as

___________________________________________________

பூந்தமல்லி

Advertisment

pதி.மு.க. வேட்பாளர் முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமிக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் வைத்தியநாதனுக்கும் இடையில்தான் போட்டி நிலவுகிறது. அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் ஏழுமலை, அ.தி.மு.க. வாக்குகளை பிரிப்பதில் கவனம் செலுத்துகிறார்.

மோடி எதிர்ப்பலை தொகுதியில் பரவலாக இருக்கிறது. அ.தி.மு.க. பணத்தை நம்பி இருக்கிறது. புரட்சிபாரதம் கட்சியின் வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு பலம் சேர்க்கும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வாக்குகளோ தி.மு.க. வேட்பாளரின் வெற்றிக்கு உதவியாக இருக்கும்.

தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணசாமி மக்களவை உறுப்பினராக இருந்தபோது பூந்தமல்லி தொகுதிக்கு பல திட்டங்களை கொண்டுவந்திருக் கிறார். அது அவருக்கு ஆதரவாக இருக்கிறது.

Advertisment

தற்போதைய அ.தி.மு.க. ஆட்சியில் குறிப்பிடத்தக்க திட்டம் எதுவும் இல்லை என்பதால் அந்த அதிருப்தியும் தி.மு.க. வேட்பாளருக்கே சாதகமாக இருக்கிறது. தி.மு.க.வுக்கு அடுத்த இடத்தைப் பிடிக்கவே அ.தி.மு.க.வும் அ.ம.மு.க.வும் போட்டி யிடுகின்றன.

தி.மு.க.வுக்கு பலம்தான்... அ.தி.மு.க.வுன் பணபலமும், அதிகாரபலமும் குறுக்கிடாதவரை!

-அரவிந்த்

விளாத்திகுளம்

v

விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதி யில் தி.மு.க. சார்பில் வசந்தம் ஜெயக்குமாரும், அ.தி.மு.க. சார்பில் சின்னப்பனும், அ.தி.மு.க. போட்டி வேட்பாளராக மார்க்கண்டேயனும், அ.ம.மு.க. சார்பில் ஜோதிமணியும் போட்டி யிடுகிறார்கள்.

தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் தவிர மற்ற மூன்று வேட்பாளருமே அ.தி.மு.க. வாக்குகளையே பிரிக்கிறார்கள். அதேசமயம், தி.மு.க. வாக்குகளுடன் காங்கிரஸ், ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்குகளையும் மொத்தமாக வாரிச்சுருட்டுகிறார் ஜெயக்குமார். ஏற்கெனவே இந்தத் தொகுதி தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள் வருவதால் கனிமொழிக்கான பிரச்சாரமும் வலுவாக இருக்கிறது.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் சின்னப்பனும், போட்டி வேட்பாளர் மார்க்கண்டேயனும் முன் னாள் எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்கள். சின்னப்பனை அமைச்சர் கடம்பூர் ராஜு சிபாரிசு செய்து நிறுத்தி யிருக்கிறார். அதேசமயம் தனக்கு சீட் மறுத்த கடம்பூர் ராஜுவை தோற்கடிக்கும் நோக்கில் மார்க்கண்டேயன் தீவிரமாக வேலை செய்கிறார்.

ஆனால், இந்த மோதல்களுக்கு இடையே தி.மு.க. வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் புகுந்து முன்னேறுகிறார். முன்னாள் எம்.எல்.ஏ.க்களாக இருந்த சின்னப்பனும் மார்க்கண்டேயனும் தொகுதிக்கு செய்த நன்மை என்ன என்று அவர் கேட்பது களத்தில் வேலை செய்கிறது.

-பரமசிவன்

அரூர்

ar

ரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் கிருஷ்ணகுமாரும், அ.தி.மு.க. சார்பில் சம்பத்குமாரும் அ.ம.மு.க. சார்பில் ஆர்.ஆர்.முருக னும் போட்டியிடு கிறார்கள். ஆனாலும் முக்கிய போட்டி தி.மு.க. வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் இடையேதான் நிலவுகிறது.

தனித் தொகுதியான அரூரில் தலித் வாக்குகளில் பெரும் பான்மையாக தி.மு.க. அணிக்கே செல்கிறது. அ.தி.மு.க.வுக்கான வாக்குகளை அ.ம.மு.க. வேட்பாளர் முருகனும் பாதிக்குப்பாதி பிரிக்கிறார். தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணகுமாருக்கு தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் மொத்தமாக கிடைக்கும் என்கிறார்கள். கொங்கு வெள்ளாளர் வாக்குகளில்கூட கணிசமாக தி.மு.க. வேட்பாளருக்கு கிடைக்கிறது. மலைவாழ் மக்களும் இந்தமுறை தி.மு.க. அணிக்கு வாக்களிக்க முடிவு செய்திருக்கிறார்கள். ஜாக்டோ ஜியோ அமைப்பு அவர்களுடைய பாணியில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளது.

