கடந்த 13ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் பிளஸ் டூ தேர்வு நடைபெற்று வருகிறது. சுமார் எட்டு லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வெழுதவுள்ள நிலையில், முதல் நாள் தமிழ் மொழித்தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வெழுத வராதது தமிழ்நாடு முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தி யது. இதற்கான காரணம் என்னவாக இருக்குமென்று ஒருபுறம் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்திவரும் நிலையில், நாமும் இதுகுறித்து கல்வியாளர்களிடம் விசாரித் தோம்.
ஓய்வுபெற்ற மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் பெண் ணாடம் தங்க வீரப்பன், "கொரோனா காலகட் டத்தில் தேர்வு எழு தாமலேயே பத்தாம் வகுப்பில் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். ஆல் பாஸ் மன நிலையில் இருந்த பல மாணவ, மாணவிகள், சரியாகப் படிக்காததால் பலரும் தேர்வெழுதப் போகவில்லை. தனியார் பள்ளியில் பிள்ளைகளைப் படிக்கவைக்கும் பெற்றோர் காட்டும் அக்கறையை, அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களால் காட்ட முடிவதில்லை. மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்களுக்கும் போதிய சுதந்திரம் இல்லை. மது, போதை, செல்போன் போன்ற புறச்சூழல்களில் சிக்கிச் சீரழியும் மாணவர்களும் தேர்வெழுதச் செல்வதில்லை. இவற்றையெல்லாம் சரிசெய்வதற்கு அரசாங்கம், ஆசிரியர்கள், பெற்றோர் கூட்டுப் பொறுப்போடு செயல்பட வேண்டும். இந்நிலையில், மத்திய அரசு புதிய கல்விக்கொள்கையை மொத்த தேசத்திற்கும் திணிக்கிறது. இதனால் வருங் காலத்தில் மேலும் அதிக அளவிலான மாணவர்கள் தேர்வெழுத வராமல் போக வாய்ப்புள்ளது'' என்றார் ஆதங்கத்துடன்.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் விருத்தாசலம் இளங்கோவன், "விருத்தாசலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 34 மாணவிகள், பெண்ணாடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 மாணவர்கள் என, இப்படி தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் பேர் தேர்வெழுத வராதது ஆச்சரியமான ஒன்றல்ல. பதினோறாம் வகுப்பு படிக்கும்போதே மாணவ மாணவிகளின் பட்டியல் தயார் செய்து விடுவார்கள். இவர்களுக்கு தேர்வெழுதும் முன்பாக ஆன்லைன் வழியாக ஹால் டிக்கெட் வந்துவிடும். இதற்கிடையில் குடும்பச் சூழ்நிலை காரணமாக பலர் இடையில் பள்ளிக்கு வராமல் நிற்கிறார்கள். பலர் தேர்வெழுத வருவதில்லை. இருப்பு என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஹால் டிக்கெட் பெற்ற சில நாட்களில் இறந்து போனார். வேறொரு பள்ளி மாணவியோ, அவரது தாயாருக்கு இரண்டாவதாகப் பிறந்த குழந்தையைப் பராமரிப்பதற்காகத் தேர்வெழுதச் செல்லவில்லை. இப்படிப் பல்வேறு காரணங்கள். இவர்களை யெல்லாம் வீட்டிற்கே சென்று ஆய்வுசெய்து, புரியவைத்து, அழைத்துவரும் சூழலில் ஆசிரியர்கள் உள்ளனர்.
பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தவறான வழியில் செல்லும் மாணவர்களுக்கு புத்திசொல்லக்கூட முடியாதபடி ஆசிரியர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன. மிகுந்த சிரத்தை எடுத்துக்கொண்டு மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும், படிப்பையும் கொடுக்க நினைக்கும் ஆசிரியர்கள், பலவிதமான சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள். ஆசிரியர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து கல்வித்துறை, காவல்துறை, தீர விசாரிக்கா மல், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது. இதனால்தான் ஆசிரியர்கள் கண்டுங்காணாமலும் ஒதுங்கிக்கொள்ளும் நிலை. மாணவர்களை நல்வழிப்படுத்த, ஆசிரியர்களுக்கு கூடுதலான பாதுகாப்பும், அதிகாரமும் வழங்க வேண்டும்'' என்கிறார்.
சங்கராபுரத்தைச் சேர்ந்த கல்வியாளரும், பெற்றோர் ஆசிரியர் சங்க பிரமுகருமான திருப்பதி, "ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் மூலம் ஒருங்கிணைந்து மாதம் ஒருமுறை கலந்துரையாடி, பிள்ளைகள் அனைவரும் பள்ளிக்கு வருகிறார்களா?அவர்களின் நடவடிக்கை எப்படி உள்ளது? என்றெல்லாம் விவாதித்தால்தான் தவறான வழியில் மாணவர்கள் செல்லாமல் தடுக்க முடியும். அதேபோல் ஆசிரியர் களிடம் தவறு இருந்தாலும் திருத்த முடியும். கல்வித்துறை அதிகாரிகள் தினசரி ஆசிரியர்களுக்கு இதையிதைச் செய்ய வேண்டும் என்று அறிவிப்பு களை மட்டும் அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த அறிவிப்புகளை நடைமுறைப்படுத்த போதிய ஆசிரியர்கள், பணியாளர்கள் இல்லை. அதைப்பற்றி கல்வித்துறை கவலைப்படவில்லை'' என்கிறார்.
50 ஆயிரம் மாண வர்கள் தேர்வெழுத வராதது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "கொரோனா கால கட்டத்தில் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர் பள்ளிக்கு வராமல் இடையில் நின்றனர். அவர்கள் கண்ட றியப்பட்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்ட னர். இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத 5% மாணவர்கள் வரவில்லை என தகவல் கிடைத் துள்ளது. இதில் உடனடியாக கூடுதல் கவனம் செலுத்துமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு தேர்ச்சி பெறாத மாணவர்களுடன், தற்போது தேர்வுக்கு வராதவர்களையும் சேர்த்து பயிற்சி அளித்து அவர்களை வரும் ஜூன் மாதத்தில் தேர்வு எழுத வைக்கும் பணியில் கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். அதைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பு பள்ளிக்கல்வித் துறைக்கு உள்ளது. அதைப் படிப்படியாகச் செய்வோம்'' என்று கூறியுள்ளார். அனைத்து மாணவர்களுக்கும் கல்வியைக் கொண்டுசேர்க்கும் சமூக நீதிப்பாதையின் தடைக்கற்களை நீக்க பெருங்கவனமும், திட்டமிடலும், ஒருங்கிணைப்பும் தேவை.
-எஸ்.பி.எஸ்.