சேலம் மாநகராட்சியில், புதிய கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தல் மற்றும் அனுமதி வழங்குவதற்காக வசூலிக்கப்பட்ட 81 லட்ச ரூபாயை, போலி ரசீது மூலம் திட்டப்பிரிவு ஊழியர்கள் திட்டம்போட்டு சுருட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முறைகேட்டின் பின்னணி குறித்து களத்திலிறங்கி விசாரித்தோம்.
''சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாகக் கட்டடம் கட்டும் நபர்கள், மாநகராட்சி நகரமைப்பு திட்டப்பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும். இது அனைத்து மாநகராட்சிகளிலும் இருக்கும் பொதுவான நடைமுறைதான். கட்டப்படும் கட்டடத்தின் மாதிரி வரைபடம் (ப்ளூபிரிண்ட்), மாநகராட்சி யால் அங்கீகரிக்கப்பட்ட பட வரைவாளர் மூலம் தயாரிக்கப்பட்டு, திட்டப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கட்டடத்தை வரன்முறைப்படுத்த சதுர அடிக்கு 62.50 ரூபாயும், அனுமதி சான்றிதழ் வழங்க சதுர அடிக்கு 40 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். இப்பணிகளுக்காக வசூலிக் கப்படும் கட்டணம், அரசின் கணக்கில் இ-சலான் மூலம் செலுத்தப்பட வேண்டும்.
இ-சலான் மூலம் கணினியில் செலுத்தப் படுவது வெற்றிகரமாக நிறைவுபெற்றால் 'சக்சஸ்' என்றும், கருவூலக் கணக்கில் கிரெடிட் ஆகாதபோது 'ஃபெயிலியர்' என்றும் ரசீதில் அச்சாகி வரும்.
சேலம் மாநகராட்சியில் திட்டப்பிரிவில் பணியாற்றிவந்த உதவியாளர் விஜய் சங்கர், இளநிலை உதவியாளர் தனபால், தூய்மைப் பணியாளர் சுரேஷ் ஆகிய மும் மூர்த்திகளும் சேர்ந்து போலியான இ-சலான் மூலம் தகிடுதத்தம் செய்துள்ளனர். அவர்கள், அரசின் கஜானாவுக்கு பணத்தைச் செலுத்தாமலேயே போலி ரசீதுகள் தயாரித்து, அதில்
சேலம் மாநகராட்சியில், புதிய கட்டடங்களுக்கு வரன்முறைப்படுத்தல் மற்றும் அனுமதி வழங்குவதற்காக வசூலிக்கப்பட்ட 81 லட்ச ரூபாயை, போலி ரசீது மூலம் திட்டப்பிரிவு ஊழியர்கள் திட்டம்போட்டு சுருட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
முறைகேட்டின் பின்னணி குறித்து களத்திலிறங்கி விசாரித்தோம்.
''சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாகக் கட்டடம் கட்டும் நபர்கள், மாநகராட்சி நகரமைப்பு திட்டப்பிரிவில் விண்ணப்பிக்க வேண்டும். இது அனைத்து மாநகராட்சிகளிலும் இருக்கும் பொதுவான நடைமுறைதான். கட்டப்படும் கட்டடத்தின் மாதிரி வரைபடம் (ப்ளூபிரிண்ட்), மாநகராட்சி யால் அங்கீகரிக்கப்பட்ட பட வரைவாளர் மூலம் தயாரிக்கப்பட்டு, திட்டப்பிரிவுக்கு அனுப்பி வைக்கப்படும்.
கட்டடத்தை வரன்முறைப்படுத்த சதுர அடிக்கு 62.50 ரூபாயும், அனுமதி சான்றிதழ் வழங்க சதுர அடிக்கு 40 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். இப்பணிகளுக்காக வசூலிக் கப்படும் கட்டணம், அரசின் கணக்கில் இ-சலான் மூலம் செலுத்தப்பட வேண்டும்.
இ-சலான் மூலம் கணினியில் செலுத்தப் படுவது வெற்றிகரமாக நிறைவுபெற்றால் 'சக்சஸ்' என்றும், கருவூலக் கணக்கில் கிரெடிட் ஆகாதபோது 'ஃபெயிலியர்' என்றும் ரசீதில் அச்சாகி வரும்.
சேலம் மாநகராட்சியில் திட்டப்பிரிவில் பணியாற்றிவந்த உதவியாளர் விஜய் சங்கர், இளநிலை உதவியாளர் தனபால், தூய்மைப் பணியாளர் சுரேஷ் ஆகிய மும் மூர்த்திகளும் சேர்ந்து போலியான இ-சலான் மூலம் தகிடுதத்தம் செய்துள்ளனர். அவர்கள், அரசின் கஜானாவுக்கு பணத்தைச் செலுத்தாமலேயே போலி ரசீதுகள் தயாரித்து, அதில் கட்டணம் செலுத்தியது போல் 'சக்சஸ்' என பிரிண்ட் செய்து, கோப்புகளில் சேர்த்துக்கொண்டனர். மேலோட்டமாகப் பார்க்கையில், மோசடி நடந்திருப்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது.
