சுற்றுச்சூழலுக்கும் மக்கள் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவித்த ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவி பொதுமக்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தி 13 நபர்களை கொன்றது தமிழக காவல்துறை. இதுகுறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ.யோ இரண்டு தவணையாக 71 பொதுமக்களை அடையாளப்படுத்தி இவர்கள் தான் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
மக்களுக்கும், மண்ணுக்கும் தீங்கு விளைவிக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலை இங்கு வேண்டாம் என தொடர்ந்து 99 நாட்களாக உட்கார்ந்த இடத்திலேயே போராட்டம் நடத்தி வந்தனர் சுற்றுவட்டார மக்கள். இதற்கு செவிமடுக்காத ஆள்கின்ற அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, தங்களுடைய கோரிக்கையை கலெக்டரிடம் எடுத்துக் கூற ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் ஒன்றிணைந்து மே 22, 2018 அன்று கலெக்டர் அலுவலகத்தை நோக்கி அமைதிப் பேரணியாக முன்னேறினர்.
முன்னரே திட்டமிட்டப்படி காவல்துறை துப்பாக்கிச் சூட்டுடன் வெறியாட்டம் நடத்திய நிலையில் தலைசிதறியும், வாய் வெடித்தும், வயிறு சரிந்தும் மாணவி உட்பட 13 நபர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்ட நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த
சுற்றுச்சூழலுக்கும் மக்கள் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவித்த ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவி பொதுமக்கள் மீது தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தி 13 நபர்களை கொன்றது தமிழக காவல்துறை. இதுகுறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ.யோ இரண்டு தவணையாக 71 பொதுமக்களை அடையாளப்படுத்தி இவர்கள் தான் குற்றவாளிகள் என நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
மக்களுக்கும், மண்ணுக்கும் தீங்கு விளைவிக்கும் நாசகார ஸ்டெர்லைட் ஆலை இங்கு வேண்டாம் என தொடர்ந்து 99 நாட்களாக உட்கார்ந்த இடத்திலேயே போராட்டம் நடத்தி வந்தனர் சுற்றுவட்டார மக்கள். இதற்கு செவிமடுக்காத ஆள்கின்ற அரசையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து, தங்களுடைய கோரிக்கையை கலெக்டரிடம் எடுத்துக் கூற ஒட்டுமொத்த தூத்துக்குடி மக்களும் ஒன்றிணைந்து மே 22, 2018 அன்று கலெக்டர் அலுவலகத்தை நோக்கி அமைதிப் பேரணியாக முன்னேறினர்.
முன்னரே திட்டமிட்டப்படி காவல்துறை துப்பாக்கிச் சூட்டுடன் வெறியாட்டம் நடத்திய நிலையில் தலைசிதறியும், வாய் வெடித்தும், வயிறு சரிந்தும் மாணவி உட்பட 13 நபர்கள் கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்ட நிலையில், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரிக்க சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணை செய்யவேண்டுமென உத்தரவிட்டது.
அதேபோல துப்பாக்கிச் சூட்டில் தொடர் புடைய காவலர்கள் மீது வழக்குப் பதியவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 31.12.2019 அன்று 27 பேர் 21.09.2020 அன்று 44 பேர் என பொதுமக்கள் 71 பேர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ. எனினும், நீண்ட நாட்களாகியும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள ஒருவருக்கும் சம்மன் அனுப்பப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டத்தில் சி.பி.ஐ.யால் குற்றஞ்சாட்டப் பட்டிருக்கும் அக்ரி பரமசிவனோ, ""சி.பி.ஐ.யின் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்கிற அழைப்பின் பேரில் சென்றிருந்த என்னிடம் சுமார் இரண்டு மணி நேரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவ்விசாரணையில் பல்வேறு புகைப்பட ஆவணங்கள், போராட்டத்திற்காக அச்சிடப்பட்ட துண்டறிக்கைகள், தொடர் போராட்டங்கள் நடைபெற்ற இடங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் அன்றைய தின நிகழ்வுகள் தொடர்பாக பல்வேறு கேள்வி எழுப்பப்பட்டதோடு அனைத்தும் ஆவணங்களாக சி.பி.ஐ. அதிகாரிகளால் பதிவுசெய்யப்பட்டது.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்று மூன்று ஆண்டுகள் நெருங்கியுள்ள இச்சூழலில் தற்போது சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாக இருந்த காவல் துறையினர், வருவாய் துறையினர் மற்றும் உயரதிகாரிகள் மீது எவ்வித விசாரணையும் மேற்கொள்ளாத நிலையில் தற்போது அப்பாவி பொதுமக்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் வேதாந்தா தரப்பில் தற்போது போடப் பட்டுள்ள உச்சநீதி மன்ற மேல்முறையீடு மனு விசாரணை யானது வருகிற ஆகஸ்ட் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவுள்ள சூழலில், தூத்துக்குடி மக்களை அச்சுறுத்தவேண்டும் என்கிற நோக்கத்தோடு தற்போது இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலையின் திறப்பை உறுதி செய்யும் விதமாக பொதுமக்கள் மீதான இத்தகைய குற்றப்பத்திரிகை தாக்கல், வழக்கு விசாரணைகள் இனி தொடரும் என்றே எதிர்பார்க்கலாம்.
வழக்கு விசாரணைகள், நீதிமன்ற அலைக்கழிப்பு போன்ற அரசின் அச்சுறுத்தல்களை வைத்துக்கொண்டு மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமாயின் தூத்துக்குடியில் நடைபெற்ற தன்னெழுச்சிப் போராட்டத்தினை போல் தமிழகம் முழுவதும் தீவிரமாக பொது மக்கள் கிளர்த்தெழுந்து வலுவான தொடர் போராட்டங்களை முன்னெடுப்பார்கள்'' என்கிறார் அவர்.
