'ஹலோ தலைவரே, ராஜீவ் வழக்கில் தொடர்புடைய ஏழுபேர் பேர் விடுதலை விவகாரத்தை கவர்னர் இன்னும் இழுத்தடிக்கிறாரே?''

""பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசின் பரிந்துரை மீது ஒரு வாரத்தில் கவர்னர் முடிவெடுக்கனும்ன்னு உச்சநீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்த நிலையில், ராஜ்பவன் எடுத்த முடிவு ஷாக் தந்திருக்காமே?''

gg

""உண்மைதாங்க தலைவரே, தமிழக அமைச்சரவையின் ஏழுபேர் விடுதலைக்கான பரிந்துரையை ஏற்காமல், கடந்த 28-ந் தேதி, எடப்பாடி அரசுக்கே திருப்பி அனுப்பி விட்டார் கவர்னர். ஏறத்தாழ 2 வருடமாக கிடப்பில் இருந்த கோப்பின் மீதான கவர் னரின் நடவடிக்கையால் ஷாக் ஆன முதல்வர் எடப்பாடி, 29-ந் தேதி அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி இதுபற்றி விவாதிச்சார். அப்ப, பரிந்துரையை ஒருமுறை மட்டுமே திருப்பி அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. 7 பேர் விடுதலையை மீண்டும் தீர்மானமாக நிறைவேற்றி ஆளுநருக்கு நாம் பரிந்துரைத்தால், அதனை அவர் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்னு அமைச்சர்கள் சொன்னாங்க.''

Advertisment

""சரிதானே?''

""இன்னும் சில அமைச்சர்களோ, இது சென்சிட்டிவ்வான இஷ்யூ. இதில் அதிரடியாக நாம் இறங்கிவிடக் கூடாது. அதனால் 7 பேர் விடுதலை பற்றி மீண்டும் நாம் பரிந்துரை செய்வதோடு, ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம். அதன்பிறகும் நடவடிக்கை இல்லைன்னா, அப்போது பார்க்கலாம்னு சொல்லியிருக்காங்க. அதன்படி மீண்டும் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டிருக்கு. இதனையடுத்து அமைச்சர் ஜெயக்குமாருடன் ராஜ்பவன் சென்ற எடப்பாடி, ஆளுநரை சந்திச்சி, அந்த பரிந்துரையை கொடுத்து, ஒப்புதல் அளிக்கனும்னு வலியுறுத்தியிருக்கிறார். ஆளுநரோ, டெல்லியிலிருந்து வரும் சிக்னலின் அடிப்படையில்தான் என்னால் முடிவெடுக்க முடியும்ன்னு சொல்லிவிட்டாராம்.''

""கவர்னருக்கு இன்னும் எடப்பாடி மீதான கோபம் குறையலைன்னு தெரியுதேப்பா?''’

Advertisment

""ஆமாங்க தலைவரே, இந்த சந்திப்பின் போது, 2-ந் தேதி தொடங்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, கவர்னர் பேச வேண்டிய உரையை அரசு ஏற்கனவே கவர்னருக்கு அனுப்பியிருந்தது. அந்த உரையில் சில சந்தேகங்களை கேட்ட கவர்னர், அரசு குறித்த சில பாராட்டு வரிகளை ஏற்காமல் நீக்கியதோடு, சில வரிகளையும் திருத்தினாராம். இதில் அவர் ஊடல் தெரிந்ததாம். சட்டசபைக் கூட்டத் தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவதுன்னு சபாநாயகர் தனபால் தலைமையிலான அலுவல் ஆய்வு குழு கூடி முடிவெடுக்க இருக்குது. அதிக பட்சம் 3 நாட்களுக்கு நடந்தாலே போதும்ன்னு எடப்பாடி நினைக்கிறாராம். இந்த இடைக்கால பட்ஜெட்டில், பெண்களையும் 25 வரையிலான புதிய வாக்காளர்களையும் கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் இருக்கலாம்னு சொல்லுது கோட்டை வட்டாரம்.''

""எடப்பாடி திறந்து வைத்த "ஜெ' நினைவில்லம், அவருக்கு சில சட்டச் சிக்கல்களை ஏற்படுத்தலாம்னு சொல்லப்படுதே?''

rang

""உண்மைதாங்க தலைவரே, காரணம் ஜெ.வின் வேதா இல்லம், அவரது அம்மா சந்தியா வாங்கிய 10 கிரவுண்ட் இடத் தில் கட்டப்பட்டது. அதன்பிறகு பக்கத்தில் இருந்த கொஞ்ச இடத்தை ஜெ. வாங்கி, வீட்டை விரிவு செய்திருக்கிறாராம். ஆனால் ஒட்டுமொத்த வீட்டையும் நினைவில்லமாக ஆக்கியிருக் கிறது எடப்பாடி அரசு. சந்தியா உயிலில், தன்னோட இடம் தன் காலத்துக்குப் பிறகு தன் குழந்தைகளுக்கும், பின்னர் அவர் களில் யாருக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களோ அவர்களுக்கும் சேரவேண்டும்னு தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறாராம். அதனால்தான் அந்த வீட்டின் உரிமை கோரி ஜெ.வின் அண்ணன் மகன் தீபக் வழக்கு போட்டிருக்கிறாராம். அதேபோல் அந்த போயஸ் இல்லம் சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. அதை முறைப்படி கர்நாடக கோர்ட்டில் மனுப்போட்டு, அதை இன்னும் அரசு கையகப்படுத்தவே இல்லையாம். இதையெல்லாம் சுட்டிக்காட்டுகிறார்கள் சட்ட வல்லுனர்கள்.''

""அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்பாக புதுப்புது தகவலெல்லாம் வெளியில் வருதே?''

""ஆமாங்க தலைவரே, அண்மையில் சென்னை அடையாறு போட் கிளப்பில் 38 பணியாளர்களை வேலையை விட்டு நீக்கிவிட்டார்களாம். வேலையிழந்த அவர்கள், தொழிலாளர் நலத்துறை ஆணையரை சந்தித்து மனுகொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தும்போது அடியாட்களால் அடித்துத் துரத்தப்பட்டிருக்கிறார் கள். போட் கிளப் நிர்வாகமோ, எங்கள் கையில் அமைச்சர் விஜய பாஸ்கர் இருக்கிறார் என்று அவர் களை மிரட்டியதாம். பாதிக்கப் பட்ட அந்தத் தொழிலாளர்களோ, உங்கள் கிளப்பில் சில மாதங்களுக்கு முன் உறுப்பினரான அமைச்சர் இங்கே என்னென்ன லூட்டி அடித் தார்னு எங்களுக்குத் தெரியாதா? இங்கே எத்தனை எத்தனை பேரங்கள், டீலிங்குகள், நடந்ததுன்னு நாங்க சொல்லவான்னு பல சீக்ரெட் விவகாரங்களை பகிரங்கமாக்கி வருகிறார்களாம்.''

rang

""சசிகலா ஆதரவாளரான ஜெ.வின் முன்னாள் உதவியாளரான பூங்குன்றனும் அமைச்சர் சம்பத்தும் சந்திச்சிருக்காங்களே?''

""பூங்குன்றன் சசிகலா குடும்பத் துக்கு நெருக்கமானவர். ஜெ.’மறைவு, சசிகலா சிறைவாசம்னு ஆனபிறகு கடந்த 4 ஆண்டு காலமாக அவர் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். எடப்பாடியோ, இவ ரோடு யாரும் நெருக்கம் பாராட்ட வேண்டாம்னு கட்சிப்புள்ளிகளுக் குத் தடைபோட்டிருந்தார். இந்த நிலையில் தைப்பூசம் அன்று வடலூர் வள்ளலார் கோவிலுக்கு சென்றுள் ளார் பூங்குன்றன். அங்கு தொழில் துறை அமைச்சர் சம்பத்தும் வந்தி ருக்கிறார். இருவரும் இணைந்து சிறப்பு பூஜையில் கலந்துக்கிட்டாங்க. இந்த சந்திப்பு எதேச்சையானதா திட்டமிடப்பட்டதான்னு மாநில உளவுத்துறை மூலம் ரகசியமாக விசாரிக்கிறாராம் எடப்பாடி.''’’

