10 வருடங்களாக தி.மு.க. எதிர்க் கட்சியாக இருக்கும்போது  பல தேர்தல்களில்  திறம்பட செயல்பட்ட  முன்னாள் நிர்வாகிகளை முழுமையாகப் புறக் கணித்துவிட்டு,  பணத்தை மட்டும் பெற்று எவ்வித அனுபவமும் இல்லாத மாற்றுக் கட்சியினருக்கு பதவி வழங்கிவருகின்றார். அதுபோல் ஒருவருக்கு நான்கு பதவியும், ஒரே குடும்பத்தில் நான்கு நபர்களுக்கு பதவியும் வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் வேலுமணி வெற்றி பெறுவதற்காக தகுதியில்லாத நபர்களை  தேர்தல் பொறுப்பாளர் களாகவும், தேர்தல் முகவர்களாகவும் பணியமர்த்தி யுள்ளார் தி.மு.க.வின் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி. இதுகுறித்தான செய்தி சமீபத்திய நக்கீரனில் வெளியாகியிருந்தது. 

Advertisment

இந்த நிலையில்... இந்த விவகாரம் சரி செய்யப்படாத காரணத்தினால் விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்த 75 தி.மு.க.வினர் ஒரே நேரத்தில் தி.மு.க.வை விட்டு விலகுவதாக ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதால் மீண்டும் பரபரப்பிற்குள்ளாகி யுள்ளது கோவை மாவட்ட தி.மு.க.

Advertisment

வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் நமக்கானது என்பதனை சூளுரைக்கும் விதமாக, திருவண்ணாமலையில் வடக்கு மண்டல தி.மு.க. மாநாடு நிறைவடைந்திருக்கின்றது. இதற்கு உறுதுணையாக மேற்கு மண்டல தி.மு.க. இருக்கும் என்பதற்காக செந்தில்பாலாஜியும், சக்கரபாணியும் களத்தி-ருக்க, விளாங்குறிச்சியின் வட்ட செயலாளர் மயில்சாமி உள்ளிட்ட 75 நபர்களின் ராஜினாமா வடக்கு மாவட்ட தி.மு.க.விற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

"வட்டச் செயலாளர் முதல்  கடைக்கோடி தொண்டன் வரை  இவரை மாற்றவேண்டும் என்று கூறிவரும், எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான குனியமுத்தூர் பகுதி செயலாளர் லோகநாதனை மாற்றவில்லை. காரணம் அவரிடமிருந்து மாதந்தோறும் கிடைக் கும் மாமூல். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் மூன்றாம் இடத்திற்கு தி.மு.க.வை கொண்டு சென்ற  கவுன்சிலரும் பகுதி செயலாளரு மான  கார்த்திக் செல்வராஜை மாற்றவில்லை.  ஆர்.எஸ்.புரம் இன்னொரு பகுதி கழகத்தில்  தலைமை செயற்குழு உறுப்பினர்,  மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர்,  பகுதி கழகச் செயலாளர்  மற்றும் கவுன்சிலர் ஆக நான்கு பொறுப்புக்களை யும்  சோமு என்கிற சந்தோஷிற்கு கொடுத்துள்ளார். இவர்தான் இங்கு கடந்த நாடாளுமன்றத் தேர்த லில் பி.ஜே.பி. அதிக வாக்குகள் பெற உழைத்தவர் என்பது தலைமை வரைக்கும் தெரிந்த ஒன்று. இன்னொன்று, ஒரே குடும்பத்தில் நான்கு பேருக்கு கட்சிப் பதவியை வாரி வழங்கியிருக்கின்றார் மா.செ. தொண்டாமுத்தூர் ரவி'' என்கின்றனர் ராஜினாமா செய்த விளாங்குறிச்சி நிர்வாகிகள்.

Advertisment

"மேட்டுப்பாளையம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமார், டி.ஆர்.எஸ். சண்முகம், வ.மா.சண்முகசுந்தரம், தெலுங்குபாளையம் டி.பி.எஸ்.ரவி போன்றோர்களை தொகுதிக்கு ஒரு செயலாளராக அமைத்தால், வடக்கு மாவட்ட தி.மு.க. ஓரளவு கரை சேரும். இல்லையெனில், இந்த நிலையே தொடர்ந்தால், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தமிழகத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பதில் ஐயமில்லை''’என்கின்றனர் விபரமறிந்த வடக்கு மாவட்ட தி.மு.க.வினர்.

மா.செ. தவறு செய்தாலும், சிக்கல் என்னவோ மேற்கு மண்டல செயலாளரான செந்தில் பாலாஜிக்கே!