Advertisment

64 ஆண்டு கால போராட்டம்! கவலையைத் துடைத்த முதல்வருக்கு நன்றி!

ss

டந்த 65 ஆண்டுகளாக கோரிக்கை வைத்துப் போராடியவர்களுக்கு, இப்போது தி.மு.க. ஆட்சியில் வெற்றி கிடைத்திருக்கிறது. எனவே போராடிய அத்தனை பேரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

அது என்ன போராட்டம்? அந்த போராட்டக் கதையைப் பார்ப்போம்.

Advertisment

dd

1950-களில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் நெய்வேலி பகுதியில் நிலக்கரி இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அதைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயா ரிப்பதற்காக முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டன. இதற்காக அப்பகுதியில் இருந்த கிராம மக்களை அப்புறப்படுத்தி, சில ஊர்களை காலி செய்தது அரசாங்கம்.

தாங்கள் வாழ்ந்த நிலத்தைக் கொடுத்து விட்டு, நிர்க்கதியாய் வெளியேறிய அந்த கிராமப் பகுதி மக்களை, காடுகளாக இருந்த புதுக்கூரப்பேட்டை, விஜயமாநகரம் ஆகிய பகுதிகளில் அப்போதைய அரசு குடியேற்றியது.

Advertisment

அங்கு குடிபுகுந்த மக்கள், அந்தக் காடுகளைத் திருத்தி ஊராகவும் விவசாய நிலங்களாகவும் மாற்றி, அங்கே ஏறத்தாழ 65 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட இடத்திற்கும் நிலத்திற்கும் அப்போது அரசு பட்டா வழங் காமல் விட்டுவிட்டது. அதனால் உரிமையில்லாத அகத

டந்த 65 ஆண்டுகளாக கோரிக்கை வைத்துப் போராடியவர்களுக்கு, இப்போது தி.மு.க. ஆட்சியில் வெற்றி கிடைத்திருக்கிறது. எனவே போராடிய அத்தனை பேரும் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார்கள்.

அது என்ன போராட்டம்? அந்த போராட்டக் கதையைப் பார்ப்போம்.

Advertisment

dd

1950-களில் காமராஜர் ஆட்சிக் காலத்தில் நெய்வேலி பகுதியில் நிலக்கரி இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அதைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயா ரிப்பதற்காக முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டன. இதற்காக அப்பகுதியில் இருந்த கிராம மக்களை அப்புறப்படுத்தி, சில ஊர்களை காலி செய்தது அரசாங்கம்.

தாங்கள் வாழ்ந்த நிலத்தைக் கொடுத்து விட்டு, நிர்க்கதியாய் வெளியேறிய அந்த கிராமப் பகுதி மக்களை, காடுகளாக இருந்த புதுக்கூரப்பேட்டை, விஜயமாநகரம் ஆகிய பகுதிகளில் அப்போதைய அரசு குடியேற்றியது.

Advertisment

அங்கு குடிபுகுந்த மக்கள், அந்தக் காடுகளைத் திருத்தி ஊராகவும் விவசாய நிலங்களாகவும் மாற்றி, அங்கே ஏறத்தாழ 65 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அளிக்கப்பட்ட இடத்திற்கும் நிலத்திற்கும் அப்போது அரசு பட்டா வழங் காமல் விட்டுவிட்டது. அதனால் உரிமையில்லாத அகதிகளைப் போலவே அப்பகுதி மக்கள் இத்தனை காலமாய் வாழ்ந்து வந்தார்கள்.

இந்த நிலையில் 1972-ல் கடலூர் அரசு விழாவிற்கு வந்த அப்போதைய முதல்வர் கலைஞரிடம், எங்கள் நிலத்திற்கு பட்டா வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்த அப்பகுதி மக்கள், தங்கள் ஊருக்கு ஒரு பெயரையும் வைக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டனர்.

கலைஞரோ, அவர்களின் கோரிக்கையை பரிசீலிப் பதாகச் சொன்னதோடு, அவர்களின் ஊருக்கு விஜயமாநகரம் என்ற பெயரையும் சூட்டினார். எனினும் அப்போது ஒரு சிலருக்கு மட்டுமே பட்டா கிடைத்தது.

விஜயமாநகரம், புதுக்கூரப்பேட்டை கிராமங்களில் வாழ்ந்து வந்த ஏனைய 3,543 குடும்பங்களுக்கான வீட்டு மனைகளுக்கும், விவசாய நிலத்திற்கும் பட்டா கிடைக்காததால், அவர்கள் பல்வேறு போராட்டங்களை, அரசியல் கட்சிகளின் உதவியோடு நடத்தினர்.

