ந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 500% வரை வரி விதிப்பதற்கான நடை முறையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இறங்கியிருப்பது இந்தியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

Advertisment

ட்ரம்புக்கு  அப்படியென்ன கோபம்?

உலக நாடுகளின் நாட் டாமையாக காட்டிக்கொள் ளும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் மீது போர் தொடுத்த இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தியது தான் தானென்று மார்தட்டி வந்தார். அதை இந்தியாவும் ஒப்புக்கொள்ள வேண்டுமென்று திரும்பத் திரும்ப கூறிவந்தார். இந்தியத் தரப்பில் அதை ஏற்க  மறுத்த நிலையில், இந்தியா மீது கடுமை காட்டத் தொடங்கினர்.

Advertisment

ஏற்கனவே கடந்த 2022, பிப்ரவரியிலிருந்து நடந்துவரும் ரஷ்யா -உக்ரைன் போரை நிறுத்துவதற்காகவும் ட்ரம்ப் முயற்சியெடுத்தார். அதற்காக ரஷ்யா மீது பொருளா      தாரத் தடை விதித்தார். ஆனால், இந்தியாவோ, ரஷ்யா வில் தேக்கமடைந்த பெட் ரோலிய கச்சா எண்ணெயை மிகக்குறைந்த விலைக்கு வாங்கியது. அதை, இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் சுத்திகரித்து, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பெருத்த லாபம் பார்த்தன. இந்திய மக்களுக்கு இதனால் பெரிதும் பலனில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், தனது பேச்சை மதிக்காமல் ரஷ்யா வோடு வர்த்தக உறவு வைத்தி ருக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு 50% வரை வரி விதித்து அதிர்ச்சியளித்தார். இத னால், இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில், திருப்பூர் பகுதி களில் உற்பத்தியாகும் ஆயத்த ஆடைகள் மற்றும் துணிகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதில் பின்னடைவு ஏற்பட் டுள்ளது. அதேபோல், மருத்துவப் பொருட்கள், ஆபரணங்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதிலும் சிக்கல் ஏற்பட் டுள்ளது. மேலும், ஐ.டி. துறை யில், அமெரிக்க நிறுவனங்களுக் கான ப்ராஜெக்டுகளை செய்வ திலும் சிக்கல்கள் எழுந்துள்ளது.

Advertisment

இந்நிலையில், ரஷ்யாவிலி ருந்து இந்தியா பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்குவதை 2025, டிசம்பருக்குள் நிறுத்தி விடுவதாக உறுதியளித்துள்ள தாக, ட்ரம்ப் தெரிவித்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தபடி ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை. 

ட்ரம்பை பொறுத்தவரை, உலகளவில், இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமான போரை நிறுத்தியது போல், இஸ்ரேலுக் கும் ஈரானுக்குமான போரை, இஸ்ரேலுக்கும், காஸாவுக்கு மான போரை, தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்குமான போரையெல்லாம் நிறுத்திய தன்னால், இப்போது வரை ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமான போரை நிறுத்த முடிய வில்லையே என்ற ஆதங்கம் இருக்கிறது.

இப்படியான சூழலில், ரஷ்யாவோடான இந்தியாவின் தொடர்ச்சியான வர்த்தக உறவால் கடுப்பான ட்ரம்ப், கடந்த வாரம் தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானப் பயணத்தின்போது பத்திரிகை யாளர்களை சந்தித்தவர், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கு மான பொருளாதார உறவு தொடர்வது குறித்து பத்திரி கையாளர்கள் கேட்ட கேள்விக்கு, "இந்திய பிரதமர் மோடி நல்ல மனிதர். இவ் விவகாரத்தில் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்கு தெரியும். எனவே என்னை அவர் மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம் என்பதையும் அவர் அறிவார்'' என்று கூறினார். 

மேலும், "ரஷ்யாவுடன் வர்த்தக உறவை இந்தியா தொடர்ந்தால், குறிப்பாக ரஷ்யாவிடமிருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியா மீது வரி விதிப்பதை இன்னும் வேகப் படுத்த என்னால் முடியும். அப்படியான நடவடிக்கையில் நான் இறங்கினால் அதன் விளைவு மிகவும் மோசமாக இருக்கும். எங்களை எதிர்த்ததால் தற்போது ரஷ்ய பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது'' என்று எச்சரிக்கை செய்தார்.

இப்படியான சூழலில், ட்ரம்ப் மிரட்டியபடி, அடுத்த கட்டமாக, ரஷ்யாவுடன் வர்த்தக உறவு வைத்துள்ள நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு 500% வரை வரி விதிப்பதற்கான சட்டத்தை கொண்டுவர முடிவுசெய்தார். அதன்படி, அமெரிக்க அதிபர் ட்ரம்பை குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் சந்தித்துப் பேசினார். இவரோடு,  ஜனநாயகக் கட்சியின் ரிச்சர்ட் புளூமெந்தலும் இணைந்து, ரஷ்யாவுக்கு எதிரான மசோதா ஒன்றை கொண்டுவந்தனர். அதில், ரஷ்யாவிலிருந்து பெட் ரோலிய கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யக்கூடிய நாடுகளுக்கு 500 சதவிகிதம் வரை வரி விதிக்கப்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரண்டுமே ஆதரவு தெரி விப்பதால் விரைவில் அது சட்டமாகக்கூடும். இதை ட்ரம்பும் முழுமனதாக ஆத ரிப்பதால், இம்மசோதாவால், இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளுக்கும், அமெரிக்காவுக்குமான வர்த்தக உறவு பெரிதும் பாதிக்கப்படுமென்று தெரி கிறது.

இதனை சமாளிக்க, அமெரிக்காவுக்கான ஏற்றுமதியை வேறு நாடு களுக்கு திசைதிருப்பும் முயற்சியில் இந்தியா இறங்கக் கூடும். அதேபோல், பெட் ரோலிய கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் முகமாக, மின்சார வாகனங் களின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியிலும் இந்தியா இறங்கியுள்ளது. பங்குச்சந்தையில் இதன் பாதிப்பு என்னவென்பது போகப்போகத் தெரியும்! மொத்தத்தில் இந்திய - அமெரிக்க உறவு கேள்விக்குறி யாகியுள்ளது!