Advertisment

சோறு இல்லாமல் 8 லட்சம் சமையல் தொழிலாளர்கள்! -கண்டுகொள்ளாத அரசு!

gf

""திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் 20 லிருந்து 30 பேர்தான் ஊரடங்கு காலத்தில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதால் ஊருக்கே சோறுபோட்ட சமையல் தொழிலாளர்களான நாங்க சோத்துக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கோம்''’ என்று கண்ணீர் வடிக்கிறார்கள் சமையல் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள்.

Advertisment

ff

பல லட்சம் சமையல் தொழிலாளர்களின் நிலை குறித்து சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டார சமையல் தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ) பொதுச்செயலாளர் வி.கே.எம்.சுந்தர் நம்மிடம், ""திருமண சுப நிகழ்ச்சிகளுக்காக ஏற்கனவே ஒப்புக்கொண்டு முன்பணம் பெற்ற நிலையில், திடீரென்று தமிழக அரசின் கொரோனா தடுப்பு நட வடிக்கையால் பல திருமண விழாக்கள் ரத்து செய்யப் பட்டுவிட்டன. எளிமையாக நடக்கும் மற்ற திருமணங்களில் சமையல் தொழிலுக்கு இடமில்லை. வறுமையில் வாடும் சமையல் தொழிலாளர்களுக்கு சமையல் ஒப்பந்ததாரர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்துகொண்டுதான் இருக் கிறார்கள்.

""திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளில் 20 லிருந்து 30 பேர்தான் ஊரடங்கு காலத்தில் பங்கேற்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதால் ஊருக்கே சோறுபோட்ட சமையல் தொழிலாளர்களான நாங்க சோத்துக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டுக்கிட்டிருக்கோம்''’ என்று கண்ணீர் வடிக்கிறார்கள் சமையல் தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள்.

Advertisment

ff

பல லட்சம் சமையல் தொழிலாளர்களின் நிலை குறித்து சென்னை மற்றும் புறநகர் சுற்றுவட்டார சமையல் தொழிலாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யூ) பொதுச்செயலாளர் வி.கே.எம்.சுந்தர் நம்மிடம், ""திருமண சுப நிகழ்ச்சிகளுக்காக ஏற்கனவே ஒப்புக்கொண்டு முன்பணம் பெற்ற நிலையில், திடீரென்று தமிழக அரசின் கொரோனா தடுப்பு நட வடிக்கையால் பல திருமண விழாக்கள் ரத்து செய்யப் பட்டுவிட்டன. எளிமையாக நடக்கும் மற்ற திருமணங்களில் சமையல் தொழிலுக்கு இடமில்லை. வறுமையில் வாடும் சமையல் தொழிலாளர்களுக்கு சமையல் ஒப்பந்ததாரர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்துகொண்டுதான் இருக் கிறார்கள். இனியும் எத்தனை நாட்கள்தான் அவர்களால் செய்ய முடியும்? அவர்களே சமையல் தொழிலுக்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது? என்ற வேதனையோடு இருக்கிறார்கள். இன்று, நூற்றுக்குத் தொண்ணூறு சமையல் ஒப்பந்ததாரர்கள் சமையல் பாத்திரம் உள்ளிட்ட பொருட் களை வாடகை இடத்தில்தான் வைத்துள்ளார்கள். சமையல் கூடத்திற்கும் வாடகை கட்ட வேண்டும்.

ff

Advertisment

சமையல் தொழில்சார்ந்தவர்கள் (மணவறை அலங்காரம்-டெக்ரேசன்) செய் பவர்கள் பந்தல்போடுபவர்கள், சமையல் பாத்திரம், சேர், டேபிள் போன்றவை வாடகைக்கு விடுபவர்கள், திருமண வீட்டில் கச்சேரி நடத்துபவர்கள், அந்தப் பொருட்களை வைத்துள்ள குடோன்களுக்கு வாடகை எப்படி கொடுப்பது என கடுமையான மன உளைச்சலோடு இருக்கிறார்கள். மங்கள வாத்தியம் இசைத்தவர்கள் வீட்டில் எல்லாம் சோககீதம் இசைக்க ஆரம்பித்துவிட்டது. அதுமட்டுமல்ல, திருமண வீட்டார் தங்களது குடும்பத்திற்கு பட்டு வேட்டி -சட்டை தைத்து கொடுக்க தையல் தொழிலாளர்கள் படும் பாடும் பெரும்பாடாக உள்ளது'' என்று குமுறி வெடிக்கிறார்.