அ.ம.மு.க. வேடட்பாளர் ஆர்ஆர் முருகன் தேர்தல் வேலைகளில் முனைப்புக் காட்டவில்லை. கிட்டத்தட்ட இந்த ஆட்டத்திலேயே இவர் இல்லை என்கிற நிலைதான். மோடி எதிர்ப்பு எடப்பாடி அரசுக்கு எதிரான மக்கள் மனநிலை எல்லாம் சேர்ந்து தி.மு.க. அணியின் வாய்ப்பை அதிகரித்திருக்கிறது. இதுபற்றிய ரிப்போர்ட் ஆளுந்தரப்பிடம் சென்றதையடுத்து வியூகங்கள் மாற்றப்படுகின்றன.

-அ.அருண்பாண்டியன்

மானாமதுரை

m

ரட்டை இலையில் நெட்டூர் நாகராஜனும், உதயசூரியனில் இலக்கிய தாசனும், பரிசுப் பெட்டியில் மாரியப்பன் கென்னடியும் முட்டி மோதிக் கொண்டிருக் கிறார்கள்.

தொகுதியில் இருக்கும் இளையாங்குடி ஒன்றியத்தில் தி.மு.க.வும் திருப் புவனத்தில் அ.தி.மு.க.வும் வலுவாக இருக்கின்றன. இளையாங்குடி நகர்ப் பகுதிகளில் இருக்கும் முஸ்லிம் சமூக வாக்குகள் தி.மு.க. தரப்புக்கு ஸ்ட்ராங்காகவே உள்ளன. ஆனால் வேட்பாளர் இலக்கியதாசன், பணத்திற்கு ரொம்பவே அல்லாடிக் கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க. முகாமிலோ மாவட்ட அமைச்சர் பாஸ்கரன், மா.செ. செந்தில்நாதன் ஆகி யோரின் கைங்கர்யத்தால் கரன்சி மழை கொட்டோ கொட்டென கொட்டு கிறது. ஆனால் வேட்பாளர் நெட்டூர் நாகராஜனின் அந்தக்கால "லீலைகள்' காட்டுத் தீயாய் பரவி, இலையை கவலைப்பட வைக்கிறது.

பரிசுப் பெட்டியின் மாரியப்பன் கென்னடியும் சளைக்காமல் பணத்தை வாரி இறைத்தாலும், "என்னை மீறி அவர் ஜெயிச்சுருவாரா'’என அ.ம.மு.க. சிவகங்கை மா.செ. உமாதேவன் உறுமும் ஆடியோ ஒன்று ரிலீசாகி பரிசுப் பெட்டியை நசுக்கிக் கொண்டிருக்கிறது.

இறுதிக்கட்டத்தில் தி.மு.க.வின் முன்னிலையை பண வினியோகம் மாற்று வதற்கு வாய்ப்பு இருக்கிறது.

-நாகேந்திரன்

திருவாரூர்

tமிழக வரலாற்றில் யாருக்குமே கிடைக்காத மாபெரும் வெற்றியை கலைஞருக்கு கொடுத்த தொகுதி திருவாரூர். அவருடைய மறைவால் நடைபெறும் இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. தி.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனும், அ.தி.மு.க. சார் பில் முன்னாள் அமைச்சர் ஜீவா னந்தமும், அ.ம.மு.க. சார்பில் எஸ்.காம ராஜும் களத்தில் இருக்கிறார்கள்.

தலித், இஸ்லாமியர், வெள்ளா ளர், முக்குலத்தோர் வாக்குகள் நிரம்பி யிருந்தாலும், வெற்றியை தீர்மானிப்பவர்கள் வெள்ளாளர்களே. அந்த வாக்குகளை குறிவைத்தே அ.தி.மு.க. வெள்ளாளரான ஜீவா னந்தத்தை இறக்கியிருக்கிறது. அவருக்காக அமைச்சர் காமராஜ் பிரச்சாரம் செய்கிறார்.

தி.மு.க. வேட்பாளர் தொகுதியில் மட்டுமல்ல மாவட்டத்தில் நன்கு அறி முகமானவர். அவருக்காக தி.மு.க.வினர் தீவிரமாக பணியாற்றுகிறார்கள். திருவாரூருக்கு கலைஞர் கொடுத்த திட்டங்களும், தி.மு.க.வின் நிரந்தர வாக்கு வங்கியும், இஸ்லாமியர் வாக்குகளுடன் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளும் பூண்டி கலைவாணனின் வெற்றிக்கு துணை நிற்கின்றன.

அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிடும் எஸ்.காமராஜுக்கு நல்ல பெயர் உள்ளது. அ.தி.மு.க. மீதுள்ள அதிருப்தி வாக்குகளை இவர் பிரிக்கிறார். தொகுதியில் இரண்டாம் இடத்தை தக்கவைக்கவே அ.தி.மு.க. போராடுகிறது. அதனால் இறுதிக்கட்ட கவனிப்பு இத்தொகுதியில் பலமாக இருக்கும்.