இந்நிலையில், 2021-2022, 2022-2023ஆம் ஆண்டுக்கான கோப்புகளை தணிக்கை செய்ததில் கட்டட வரன்முறைப்படுத்தல் மற்றும் அனுமதி சான்றிதழ் வழங்குவதற்காக வசூலிக்கப்பட்ட 81 லட்சம் ரூபாய் கணக்கில் உதைப்பது தெரியவந்தது. இதுகுறித்து, உள்ளாட்சித் தணிக்கைத்துறை எச்சரித்த பிறகே சேலம் மாநகராட்சி நிர்வாகம் விழித்துக்கொண்டது.
கையாடலில் ஈடுபட்ட மூன்று பேரிட மிருந்தும் இத்தொகை முழுமையாக வசூலிக்கப் பட்டு, அரசின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மூவரையும் அக். 26-ஆம் தேதி, மாநக ராட்சி ஆணையர் பாலசந்தர் அதிரடி யாக பணியிடைநீக்கம் செய்தார்.
இதுதொடர்பாக சேலம் மாநகராட்சி ஊழியர்களிடம் விசாரித்தோம்.
"பணியிடைநீக்கம் செய்யப்பட்டவர்களுள் ஒருவ ரான விஜய்சங்கர்தான் இந்த ஊழலில் மூளையாகச் செயல் பட்டுள்ளார். 25 ஆண்டுக்கும் மேலாக திட்டப் பிரிவிலேயே பணியாற்றி வந்துள்ளார். இதனால் ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள், பட வரைவாளர்களுடன் கரம் கோத்துக்கொண்டு, எந்தெந்த வழிகளில் தில்லுமுல்லுகளைச் செய்யலாம் என அத்தனை நெளிவுசுளிவுகளையும் கற்றுத்தேர்ந்திருக்கிறார்.
குறுக்கு வழியில் சேர்த்த பணத்தின் மூலம் விஜய்சங்கர், சேலம் நகரமலை அடிவாரத்திலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு ஃபிளாட் வாங்கியிருக்கிறார். நியூ சிவாய நகரில் தற்போது புதிதாக ஒரு வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் மூலம் பெறப்படும் லஞ்சப்பணத்தை விஜய்சங்கர், தனது மனைவி மூலம்தான் 'டீல்' செய்வார். பலான விஷயத்தில் விஜய்சங்கர் 'சபலிஸ்ட்' என்பதால், ஆறு மாதத் திற்கு ஒருமுறை ஷிம்லா, ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களுக்குச் சென்று சூட்டைத் தணித்துக் கொள்வாராம். அதேபோல, இதற்குமுன்பு திட்டப் பிரிவில் பணியாற்றிவந்த உதவிப் பொறியாளர் தமிழ்ச்செல்வனுக்கும் இந்த முறைகேட்டில் தொடர்பு உள்ளது. அவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். இதுதொடர்பாக செயற்பொறியாளரும் அவ்வப்போது 'சூப்பர் செக்' செய்திருக்கவேண்டும்,'' என்கிறார்கள் மாநகராட்சி ஊழியர்கள்.
மாநகராட்சி அனுமதி பெற்ற பட வரை வாளர் கல்யாணகுமார் என்பவரின் கணினி ஐ.டி., செல்போன் எண்ணை பயன்படுத்திதான் இவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில், கல்யாண குமாருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள் ளது. இதையடுத்து அவருடைய பட வரைவாளர் அனுமதியை, மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிசாமி ரத்துசெய்து உத்தரவிட்டுள்ளார்.
மோசடி ஆசாமியான விஜய்சங்கரின் விளக் கம் பெற, அவரை பத்து நாள்களாக செல்போனில் தொடர்புகொண்டும், அழைப்பை ஏற்கவில்லை.
பணியிடைநீக்கம் செய்யப்பட்ட தனபால், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கெஜல்நாயக்கன்பட்டியில் 31 லட்சம் ரூபாயில் புதிதாக ஒரு வீடு வாங்கியிருக்கிறார்.
இதுதொடர்பாக தனபாலிடம் விசாரித்தோம்.
