ஆட்சி இல்லையென்றாலும் அ.தி.மு.க.வின் தனித்துவமான தலைவராக தன்னைக் காட்டிக்கொள்ள கடுமையாகப் போராடிவருகிறார் அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப் பாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
ஜெயலலிதா மறைந்தபிறகு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி தொடங்கி சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 9 மேற்கு மண்டலங்களில்... அதாவது கொங்கு மண்டலத்தில் மட்டும் அ.தி.மு.க. 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இவை அ.தி.மு.க.வுக்கு வலுவான பகுதிகள் தான் என்றாலும் "ஜெ.' மறைவுக்குப் பிறகும் அதை தன்னால்தான் தக்கவைக்க முடிந்தது என்பதை அ.தி.மு.க. உட்கட்சி அரசியல் களத்தில் நிரூபித்து, ஓ.பி.எஸ்.ஸை ஓரம்கட்டி பவர் தன்னிடமே இருக்கும்படி பார்த்துக்கொண்ட எடப்பாடிக்கு அவரது கொங்கு சமூக பலமே கூடுதலாகக் கை கொடுத்தது.
தி.மு.க.வில் மா.செ.க்களாக, இப்போது மந்திரியாக உள்ள சிலரும் எடப்பாடியின் கொங்கு பாசத்திற்கு கட்டுப்பட்டு மறைமுகமாக தி.மு.க. தோல்விக்கு உதவியவர்கள்தான். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு எடப்பாடியின் கொங்கு சென்டிமெண்ட் யாரிடமும் எடுபடவில்லை.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவு எப்படியிருக்கும் என பலரிடம் கருத்துக் கேட்டுவந்த எடப்பாடி, ஏற்கனவே சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு சர்வே எடுத்து உதவிய ஒரு தனியார் நிறுவனம், பணியிலிருந்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் ஓரிருவர் மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சர்வே எடுக்கவைத்தார்.
வாக்குப்பதிவுக்கு 10 நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட அந்த இரண்டு தரப்பு சர்வேவும் ஒரே ரிப்போர்ட்டைக் கொடுத்துள்ளன.
அதில், மாநகராட்சிகளில் சில வார்டுகளில் மட்டுமே அ.தி.மு.க. வெற்றிபெறும். மேயர் பதவி அனைத்துமே தி.மு.க. வசம்தான். நகராட்சிகளில் பவானி, கோபிசெட்டி பாளையம் உட்பட ஒற்றை இலக்கில் மட்டுமே அ.தி.மு.க. தலைவர் பதவியைப் பிடிக்கும். பேரூராட்சிகளிலும் இந்த நிலைதான்.
மூன்றில் ஒரு மடங்கு அதாவது 30 வார்டுகள் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளில் இருபது தி.மு.க., எட்டு முதல் 10 அ.தி.மு.க. என்றளவில்தான் வெற்றி கிடைக்கும். மொத்தமாக வாக்கு சதவிகிதம் 22-க்குள் சுருங்கும் என்றும், கொங்கு மண்டலத்திலும் இதே நிலைமைதான். இதிலிருந்து குறைய லாமே தவிர கூடுவதற்கு வாய்ப்பு இல்லை.
அ.தி.மு.க. கூடுதல் வாக்கு சதவிகிதம் பெறு வதற்கும், தி.மு.க.வுக்கு நிகராக வெற்றிபெறு வதற்கும்... உதாரணமாக, 60 வார்டுகள் கொண்ட ஒரு மாநகராட்சியில் தி.மு.க. அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 15 வார்டுகளை ஒதுக்கியது போக, மீதி 45 வார்டுகளில் தி.மு.க. போட்டியிடும் என வைத்துக்கொண்டால், அங்கு 20 முதல் 25 வார்டுகள் அ.தி.மு.க. வெற்றி பெற்றால் அது சமபலமாகி விடும். இதற்கு ஒரே வழி தி.மு.க. ஓட்டுக்கு 300 என்றால் நாம் 500, தி.மு.க. 500 என்றால் நாம் 1000 பட்டுவாடா செய்ய வேண்டும். அப்போதுதான் வாக்குகள் கூடும். வெற்றி எண்ணிக்கையும் அதிகமாகும். இதைத்தவிர வேறு வழியே இல்லை என்று தெளிவான ரிப்போர்ட் கொடுத்திருக்கிறார்கள்.
எதார்த்த நிலைமையைப் புரிந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமி, தனது நெருங்கிய சகாக்களான முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். அ.தி.மு.க. கொங்கு மண்டலத்தில் வலுவாக உள்ளது என்பதை ஓட்டு அறுவடை மூலம்தான் நிரூபிக்க முடியும். தோராயமாக 500 கோடி செலவானாலும் பரவாயில்லை, நாம் அரசியலில் பவருடன் இருப்பதை நிலைநிறுத்தியாகவேண் டும் என முடிவு செய்தனர்.
அதனடிப்படையில் சேலம் மாவட்டம் மற்றும் மாநகராட்சியை எடப்பாடியின் பினாமி இளங்கோவனிடமும் நாமக்கல், கரூரை தங்கமணி வசமும், கோவை, திருப்பூர், நீலகிரியை வேலுமணியிடமும், தருமபுரி, கிருஷ்ணகிரியை அன்பழகனிடமும், திண்டுக்கல், திருச்சியை விஜயபாஸ்கரிடமும் பொறுப்பளித்து வைட்டமின் "ப' சப்ளைக்கு முடிவுசெய்துள்ளனர். இதுபோக எடப்பாடி யின் விசுவாசிகளாக உள்ள அந்தந்த மாவட்ட முன்னாள் அமைச்சர்களிடமும் வெற்றி, தோல்வி கவலை வேண்டாம் அ.தி.மு.க. ஓட்டு சதவிகிதம் குறையக்கூடாது. தாராளமாகச் செலவிடுங்கள் என எடப்பாடி கூறியிருக்கிறார்.
மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரிடமும் தொலை பேசியில் பேசிய எடப்பாடி... "கொங்கு மண்டலம் என்றால் அது அ.தி.மு.க .வுக்கு வலுவான பகுதிகள் என்பதை இந்த உள்ளாட்சி தேர்தலிலும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும். மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளைக் கைப்பற்ற முடியவில்லை யென்றாலும் தி.மு.க.வுக்கு நிகரான இடங்களில் அ.தி.மு.க. வெற்றிபெற வேண்டும். தேர்தல் செலவு, ஓட்டுக்கு பணம் எல்லாவற்றி லும் தாராளமாக இருங்கள். உங்களைத் தேடி எல்லாம் வரும்'' என உணர்ச்சிகரமாக, உருக்கமாகப் பேசியிருக்கிறாராம்.
இந்நிலையில்... வேலுமணி சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்கள் முடக்கமும், சேலம் இளங் கோவன் வீட்டில் பணம் கைப்பற்றல் நடந்த ரெய்டும் எடப்பாடியை அதிர வைத்தி ருக்கிறது.