-க.செல்வகுமார்

பாப்பிரெட்டிபட்டி

p

ர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி தொகுதி இடைத்தேர்தலில் வன்னியர் வாக்குகளே வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கின்றன. அந்தவகையில் அ.தி.மு.க., தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. ஆகிய மூன்று கட்சிகளுமே வன்னியர் சமுதாய வேட்பாளர்களைக் களமிறக்கி இருக்கின்றன.

பாப்பிரெட்டிபட்டியில் அ.தி.மு.க-.பா.ம.க. இடையே ஏற்பட்டிருக்கும் விரிசலால் வன்னியர் வாக்குகளைப் பெறமுடியாமல் நெருக்கடியில் இருக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளர் கோவிந்தசாமி. தி.மு.க. வேட்பாளர் மணி வன்னியர் வாக்குகளைத் தாண்டி, வி.சி.க. மூலமாக தலித் வாக்குகளையும் பெறுவதில் பலமாக இருக்கிறார். இருப்பினும், உட்கட்சிப் பூசல் அவரது வெற்றிக்குத் தடையாக இருக்கிறது.

முன்னாள் அமைச்சரான பழனியப்பனின் கோட்டையான பாப்பிரெட்டிபட்டியில், அவரது ஆதரவில் களமிறங்கியிருக்கும் அ.ம.மு.க. வேட்பாளர் டி.கே. ராஜேந்திரனையே வன்னியர் வாக்கு கள் வட்டமிடுகின்றன. இதனால், அ.தி.மு.க.-தி.மு.க. என்றில்லாமல், போட்டி தி.மு.க.-அ.ம.மு.க. என்று மாறியிருக்கிறது.

வன்னியர் வாக்குகள் மட்டுமின்றி, கொங்கு, தலித், முஸ்லிம் என பலதரப்பட்ட வாக்குகளைப் பெறுவதில் முந்திச் செல்லும் டி.கே.ராஜேந்திரனுக்கு பிரேக் போடுவது எப்படி என்று யோசிக்கின்றன இரண்டு பெரிய கட்சிகளும்.

-அருண்பாண்டியன்

பெரம்பூர்

p

டி.டி.வி.தினகரன் முகாமில் முக்கிய ஆளாக இருப்பவரும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவருமான வெற்றிவேல்தான் அ.ம.மு.க. வேட்பாளர். ஜெயலலிதா இருந்த போதும் சரி, இப்போதும் சரி, தொகுதி மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்ற பொருமல் வெற்றிவேலுக்கு எதிராக அதிகமாகவே ஒலிக்கிறது. கடந்த தேர்தலில் வெறும் 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவேல் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க.சார்பில் களம் இறங்கியிருக்கும் ராஜேஷோ, அரசின் நலத்திட்ட உதவிகளை முன்கூட்டியே இத்தொகுதி மக்களுக்கு வாங்கிக் கொடுத்து, வாக்குகளை நன்றாகவே கவர்ந்து வைத்திருக்கிறார். ஆனால் ஆர்.கே.நகரைச் சேர்ந்த ராஜேஷுக்கு மற்ற அம்சங்களெல்லாம் மைன சாகவே இருக்கிறது. பலூன் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிடும் என்.ஹர்ஷித் என்ற இளைஞரோ, “""இளைஞர் களுக்கு வேலை வாய்ப்பில்லை. தரமான மருத்துவமனை இல்லை. குடிதண்ணீர் இல்லை'' என பட்டியலிடுபவர், ""நான் ஜெயிப்பேன் எனச் சொல்லமாட்டேன். ஆனால் இந்தத் தொடக் கம் நல்லதொரு முடிவைத் தரும்'' என்கிறார்.

இந்த தொகுதியைச் சேர்ந்தவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தவர், இப்படி எல்லாமே உதயசூரியன் வேட்பாளர் ஆர்.டி. சேகருக்கு சாதகமாகவே இருக்கின்றன.

-அருண்பாண்டியன்

பெரியகுளம்

p

னைத்து விழாக் களுக்கும் கொட்டகை போடும் சாதாரண தொழிலாளியான மயில்வேல் தான் இரட்டை இலை வேட்பாளர். கம்பம் அருகில் உள்ள ஆனைமலையான் கோட்டையைச் சேர்ந்த சரவணக்குமார் உதயசூரியன் வேட்பாளராகவும் கதிர்காமு பரிசுப் பெட்டி வேட்பாளராகவும் களம் இறங்கி, இறுதிக்கட்டப் பரபரப்பில் மூச்சிறைக்க ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

துணைமுதல்வர் பன்னீரின் மகன் ரவீந்திரநாத் குமார், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் மயில்வேலுவுக்காக பம்பரமாய் சுற்றி வந்தாலும் கள்ளிப்பட்டி பூசாரி நாகமுத்து கொலை விவகாரம், இத்தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கும் பி.ஆர். சமூக மக்களிடம் இப்போதும் கனன்று கொண்டிருப்பது, இரட்டை இலை ஏரியாவை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. இதே போல் ஓ.பி.எஸ்.சின் அபார வளர்ச்சியை ஸ்டாலின் பட்டியலிட்டதும் மக்களிடம் நன்றாகவே எடுபட்டுள்ளது.

