7 பேர் விடுதலை! அ.தி.மு.க. வழியில் தி.மு.க.! - தொடரும் சட்ட சர்ச்சை!

7persons

தில், தமிழக அமைச்சரவை 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். 7 பேர் விடுதலை குறித்து தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் எடுத்துள்ள இந்த முதல் நடவடிக்கைக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதில் மாறுபட்ட கருத்துகளை முன் வைக்கின்றனர் சட்ட வல்லுநர்கள்.

தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) தொடரும் பயங்கரவாத வழக்குகளுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆதித் விஜய்யிடம் கேட்ட போது, "ஏழுபேர் விடுதலையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 161 மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 432 ஆகியவைகளை வைத்து மத்திய- மாநில அரசுகள் விளையாடிக் கொண்டிருக்கின்றன.

e

குறிப்பாக, "சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளின் முன்விடுதலை குறித்து முடிவெடுப்பதற்கு முன்பு, மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும்' என சி.பி.ஐ. தெரி விக்கிறது. இதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு களைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 161 என்பது மாநில அமைச்சரவைக்கான கட்டற்ற அதி காரத்தை வழங்கியிருக்கிறது. அரசிய லமைப்பு சட்டத்திற்கு மேலாக எந்த சட்டமும் கிடையாது.

எல்லாச் சட்டங்களும் அரசிய லமைப்புச் சட்டத்துக்கு கீழேதான் அடங்கியிருக்கிறது. அதனால், அரசிய லமைப்பு சட்டத்தின் 161-வது பிரிவின் படி மாநில அரசுக்குள்ள முழு அதிகாரத்தில் மற்றவர்களின் அதிகாரம் குறித்து கவலைப்படத் தேவையில்லை.

குறிப்ப

குறிப்பாக, 161-வது பிரிவின்படி, தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை கவர்னர் நிராகரிக்கும் பட்சத்தில், மீண்டும் அதே பொருள் குறித்து மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தால் கவர்னர் அதற்கு ஒப்புதல் அளித்தே ஆக வேண்டும். கவர்னர் தாமதம் செய்தாலும்கூட, தீர்மானத்தை மாநில அரசே நிறை வேற்ற 161-வது பிரிவு அதிகாரம் வழங்குகிறது.

t

7 பேரையும் விடுதலை செய்ய, முந்தைய அ.தி.மு.க. அரசின் அமைச்ச ரவை 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தில், "முடிவெடுக்கும் அதி காரம் ஜனாதிபதிக்குத்தான் இருக்கிறது' என கவர்னர் தனது பொறுப்பை ஜனாதிபதி மீது சுமத்தியிருப்பது அவசியமற்றது. விடுதலை தரக்கூடாது என பா.ஜ.க. ஆடும் அரசியலுக்கு கவர்னர் தலையாட்டிக் கொண்டிருக் கிறார்.

மாநில அரசுக்குரிய கட்டற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தாமல், மத்திய அரசிடமும் கவர்னரிடமும் விவகாரத்தைத் தள்ளிவிட்டு ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிச் சாமியும் விளையாடினர்.

இதுபற்றி அப்போது, கேள்வி எழுப்பிய தி.மு.க., இப்போது அ.தி.மு.க. பாணியிலேயே ஜனாதி பதிக்கு கடிதம் எழுதுவது தேவை யற்றது. அதனால், 161-வது பிரிவை பயன்படுத்தி ஏழு பேரையும் தமிழக அரசே விடுதலை செய்திடும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும்'' என்கிறார் மிக அழுத்தமாக.

இதே கருத்துதான் தமிழ்த் தேசிய தலைவர்களிடமும் உயர்நீதி மன்ற வழக்கறிஞர்களிடமும் எதிரொலிக்கச் செய்கின்றன.

இந்த எதிரொலிப்பு குறித்து சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கண்ணதாசனிடம் விவாதித்தபோது, "161-வது பிரிவின்படி மாநில அரசுக்கே முழு அதிகாரம் இருக்கிறது. அந்தச் சட்டப்பிரிவின்படி எடுக்கப்படும் முடிவுகளை எதிர்க்க குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்கு வலிமை கிடையாது. ஆனால், இந்தப் பிரச்சினையை சிக்கலாக்கியவர் ஜெயலலிதாதான்.

7 பேர் விடுதலை செய்வது பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் அரசுக்கு உள்ளது என உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, 161-வது பிரிவை பயன்படுத்தி 7 பேரையும் ஜெயலலிதா விடுதலை செய்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க யார் சொன்னது? அந்த சட்ட நடைமுறையில், "7 பேரை விடுதலை செய்வது குறித்து 3 நாட்களில் பதில் சொல்ல வேண்டும்; இல்லையெனில் நானே விடுதலை செய்வேன்' என மத்திய அரசை மிரட்டும் தொனியில் கடிதம் எழுதினார்.

அப்போதைய காங்கிரஸ் அரசு, "குற்றவியல் நடைமுறை சட்டத்தில் உங்களுக்கு (ஜெயலலிதா) அதிகாரம் இல்லாதபோது, எங்களை (மத்திய அரசு ) மிரட்டுவதா?' என கருதி உச்சநீதிமன்றத்தில் தடை பெற்றது. ஜெயலலிதா ஏற்படுத்திய அந்த சிக்கல்தான் இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், எடப்பாடி தலைமையிலான முந்தைய அரசின் அமைச்சரவை, 2018-ல் நிறைவேற்றிய தீர்மானத்தை கவர்னர் ஒப்புதல் தந்திருக்கவேண்டும்.