ஆட்டோ டிரைவர், கட்டடத் தொழிலாளிகள், மூட்டை தூக்குபவர், இருசக்கர வாகன மெக்கானிக்குகள், தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத்தினர், மீனவர் சங்கத்தினர் என அன்றாடங்காய்ச்சிகளாக பார்த்து தேர்ந்தெடுத்து இன்னார்கள்தான் கலவரத்திற்குக் காரணம், கலெக் டரை கொல்ல வந்தவர்கள் என துணைத் தாசில்தார் சேகரின் ஒப்புதல் வாக்கு மூலத்தில், புகாரின் அடிப்படையில் குற்றவாளிகளாக காண்பித்திருக்கின்றது சி.பி.ஐ. இந்த குற்ற அட்டவணையில் நடிகர் ரஜினி யையும், அமைச்சர் கடம்பூர் ராஜூ வையும் எதிர்த்து கேள்வி கேட்டு பாப்புலரான பண்டாரம்பட்டி சந்தோஷும் அடக்கம்.
14-06-2018 அன்று தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் ஆஜராகி கு.வி.மு.ச 1973 பிரிவு (161)3)-ன் பிரகாரம் ஆஜராகி, துணைத் தாசில்தார் சேகர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தில், ""தூத்துக்குடி பனிமய மாதா கோவில் பகுதிகளில் நான் நிர்வாக நடுவராகப் பணியாற்றத் தான் என்னை மாவட்ட நிர்வாகம் நியமித்தது. 144 தடையுத்தரவு இருக்கின்றது. யாரும் இப்படி செல்லக்கூடாது என அறிவுறுத்தியும் பனிமய மாதா கோவிலிலிருந்து புறப்பட்டுச் சென்றார்கள் பொதுமக்கள்.
வி.வி.டி.சிக்னலில் போலீஸ் பார்ட்டியினர் பேரிகார்டுகளை வைத்து தடுக்க, அதனை மீறி கல் வீசிக்கொண்டே முன்னேறி வந்தனர். அதன்பின் எஈஒ ரவுண்டானா, நான்குவழிச் சாலையிலுள்ள டிக் அலுவலகம் ஆகியவற்றின் மீது கல்லெறிந்துகொண்டே கலவரத்தில் ஈடுபட்டனர்.
இறுதியில் கலெக்டரை (அப்போதைய கலெக்டர் வெங்கடேஷ்) கொல்லும் நோக்குடன் இந்தக் குழுவினர், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள இருசக்கர வாகனங்களையும், கலெக்டர் அலுவலகத்தினையும் அடித்து நொறுக்கி வன்முறையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அங்கு நிர்வாக நடுவராக இருக்கவேண்டிய ராஜ்குமார் தர்மசீலன் அங்கு இல்லாததால், அங்கு நிலவிய அசாதாரண சூழ்நிலையைக் கருதி, ""நானே அங்கு நிர்வாக நடுவராகப் பொறுப்பேற்றுக்கொண்டு, அங்கிருந்த புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலையிடம் கூட்டத்தினை கலைக்க உத்தரவிட்டேன். அவர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசுமாறு அங்கிருந்த எஸ்.ஐ.யிடம் கூற, இரண்டு கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. பிரயோசனமில்லை. அதன் பிறகு அதே எஸ்.ஐ.மூலம் கேஸ்கன்னைப் பிரயோகிக்கக் கூற... அதுவும் பிர யோஜனமில்லை என்பதால், அங்கிருந்த டி.ஐ.ஜி. கபில்சாரட்காரிடம் துப்பாக்கி பிரயோகம் செய்து கொள்ள உத்தரவிட்டேன்...'' என்றுள்ளது.
இதேவேளையில், சி.பி.ஐ.முன் ஆஜாராகி எழுத்துப் பூர்வமாக கொடுத்த கடிதத்தின் படியும், சி.பி.ஐ.க்கு கிடைத்த புகைப்படங்கள், வீடியோக்கள் மூலத்தையும் கொண்டே 71 நபர்களைக் கண்டறிந்து "கலவரத்தில் ஈடுபட்டவர்கள், கலெக்டரை கொல்லவந்தவர்கள் இவர்களே' என குற்றவாளிகளாக்கி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது சி.பி.ஐ.
மக்கள் கண்காணிப்பகத்தின் இணை இயக்குநரும், மனித உரிமை செயற்பாட்டாளருமான மோகனோ, ""அறவழியில் கலெக்டரை சந்திக்கச் சென்ற பொதுமக்கள் மீது வழக்கினைப் பதிவு செய்து தாங்களும் "ஆலைக்கும், அரசுக்கும் விசுவாசமானவர்களே' என நிரூபித்துள்ளது சி.பி.ஐ. அன்றைய தினம் மாவட்ட கலெக்டர் கோவில்பட்டி ஜமாபந்தியில் இருந்தது சி.பி.ஐ.க்கும் துணைத் தாசில்தாருக்கும் தெரியாதா என்ன..? பொதுமக்கள் 71 பேர் மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ள சி.பி.ஐ. ஏன் இன்னும் துப்பாக்கிச் சூட்டால் இறந்த 13 உயிர்கள் குறித்து எப்.ஐ.ஆரே போடவில்லை'' என கேள்வி எழுப்புகின்றார் அவர்.
படங்கள்: விவேக்