"இந்தியாவின் நைட்டிங்கேல்' என்று அழைக்கப்படும் சரோஜினி நாயுடுவின் பிறந்தநாளான பிப்.13 தேசிய மகளிர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறும் 1.31 கோடி பெண்களுக்கு அவரவர் வங்கிகணக்கில் 5000 ரூபாய் செலுத்தி இன்ப அதிர்ச்சியளித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/50001-2026-02-16-16-14-36.jpg)
இதுகுறித்து கிராமப்புற பெண்களிடம் கேட்டபோது, மா. பொடையூர் செல்வி: "காலையில் செல்போனில் மெசேஜ் சத்தம் கேட்டது. செல் போன் கம்பெனிக்காரர்கள் ஆஃபர் போடும் போதும், ரீசார்ஜ் பண்ணச் சொல்லியும் அடிக்கடி மெசேஜ் போடுவார்கள். அதுபோல் ஏதோ மெசேஜ் என்று நினைத்தேன். செல் போனை திறந்து பார்த்த எனக்கு இன்ப அதிர்ச்சி. எனது வங்கிக்கணக்கிற்கு 5000 ரூபாய் வந்திருந்தது. முதலில் ஒன்றும் புரியவில்லை, ஏதாவது தவறுதலாக நமக்கு வந்துவிட்டதோ என்றுகூட நினைத்தேன். இதுகுறித்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் சொன்னபோது, அவர்களின் வங்கிக்கணக்கிற்கும் இதேபோன்று ஐயாயிரம் ரூபாய் பணம் வந்திருப்பது தெரியவந்தது. அப்போதுதான் மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை இந்த மாதம் 5000 ரூபாய் மொத்தமாக வங்கியில் செலுத்தப்பட்டது தெரிய வந்தது. முதல்வர் இதை முன்பணமாக வழங்கியுள்ளதாகக் கூறியுள் ளார். முதல்வருக்கு என் னைப்போன்ற குடும்பத் தலைவிகளின் ஆதரவு என்றும் உண்டு.''
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/50002-2026-02-16-16-14-53.jpg)
வீரமுடயாநத்தம் உஷாராணி: "உரிமைத் தொகை வழங்கிய முதல் வருக்கு நன்றியை தெரி வித்துக்கொள்கிறோம். இந்த ஐந்தாயிரம் எங்க ளுக்கு மிகப்பெரிய வரப் பிரசாதம். குடும்பச் செல வுக்கு உதவியாக இருக்கும். காலையில் வீட்டு வேலை களை முடித்துக்கொண்டு வேலைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தேன். அப் போதுதான் முதல்வர் இந்த மாதம் உரிமைத்தொகை யாக 5000 ரூபாய் மொத்த மாக வங்கியில் செலுத்தி யுள்ளதாக என்னோடு வேலைக்குவரும் சக பெண் கள் கூறினார்கள். அதன் பிறகு நானும் செல்போன் மெசேஜை பார்த்தேன். ஆச்சரியமாகவும், வியப் பாகவும் இருந்தது. மொத்தமாக ஐயாயிரம் ரூபாய் கிடைத்துள்ளது பெரும் சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பணம், குடும்பச்செலவு, மருத்துவச் செலவுகள் உட்பட அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவி யாக இருக்கும். எங்களைப் போன்ற பெண் களுக்கு பஸ்ஸில் இலவசப் பயணம், உரிமைத் தொகை வழங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. இரண்டாவது கட்டமாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து கிடைக்காத பெண் கள் உள்ளனர். அவர்களுக்கும் உரிமைத்தொகை கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.''
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/50003-2026-02-16-16-15-25.jpg)
மயிலாடுதுறை மலர்விழி: "தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் பல திட்டங்களால் பெண்கள் பலனடை கிறோம். இலவச பேருந்துப் பயணத்தால் அந்த செலவை மிச்சம் பிடிக் கிறோம். மகளிர் உரிமைத் தொகையாக அண்ணன் வீட்டு சீதனம்போல் மாதாமாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. பிள்ளைகளின் படிப்பும் முதல்வர் தயவில் இலவசமாகக் கிடைப்பதால் கடினமான வாழ்க்கையிலிருந்து மீண்டு வந்துள்ளோம். பொங்கலுக்கு தவித்துக்கொண்டிருந்தோம். மூவாயிரம் கொடுத்து கொண்டாடவைத்தார். தை மாதம் முடிந்ததுமே மாசியில் ஐந்தாயிரம் கொடுத்து எங்களை திக்குமுக்காட வைத் துள்ளார். இனி எங்கள் ஆதரவு முதல் வருக்குத்தான்.''