இந்த நிலையில் இப்பகுதி மக்களின் மனக்குமுறலை வெளிப் படுத்தும் வகையில் அப்போதே ’ "உள்நாட்டு அகதிகள்’-அரசு பார்வை கிட்டுமா?'’ என்ற தலைப்பில், கடந்த 11.4.2007 நக்கீரன் இதழில் ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தோம்.

dd

இப்படியான சூழலில் கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலினை மேற்படி கிராம முக்கியஸ்தர்கள் சந்தித்து, இது குறித்த கோரிக்கை மனுவைக் கொடுத்தனர். அப்போது அவர், "தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்' என்று வாக்குறுதி யளித்தார். இந்த நிலையில், தி.மு.க. ஆட்சி அமைந்த சூழலில், அவரது கவனத்துக்கு இந்த விவகாரம் மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டது. விருத்தாசலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணனும் இந்தப் பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் எடுத்துரைத்தார்.

இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான அரசாணை 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

இதன் பயனாய், கடந்த 13ஆம் தேதி, விருத்தாசலத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் வரு வாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர்., உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் முன்னிலையில், புதுக்கூரப்பேட்டை, விஜயமாநகரம் மக்களுக்கு அவர்கள் தவமிருந்து காத்திருந்த பட்டாக்கள் வெற்றிகரமாக வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் கணேசன், "64 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த பட்டாக்கள், பயனாளிகளுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசுக்கு எந்த கோரிக்கை வைத்தாலும் அதை நிறைவேற்றும் என்கிற நம்பிக்கையை, இது ஏற்படுத்தி இருக்கிறது''’என்றார் பெருமிதமாக.

ff

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பேசும்போது, "இத்தனை காலமாய் தீராமல் இருந்த இந்தப் பிரச்சனைக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தீர்வு கண்டுள்ளது. இதேபோல் நெய்வேலி அருகே உள்ள இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் விரைவில் பட்டா வழங்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன''’என்று மகிழ்வோடு தெரிவித்தார்.

உற்சாகத்தில் இருந்த விஜயமாநகர வாசிகளில் ஒருவரான பாலகிருஷ்ணன் நம்மிடம் “"இந்த பட்டாவுக்காக நாங்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல. எங்கள் அவல நிலை குறித்து எனது தந்தை 2007இல் நக்கீரனுக்கு பேட்டியும் கொடுத்தார். அவர் மறைந்து விட்டார். அவரைப் போன்றவர்களின் லட்சியத்தை எங்கள் காலத்தில் நாங்கள் அடைந்துள்ளோம். இப்போதுதான் நாங்கள் நிம் மதிப் பெருமூச்சு விடுகிறோம். எங்கள் கோரிக்கையை நிறை வேற்றிய முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும், இதற்கு துணை புரிந்த அமைச்சர்களுக்கும், தொகுதி சட்டமன்ற உறுப் பினருக்கும் நன்றி தெரிவித் துக்கொள்கிறோம். இவ்வளவு நாள் கிடைக்காத அரசின் சலுகைகளும் உரிமைகளும் எங்களுக்கு இனி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டி ருக்கிறது''’என்றார் உற்சாகமாக.

புதுக்கூரப்பேட்டை வெங்கடாசலமோ "மூன்றாவது தலைமுறையில் தான் எங்களுக்கு உரிய பட்டா கிடைத்திருக்கிறது. இதற்கு முன்பு விவசாயக் கடன் கேட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு நாங்கள் சென்றால் உங்களுக்கு உரிமை இல்லாத நிலத்தின் மீது எப்படி கடன் வழங்க முடியும் என்று துரத்தி யடிப்பார்கள். இப்படிப்பட்ட அவமானங் களை எல்லாம் சந்தித்துவிட்டோம். தற்போது எங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துள்ளது. நெய்வேலியில் எங்கள் முன்னோர்கள் 10 ஏக்கர், 20 ஏக்கர் என்று இழந்துள்ளார்கள். ஆனால் இங்கே கொடுக்கப்பட்டதோ ஒரு குடும்பத்திற்கு 5 சென்ட் வீட்டு மனையும், இரண்டு ஏக்கர் நிலம் மட்டும்தான். நாங்கள் இழந்தது ஏராளம் பெற்றது குறைவு. அதையும் கூட உரிமை கொண்டாட முடியாத நிலையில்தான் இருந்தோம். இப்போது தீர்வை ஏற் படுத்திய தி.மு.க. அரசுக்கு நன்றி''” என்றார் மகிழ்வோடு.

என்.எல்.சி.க்கு நிலம் கொடுத்த விவசாயிகளின் மனதை, இத்தனை காலத்திற்குப் பிறகு குளிரவைத்து, பாராட்டுக்களைக் குவித்துக்கொண்டி ருக்கிறது அரசு.

cccc

nkn230324
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe