Advertisment

700 கோடி கனிமக் கொள்ளை! ஐ.ஏ.எஸ்.ஸுக்கு எதிராக வில்லங்கம்!

ss

மிழக கனிமவளத்தில் 700 கோடி ஊழலை அம்பலப்படுத்தும் அறப்போர் இயக்கத்தின் குற்றச் சாட்டுகள் கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் ஜெயராம் வெங்கடேசன், "நெல்லை மாவட்டத்தில் சங்கரநாராயணன் என்பவருக் குச் சொந்தமான கல்குவாரியில், சட்டவிரோத மாக கல்குவாரி வெட்டி எடுக்கப்பட்டதால் கடந்த 2022, மே மாதம் குவாரி சரிந்து விழுந்து 4 பேர் மரணமடைந்தனர்.

ff

இதனை ஆய்வு செய்ய 6 குழுக்கள் நியமிக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள 54 குவாரிகளை ஆய்வு செய்த அக்குழுவினர், 53 குவாரிகளில் விதிகள் மீறப்பட்டு சட்ட விரோதமாக சாதாரண கற்களும், கிராவல்களும் கொள்ளையடிக்கப்பட்டி ருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.

Advertisment

அதனடிப்படையில் சேரன்மாதேவி துணை ஆட்சியரும், நெல்லை கோட்டாட்சியரும் அபராதம் விதித்தனர். இதனால், 53 குவாரிகளையும் தற்காலிக மாக இழுத்து மூடினார் அன்றைய நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு. இந்த நிலையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டு இயக்குநராக நியமிக்கப்பட்டார் ஜெயக

மிழக கனிமவளத்தில் 700 கோடி ஊழலை அம்பலப்படுத்தும் அறப்போர் இயக்கத்தின் குற்றச் சாட்டுகள் கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப் பாளர் ஜெயராம் வெங்கடேசன், "நெல்லை மாவட்டத்தில் சங்கரநாராயணன் என்பவருக் குச் சொந்தமான கல்குவாரியில், சட்டவிரோத மாக கல்குவாரி வெட்டி எடுக்கப்பட்டதால் கடந்த 2022, மே மாதம் குவாரி சரிந்து விழுந்து 4 பேர் மரணமடைந்தனர்.

ff

இதனை ஆய்வு செய்ய 6 குழுக்கள் நியமிக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள 54 குவாரிகளை ஆய்வு செய்த அக்குழுவினர், 53 குவாரிகளில் விதிகள் மீறப்பட்டு சட்ட விரோதமாக சாதாரண கற்களும், கிராவல்களும் கொள்ளையடிக்கப்பட்டி ருப்பதாக அறிக்கை தாக்கல் செய்தனர்.

Advertisment

அதனடிப்படையில் சேரன்மாதேவி துணை ஆட்சியரும், நெல்லை கோட்டாட்சியரும் அபராதம் விதித்தனர். இதனால், 53 குவாரிகளையும் தற்காலிக மாக இழுத்து மூடினார் அன்றைய நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு. இந்த நிலையில், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் இயக்குநர் நிர்மல்ராஜ் ஐ.ஏ.எஸ். மாற்றப்பட்டு இயக்குநராக நியமிக்கப்பட்டார் ஜெயகாந்தன் ஐ.ஏ.எஸ்.

சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957-ன்படி, சட்டத்திற்கு புறம்பாக கொள்ளையடிக்கப்பட்ட சாதாரண கற்களுக்கும், கிராவல்களுக்கும் ராயல்டி, அபராதம் உள்ளிட்ட முழுத்தொகையையும் குவாரி உரிமையாளர்களிடம் வசூலிக்க வேண்டும். அதன்படி, 53 குவாரிகளில் 24 குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை மட்டுமே 262 கோடி ரூபாய்.

இதுகுறித்து ஜெயகாந்தனிடம், குவாரி தாரர்கள் மேல்முறையீடு செய்தனர். இதனை விசாரித்த ஜெயகாந்தன், 262 கோடி அபராதத்தொகையை 13.8 கோடியாக குறைக்கிறார். அதாவது, சட்டவிரோதமாக வெட்டிஎடுக்கப்பட்ட கற்களுக்கும், கிராவல்களுக்கு மான தொகையை வசூலிக்காமல் ராயல்டியை மட்டும் வசூலித்தார். இதுமட்டுமல்லாமல், அந்த அபராதத்தொகையை மாதத் தவணையில் கட்டுவதற்கும் அனுமதித்தார் ஜெயகாந்தன்.

dd

ஆக, 24 குவாரிகளுக்கு 262 கோடி என்கிற நிலையில், நெல்லை மாவட்டத்திலுள்ள 53 குவாரிகள் மற்றும் திருப்பூர் மாவட்ட குவாரிகள் ஆகிய வற்றையும் கணக்கிடும்போது அபராதங்களைக் குறைத்த வகையில் சுமார் 700 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப் பட்டிருக்கிறது''’என்கிறார்.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜெயகாந்தனிடம் கேட்டபோது, "சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் -1957 என்பது சிறு கனிமங்களுக்காக ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள சட்டம். இந்த சட்டத்தில் திருத்தம் செய்து 2021-ல் புதிய விதியை இணைக்கிறது ஒன்றிய அரசு.