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/50004-2026-02-16-16-15-50.jpg)
திருவிடைமருதூர் புனிதவதி: "தூங்கி எழுந் திருக்கும்போதே அளவில்லாத மகிழ்ச்சியில் ஆழ்த்திவிட்டார். ஆயிரம் ரூபாய் விழவேண்டிய கணக்கில் ஐந்தாயிரம் இருந்தது. இதுக்கு முன்னாடி அனைவரது கணக்கிலும் ஐந்தாயிரம் போடுவதாக அறிவிப்பும் இல்ல. திடீர்னு சொல் லாம செய்து மனச குளிரச் செய்துவிட்டார். கூடப்பிறந்த அண்ணனோ, அப்பாவோ தான் செய்வதை சொல்லாமல் பிள்ளைகளுக்கு தேவைகளை அறிந்து செய்வார்கள். அப்படித் தான் தமிழக முதல்வர் ஸ்டாலின்கூட பிறக்காத உறவாக எங்களின் சிரமத்தை போக்கிவருகிறார். எம்.ஜி.ஆர். மக்களுக்கு வாரிவழங்குவார்னு சொல்வாங்க. அவரை பார்த்ததில்லை. ஸ்டாலின் உருவத்தில் அவரை பார்க்கிறோம்.''
திருவாரூர், கொல்லுமாங்குடி பெனாசீர் பேகம்:
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/50005-2026-02-16-16-16-02.jpg)
"பா.ஜ.க.வின் பண மதிப்பிழப்புக்கு பிறகு கொரோனாவில் மொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கும் பெண்களுக்கு தி.மு.க. ஆட்சிக்கு வந்து "நாங்க இருக்கிறோம்' எனக்கூறி பல திட்டங்களை கொண்டுவந்து பெண்களை முன்வரிசைக்கு நகர்த்தியிருக்கிறார். ரம்ஜான் வருகிறதே, என்ன செய்வதென யோசித்துத் தவித்த நிலையில் ஐந்தாயிரத்தை வங்கிக்கணக்கில் வரவு வைத்து மகிழ்வித்திருக்கிறார். யார் என்ன சொன்ன ôலும், எதைச் செய்தாலும் மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வர். பெண்கள் நாங்கள் இருக் கிறோம், தி.மு.க.வை மீண்டும் ஆட்சிக்கு வரவைப்போம்.''
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/16/50006-2026-02-16-16-16-19.jpg)
தரங்கம்பாடி சாரதா: "எங்க மகிழ்ச்சிய சொல்ல வார்த்தையில்ல. தள்ளு வண்டி வச்சி காய்கறி, சாத்துக்குடி ஜூஸ் வியா பாரம் செய்து பிழைச்சிக் கிட்டு இருக்கோம். கோடைகாலம் ஆரம்பிச்ச தால அதிகமா முதலீடு இல்லாம தவிச்சோம். மாசம் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறதுல கரண்ட் பில், மற்ற செலவுகளை பார்த்துக்கிறோம். அவ்வப்போது வீடு தேடி மருத்துவம் செஞ்சிடறாங்க. பிள்ளைங்க படிப்புச் செலவுக்கும் முதல்வரே கொடுத்துடுறாங்க. பொங்கலுக்கு கொடுத்த 3000 பணத்த வச்சு வியாபாரம் செய்து பிழைத்தோம். இப்போ கோடை வியாபாரத்துக்கு என்ன செய்யன்னு தவிச்சப்ப இந்த பணம் வந்ததும் ஆச்சர்யமும், அழுகையுமா வந்துடுச்சி. இனி எங்க வாழ்நாள் முழுவதும் ஸ்டாலின்தான் முதல்வர்.''
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/16/5000-2026-02-16-16-14-22.jpg)