"தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள், தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், பிப். 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை கட்சி தலைமை அலுவலகத்தில் வழங்கப்படு கின்றன. பிப். 6ஆம் தேதி மதியம் 12 மணி முதல், விருப்ப மனுக் களைப் பெறலாம். இதர நாட்களில் காலை 10 மணி முதல், மாலை 6 மணிவரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர் கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங் களுடன் ஒப்படைக்க வேண்டும்'' என செவ்வாய்க்கிழமையன்று அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது த.வெ.க.
முந்தையநாள் தேர்தல் பிரச்சாரத்தின்போது காவல்துறை யிடம் அனுமதி பெறுவது மற்றும் சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பதற்காக, அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை கொண்டு, சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார மாநில பாதுகாப்பு குழு நியமனம். அடுத்த நாள் வேட்பாளருக்கான விருப்ப மனு அறிவிப்பு. எதற்காக இந்த அவசர அறிவிப்பு? என கேள்வி எழுப்பினால், "இதோ வரும்... அதோ வரும்... என காங்கிரஸ் கூட்டணி
"தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வேட்பாளராகப் போட்டியிட விரும்பும் கழகத் தோழர்கள், தங்களின் விருப்ப மனுக்களை அளிக்கலாம். இதற்கான விருப்ப மனுக்கள், பிப். 6ஆம் தேதி முதல் 14ஆம் தேதிவரை கட்சி தலைமை அலுவலகத்தில் வழங்கப்படு கின்றன. பிப். 6ஆம் தேதி மதியம் 12 மணி முதல், விருப்ப மனுக் களைப் பெறலாம். இதர நாட்களில் காலை 10 மணி முதல், மாலை 6 மணிவரை விருப்ப மனுக்களைப் பெறலாம். விருப்பம் உள்ளவர் கள் அவற்றைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் முழுமையாகப் பூர்த்தி செய்து, உரிய ஆவணங் களுடன் ஒப்படைக்க வேண்டும்'' என செவ்வாய்க்கிழமையன்று அவசர அவசரமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது த.வெ.க.
முந்தையநாள் தேர்தல் பிரச்சாரத்தின்போது காவல்துறை யிடம் அனுமதி பெறுவது மற்றும் சட்டப் போராட்டங்களை முன்னெடுப்பதற்காக, அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை கொண்டு, சட்டப்பேரவை தேர்தல் பிரச்சார மாநில பாதுகாப்பு குழு நியமனம். அடுத்த நாள் வேட்பாளருக்கான விருப்ப மனு அறிவிப்பு. எதற்காக இந்த அவசர அறிவிப்பு? என கேள்வி எழுப்பினால், "இதோ வரும்... அதோ வரும்... என காங்கிரஸ் கூட்டணிக்காக காத்திருந்தார் விஜய். பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும்போல் இங்கும் அங்குமாக போக்கு காட்டிக் கொண்டிருந்தது. ஒருகட்டத்தில் "70 சீட் தருகின்றேன்... கூட் டணிக்கு வாருங்கள்' என கிரீஷ் ஜோடங்கர் மூலம் ராகுலுக்கு தகவல் அனுப்பியும் "நிலையான' பதிலைத் தரவில்லை காங்கிரஸ். எனினும், "ஜனநாயகன்' படத்திற்கு ஏன் இந்த பிரச்சனை என ராகுல் பேச, காங்கிரஸ் நம் பக்கம் வந்துவிடும் என காத்திருந்தார் விஜய். அது நடக்கவில்லை, மாறாக காங்கிரஸ் இந்தப் பக்கம் பேசிக்கொண்டே தி.மு.க. கூட்டணியில் இருப்பதற்கு முனைப்பு காட்டுகின்றது. விரைவில் கூட்டணிக்கான அறிவிப்பு வரலாம். வந்தால் நமக்கு அசிங்கம் என்பதால் அவசரம், அவசர மாக 234 தொகுதிகளுக்கும் வேட்பாள ராக போட்டியிட விரும்புபவர்கள் விருப்ப மனு அளிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியானது'' என அறிவிப்பின் பின்னணி குறித்து பேசி னார் த.வெ.க. மாநில நிர்வாகி ஒருவர்.
600 வேட்பாளர்கள்
"தமிழகம் முழுவதும் பெரும்பான்மை வெற்றிபெற்று தலைவர் விஜய் சி.எம். ஆகிவிடு வார். நமக்கும் எளிதாக வெற்றி கிடைத்துவிடும். நான் சுகாதார அமைச்சர், நான் கல்வி அமைச்சர் என ஆளாளுக்கு கனவில் மிதந்து வருகின் றார்கள். அந்த "கனவின்' அடிப்படையில் விருப்ப மனு மட்டுமே ஆயிரக்கணக்கில் வரும். மொத்த மாக பெறப்பட்ட விருப்ப மனுக்களில், போட்டியிடும் மாற்றுக்கட்சியிடம் விலை போகக்கூடிய நபர்கள், கடைசி நேரத்தில் வேட்பு மனுவை வாபஸ் வாங்குபவர்கள், போட்டியிடுவதாக அறிவித்துவிட்டு மாற்றுக் கட்சியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வீட்டிலேயே இருக்கும் நபர்கள் என "பேக்ரவுண்ட் செக் அப்' செய்து மொத்தமுள்ள 234 தொகுதிகளில், தான் மற்றும் தன்னை சுற்றியிருக்கும் நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகள் தவிர மொத்தமாக 600 வேட்பாளர் விருப்ப மனுக்களை மட்டுமே தேர்வு செய்ய வுள்ளார் விஜய். இதற்காக உளவுத்துறையில் நீண்டநாட்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரின் உதவியை நாடியுள்ளது ஜான் ஆரோக்கியசாமியின் டீம்'' என்கின்றது த.வெ.க. வட்டாரம்.
நெருக்கடியில் புஸ்ஸி ஆனந்த்
த.வெ.க. கட்சியின் மூன்றாமாண்டு துவக்க விழாவின்போது விஜய்யின் வாகனம் அலுவல கத்தை நெருங்கி வருகையில், தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்றும் பாராமல் விஜய் யின் வாகனத்தை பின்தொடர்ந்து மூச்சிரைக்க ஓடிவந்து தன்னுடைய விசுவாசத்தை காண்பித் தார் புஸ்ஸி ஆனந்த். திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளில் இந்தவொரு காட்சியை கண்ட தில்லை எவரும். பொதுச்செயலாளர் என்றும் பாராமல் விஜய் அவரை ஓடவிடுவதன் காரண மென்ன? கட்சியின் முதன்மை நிர்வாகிகள் தங்களுக்குள் கலந்தாலோசிக்க, புஸ்ஸி ஆனந்தின் வசூல் வேட்டை வெளியானது. "நீதான் இந்த தொகுதிக்கு வேட்பாளர்?, நீதான் மா.செ.?' என தமிழ்நாடு முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கும், கட்சி பொறுப்புக்களுக்கும் இவ்வளவு? என ரேட் பேசி வாங்கியிருக்கின்றார் புஸ்ஸி ஆனந்த். இது விஜய்க்கு தெரியவந்த நிலையில், "அப்படியெல் லாம் இல்லை தலைவரே! கட்சிக்காக நிதி கேட்டேன். டி.டி.தான் கேட்டேன்'' என சமாளித்திருக்கிறார் அவர். "எவனாவது வெள் ளைப் பணத்தில் டி.டி. எடுத்து தருவானா? இதுதான் சாக்கு என அந்த பணம் எங்கி ருந்து வருதுன்னு மத்திய அரசு குடையும்'' என விஜய் கூற, "சரி தலைவரே.! பிளாக் கிலேயே கட்சி நிதியை வாங்குகின்றேன்'' என்றாராம் புஸ்ஸி ஆனந்த். இருப்பினும் "நீதான் வேட்பாளர்.?' என அவர் வாங்கிக் குவித்தது பல கோடிகளை தொடுமாம். போதாத குறைக்கு தென்மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவரை துணைக்கு வைத்துக்கொண்டு "உனக்குத்தான் சீட்டு' என கோடிகளில் வசூல் நடந்திருக்கின்றது. இதில் காரைக்குடியைச் சேர்ந்த பெண்மணிக்கு "திருமயம் தொகுதி உனக்குத் தான்' எனக் கூறி பெரிய தொகையை சுட்டிருக்கின்றனர். இதுபோல் பல சம்பவங்கள் விஜய்க்கு தெரிய வந்த நிலையில்தான்... விருப்ப வேட்புமனுக் கள் அறிவிப்பு. இதனால் நெருக்கடிக்கு ஆளானது புஸ்ஸி ஆனந்தும், டாக்டர் ஒருவருமே!
விஜய்யின் தொகுதிகள் எவை..?
புதுச்சேரி மாநிலத்திலிருந்த வாக்காளர் முகவரியை தமிழ்நாட்டிலுள்ள சோழிங்கநல் லூர் சட்டமன்றத் தொகுதியில் மாற்றியுள்ள கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சோழிங்க நல்லூர் அல்லது பல்லா வரம் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாள ராக களமிறங்கலாம். ஆதவ் அர்ஜுனாவோ தனக்கு விருப்பமாக திருப்போரூர், அம்பத்தூர் அல்லது தி.நகர் சட்டமன்றத் தொகுதிகளை தெரிவுசெய்து வைத்து, அங்கு தேர்தல் பணியாற்றி வருகின்றார். அருண்ராஜ் திருச்செங்கோட்டினை குறிவைத்த நிலை யில்... நடிகரும், கட்சியின் தலைவருமான விஜய்க்கு பாதுகாப்பான தொகுதியாக வேளச்சேரி, விருகம்பாக்கம் அல்லது திருச்சி மத்தி ஆகிய தொகுதிகளை தெர்ந்தெடுத் துள்ளது தேர்தல் கள வியூக ஜான் ஆரோக்கியசாமி டீம். இதற்கான பூர்வாங்க பணிகளை முன்பே தொடங்கி, தினசரி விஜய்க்கு அப்டேட் செய்கின்றது அந்த டீம் என்பது குறிப்பிடத்தக்கது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us