முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று நூறு நாட்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அமைச்சரவையிலும் கூட சீனியர்களை விட ஜூனியர்களுக்குப் பல முக்கிய துறைகளைக் கொடுத்து களமிறக்கியிருக்கிறார். அதோடு, "அமைச்சர்கள் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறி, உளவுத்துறை மூலமும் அமைச் சர்களின் செயற்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்துக்கொடிருக்கிறார்.
இந்த நிலையில்தான் அமைச்சரவையில் முதன்முதலாக இடம்பெற்றுள்ள முன்னாள் கொறடாவும் 1996-லிருந்து ஒட்டன்சத்திரம் தொகுதியைத் தக்கவைத்து வருபவருமான சக்கரபாணியின் செயல்பாடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை அறிய களமிறங்கினோம்.
ஸ்டாலின் அமைச்சரவையில் திண்டுக்கல் மாவட்டத்திற்கு கிடைத்த இரண்டாவது அமைச்சரான சக்கர பாணிக்கு உணவு மற்றும் வழங்கல் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சிக்காக 30 வருடங்களுக்கு மேலாக உழைத்துக் கொண்டு, தொகுதி மக்கள் மத்தியில் நல்லபெயர் எடுத்து வந்ததின் மூலமே தொடர்ந்து ஆறாவது முறையாக சட்டமன்ற உறுப் பினராக சக்கரபாணி வெற்றிபெற்றார். அதற்கு கிடைத்த பரிசுதான், அமைச்சர் பதவி. அதோடு கொங்கு மண்டலத்தில் பரவிவந்த கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தவும் சக்கரபாணியைக் களமிறக்கினார் ஸ்டாலின்.
இரவு, பகல் பாராமல் அதிகாரிகளைக் கொண்டு கொரோனா தடுப்புப் பணியில் தீவிரமாகச் செயல்பட்டு, கோவையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, தனது துறையில் தீவிரம்காட்டிய சக்கரபாணி, டெல்டா மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வுசெய்து, அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை பல மாவட்டங்களில் நடத்தினார். தஞ்சை உட்பட சில டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க உத்தர விட்டுள்ளார். அதுபோல் தொகுதியி லுள்ள கீரனூர், பொருளூர் உட்பட சில ரேஷன் கடைகளுக்கும் விசிட் அடித்த அமைச்சர், கடைகளிலுள்ள அரிசியை ஆய்வுசெய்த பின், இது போல் தரமான அரிசி தொடர்ந்து வழங்கப்படுமென்று உறுதியளித் தார். அரிசி, எடை குறையாமல் கிடைக்கிறதா என்பதை பொது மக்களிடமும் உறுதிப்படுத்திக் கொண்டார்.
கடந்த ஒருவாரமாக ஒட்டன் சத்திரம் ஒன்றியத்திலுள்ள கேதையுறும்பு, புளியமரத்துக் கோட்டை, யோகிபட்டி, இடைய கோட்டை, மார்க்கம்பட்டி, குத்திலைப்பு உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகளிலும், தொப்பம்பட்டி ஒன்றியத்திலுள்ள கள்ளிமந்தையம், கூத்தாம்பாறை, கரியாப்பட்டி, புதூர், தேவத்தூர், கொத்தையம், பொருளூர், கீரனூர், மானூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகள் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர் பகுதிகளில், குடிநீர் மேல்நிலைத் தொட்டி, தரம் உயர்த்தப்பட்ட சாலைகள், சமுதாயக் கூடம், காவேரி கூட்டுக்குடிநீர், கலையரங்கம், ஊராட்சி அலு வலகம், அங்கன்வாடி, சாக்கடை, கழிப்பறை, பள்ளிகளில் தடுப்புச் சுவர்கள் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் தலா 30 கோடி என 60 கோடி ரூபாயும் நகர வளர்ச்சிப் பணிக்கு 10 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்து, பணிகளைத் தொடங்கிவைத்தார்.
தனது எம்.எல்.ஏ. நிதி மூலம் கீரனூரில் உருவாக்கப்பட்ட இலவச ஆம்புலன்ஸ் சேவை, சமுதாயக் கூடம், சுகாதார மையம் உள்பட சில புதிய கட்டிடங்களை யும் திறந்துவைத்தார். இப்படி ஒரே வாரத்தில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள இரண்டு ஒன்றியம் மற்றும் நகரத்தில் ரூ.70 கோடிக்கு பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்ததைக் கண்டு தொகுதி மக்களே அசந்துவிட்டனர்.
இது சம்பந்தமாக ஒன்றிய பொறுப்பி லுள்ள சில உ.பி. களிடம் கேட்ட போது... "இத் தொகுதியைத் தொடர்ந்து எங்க அமைச்சர் சக்கரபாணி தக்கவைத்து வருவதாலேயே கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் தொகுதி வளர்ச்சிப் பணிகள் சரிவர செய்ய முடியாமல் முட்டுக்கட்டை போட்டு வந்தனர். அப்படியிருந்தும் அமைச்சர், தொகுதி மக்களுக்காக பல போராட் டங்களை கலெக்டர் அலுவலகம் வரை நடத்தி, அடிப்படை வசதிகளை ஓரளவுக்குப் பூர்த்திசெய்து கொடுத்தார்.
தற்போது தலைவர் ஸ்டாலின் முதல்வராக வந்ததன் மூலம் அண்ணன் சக்கரபாணி அமைச்சராகிவிட்டதால், தொகுதியில் உள்ள அனைத்து வளர்ச் சித் திட்டப் பணிகளையும் தொடங்கி வைத்ததுடன் மட்டுமல்லாமல், மாவட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டம் போட்டு, தொகுதி வளர்ச்சிப் பணிகளைக் கூடிய சீக்கிரம் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டுமென்றும், அடுத்த ஆய்வுக் கூட்டத்தில் அதைத் தெரியப் படுத்த வேண்டுமென்றும் அதிகாரி களுக்கு அதிரடி உத்தரவு போட்டிருக் கிறார். அதனாலேயே அதிகாரிகளும் அசுரவேகத்தில் பணியைத் தொடங்கி யிருக்கிறார்கள். அதோடு மாவட்ட அளவில் ஐந்து லட்சம் மரக்கன்றுகளை நடும் பணிகளையும் தொடங்கி வைத்திருக்கிறார். இப்படி தொடர்ந்து தொகுதி மக்களின் நலனுக்காக இரவு, பகல் பாராமல் பணிகளைச் செய்து வருகிறார்'' என்று கூறினார்கள்
மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையானது சீனியர், ஜூனிய ரின் சரிவிகிதக் கலவையாக இருப்பதன் நோக்கமே, பணிகளைச் சரியாகச் செயல் படுத்துவதோடு, துரிதமாகச் செயல் படுத்துவதுமாகும். அவரது எதிர் பார்ப்பை நிறைவேற்றச் செய்யும்படி யாகத் தனது பொதுநலப் பணிகளைத் தொடங்கியுள்ள அமைச்சர் சக்கரபாணி யின் செயல்பாடு இதேபோல தொடரும் போது... அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெரிதும் பயனடைவது உறுதி.