறந்தபோதும், ஜூலை மாதம் உ.பி.யின் ஹத்ராஸ் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆன்மிகச் சொற்பொழிவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 121 பேர் பலியானபோதும் வாய் திறக்காத ஒன்றிய அரசு, இந்த கரூர் விவகாரத்தில் நடந்து கொள்ளும்விதம்தான் அத்தனை சந்தேகங்களுக்கும் அடிப்படையாக உள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/adhave1-2025-11-10-16-59-55.jpg)
சுமார் 50 கோடி பக்தர்கள் கலந்துகொண்டார்கள் என்று கூறப்படும் பிரக்யாராஜ் கும்பமேளாவில் ரயில் பெட்டிகள் முதல் திரிவேணி சங்கமம் வரை கூட்ட நெரிசல்களில் சிக்கிக்கொண்ட பக்தர்கள் அனுபவித்த வேதனை யை சமூக ஊடகங்கள் வாயிலாக அனைவரும் பார்த்திருப்போம். அதில், ஏராளமான குழந்தை களைக் காணவில்லை எனவும், நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தார்கள் என்ற தகவல்களும் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேநேரத்தில், அந்த நெரிசல் மரணம் குறித்த அனைத்து தகவல்களையும் பா.ஜ.க. ஆளும் உ.பி. அரசு மறைப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
Advertisment
எனவே, கடந்த மார்ச் மாதம் நாடாளு மன்ற கூட்டத்தொடரின் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் எம்.பி.க்களான கேரளா வைச் சேர்ந்த கே.சி.வேணுகோபால், மகா ராஷ்டிராவைச் சேர்ந்த டாக்டர் கிர்சன் நாம்டியோ ஆகியோர் ஒன்றிணைந்து, அந்த பிரக்யாராஜ் கும்பமேளா கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர் களின் எண்ணிக்கை எவ்வளவு? அதுதொடர் பாக நீதிமன்றம் அல்லது வேறு அமைப்பு களின் விசாரணைக்கு மத்திய அரசு உத்தர விட்டுள்ளதா?, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் எவ்வளவு? என மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அப்போது, அமித்ஷாவிற்குப் பதிலாக விளக்கமளித்த மத்திய உள்துறை இணை யமைச்சரான நித்யானந்த் ராய், ‘"அரசியல் அமைப்பின் சட்டப்பிரிவு 7-ன் படி, பொது ஒழுங்கு மற்றும் அவற்றை நிர்வகிக்கக்கூடிய காவல்துறை ஆகியவை மாநில அரசின் பட்டியலில் வருவதால் இதுபோன்ற கூட்ட நெரிசல் சம்பவங்களில் மத்திய அரசு தலையிடுவது கிடையாது. எனவே, அவர்களுக்கு நிவாரணமும் வழங்கப்படுவது கிடையாது. அதேபோல, கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான விசாரணையையும் மாநில அரசே மேற்கொள்ள வேண்டும் என்பதால் அது தொடர்பான விபரம் எதுவும் தங்களுக்குத் தெரியாது'’என்று தெளிவாகக் கூறியிருந்தார். அப்படி இருக்கும்போது, பிரக்யாராஜ் மற்றும் ஹத்ராஸ் நெரிசல் மரணங்களின்போது இல்லாத அக்கறை இந்த கரூர் மரணங்களின்போது மட்டும் மத்திய அரசுக்கு ஏன் வரவேண்டும்?
தவிர, சம்பவம் நடந்த சில மணி நேரத் திலேயே ஒரு நபர் ஆணைய விசாரணைக்கும், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கும் மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் தந்தை ஒருவரிடம் அ.தி.மு.க.வினர் மூலமாக பொய்யான தகவல் கூறி சி.பி.ஐ. விசாரணை வேண்டு மென உச்சநீதிமன்றத்தை ஏன் அணுகவேண்டும்? மாநில விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே கடுமை யான விமர்சனங்களையும் தாண்டி அதை கலைத் துவிட்டு சி.பி.ஐ .விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் ஏன் உத்தரவிடவேண்டும்?'' என்று கேட்ட அவர்கள், "அந்த நேரத்தில் டெல்லியில் கூலாக சுற்றித்திரிந்த ஆதவ் அர்ஜூனாவின் நடவடிக்கைகளையும் கூட்டிக்கழித்துப் பார்த்தால் உங்களுக்கே சில உண்மைகள் புரியும்''’என புதிர் போட்டனர். பின்னர், சிறிது சிந்தனைக்குப் பிறகு உடைத்துப் பேசத் துவங்கினர்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/adhave2-2025-11-10-17-00-07.jpg)
“ஆரம்பத்தில் சோற்றுக்கே லாட்டரி அடித்த ஆதவ் அர்ஜூனா, இன்று லாட்டரி அதிபரின் மருமகனான பின்னரும் அவரின் ஜீன் மட்டும் மாறவில்லை. சிறுவயதில் ஒரு மடத்தில் தங்கிப் படித்தபோது பள்ளிக் காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். சிந்தனையோடு வார்த்தெடுக்கப்பட்டவர்தான் ஆதவ் அர்ஜூனா. ஒருகட்டத்தில், பர்மாவிலிருந்து அகதியாக வந்து பல தில்லாலங்கடி வேலை பண்ணி குறுக்கு வழியில் லாட்டரி அதிபரான, லாட்டரி அதிபர் மார்டினின் மகளை விடாமல் துரத்தி துரத்தியும், அப்படி துரத்துவதைப் பார்த்த மார்ட்டின், தன் செல்வாக்கை வைத்து சென்னை நீலாங்கரை ஸ்டேஷனில் வைத்து நையப்புடைத்ததும், ஆனால் இது தெய்வீகக் காதல்... மணந்தால் இவன்தான் என் புருஷன்னு மகள் பேசுனதால வேறு வழியில்லாமல் திருமணம் செய்தபிறகும் ஆர்.எஸ்.எஸ். சிந்தனை அவரைவிட்டுப் போகவில்லை. கல்வியறிவு பெரிதுமில்லாத மார்ட்டினுக்கு ஆல்-இன்-ஆல் ஆக மாறிவிட்டார் ஆதவ். கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் நேரடியாகவும், பிற மாநிலங்களில் மறைமுகமாகவும் லாட்டரி தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் மார்ட்டினுக்கு மியான்மர், நேபாள், பூட்டான் உள்ளிட்ட வெளிநாடு களிலும் லாட்டரி பிஸினஸ் இருப்பதால் அவரது அன்றாட வருமானம் மட்டுமே சில நூறு கோடிகள் தேறும். கணக்கில் வராத கள்ள லாட்டரி விற்பனையோ அதையெல்லாம் தாண்டக்கூடும்.
உதாரணத்திற்கு சொல்லவேண்டு மானால், மார்ட்டி னுடைய ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் கடந்த 2022 , 2023 ஆகிய 2 வருடங்களுக்கு மட்டும் ரூ.8853.39 கோடிகளை ஜி.எஸ்.டி. வரியாகச் செலுத்தியுள்ளது. ஆனால், அவரது உண்மையான வருமானம் இதைவிட 200 மடங்கு அதிகம் என்று மத்திய அரசுக்கும் தெரியும். அவர்களைச் சரி செய்வதுதான் ஆதவ் அர்ஜூனாவின் பொறுப்பு. 1,500 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் மட்டுமல்லாமல், லாட்டரி என்ற பெயரில் ஏழை எளிய மக்களிடம் கொள்ளையடிக்கும் பணத்தை பா.ஜ.க. மூத்த புள்ளிகள் சிலருக்கு மாதாமாதம் சில நூறு ஸ்வீட் பாக்ஸ்கள் என கப்பம் கட்டிவருவதால் பா.ஜ.க.வின் மேல்மட்டத்திற்கு ரொம்பவே நெருக்கமாகிவிட்டார் ஆதவ்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/adhave3-2025-11-10-17-00-43.jpg)
அப்படியிருந்தும், கள்ள லாட்டரி மூலம் சிக்கிம் அரசுக்கு 910 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்யவே, அப்போது அமித்ஷா காலில் விழுந்தவர் இன்னமும் எழுந்திரிக்க வில்லை. தவிர, ஆதவ் அர்ஜூனா நடத்திவரும் 13-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தொடர்பான கணக்கு வழக்குகளும், அது தொடர்பான ஜி.எஸ்.டி. மோசடிகளும் அமித்ஷாவின் டைரியிலிருப்பதால், பா.ஜ.க.வின் பிடியிலிருந்து அவரால் மீள முடியாது''’என்ற அவர்கள், "சரி... இப்போது கரூர் விசயத்திற்கு வருவோம். எப்படியாவது தமிழகத்தில் தலையெடுக்க வேண்டுமென்ற முடிவோடிருக்கும் பா.ஜ.க., அதற்காக விஜய்யை தங்களின் கூட்டணிக்குள் கொண்டுவர முடிவு செய்துவிட்டது. விஜய் பிரச்சனையில் சிக்கி னால்தான் பா.ஜ.க.வுக்கு லாபம். எனவே, பா.ஜ.க.வின் ஆலோசனைப் படி த.வெ.க.வின் தேர்தல் பிரச் சார பொதுச்செயலாளரான ஆதவ் மூலமாக சிக்கவைக் கப்பட்டுள்ளார் விஜய். அதை டைவர்ட் செய்யத் தான் நிவாரணத் தொகை நாடகத்தை அரங்கேற்றியது மத்திய அரசு.
அதற்கு அடுத்தபடியாக, கூட்டணிக் கட்சி யான அ.தி.மு.க. மூலமாக காய் நகர்த்தி உச்ச நீதி மன்றத்தில் சி.பி.ஐ. விசாரணையை வாங்கிவிட்டது பா.ஜ.க. இனி, ஆதவ் பிடியிலிருந்து விஜய்யால் தப்பிக்கவே முடியாது''’என்றனர் அவர்கள்.
இப்பிரச்சனை குறித்து விஜய்க்கு மிக நெருக்கமான முன்னாள் காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம் நாம். “ஆதவ் அர்ஜூனாவின் இந்த உள்ளடி விவகாரம் குறித்து சி.பி.ஐ.யின் முதற்கட்ட விசாரணையிலேயே புரிந்துவிட்டாலும், அதுகுறித்து ரொம்பவே லேட்டாகத்தான் விஜய்க்குத் தெரியவந்திருக்கிறது. இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததும் உண்மை. ஒருவரின் தேவை முடிந்தபிறகு, அவரை தூக்கியெறிவதுதான் பா.ஜ.க.வின் ஸ்டைல். அதிலிருந்து, ஆதவ் அர்ஜூனாவும் தப்பமுடியாது. எனவே, லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக வருவேன் என்பதுபோல, எப்போது சிக்கினாலும் ஏ1 குற்றவாளி ஆதவ் அர்ஜூனாதான். பா.ஜ.க. அதைச் செய்தால் மட்டுமே கூட்டணி விவகாரத்தில் பா.ஜ.க. நினைத்தது நடக்கும்'' என்றனர் அவர்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தின் உள்குத்து அரசியல் இப்படி சென்றுகொண்டிருக்க, கடந்த 8-ஆம் தேதியன்று கரூர் சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரான அக்கட்சியின் வழக்கறிஞர் அரசு, பனையூரிலுள்ள த.வெ.க. அலுவலக உதவியாளர் குரு ஆகியோர் விஜய்யின் பிரச்சார வாகனத்தி லிருந்த வீடியோ பதிவுகளை சி.பி.ஐ. அதிகாரி களிடம் ஒப்படைத்தனர். அதேநாளில், "சின்னம் வாங்கப் போகிறேன்' என்ற போர்வையில் பா.ஜ.க. முக்கிய புள்ளிகளைச் சந்திக்க ஆதவ் அர்ஜூனா சென்னையிலிருந்து டெல்லிக்கு பறக்க, அடுத்த சிலமணி நேரத்தில் விசாரணையை மேற்பார்வை செய்யும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி அழைத்திருப்பதாகக் கூறி சி.பி.ஐ.யின் டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி. ஆகியோர் அவசர அவசரமாக டெல்லி பிளைட்டை பிடித்திருக்கிறார்கள்.
ஆக மொத்தத்தில், பா.ஜ.க. போட்ட ஸ்கெட்சில் பக்காவாக சிக்கப்போகிறார் ஆதவ்.
இதற்கிடையே... கல்லூரி மாணவர்களை ரவுடிகளைப் போல், கூ-ப்படையினரைப் போல் சித்தரித்து, தனது கட்சிக் கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப் பதிவு செய்து, குண்டர் சட்டத்தில் கைதுசெய்யக் கோரி மாணவர் அமைப்பினர் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/10/rangbox-2025-11-10-17-00-24.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/10/adhave-2025-11-10-16-59-22.jpg)