தி.மு.க.வின் மாஜி மா.செ.க்களான மூக்கையா, கம்பம் ஜெயக்குமார், இப்போதைய மா.செ.வான ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைந்து களப்பணியாற்றுவது சரவணக்குமாருக்கு சந்தோஷத்தைத் தருகிறது. தேனி ஒ.செ.சக்கரவர்த்தி, மீண்டும் கட்சியில் சேர்ந்துள்ள பெரியகுளம் மாஜி ந.செ.செல்லப்பாண்டியன் ஆகியோரின் களப்பணியும் உதயசூரியனுக்கு பிரகாசமாக இருக்கிறது.

நல்லாத்தான் போய்க்கிட்டிருந்துச்சு அ.ம.மு.க.வின் கதிர்காமு வண்டி. இப்ப ஒரு ஏடாகூட வீடியோ ரிலீஸ் ஆகி, பிரேக்டவுன் ஆகி நிற்குது. வாக்குப்பதிவுக்கு முன் ஸ்டார்ட் செய்யணும் என டி.டி.வி. வரை செய்தி போயிருக்கிறது.

-சக்தி

திருப்போரூர்

t

திகமான கிராமங்களை உள்ளடக்கிய திருப்போரூர் தொகுதியின் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கியிருக்கிறார் திருக் கழுக்குன்றம் ஆறுமுகம். எளிமையானவர் என்ற அடையாளத்தையும், தொகுதியில் பெரும் பான்மையாக இருக்கும் வன்னிய சமூக வாக்கு களையும் நம்பி தெம்பாக இருக்கிறார் ஆறுமுகம். மேலும் ஆளுங்கட்சிக்கே உரித்தான ஸ்டைலில் பண வினியோகமும் தாராளமாய் இருப்பது ஆறுமுகத்திற்குச் சாதகமாக இருக்கிறது.

தி.மு.க.வேட்பாளராக களம் இறங்கியிருக் கும் செந்தில் என்கிற இதயவர்மன், ஆரம்பத்தில் திக்கித் திணறிக்கொண்டுதான் இருந்தார். ஆனால் இரு வாரங்களுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்துவிட்டுப் போன பின்பு, தி.மு.க. முகாமிலும் வேட்பாளரின் முகத்திலும் சுறுசுறுப்பு கூடி, பிரச்சாரக் களத்தில் ஸ்பீடு தெரிகிறது. மா.செ. தா.மோ.அன்பரனின் உழைப்பு இன்னும் கொஞ்சம் கூடுதலாக தேவை. தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இருக்கும் வாக்குகளும் சூரியனுக்கு பலம் சேர்க்கிறது.

அ.தி.மு.க.வின் ஆறு முகத்திற்கு இருக்கும் அத்தனை சாதகங்களுக்கும் லேசாக சரிவை ஏற்படுத்துகிறார் அ.ம.மு.க.வின் கோதண்டபாணி.

இலையின் பசுமை பளிச்சென தெரியும் தொகுதியில் சூரியத்தரப்போ கடைசி நேர யோசனைகளில் உள்ளது.

-அரவிந்த்

சாத்தூர்

sat

சாத்தூர் தி.மு.க. வேட்பாளர் சீனிவாசன், கடந்த தேர்தலில் 4,427 வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி வாய்ப்பை இழந்தார். அந்தத் தேர்தலில், 25,442 வாக்குகளைப் பெற்ற ம.தி.மு.க., தற்போது தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது. வயதின் காரணமாகவோ என்ன வோ, பழைய வேகம் அண்ணாச்சியிடம் இல்லை. வேட்பாளர் சீனிவாசன் பொது இடங்களில் பேசத் தயங்குகிறார். தி.மு.க., கூட்டணி வாக்குகளின் மூலம் கரையேறிவிடலாம் என்கிற மெத்தனமும் இதற்குக் காரணம்.

இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெற்றால்தான் அரசியலில் தனக்கு எதிர்காலம் என்பதை உணர்ந்து, வேட்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜவர்மனை உள்ளங்கையில் தாங்கிப் பிடிக்கிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. அரசுத் திட்டங்களிலிருந்து சகலத்திலும், சாத்தூர் தொகுதி மக்களைத் திருப்திப்படுத்து வதில் கவனம் செலுத்துகிறார். இருந்தாலும் பட்டாசுத் தொழிலாளர்களின் கோபமும் சாபமும் ஆளுங்கட்சிக்கு பாதகமாகவே இருக்கிறது. முன்னாள் அ.திமு.க. எம்.எல்.ஏ. எஸ்.ஜி.சுப்பிரமணியன்தான் அ.ம.முக. வேட்பாளர். இவருக்கு வெம்பக்கோட்டை யூனியனில் வாக்கு ஆதரவு இருக்கும் அளவுக்கு, சாத்தூர் டவுனில் இல்லை. இளைஞர்களின் எழுச்சியை இவரது பிரச்சாரத்தில் காண முடிகிறது. ஆனாலும், சின்னமும், சுயேட்சை என்பதும் சுப்பிரமணியனை வாக்காளர்கள் அடையாளம் காண்பதில் தடையாகவே உள்ளன.

