900 கோடி கமிஷன்! ஸ்மார்ட் சிட்டி அட்ராசிட்டி! தமிழகத்தை மிதக்கவைத்த ஊழல்!

rain

மிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னையில் கொட்டித் தீர்த்த கடும் மழையால் மாநகரின் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியது. சென்னையின் மத்திய பகுதியும் வணிக வளாகங்கள் நிறைந்ததுமான தியாகரநாய நகர் ஏரியா, எப்போதுமில்லாத அளவுக்கு தண்ணீரில் மிதந்தது.

rain

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தி.நகர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்,”"கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய அரசிடம் பெற்ற நிதியை என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் உள்ளாட்சியில் கடந்த ஆட்சியில் எந்த பணிகளும் நடக்கவே இல்லை. கமிஷன் மட்டுமே வாங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமி கொள்ளையடித்திருக்கிறார்கள். இதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்படும். ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்திருக்கிறார்.

தி.நகர் மூழ்கியதற்கான காரணம் குறித்து சென்னை மாநகராட்சியின் பொறியாளர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது,”"தி.நகரின் வழியாக மாம்பலம் கால்வாய் ஓடுகிறது. அதாவது, இந்த கால்வாய் வள்ளுவர் கோட்டத்திலிருந்து மாம்பலம், தி.நகர் பாண்டிபஜார், சி.ஐ.டி. நகர், நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., சைதாப்பேட்டை வழியாக அடையாறை அடைகிறது. கிட்டத்தட்ட இதன் நீளம் 6 கிலோ மீட்டர். இந்த பகுதியில் பொழியும் மழை நீர் மற்றும் கால்வாயில் வரும் வெள்ளம் ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடாமல் மாம்பலம் கால்வாய் அமைந்திருந்தது. இதனால் பெரும்பாலும் தி.நகர் பகுதி வெள்ளப்பாதிப்பிலிருந்து தப்பித்துவிடும்.

rain

இந்த முறை தப்பிக்கமுடியவில்லை. இதற்குக் காரணம், பாண்டி பஜாரில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம்தான். திட்டத்தினை செயல்படுத்தியபோது அகற்றப் பட்ட கட்டிட கழிவுகள

மிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், சென்னையில் கொட்டித் தீர்த்த கடும் மழையால் மாநகரின் அனைத்துப் பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியது. சென்னையின் மத்திய பகுதியும் வணிக வளாகங்கள் நிறைந்ததுமான தியாகரநாய நகர் ஏரியா, எப்போதுமில்லாத அளவுக்கு தண்ணீரில் மிதந்தது.

rain

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தி.நகர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்,”"கடந்த ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக மத்திய அரசிடம் பெற்ற நிதியை என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை. முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் உள்ளாட்சியில் கடந்த ஆட்சியில் எந்த பணிகளும் நடக்கவே இல்லை. கமிஷன் மட்டுமே வாங்கப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தில் வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமி கொள்ளையடித்திருக்கிறார்கள். இதற்காக விசாரணை கமிஷன் அமைக்கப்படும். ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்திருக்கிறார்.

தி.நகர் மூழ்கியதற்கான காரணம் குறித்து சென்னை மாநகராட்சியின் பொறியாளர்கள் தரப்பில் நாம் விசாரித்தபோது,”"தி.நகரின் வழியாக மாம்பலம் கால்வாய் ஓடுகிறது. அதாவது, இந்த கால்வாய் வள்ளுவர் கோட்டத்திலிருந்து மாம்பலம், தி.நகர் பாண்டிபஜார், சி.ஐ.டி. நகர், நந்தனம், ஒய்.எம்.சி.ஏ., சைதாப்பேட்டை வழியாக அடையாறை அடைகிறது. கிட்டத்தட்ட இதன் நீளம் 6 கிலோ மீட்டர். இந்த பகுதியில் பொழியும் மழை நீர் மற்றும் கால்வாயில் வரும் வெள்ளம் ஆகியவை குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து விடாமல் மாம்பலம் கால்வாய் அமைந்திருந்தது. இதனால் பெரும்பாலும் தி.நகர் பகுதி வெள்ளப்பாதிப்பிலிருந்து தப்பித்துவிடும்.

rain

இந்த முறை தப்பிக்கமுடியவில்லை. இதற்குக் காரணம், பாண்டி பஜாரில் உருவாக்கப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம்தான். திட்டத்தினை செயல்படுத்தியபோது அகற்றப் பட்ட கட்டிட கழிவுகளையும் (கான்க்ரீட் துண்டுகள்), தேவையற்ற பொருட்களையும் வேறு இடங்களுக்கு அப்புறப்படுத்திவிட வேண்டும். அப்படி எடுத்துச் செல்வதால் திட்டத்தின் காண்ட்ராக்டருக்கு அதிக செலவாகும். இதனால் மாம்பலம் கால்வாயி லேயே கழிவுகளை கொட்டி விட்டனர். இதனால் மாம்பலம் கால்வாய் ஏகத்துக்கும் அடைத்துவிட்டது. மழை நீரும் வெள்ளமும் மாம்பலம் கால்வாயில் செல்லாமல் அடைக்கப்பட்டதால் ஆங்காங்கே வெளியேறி தி.நகரின் முக்கிய பகுதிகளிலெல்லாம் வெள்ளம் சூழ்ந்துவிட்டது. இதனை கண்டறிந்து அந்த கழிவுகள் உடனடியாக அகற்றப்பட்டதால் தி.நகர் தப்பித்தது'' என்று விவரிக்கின்றனர்.

மாநகராட்சியின் ஊழல்களை தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வரும் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசிடம் நாம் பேசியபோது, "சென்னை மாநகராட்சியில் 330 மழைநீர் வடிகால் கால்வாய்கள் கட்டினார்கள். இதற்காக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ஒதுக்கப் பட்ட ரூ.200 கோடி நிதி பயன்படுத்தப்பட்டது. திட்டத்தின் நிதியை பயன்படுத்தி ஊழல் செய்வதற்காகவே நல்லாயிருந்த கால்வாய்களெல்லாம் உடைக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டன. இதற்கான டெண்டர்களும் செட்டிங்தான். இதுகுறித்த ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையிடம் தந்திருக்கிறோம். விசாரணையில் இருக்கு. அந்த ஊழலில் சூத்திரதாரி எஸ்.பி. வேலுமணிதான்.

rain

ஸ்மார்ட் சிட்டின்னாலே ஏரியாவை அழகுபடுத்தறோம்னு நினைச்சிக்கிறாங்க. அது மட்டும் கிடையாது. முக்கியமாக, நீர்நிலைகளின் முழு கொள்ளளவையும் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் திட்டத்தின் நோக்கம். ஆனால், இதை இவர்கள் கவனத்தில் கொள்வதேயில்லை. வில்லிவாக்கம் ஏரியின் மொத்த பரப்பளவு 214 ஏக்கர். இது ஆக்கிரமிக்கப்பட்டு இப்போது வெறும் 39 ஏக்கர் மட்டும்தான் இருக்கு. இதையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கொண்டு வந்தனர். இதன் ஊழல்களை தடுப்பதற்காக 39 ஏக்கரையும் மீட்டெடுக்க வேண்டும் என கோர்ட்டுக்கு போனோம். 27 ஏக்கரை மீட்க உத்தரவிடப் பட்டது. மீதியுள்ள 12 ஏக்கரை எப்படி மீட்கப் போகிறீர்கள் என மாநகராட்சியிடம் கேள்வி கேட்டது நீதிமன்றம்.

மீட்டெடுக்க உத்தரவிடப்பட்ட 27 ஏக்கரில் 15 ஏக்கரை மீட்டுடுவோம். மீதமுள்ள 12 ஏக்கரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தீம் பார்க் கட்டப்போகிறோம்னு மாநகராட்சி சொல்லுது. ஏரியில் எதற்கு தீம் பார்க் கட்ட வேண்டும்? இதற்கெல்லாம் ஸ்டே வாங்கி, விசாரணை நிலுவையில் இருக்கு. கார்ப்பரேசன் அதிகாரிகள் நினைத்தால் ஓரிரு நாளில் 39 ஏக்கரையும் மீட்டெடுக்க முடியும். ஆனா, அதிகாரிகளுக்கு அக்கறையில்லை. ஒவ்வொரு விசயத்துக்கும் கோர்ட்டுக்கு போய் போராடித்தான் ஊழல்களை தடுத்து நிறுத்த முடிகிறது.

தி.நகர் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மெகா ஊழல்கள் நடந்துள்ளன. அனைத்து ஸ்மார்ட் சிட்டி யையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர வேண்டும்'' என்கிறார் ஆவேசமாக.

rain

மாநகராட்சியின் அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ”தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் ஸ்மார்ட் சிட்டிகள் அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மதிப்பு சுமார் 200 கோடி ரூபாய். இதில், மின்னணு, மொபைல் ஆப்ஸ் உள்ளிட்ட டெண்டர்களுக்காக 149 கோடி ரூபாயும், நவீன வசதிகளுடன் திறன்மிகு நடைபாதை வளாகம், சாலைகள் உள் ளிட்டவைகளை அமைக்க 51 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

மின்னணு நிர்வாகம் மற்றும் மொபைல் ஆப்ஸ் டெண்டரை முன்னாள் அமைச்சர் வேலுமணியின் பினாமி நிறுவனங்களில் ஒன்றான குறிப்பிட்ட தனியார் கம்பெனிக்கு கொடுத்தனர். அந்த கம்பெனிக்கு ஸ்மார்ட் சிட்டிகள் அமைத்த எந்த முன் அனுபவமும் இல்லை. இயந்திரங்கள் தயாரிப்பது மட்டுமே அந்த கம்பெனியின் முக்கிய தொழில்.