""நாம் ஏற்கனவே பேசிக்கிட்ட மாதிரி தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளரா ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட்டிருக்காரே?''

r""ஆமாங்க தலைவரே, இதற்காகவே மத்திய அரசுப் பணியிலிருந்து அவரை விடு வித்து மாநிலப் பணிக்கு கடந்த வாரம் மத்திய அரசு அனுப்பி வைத்தது. 1985 பேட்ச் அதிகாரி யான இவர், செப்டம்பரில் ஓய்வு பெற இருக்கிறார். எடப்பாடி வசம் இருக்கும் நெடுஞ்சாலைத் துறையின் செயலாளராக நீண்ட வருடங்கள் பணி புரிந்தவர் ராஜீவ் ரஞ்சன். தலைமைச் செயலாளர் பதவியைக் குறிவைத்த ஹன்ஸ்ராஜ் வர்மாவின் முயற்சி வெற்றிபெறலை. அதேபோல் ஓய்வுபெற்ற தலைமைச்செயலாளர் சண்முகத்தை தேர்தலில் நிற்கவைக்க எடப்பாடி திட்டமிடுவது பற்றி நாம் போனமுறை பேசிக்கிட்டோம். இந்த விவகாரம் வெளியானதைக் கண்ட எடப்பாடி, சண்முகத்தை அரசின் ஆலோசகராக நியமிச்சிருக்காரு. ஓராண்டுக்கான இந்தப் பணிக்கு மாத சம்பளம் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்.''

""வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் நடத்திய வலையர் வாழ்வுரிமை மாநாட்டில் எடப்பாடி மற்றும் பா.ஜ.க. தலைவர் முருகன் உள்ளிட்டோர் கலந்துக்கிட்டு இருக்காங்களே?''

""ஆமாங்க தலைவரே, மதுரையில் 31-ந் தேதி நடந்த இந்த மாநாட்டை, அதன் நிறுவனர் செல்வகுமார் நடத்தியிருக்கார். இந்த மாநாட்டுக்காக பா.ஜ.க தலைவர் முருகனை அவர் சந்திச்சப்ப, தேர்தல் நேரத்தில் நல்ல வாய்ப்பு வருதேன்னு அவர் கலந்துக்க ஒத்துக்கிட்டார். பா.ஜ.க. தரப்பு இந்த மாநாட்டில் ஆர்வம் காட்டிய தைக் கண்ட எடப்பாடி, ஏற்கனவே கேட்டுக்கிட்டபடி அந்த மாநாட் டுக்குத் தானும் வர்றதா சொல்லிவிட்டார். பா.ஜ.க. முருகனோ, அதுக்கு முதல் நாள் மதுரை வந்த பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவிடம் செல்வகுமாரை அறிமுகப்படுத்த, நட்டாவோ, முத்தரையர்களின் உரிமைகளை பாதுகாக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசும் பா.ஜ.க.வும் செய்யும்ன்னு சொல்லி, அவர்கள் தரப்பை உற்சாகப்படுத்தியிருக்கார்.''

rang

""மோடி பிப்ரவரி 14-ல் தமிழகம் வரப்போறரே?''

""ஆமாங்க தலைவரே, எடப்பாடி டெல்லி சென்ற போதே, பிரதமர் மோடியை சந்திச்சி, தமிழகத்துக்கு நீங்க வரனும். உங்க கையால் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைக்கனும்ன்னு கேட்டார். ஆகட்டும் பார்க்கலாம்னு அவரை மோடி அனுப்பிவச்ச நிலையில், 30-ந் தேதி இரவு எடப்பாடியைத் தொடர்புகொண்ட பிரதமர் அலுவலகம், பி.எம். பிப்ரவரி 14-ல் தமிழகம் வருகிறார்னு தகவல் தெரிவிச்சிருக்கு. அதைத் தொடர்ந்து, மெட்ரோ ரயில் சேவைத் தொடக்கத்தையும், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டையும் அவரை வச்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கியிருக்கு.''

""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். அடுத்த தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐ.ஏ.எஸ். என்று பேச்சு அடிபடுவதாகவும், அதையொட்டி அவர் ஐ.டி. தொழிலதிபரான ஆறுமுகத்தின் உதவியோடு மு.க.ஸ்டாலினை சந்தித்ததாகவும் நமக்குக் கிடைத்த தகவலில் அடிப்படையில் போனமுறை நாம் பேசிக்கிட்டோம். தன் மூலம் அப்படி எந்த சந்திப்பும் நடக்கவில்லைன்னும் அரசியல் விவகாரங்களில் எப்போதும் தலையிடுவ தில்லைன்னும் தொழிலதிபர் ஆறுமுகம் தரப்பிலிருந்து சொல்றாங்க.''’