முக்கிய வேட்பாளர்கள் மூவருமே தொகுதியில் 28% வாக்குகளுடன் போட்டி போட்ட நேரத்தில் இந்த ஆட்சி மீதான அதிருப்தி தி.மு.க.வுக்கு சாதகமாகிறது. சனிக்கிழமை இரவு முதல் அ.தி.மு.க. தொடங்கிய ஓட்டுக்கு ரூ.2000 பட்டுவாடா ராஜவர்மனை தெம்பாக்கியுள்ளது.

-சி.என்.ராமகிருஷ்ணன்

பரமக்குடி

p

""டாக்டர் சுந்தர் ராஜனுக்கு சீட் கிடைச்சா நாம நிம்மதியா இருக்க முடியாதுன்னு அமைச்சர் மணிகண்டன் எனக்கு சீட் வாங்கிக் கொடுத்திருக்காரு. இது பொறுக்குமா எங்க மா.செ.முனியசாமிக்கு? அந்த ரெண்டு பேரும் என்னை பாடாய்ப்படுத்துகிறார்கள். இது போக என்னைப் பார்க்க வருபவர்களைப் பற்றி தகவல் சொல்வதற்காகவே ஆட்களைப் போட்டிருக்கிறார்கள். இதை சமாளிக் குறதுலேயே முக்கால்வாசி நேரம் போயிருது. அப்புறம் எங்க ஓட்டுக் கேட்டுப் போறது''’’ -இப்படித்தான் கடந்த நான்கு நாட்களாக புலம்பிக் கொண்டிருக்கிறார் அ.தி.மு.க. வேட்பாளரான சதன் பிரபாகர்.

தி.மு.க. மா.செ. முத்துராமலிங்கம், மாஜி அமைச்சர் சுப.தங்கவேலன், மாஜி மா.செ. சுப.த.திவாகர் ஆகியோர் தனித்தனியே வாக்குகள் கேட்டாலும் உதயசூரியனை ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற உத்வேகம் இருப்பதால், தெம்பாக இருக்கிறார் வேட்பாளர் சண்.சம்பத்குமார். பரமக்குடி ஒன்றியத்தில் உள்ள கள்ளிக்குடி, பரளை, மோசுகுடி, எஸ்.காவனூர், பாம்பூர் மற்றும் நயினார்கோவில் ஒன்றியத்தின் வாக்குகள் சம்பத்குமாருக்கு சாதகமாகவே இருக்கின்றன.

பட்டியலின வாக்குகள் கமுதி ஒன்றியத்தின் புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், வல்லந்தை, எருவனூர், மண்டலமாணிக்கம் பகுதிகளின் முக்குலத்து வாக்குகளை பெரிதும் நம்புகிறார் அ.ம.மு.க.வின் டாக்டர் முத்தையா.

மும்முனைப் போட்டியில் சூரிய வெளிச்சம் கூடுதலாக இருக்கிறது.

-நாகேந்திரன்

ஆம்பூர்

a

மாதனூர் ஒன்றியத்தைச் சேர்ந்தவரான அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா, தான் சார்ந்த மைனாரிட்டி சமுதாயமான ராஜாக்கள் வாக்குகள் 15 ஆயிரத்தை நிலையாக வைத்திருக்கிறார். அதோடு, வன்னியர் மற்றும் தலித் வாக்குகளும் தனக்கே கிடைக்கும் என்று நம்புகிறார். அதே மாதனூரைச் சேர்ந்த அ.தி.மு.க.காரரான ஷோபாபாரத், சுயேட்சையாக போட்டியிட்டு ஜோதிராமலிங்கராஜாவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்.

தி.மு.க. வேட்பாளரான பேரணாம்பட்டு வில்வநாதனும், அ.ம.மு.க. பாலசுப்பிரமணியும் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், கணிசமான நாயுடு வாக்குகள் வில்வநாதனுக்கே போகும் என்கிறார்கள். அதேபோல், தொகுதியில் இருக்கும் 18 இஸ்லாமியர் வார்டுகளின் ஆதரவும், கிறிஸ்தவர்களும் ஆதரவும் தி.மு.க.வுக்கே இருக்கிறது. அ.தி.மு.க.வில் உள்ள இஸ்லாமியர்களே அ.தி.மு.க.விற்கு எதிராக இருக்கின்றனர். இதை உணர்ந்த பாலசுப்பிரமணி, எஸ்.டி.பி.ஐ. மூலம் இஸ்லாமிய வாக்குகளை ஓரளவுக்கு இழுக்கப் பார்க் கிறார்.

முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி போன்ற வற்றின் களப்பணி தி.மு.க.வுக்குக் கைகொடுக் கிறது. அ.தி.மு.க. பிக்ஸ் செய்திருக்கும் இரண் டாயிரம் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என யோசிக்கிறது தி.மு.க.

