ஒரே பயிற்சி மையத்தின் 700 நபர்கள் தேர்ச்சி! சிக்கலில் டி.என்.பி.எஸ்.சி..?!

tnpsc

காரைக்குடியில் அடுத்தடுத்து பதிவெண் கொண்ட, ஒரே கோச்சிங் சென்டரில் பயிற்சிபெற்ற 700 நபர்கள் தேர்ச்சிபெற்றது டி.என்.பி.எஸ்.சி.யின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாடு நில அளவைத் துறையில் சர்வேயர் பணிக்கு 798 காலியிடங்களும், வரைவாளர் பணிக்கு 236 காலியிடங்களும், நில அளவையர், உதவி வரைவாளர் பணிக்கு 55 காலியிடங்களுமாக மொத்தம் 1,089 பணியிடங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல் வேறு குரூப் 4 பதவிகளுக்கான 7,301

காரைக்குடியில் அடுத்தடுத்து பதிவெண் கொண்ட, ஒரே கோச்சிங் சென்டரில் பயிற்சிபெற்ற 700 நபர்கள் தேர்ச்சிபெற்றது டி.என்.பி.எஸ்.சி.யின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாடு நில அளவைத் துறையில் சர்வேயர் பணிக்கு 798 காலியிடங்களும், வரைவாளர் பணிக்கு 236 காலியிடங்களும், நில அளவையர், உதவி வரைவாளர் பணிக்கு 55 காலியிடங்களுமாக மொத்தம் 1,089 பணியிடங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல் வேறு குரூப் 4 பதவிகளுக்கான 7,301 காலிப்பணி யிடங்களுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

tnpsc

ஜூலை மாதம் 24-ஆம் தேதி நடைபெற்ற எழுத்துத் தேர்வில் 18.5 லட்சம் பேர் கலந்து கொண்ட நிலையில், கடந்த மார்ச் 4-ஆம் தேதி ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில், ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த 2,000 ஆயிரம் நபர்கள் தேர்வாகியதும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக், அழகப்பா பொறியியல் கல்லூரி, உமையாள் ராமநாதன் கல்லூரி, அழகப்பா மாடல் பள்ளி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளி, மு.வி. பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் தேர்வெழுதிய அடுத்தடுத்த பதிவெண் கொண்ட 700 நபர்கள் நில அளவைத் துறைக்கு தேர்ச்சிபெற்றதும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

"பொதுவாக சர்வேயர், டிராப்ட்ஸ்மேன் தேர்விற்காக குறைந்தபட்சம் 3 மாதத்தில் தயாரா வது எளிதான காரியமல்ல. இதற்கென மெனக்கெட வேண்டும். பாடங்களுக்கு தயாராக 6 மாதங்களா வது ஆகும். மூன்று மாதத்தில் கோச்சிங் சென்று விட்டு குரூப் 4-ல் தேர்வுபெறுவது சாத்தியமில்லாத ஒன்று! அடுத்தடுத்த பதிவெண் கொண் டவர்கள் தேர்ச்சி பெறுவது முறை கேட்டையே காண் பிக்கின்றது. கோச்சிங் சென்டர் மீதுதான் சந்தேகமே! இதுபோல் 2019-ஆம் ஆண்டு நடந்தது. குறிப்பிட்ட 99 மாணாக்கர்களை தகுதிநீக்கம் செய்த டி.என்.பி.எஸ்.சி., ஊழலுக்கு உதவிய கோச்சிங் சென்டர் குறித்து எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. அன்று நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று இதுபோல் வந்திருக்காது'' என்கிறார் முன்னாள் மாணவர் ஒருவர்.

டி.என்.பி.எஸ்.சி.யோ, "விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்த இருப்பதாக' விளக்கமளித்துள்ளது.

இவ்விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு சட்டமன்றத்தில் விளக்கமளித்த நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், "இது குறித்து சம்பந்தப்பட்ட மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட் டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள கடந்த ஆண்டே குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது'' என்றார்.

சர்ச்சைக்குள்ளான காரைக்குடியில் இயங்கி வரும் பிரமிட் சென்டரை சார்ந்தவர்களோ, “"டி.என்.பி.எஸ்.சி. விசாரணை நடத்த இருந்தால் எங்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு உண்டு'' என்கின்றனர்.

-நா.ஆதித்யா

படம்: விவேக்

nkn290323
இதையும் படியுங்கள்
Subscribe