ஆனால், எடப்பாடியின் அ.தி.மு.க., மோடியின் பா.ஜ.க., கவர்னர் என சுற்றிச் சுற்றி சிக்கலை ஏற்படுத்தி வைத்துள்ளனர். பேரறி வாளன் தொடர்ந்த ஒரு வழக்கில், கவர்னரின் கால தாமதத்தில் தனது அதிருப்தியை உச்சநீதிமன்றம் வெளிப்படுத்திய போது, ’"ஏழு பேர் விடுதலையில் ஜனாதிபதிக்குப் பதிலாக கவர்னரே முடிவெடுப்பார். 3 அல்லது 4 நாட்களில் கவர்னர் தனது முடிவை தெரிவிப்பார்'’என மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா சொன்னதை பதிவுசெய்துகொண்டு, "ஒருவார காலத்தில் கவர்னர் முடிவெடுக்க வேண்டும்' என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் அதை ஏற்காமல், "ஜனாதி பதிக்குத்தான் அதிகாரம் இருக்கிறது' என டெல்லிக்கு இந்த விவகாரத்தை அனுப்பி வைத்துவிட்டார் கவர்னர் பன்வாரிலால். தனது கடமையையும் பொறுப்பையும் அவர் தட்டிக் கழித்திருக்கிறார்.

7 பேரின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டபோது, "ஆயுள் தண்டனையை 20 அல்லது 30 ஆண்டு களாக ஏதோ ஒன்றை முடிவு செய்யலாம்' என உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. அப்படிப் பார்த்தாலும், 30 ஆண்டுகாலம் சிறையில் அவர்கள் கழித்துவிட்டனர். அந்த வகையிலும் கூட அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டியவர்கள்தான்.

y

ஆக, 7 பேர் விடுதலையில் தற்போது நிலுவையில் இருப்பது, 2018-ல் நிறைவேற்றப் பட்ட அமைச்சரவை தீர்மானத்தின் பரிந்துரை ஜனாதிபதியிடம் இருப்பதுதான். அதனால் அந்த பரிந்துரையின் மீது என்ன முடிவை ஜனாதிபதி எடுக்கிறார் என தெரியாமல் தற்போதைய தி.மு.க. அரசு தனது முடிவை எடுக்க முடியாது.

அந்த வகையில்தான், அந்த பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனால், முந்தைய அ.தி.மு.க. அரசு செய்த தவறையே தி.மு.க. செய்யவில்லை. சட்டரீதியாகவே அணுகியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

முந்தைய அரசின் பரிந்துரையை ஜனாதிபதி நிராகரித்தால், அப்போது தமிழக அரசு 161-வது பிரிவை பயன்படுத்த வாய்ப்பு உண்டு. ஒருவேளை, ஜனாதிபதியும் முடிவு எடுக்கத் தாமதப்படுத்தினால் தமிழக அரசோ அல்லது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் ஒருவரோ உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். அப்போது, இந்த விவகாரத்தில் உறுதியான இறுதியான முடிவுகள் வரும்'' ‘’ என்கிறார் தெளிவாக.

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் இதுவரை விளையாடிய அரசியலை முடிவுக்கு கொண்டுவருவதற் காகவே, தீர்க்கமான நடவடிக்கையை எடுக்கும் வகையில்தான் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கிறார் ஸ்டாலின்.

ஆனால், அவர் எழுதிய கடிதத்தை ஏற்க மறுக்கிறது தமிழக காங்கிரஸ். இதுகுறித்து பேசிய அக்கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி,”"ஜனாதிபதிக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கவில்லை. அந்தக் கடிதத்தில் எங்களுக்கு உடன்பாடும் கிடையாது. அவர்களின் விடுதலையை காங்கிரஸ் எதிர்க்கிறது'' என்று தங்களின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துகிறார்.

காங்கிரஸின் அகில இந்திய தலைமையும்கூட, தமிழக காங்கிரசின் நிலைப்பாட்டை வரவேற்கவே செய்கிறது. சோனியா குடும்பத்தின் நிலைப்பாடும் இதுதான்.

அதாவது, ”ராஜீவ் கொலையில் தண்டனை பெற்றுவரும் சிறைவாசிகளை மன்னித்துவிட்டதாக சோனியாவும், ராகுலும் சொல்லி வந்தாலும் அவர்களின் விடுதலையை விரும்பவில்லை. இதனையறிந்தே, "7 பேர் விடுதலையை தமிழக காங்கிரஸ் எதிர்க்கிறது'‘என்று சுட்டிக்காட்டுகிறார்கள் டெல்லியிலுள்ள தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள்.

"எந்தக் கோணத்தில் ஆராய்ந்தாலும் தமிழக அரசு தனது அதிகாரத்தை துணிச்சலாக பயன்படுத்தும்போதுதான் 7 பேர் விடுதலையில் நடக்கும் அரசியலுக்கு முடிவு கிடைக்கும்' என்பதே சட்ட நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

nkn260521
இதையும் படியுங்கள்
Subscribe