-து.ராஜா

ஓசூர்

h

1998-ஆம் ஆண்டு கலவர வழக்கொன்றில் பாலகிருஷ்ணரெட்டி சிறைத்தண்டனை பெற்றதால், இடைத்தேர் தலைக் காணும் தொகுதி ஓசூர். பல கட்சிகள் மோதினாலும் பலப்பரிட்சை தி.மு.க.வின் சத்யாவுக்கும் அ.தி.மு.க.வின் ஜோதிக்கும்தான்.

தமிழக அமைச்சரவையில் விளையாட் டுத் துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டி, சிறைத்தண்டனை உறுதியான நிலையிலும் மேல்முறையீட்டுக்குச் செல்ல கால அவகாசம் கோரிப் பெற்று சிறைத்தண்டனை யிலிருந்து தப்பினார். தற்சமயம் ஓசூர் தொகுதியை தன் மனைவி ஜோதிக்குப் பெற்றுத் தந்துள்ளதுடன் பிரச்சாரம் செய்யவும் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளார்.

ரெட்டி, வன்னியர் சமூக வாக்குகள் ஜோதிக்குப் பலம். கூடவே கூட்டணிக் கட்சிகளின் வாக்கு பலம், கரன்ஸி பலம் இவற்றை நம்பி களமிறங்குகிறார். மாறாக தலித், கம்மநாயுடுகள், இதர சமூக வாக்குகளுக்கு தி.மு.க. வேட்பாளர் சத்யா குறிவைக்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகர் முன்பு பாலகிருஷ்ணரெட்டிக்கு ஆதரவளித்தவர், இம்முறை தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவளிப்பதால் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார். கூட்டணிக் கட்சிகளின் வாக்கில் சேதாரமில்லாத பட்சத்தில் கணிசமான வாக்குச் சேரும். தி.மு.க.வில் மீண்டும் இணைந்துள்ள முன்னாள் ந.செ. மாதேஸ்வரனின் களப்பணியும் கைகொடுக்கிறது.

நில மோசடி, தொகுதிக்கு பாலகிருஷ்ணரெட்டி எதுவும் செய் யாதது, சமீபத்தில் நடந்த நந்தீஸ்- சுவாதி கொலைவழக்கின் தாக்கம் போன்றவை ஜோதிக்கு இடைஞ்சல் செய்யக் காத்திருக்கிறது

அ.தி.மு.க. வாக்குகளை அ.ம.மு.க. பிரிப்பது, தி.மு.க.வின் சத்யாவுக்கு தெம்பு தருகிறது. வாக் காளர்களுக்கு தெம்பு தர என்னென்ன செய்யலாம் என திட்டமிட்டிருக்கிறது ஆளுந்தரப்பு.

-அ.அருண்பாண்டியன்

ஆண்டிப்பட்டி

a

தொகுதியில் பெரும் பான்மை சமூக வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் மரபுப் படி தி.மு.க., அ.தி.மு.க., அ.ம. மு.க. கட்சிகள் ஆண்டிப்பட்டி யில் பிறமலைக்கள்ளர் சமூக வேட்பாளரையே தேர்வு செய்திருக்கின்றன.

ஓ.பி.எஸ். மகன் தேர் தலில் நிற்பதால், மாவட்டத்தில் பொறுப்பிலுள்ள கட்சிக் காரர்கள் அவருக்குப் பின்னாலேயே போய்விடுவதால், அ.தி.மு.க. லோகிராஜனின் பிரச்சாரம் பலவீனமாக இருக்கிறது. வாக்குகள் என்று பார்த்தாலும் பிறமலைக்கள்ளர் சமூக வாக்குகள் மூன்றாகப் பிரிகின்றன. ஓ.பி.எஸ். சமூக வாக்குகளும் முழுமையாக லோகிராஜனுக்கு கிடைக்குமா என்ற நிலையில் ஆளுங்கட்சி யாக இருந்தும், கம்பம், கூடலூர் பகுதிகளில் பலவீனமாக இருக்கிறார். தி.மு.க. சார்பில் கள மிறக்கப்பட்ட மகாராஜன், லோகிராஜனின் உடன்பிறந்த அண்ணன். அவருக்காக மாவட் டப் பொறுப்பாளர் கம்பம் ராம கிருஷ்ணன், முன்னாள் மாவட்டப் பொறுப்பாளர் ஜெயக்குமார் உள்ளிட்ட உடன் பிறப்புகள் தேர்தல் பணிகளில் வரிந்து கட்டிச் செயல் படுவது ப்ளஸ் பாயிண்ட். ஸ்டா லின் வருகையின் போது கூடிய பெருங்கூட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் மகாராஜன் மற் றும் கட்சியின் செல்வாக்கைக் காட்டியது.