புதிய விதியின்படி, அரசின் அனுமதியும் (லைசன்ஸ்), என்விரோன்மெண்டல் கிளியரன் ஸும் பெற்று முறைப்படி நடத்தப்படும் குவாரிகளில், பெர்மிட் அளவைவிட அதிகமாக கற்கள் வெட்டியெடுக்கப்பட்டால், அதற்குரிய பெர்மிட் தொகையைத்தான் வசூலிக்க வேண்டும்; வெட்டி எடுக்கப்பட்ட கற்களுக்கு கனிம மதிப்பீடு (காஸ்ட் ஆஃப் மினரல்ஸ்) செய்து அதற்கான தொகையை வசூலிக்கக் கூடாது என ஒன்றிய அரசின் சட்டமும், தமிழக அரசாணையும் வலியுறுத்துகிறது.

அந்த வகையில், 2021-ல் திருத்தியமைக் கப்பட்ட விதிகளின்படி ஆக்ஷன் எடுக்காமல் அல்லது சட்டவிதிகளை மதிக்காமல் நெல்லை மாவட்ட அதிகாரிகள் கற்களுக்கான கனிம மதிப்பைக் கணக்கிட்டு மனம்போன போக்கில் அபராதத்தொகை விதிக்கப்பட்டுள்ளது.

dd

நெல்லை மாவட்டத்தில் 65 மீட்டர் ஆழம்வரை குவாரி வெட்டி எடுக்க என்விரோன்மெண்டல் க்ளியரன்ஸ் கொடுக்கப் பட்டிருக்கிறது. 65 மீட்டருக்கு அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டால்தான் கனிம மதிப்பு (காஸ்ட் ஆஃப் மினரல்ஸ்) போடமுடியும். ஆனால், 10 மீட்டர், 20 மீட்டர் வெட்டியவர் களுக்கு கூட பலகோடி ரூபாய் அபராதம் போட்டிருக்கிறார்கள். அதனால், சட்டப்படி பெர்மிட் தொகையை மட்டும் வசூலிக்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி, ஒரு கனமீட்டருக்கு பெர்மிட் தொகை 54 ரூபாய்தான். அதனை கணக்கிட் டால் 53 குவாரிகளுக்குமான தொகை 23.42 கோடி ரூபாய். இந்த 23.42 கோடியை தவணை முறையில் வசூலிக்க அரசு அனுமதிக்கிறது. அதனால் அறப்போர் இயக்கம் சொல்கிற குற்றச் சாட்டுகள் அனைத்தும் தவறானது.

எனது சர்வீசில் ஒரு ரூபாய்கூட அரசுக்கு நான் இழப்பை ஏற்படுத்தியது கிடையாது. எனது சர்வீசை முழுமையாக ஆராய்ந்து பாருங்கள், அரசுக்கு பல நூறு கோடி ரூபாய் என்னால் லாபம் கிடைத்திருப்பதை அறிய முடியும். கிளாம்பாக்கம் நிலம் உட்பட ஆக்ரமிப் பில் இருந்த 8,000 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலங்களை மீட்டது நான்தான். இதற்கான ஆதாரங்கள் நிறைய இருக்கிறது''’என்கிறார் மிகஅழுத்தமாக.

தமிழ்நாடு குவாரி குத்தகைதாரர்கள் மற்றும் கிரசர் உரிமையாளர்கள் நல சங்கத்தின் செயலாளர் நாராயணபெருமாள்சாமியிடம் இதுகுறித்து விசாரித்தபோது, "குவாரிகளை ஆய்வு செய்த அதிகாரிகள் 14 குவாரிகளை ரத்து செய்ததுடன் சகட்டுமேனிக்கு அபராதங்களைப் போட்டு நோட்டீஸ் அனுப்பினர். சட்டத்திற்கு உட்பட்டு இந்த நோட்டீஸ் அனுப்பப் படாததால் பாதிக்கப்பட்ட குவாரிதாரர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை முறையற்றது எனக்கூறி சம்பந்தப்பட்ட நோட்டீசை ரத்து செய்தது.

ஒன்றிய, மாநில அரசுகளின் சட்டமும் அரசாணையும் கற்களின் மதிப்பை கணக்கிட்டு அபராதம் விதிக்கக்கூடாது என தெளிவாக இருக்கும்போது, சட்டத்திற்குப் புறம்பாக அதிகாரிகள் அபராதம் விதித்ததை எப்படி ஏற்கமுடியும்? 54 குவாரிகளும் அரசின் அனுமதியுடன் இயங்குபவை. ஆனால், மாவட்ட அதிகாரிகள் சட்டத்திற்கு விரோதமாக நடந்தனர். அதனை சரிசெய்யும் வகையில், சட்டவிதிகளின்படி நடந்துகொண்டார் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜெயகாந்தன்'' என்கிறார் நாராயணபெருமாள்சாமி.

nkn160324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe