திருச்சி மாவட்டம், வண்ணாகோவில் பகுதியில் உள்ள கேர் கல்லூரி வளாகத் தில் வேளாண்மை சங்கமம் -2023 என்ற 3 நாள் வேளாண் கண்காட்சியை, கடந்த 27ஆம் தேதி வியாழனன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பாரம் பரிய நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கிய விவசாயிகளுக்கு விருதுகளை வழங்கினார். மேலும், 50,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் நித

இந்நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, உழவர் மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து மேடையில் பேசிய அமைச்சர் கே.என். நேரு, "இதுவரை தனியார் மட்டுமே விவசாயக் கண்காட்சிகளை நடத்திவந்தார்கள். ஆனால் தற்போது அரசு சார்பில் விவசாயக் கண்காட்சியை முதல்வர் ஏற்பாடு செய்துள்ளார். வேளாண்மை கண்காட்சி திருச்சியில் நடப்பது திருச்சிக்கு பெருமை சேர்க்கக்கூடியதாக உள்ளது'' என்றார். அடுத்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "கடந்த ஆட்சியை, தற்போதைய ஆட்சியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நமது ஆட்சியில் விவசாயி களுக்கு அனைத்துமே கிடைக்கிறது என்பதை நாம் பார்க்கமுடிகிறது. இதற்கு விவசாய சங்கங்களே சாட்சியாக உள்ளனர்'' என்றார்.
நிகழ்ச்சியில் இறுதியாக பேசிய முதல்வர் ஸ்டாலின், "வேளாண்மை சங்கமம் -2023 நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சிறுதானிய வகைகள், காய்கறிகள், பழங்கள் கண்காட்சியை பார்க்கும்போது மனமும் பசுமையாக உள்ளது, மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. "வேங்கை மகன்' என்று வேளாண்துறை அமைச்சரை நாங்கள் கூறுவோம். ஆனால் தற்போது வேளாண்மகனாக மாறியுள்ளார். குறுவை சாகுபடியில் 47 ஆண்டுகளில் நிகழாத சாதனையை தற்போது நாம் செய்துள்ளோம். "தமிழ் மண் வளம்' என்கிற இணையதளத்தை நான் துவங்கி வைத்துள்ளேன். கடந்த 10 வருடமாக இருந்த ஆட்சியில் 2.20 லட்சம் விவசாய மின் இணைப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளிலேயே நாம் 2 லட்சம் பேருக்கு விவசாய மின் இணைப்பை வழங்கியுள்ளோம். நாம் சொல்வதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம்'' என்று பேசினார்.