அ.ம.மு.க. ஜெயக்குமார் தொகுதிக்கு புதுமுகம்தான் என்றாலும் தங்க தமிழ்ச் செல் வனின் செல்வாக்கு ஜெயக்குமா ருக்கு வேலைசெய்யும். உள்காடு, கம்பம் ஒன்றியம், கூடலூர் பகுதிகளில் பெருமளவு பிற மலைக்கள்ளர் ஓட்டுகளை அ.ம.மு.க. அறுவடை செய்யும். தெற்குப் பகுதியிலுள்ள கவுண் டர் ஓட்டுகளையும் முன்னாள் சேர்மன் அருண்குமார் மூலம் ஜெயக்குமார் வளைத்து வருகிறார். இலையும் பரிசுப் பெட்டியும் பிரிக்கும் ஓட்டுகள் சூரியனுக்குப் போகலாம். அ.தி.மு.க.வின் இரண்டு முதல்வர்கள் ஜெயித்த தொகுதி என்பதால் ஆண்டிப்பட்டியைத் தக்கவைக்க ஆளுந்தரப்பு மெனக்கெடுகிறது.

-சக்தி

சோளிங்கர்

s

.தி.மு.க. வேட்பாளரான சம்பத், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். சென்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பா.ம.க. 51 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இந்த இரண்டு கட்சிகளுமே அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பது, சம்பத்திற்கு பலம் சேர்க்கிறது. அதேபோல், அ.தி.மு.க. முன்னாள் மா.செ. அப்பு, மகளிரணி ராதிகா போன்றோர் கடுமையாக உழைக் கின்றனர்.

தி.மு.க. வேட்பாளர் அசோகன், தான் சார்ந்த முதலியார் சமுதாய வாக்குகளையே பெரிதும் நம்பியிருக்கிறார். அதுபோக, தலித் வாக்குகளைக் கைப்பற்றித் தர வி.சி.க.வினரின் பிரச்சாரம் உதவுகிறது.

வன்னியர் வாக்குகளைப் பெற ஜெகத்ரட்சகன் பிரச்சாரம் செய்கிறார். இருந்தும் சம்பத்தின் சாதாரண, எளிமையான தோற்றம் அசோகனுக்கு மைனஸ்.

அசோகனைப் போலவே முதலியார் சமு தாயத்தைச் சேர்ந்தவரான அ.ம.மு.க. வேட்பாளர் மணி, தி.மு.க., அ.தி.மு.க. என இரு கட்சி வாக்குகளையும் பிரிக்கிறார். இதனால், பலவீனம் என்னவோ தி.மு.க.வுக்குதான். இதை சரிசெய்யவே ஸ்டாலின் ஏப். 14-ந் தேதி மீண்டும் பிரச்சாரக் களத்திற்கு வந்திருந்தார்.

தேர்தலை ஒட்டி அ.தி.மு.க. இறக்கிவிட இருக்கும் வைட்டமின் "ப'’அதனை வலுவான இடத்திற்குக் கொண்டு செல்லும்.

-து.ராஜா

நிலக்கோட்டை

ni

.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தேன் மொழியும், தி.மு.க. சார்பில் வக்கீல் சௌந்திரபாண்டியனும், அ.ம.மு.க. சார்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தங்கதுரையும் போட்டியிடு கின்றனர்.

பூக்கள் உற்பத்திக்குப் பெயர்பெற்ற இத்தொகுதியில் இலை விசுவாசிகள் அதிகம். அதை நம்பித்தான் அ.தி.மு.க. தேன்மொழியைக் களமிறக்கி யிருக்கிறது. ஆனால் கடந்தமுறை ச.ம.உ.வாக இருந்தபோது தொகுதிக்கு எதுவும் செய்யாதவர் எனும் பெயரைச் சம்பாதித்திருக்கிறார். எட்டு வருடமாக ஆட்சியில் இருந்தும் தொகுதியின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க அ.தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்ற அவப்பெயர் இருக்கிறது. கணவர் சேகரை மீறி கட்சிக்காரர் கள் தேன்மொழியை பார்க்கமுடியாதென ர.ர.க்கள் புகார்ப்பட்டியல் வாசிக்கின்றனர்.

தகுதிநீக்கம் செய்யப்பட்ட தங்கதுரை ஓட்டைப் பிரிக்கும் வேலையைச் செவ்வனே செய்துவருகிறார். தொகுதிப் பொறுப்பாளர் அமைச்சர் சீனிவாசனும் முன்னாள் அமைச்சர் விசுவநாதனும் வரிந்துகட்டி தொகுதியை தக்கவைக்கப் போராடி வருகிறார்கள்.

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பொன்னம்மாளின் உறவினர் என்ற அறிமுகம், தி.மு.க. புள்ளிகள் ஐ.பெரியசாமி, செந்தில்குமா ரின் தேர்தல் பணிகள், சமூகரீதியாகச் சென்று ஓட்டுகளைச் சேகரிப்பது, சிறுபான்மை சமூகத்தின் ஆதரவு என சௌந்திரபாண்டியன் வெற்றிக்கான பணிகளில் மும்முரம் காட்டுகிறார்.

கடைசிக் கட்ட கவனிப்புக்கு பெரிய கட்சிகள் வேகம் காட்டிவரும் நிலையில், சௌந்திரபாண்டியனின் உற்சாகம் குறைய வில்லை.

-சக்தி

குடியாத்தம்

h

.தி.மு.க. வேட்பாளர் கஸ்பா. மூர்த்திக்கு இருக்கும் அதிரடி இமேஜால், சொந்தக் கட்சியினரே தூக்கிச் சுமக்கத் தயங்குகின்றனர். தொகுதியில் பெரும்பான்மை வகிக்கும் செங்குந்த முதலியார் சமுதாயத் தினரும், "மூர்த்திக்கு வாக்களிக்காதீர்கள்' என முடிவு செய்துள்ளனர். பா.ம.க. மூலமாக வன்னியர் வாக்குகளைக் கவரவே இப்போது முயற்சி நடக்கிறது.

தி.மு.க. வேட்பாளர் காத்தவராயன் ரவுடி பட்டியலில் இருக்கிறார் என அ.தி.மு.க. பிரச்சாரம் செய்கிறது. இருப்பினும் அவர் அடிதடி பார்ட்டி கிடையாது, சாதுவானவர் என்ற இமேஜ் தொகுதியில் நிலவுவது சாதகம். முதலியார் வாக்குகளும், இசுலாமியர்கள் ஆதரவும் காத்தவராயனுக்கு பலமென்றாலும், உட்கட்சிப் பூசல் பின்னடைவை ஏற்படுத்தி வந்தது. தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர் வழக்கறிஞர் பரந்தாமன் காட்டிய வேகம், நிலை மையை சீராக்கியுள்ளது.

இவர்களுக்கு மத்தியில் "உங்கள் வீட்டுப் பெண் ணாக மீண்டும் என்னைத் தேர்வுசெய்து, தொகுதிக்கு நல்லதுசெய்ய அனுமதி யுங்கள்' எனக் கேட்கும் அ.ம.மு.க. வேட்பாளர் ஜெயந்தி பத்மநாபன், அ.தி.மு.க., தி.மு.க. தரப்பை விரும்பாதவர்களின் வாக்குகளைக் கவர்கிறார். இருதரப்பு வாக்கு களைப் பிரிப்பதன்மூலம் இரண்டு வேட் பாளர்களுக்கும் கிலியை ஏற்படுத்தி இருக்கிறார் ஜெயந்தி.

தி.மு.க. வேகம் காட்டும் தொகுதியில் கடைசிக்கட்ட பண விநியோகம் மக்கள் மன நிலையை மாற்றக்கூடும் என நினைக்கிறது அ.தி.மு.க.

-து.ராஜா

தஞ்சாவூர்

t

டைத்தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியை வெல்ல, இரு பெரிய கட்சிகளுமே மும்முரம் காட்டு கின்றன. அ.தி.மு.க.வில் காந்திக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வில் நீலமேகமும், அ.ம.மு.க.வில் ரெங்கசாமியும் களமிறங்குகின்றனர்.

அ.தி.மு.க. வேட்பாளர் காந்தி வேண்டாவெறுப்பாகவே களத்தில் நிற்பதாகச் சொல்கிறார்கள். வைத்தி லிங்கத்திற்கு வலதுகையாக இருந்த இவரை, வைத்திலிங்கம் கட்சிக்காரர்களை படுத்திய பாட்டுக்கு பதிலடியாக காந்தியைக் கைவிடுவதென கட்சிக் காரர்கள் முடிவுசெய்திருப்பதாகத் தெரிகிறது.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை வியாபாரிகள், ஸ்மார்ட் சிட்டிக்காக வீடுகளை இழந்தவர்கள் என காந்திக்கு எதிரானவர்களின் பட்டியல் நீள்கிறது. இதுவரை ஓரங்கட்டியே வைக்கப்பட்டிருந்த ஓ.பி.எஸ். தரப்பு, சீட்டுக் கிடைக்காமல் போனவர்கள் எல்லோரும் காந்தியின் வெற்றிக்கோட்டை தொடும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக் கிறார்கள்.

தி.மு.க.வுக்கு வலுவான வாக்கு வங்கியுள்ள தொகுதி. கோஷ்டிப்பூசல் காரணமாக இரண்டுமுறை தொகுதி கைநழுவிப்போனதை மாற்ற இம்முறை மும்முரம் காட்டிவருகிறார்கள். தி.மு.க. தலைமையிலிருந்தும் எச்சரிக்கப்பட்டிருப்பதால் கட்சிப் பொறுப்பாளர்கள் வாக்கு வேட்டையில் மும்முரம் காட்டிவருகிறார்கள்.

மேலும் தொகுதியிலுள்ள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகளும் தி.மு.க. அணிக்கே சாதகம். கடைசி நேர கரன்சி பாசனத்தை உடன்பிறப்புகள் எதிர்பார்க்கிறார்கள். அ.ம.மு.க. ரெங்கசாமி தரப்பு அ.தி.மு.க. எதிர்ப்பு வாக்குகள், கரன்சி பாசனம் என ஒரு பக்கம் களமாடி வருகிறது.

ஆங்காங்கே பூச்சி பொட்டு தொந்தரவு இருந் தாலும், அறுவடைக்கு ஆயத்தமான நிலையிலே இருக்கிறது தி.மு.க. அதனால் அ.தி.மு.க.வும் அ.ம. மு.க.வும் இரவுப் பணியில் கவனம் செலுத்துகின்றன.

-இரா.பகத்சிங்