இதுதவிர, தி.நகரின் போக் சாலை முதல் அண்ணாசாலை வரை 564 மீட்டர், பனகல் பூங்கா முதல் தணிகாசலம் சாலை வரை 730 மீட்டர், தணிகாசலம் சாலை துவங்கி போக் சாலை வரை 380 மீட்டர் என திறன்மிகு நடைபாதை வளாகம் 39.86 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. அதேபோல, 19.11 கோடி ரூபாய் மதிப்பில் 23 இடங்களில் சாலைகள் போடப்பட்டன. நடைபாதை வளாகம் மற்றும் சாலைகள் அமைக்கும் பணிகள் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான தி.நகர் எம்.எல்.ஏ.வாக இருந்த சத்யாவிடம் கொடுக்கப்பட்டது. அவரும் தனது காண்ட் ராக்ட் நண்பர்களுக்கு இந்த பணிகளைப் பிரித்துக் கொடுத்தார்.

rain

தி.நகர் சத்யாவின் காண்ட்ராக்ட் நண்பர்களோ, நடைபாதை வளாகத்தை கான்கிரீட் தளங்களாக அமைத்து மழை நீர் மற்றும் வெள்ளம் பாயும் கால்வாய்களை முழுமையாக அடைத்து விட்டனர். மழைநீர் கால்வாய்களும் கழிவு நீர்க் கால்வாய்களும் எங்கு அமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் திட்டமிட்டு, வெள்ள அபா யங்களில் தி.நகர் பகுதிகள் சிக்கிவிடாத அளவிற்கு நடைபாதை வளாகங்களை உருவாக்கியிருக்க வேண்டும். ஆனால், இதில் காண்ட் ராக்டர்கள் கவனம் செலுத்த வில்லை. இதனால்தான் தி.நகர் பகுதியே வெள்ளத்தால் மூழ்கியது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத் திற்காக ஒதுக்கப்பட்ட சுமார் 200 கோடி ரூபாயில் 45 சதவீதம் கமிஷனாகவே சென்றிருக்கிறது. இந்த கமி ஷன் தொகையை எடப்பாடி, வேலுமணி, தி.நகர் சத்யா ஆகிய மூவர் கூட்டணி பிரித்துக்கொண்டது. தி.நகர் ஸ்மார்ட் சிட்டியில் மட்டுமல்ல, தமிழகத்தில் முக்கிய 10 நகரங்களில் அமைக்கப்பட்ட அனைத்து ஸ்மார்ட் சிட்டி திட்டத்திலும் இதே அளவிலான ஊழல்கள் நடந்துள்ளன. அந்த வகையில் 2000 கோடி ரூபாய் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 45 சதவீதம் கமிஷன் தொகை மட்டுமே என கணக்கிட்டால் 900 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடந்திருக்கிறது. இந்த திட்டத்தில் மத்திய அரசின் நிதிப் பங்களிப்பும் இருப்பதால், அனைத்து ஸ்மார்ட் சிட்டிகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்'' என்கிறார்கள் மாநகராட்சி அதிகாரிகள்.

rain

கோட்டையில் உள்ள நகர்ப்புற வளர்ச்சித்துறை வட்டாரங்களில் விசாரித்த போது, ‘’அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் கூட்டணியாக இருந்தது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி உள்ளிட்டவர்கள் இருந்தனர். அந்த உறவுகளை இவர்கள் இப்பவும் பாதுகாத்துதான் வருகிறார்கள். அதனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஊழல்களை விசாரிக்க சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கக் கூடாது. அப்படி ஒப்படைத்தால் ஊழல்வாதிகள் எளிதில் தப்பித்துவிடுவார்கள். அதனால், முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டதுபோல, இதற்காக தனி விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அந்த விசாரணைதான் திட்டத்தில் நடந்துள்ள ஊழல்களையும், அதற்கு காரணமான குற்றவாளிகளையும் அம்பலப்படுத்தும் ” என்கிறார்கள்.

rain

இதுகுறித்து கருத்தறிய தி.நகர் சத்யாவை தொடர்புகொண்டோம். அவரது மொபைல் எண் தொடர்பு எல்லைக்கு வெளியேயே இருந்தது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,‘"ஸ்மார்ட் சிட்டி பணிகளில் மழைநீர் திட்டத்துக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. நாங்கள் கொண்டு வந்த இந்த திட்டத்திற்கு எதிராக அவதூறு பரப்பப்படுகிறது. திட்டத்தில் எந்த ஊழலும் நடக்கவில்லை. திட்டத்தை முடக்கப் பார்க்கின்றனர்''’என்று தி.மு.க. அரசு மீது பாய்ந்திருக்கிறார்.

rain

ஸ்மார்ட் சிட்டி திட்ட ஊழல்களில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா ஆகிய மூவர் கூட்டணி சிக்கியிருக்கிறது. ஊழல்வாதிகளுக்கு எதிராக வலிமையான சட்ட நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் எடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, ஊழல்களுக்கு எதிரான அமைப்புகளிடம் எதிரொலிக்கிறது.

படங்கள்: ஸ்டாலின், அசோக் & குமரேஷ்

nkn131121
இதையும் படியுங்கள்
Subscribe