"கட்டட வரன்முறை, அனுமதிக்கான கட்ட ணத்தை பதிவுபெற்ற பட வரைவாளர்கள் தான் செலுத்தமுடியும். நான் ஒரு சாதாரண கிளார்க். இதில் தேவையின்றி என்னை சிக்கவைத்துள்ளனர். கட்டட வரன்முறை தொடர்பாக வரும் கோப்புகளில் ஒரு பேப்பருக்கு 500 ரூபாய் கிடைக்கும். உதவிப் பொறியாளர்கள் நிலையில் உள்ளவர்கள் பேப்பருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லஞ்சம் வாங்குகிறார்கள். இதெல்லாம் சாதாரணமாக நடப்பதுதான். நான் வங்கியில் கடன் வாங்கித்தான் வீடு கட்டினேன்,'' என புலம்பினார் தனபால்.
மற்றொரு முறைகேடு ஆசாமியான சுரேஷ், "என்னை மாநகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது,'' என்று மட்டும் சொல்லிவிட்டு பேச்சைத் துண்டித்துவிட்டார். இவர், வாரிசுரிமை அடிப்படையில், இரண்டு ஆண்டுக்கு முன்புதான் தூய்மைப் பணியாளராக பணியில் சேர்ந்தார். ஆனால் ஒருநாள் கூட தூய்மைப் பணியில் ஈடுபடாத இவரை, திட்டப்பிரிவில் கிளரிகல் வேலைக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
சேலம் மாநகராட்சியில் உரிமம்பெற்ற பட வரைவாளர் கல்யாணகுமாரிடம் விசாரித்தபோது, "திட்டப்பிரிவு ஊழியர் விஜய்சங்கர் உள்ளிட்ட சிலர், என்னுடைய செல்போன் நம்பரைப் பயன்படுத்தி, இ-சலான் மூலம் பணம் செலுத்தியதுபோல் முறைகேடு செய்துள்ளனர். இதில் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லை,'' என்றார்.
''எனக்கும் கீழே உதவி செயற்பொறி யாளர், உதவிப் பொறியாளர், கிளரிகல் பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் எல் லாம் கோப்புகளை சரிபார்த்த பின்னரே இறுதி ஒப்புதலுக்கு என் மேஜைக்கு வருவ தால், இதில் முறைகேடு நடந்திருந்தாலும் வெளிப்படையாக எனக்குத் தெரியவராது,'' என மேலோட்டமாகச் சொன்னார் செயற்பொறியாளர் பழனிசாமி.
இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையர் பாலசந்தரிடம் கேட்டபோது, "நகரமைப்புத் திட்டப்பிரிவில் பணியாற்றி வந்த விஜய்சங்கர், தனபால், சுரேஷ் ஆகியோர் போலி ரசீது மூலம் அரசுக்கு 81 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதோடு, மாநகராட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தியதால் பணியிடைநீக்கம் செய்திருக்கிறோம்.
பட வரைவாளர் கல்யாணகுமாருக்கும் இதில் தொடர்பு இருந்ததால் அவருடைய உரிமம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. முறைகேட்டில் தொடர்புடைய அனைவர் மீதும் காவல்துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படும்,'' என கறாராகச் சொன்னார்.
விஜய்சங்கர் பணியாற்றிய காலகட்டத்தில் கட்டட வரன்முறை தொடர்பான கோப்புகளை மறு தணிக்கை செய்தால், பல கோடி ரூபாய் ஊழல் அம்பலமாகும் என்ற பரபரப்பு பேச்சும் உலா வருகிறது. சாட்டையைச் சுழற்றுவாரா கமிஷனர் பாலசந்தர்?
___________
தமிழகம் முழுக்க மறு தணிக்கை!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர் ஊரமைப்பு பிரிவில் கட்டட வரன்முறை மற்றும் அனுமதிக்கான கட்டணத்தில் போலி ரசீது மூலம் 1.20 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டிருந்ததை உள்ளாட்சித் தணிக்கை அதிகாரிகள் முதலில் கண்டுபிடித்துள்ளனர். அதன்பிறகே மற்ற மாநகராட்சிகளிலும் இதுபோல் முறைகேடு நடந்திருக்கலாம் என 'அலர்ட்' செய்துள்ளனர். கோவை மாநகராட்சி திட்டப்பிரிவில் 4.25 கோடி ரூபாயும், திருப்பூர் மாநகராட்சியில் 52 லட்ச ரூபாயும் போலி இ-சலான் மூலம் முறைகேடு நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சிகள் மட்டுமின்றி கிராமப்புற, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் இதேபோன்ற முறைகேடு நடந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆகையால் தமிழகம் முழுவதும் அனைத்து உள்ளாட்சிகளிலும் கட்டட வரன்முறை தொடர்பான கணக்கு வழக்குகளை மறுதணிக்கை செய்யவேண்டும் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.