தமிழ்நாடு கேட்டரிங் ஓனர் அசோசியேஷன் தலைவர் கோயம்புத் தூர் மாதம்பட்டி நாகராஜ் நம்மிடம், ""தற்போது, தமிழக அரசு அறிவித்த 1000 ரூபாய் நிதியுதவிகூட எங்களுக்கு கிடைக்காது. திருமண விழாவில் சுமார் 20 பேர் மட்டுமே வைத்து நடத்திக் கொள்ளவேண்டும் என்று அரசு உத்தர விட்டிருக்கிறது. ஆனால், 33 சதவீதம் தொழிலாளர்களை வைத்து அரசாங்க அலுவலகங்கள், வங்கிகள், தொழிற்கூடங்கள் இயக்கலாம் என்று அரசாங்கம் உத்தரவிட் டிருக்கிறது.ff அதைப்போலவே, திருமணம் மற்றும் சுபகாரியங் களுக்கு 33 சதவீத அடிப்படை யில் சுமார் ஒரு 200லிருந்து 300 பேர் வரை அனுமதி வழங்கினால்தான் எங்க ளால் வாழமுடியும். இல்லையென்றால், எங்களது தனி நலவாரியம் மூலம் உதவிகளையாவது செய்யவேண்டும். இதுகுறித்த, கோரிக்கைகளுடன் தொழி லாளர் நலத்துறை அமைச்சர் நிலோஃபர் அவர்களை சந்திக்கவும் இருக்கிறோம்'' என்று வேதனையை வெளிப்படுத்துகிறார்.

இதுகுறித்து, தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர்கள் முன்னேற்றசங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இட்லி இனியவன் நம்மிடம், ""20 பேருக்கு சமைத்தாலும் 200 பேருக்கு செய்தாலும் அதே பணிச்சுமைதான். தயாரித்த உணவுகளை கொண்டுபோய் சேர்க்க வண்டி வாகனங்கள் வங்கியில் பெறப்பட்ட கடனுக்கு மாதாந்திர தவணை கட்டமுடியாத அளவுக்கு இக்கட்டான சூழலில் சமையல் ஒப்பந்ததாரர்கள் இருக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டு அப்போதைய முதல் வராக இருந்த கலைஞர் அவர்களின் ஆட்சியில் சமையல் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று சமையல் தொழிலாளர் நலவாரியம் என தனி வாரியம் அமைத்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். வாரியத்துக்கு தனி அலுவலர் நியமிக்க வலியுறுத்தி. அரசுக்கு கோரிக்கை மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் போராட்ட மெல்லாம் நடத்தியும் பயனில்லாததால், 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத் தில் தமிழ்நாடு சமையல் கலை தொழிலாளர் கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நீதி பேராண்மை மனு ஒன்றை தாக்கல் செய்தோம்.

நீதியரசர் சுப்பிரமணியம் அவர்கள் வழக்கை விசாரித்து 12 வார காலத்திற்குள் சமையல் தொழிலாளர்கள் தனி நலவாரிய அலுவலர்களை நியமிக்கவேண்டும் என உத்தரவிட்டார். ஆனால், 2 ஆண்டுகள் ஆகியும் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் இன்றைய தேதிவரை அதிமுக அரசு அலட்சிய மாக இருக்கிறது. அந்த நலவாரியத் திற்கு தனி அலுவலர் நியமித்திருந் தால் கொரோனா போன்ற பேரிடர் சூழ லில் சமையல் தொழிலையே நம்பி வாழும் 8 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் வாழ்க் கைக்கு பேருதவியாக இருந்திருக்கும். இந்தப் பேரிடர் காலத்தில் சமையல் தொழிலா ளர்களுக்கு மாதாந்திர குறைந்த பட்சம் 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கவேண்டும். கொரோனா சூழலில் எங்களைக் காப் பாற்றவேண்டும்'' என்று அரசாங்கத்திடம் கோரிக்கைவைக்கிறார்.

அரசு மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்ப ஆரம்பித்து விட்டதால் சென்னையிலுள்ள 747 திருமண மண்டபங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது மாநகராட்சி. இந்நிலையில், இவர்களது வாழ்வாதாரத்துக்கும் வழி செய்யவேண்டும்!

- மனோசௌந்தர்

nkn060520
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe