டந்த 8 வருடங்களுக்கு முன்பு தனியார் செவிலியர் மற்றும் அரசுப் பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற செவிலியர்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் செவிலியர் பணி வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் ஜெ. சட்டசபையில் 110 விதியின் படி அறிவித்தார்.

ff

அதனடிப்படையில் மருத்துவத் தேர்வு வாரியத்தை (MRB) ஏற்படுத்தி செவிலியர், மருத்துவர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர் களுக்கு போட்டித் தேர்வுநடத்தி பணி வழங்கியது அரசு. இதில் தேர்வுசெய்யப்பட்ட 9 ஆயிரம் செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டதுடன் அடுத்த இரண்டு வருடங்கள் நிறைவடைந்தவுடன், பணி நிரந்தரம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. அரசு சொன்ன அடுத்த இரண்டு வருட காலத்தில் அவர்கள் நிரந்தரப் பணியில் நியமிக்கப்படாததால் பாதிக்கப்பட்ட நர்சுகள் தொடர்ந்து ஆர்ப்பாட் டம், உண்ணாவிரதம் என பலகட்டப் போராட் டங்களை நடத்தினர். கடந்த 8 வருடங்களாக பணிபுரிந்துவந்த நர்ஸ்களில் இதுவரை 3 ஆயிரம் செவிலியர்கள்தான் நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்கள் மனம் நொந்துபோய் இருக்கிறார்கள்.

கடந்த ஆட்சியின்போது கொரோனா காலத்தில் தற்காலிகப் பணியாளராக நியமிக்கப் பட்டுள்ள 3 ஆயிரம் நர்சுகளும் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கவேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி போராட்டத்தில் குதித்திருக் கிறார்கள். இப்படி எம்.ஆர்.பி. மூலம் தேர்வு செய்யப்பட்ட நர்சுகள், கொரோனா காலத்தில் தேர்வுசெய்யப்பட்ட நர்சுகள் என 9 ஆயிரம் பேர் நிரந்தரப் பணிக்காக போராடிவருகிறார்கள்.

f"தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தற்காலிக நர்சுகளை நிரந்தரப் பணியாளர்களாக ஆக்குவோம் என்று முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத் திருந்தார். கடந்த ஆட்சியின்போது வருடத்திற்கு 300 பேர், 400 பேர் என நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கிவந்தனரே தவிர முழுமையாக ஆக்கவில்லை. அதனால் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்துக்கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றுவது பெரும் கஷ்டமாக இருந்துவருகிறது. பல நர்சுகளும் நிரந்தரப் பணியாளர்களாக ஆனபின் திருமணம் செய்துகொள்ளலாம் என்றிருக்கிறார்கள்.

தற்பொழுது முதல்வர் ஸ்டாலின் எங்களை நிச்சயம் நிரந்தரப் பணியாளர்களாக ஆக்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதை இந்த மானியக் கோரிக்கை மூலம் நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம்''’என்றார் மன்னார்குடியைச் சேர்ந்த நர்ஸ் வனஜா.

கள்ளக்குறிச்சியை சேர்ந்த நர்ஸ் விஜய லட்சுமியோ, "நிரந்தர பணிக்காக ஏங்கும் பெரும் பாலான நர்சுகள் ஏற்கனவே இருபது வருடங்களாக தனியார் மருத்துவமனையில் வேலைபார்த்த பின்புதான் தற்போது அரசு மருத்துவமனையில் தற்காலிகப் பணியாளர்களாகச் சேர்ந்திருக்கிறார் கள். பெரும்பாலான நர்சுகளுக்கு 45 வயதுக்குமேல் ஆகிவிட்டது. எங்க வாழ்நாள் முடிவதற்குள்ளே யாவது நிரந்தரப் பணி கிடைத்துவிடுமா என்ற ஏக்கத்தில் இருந்துவருகிறோம். இந்த கொரோனா காலத்தில் பணி நிரந்தரமாகாத பல நர்சுகள் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்கள் இருந்தும்கூட கடந்த ஆட்சிக்காலத் தில் அதை நிரப்பாமல் விட்டுவிட்டனர். அந்த நிலை மேலும் தொடராமல் முதல்வர் எங்களை உடனடியாக நிரந்தரப் பணி யாளராக ஆக்கி விடிவுகாலம் கொடுக்க வேண்டும்''’என்று கூறினார்.

நர்சுகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரான செந்தில்நாதன், “"தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியிலும் குறைந்தபட்சம் ஆயிரம் நர்சுகளாவது பணிபுரியவேண்டும். திருச்சி, மதுரை, கரூர் உள்பட ஏழு மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் 150 நர்சுகள் தான் பணிபுரிகிறார்கள். அதை நிரப்பியிருந் தாலே எம்.ஆர்.பி. மூலம் தேர்வுசெய்யப் பட்ட நர்சுகள் அனைவரும் நிரந்தரப் பணியாளர்களாக ஆகியிருப்பார்கள். தற்போது 11 மருத்துவக் கல்லூரிகள் திறந்திருக்கிறார்கள். இவற்றிலும் பல ஆயிரக்கணக்கான நர்சுகள் பணியில் அமர்த்தப்படவேண்டும். இங்குள்ள தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலிங் தலைவர் குருநாதன் அதைக் கண்டுகொள்வதில்லை. ஆய்வு என்று மருத்துவக் கல்லூரிக்குப் போகும்போது நர்சுகளின் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்று வலியுறுத்துகிறார். ஆனால் அதை நிரப்ப அவர் ஆர்வம்காட்டுவது இல்லை. டி.எம்.எஸ்.- அலுவலகத்தில் சரிவர ஆட்கள் இல்லாததால் அங்கு J.E.O.நம்பிராஜன் வைத்தது தான் சட்டமாக இருந்துவருகிறது. முறையான ரிப்போர்ட்டுகளையும் அமைச்சருக்கு அனுப்பிவைப்பதில்லை.

வருடந்தோறும் இந்திய மருத்துவக்கழகம் சார்பாக குழுவொன்று வந்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வுசெய்கிறது. அச்சமயம் மருத்துவர், நர்ஸ்களின் எண்ணிக்கை யையும் ஆய்வுசெய்யவேண்டும். அது நடப்பதில்லை. இதனால்தான் தொடர்ந்து கடந்த 8 வருடங்களாக நிரந்தரப் பணிக்காக நர்சுகள் போராடி வருகிறார்கள். நர்சு பணிகளில் இருக்கக்கூடியவர்கள் 90% பெண்கள். அவர்களை முழுமையாக ஒருங் கிணைக்கவும் முடியவில்லை. அதை முந்தைய அரசு சாதகமாக்கிக் கொண்டது. அந்த நிலை மேலும் தொடராமலிருக்க முதல்வர் ஸ்டா லினும் அமைச்சரும் உடனடியாக தற்காலிகப் பணியாளராக பணிபுரிந்து வரும் 9000 நர்சுகளை உடனடியாக நிரந்தரப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். இதுசம்பந்தமாக ஏற்கனவே முதல்வரிடமும், அமைச்சரிடமும் மனு கொடுத்திருக்கிறோம். இந்தநிலை தொடர்ந்து நீடித்தால் இந்திய மருத்துவக் கழகத்தின்மேல் வழக்குப் போட இருக்கிறோம்''’என்றார்.

-சக்தி