Advertisment

50 ஆண்டுகால மக்கள் பிரச்சனை! தீர்வு கண்ட நக்கீரன்!

ss

டலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ளது கொடிக்களம் கிராமம். இந்த கிராமத்தில் குடியிருக்க வீடில்லாமல் இருந்த சுமார் 50 குடும்பத் தினர் அப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு இடத் தில் வீடுகட்டி வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த இடத் திற்கு வீட்டு மனை பட்டா கேட்டு பல ஆண்டுகாலம் அதற்கான முயற்சியில் இறங்கியும் பலனில்லை. அவர்களது பிரச்சனை களுக்குத் தீர்வுகண்டு, அவர்களுக்கு பட்டா கிடைக்க உதவியுள்ளது நக்கீரன்.

Advertisment

கொடிக்களம் ஊராட்சி மன

டலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டத்தில் உள்ளது கொடிக்களம் கிராமம். இந்த கிராமத்தில் குடியிருக்க வீடில்லாமல் இருந்த சுமார் 50 குடும்பத் தினர் அப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு இடத் தில் வீடுகட்டி வாழ்ந்தனர். அவர்கள் வாழ்ந்த இடத் திற்கு வீட்டு மனை பட்டா கேட்டு பல ஆண்டுகாலம் அதற்கான முயற்சியில் இறங்கியும் பலனில்லை. அவர்களது பிரச்சனை களுக்குத் தீர்வுகண்டு, அவர்களுக்கு பட்டா கிடைக்க உதவியுள்ளது நக்கீரன்.

Advertisment

கொடிக்களம் ஊராட்சி மன்ற தலைவரான உமாராணியின் சகோதரர் (தி.மு.க.) தொ.மு.ச. ரேஷன் கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவராக இருந்த முருகானந்தம், ஆகியோர் குடியிருப்புவாசிகளுக்கு வீட்டுமனை பட்டா வாங்கிக்கொடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில்..., திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். அதன்பிறகு பணி கிடப்பில் போடப்பட்டது.

ff

நக்கீரன் பற்றி அறிந்திருந்த பயனாளிகள் விஜயகுமார், பெரியசாமி, விஜயா உட்பட பலர் வீட்டுமனை பட்டா கிடைப்பதற்கு உதவிசெய்யு மாறு கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து அப்போதைய திட்டக்குடி வட்டாட்சியர் ரவிச்சந்திரனை சந்தித்து விவரம் கூறினோம். அதன்பிறகு அதற்கான பணிகள் துவங்கின.

ஒருவருட கடும் முயற்சியின் விளைவாக ஒருவழியாக பயனாளிகளுக்கான வீட்டு மனை பட்டா தயாரானது. 50 ஆண்டு காலம் வீட்டு மனை பட்டா இல்லாமல் வாழ்ந்த மக்களுக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டுள்ளது.

திட்டக்குடி சட்ட மன்ற உறுப்பினரும் அமைச்சருமான சி.வி.கணேசனிடம் 48 குடும்பத்தினருக்கு வீட்டுமனை பட்டா வழங்க இருப்பது குறித்து தெரிவித்தோம். பயனாளிகளுக்கு வாழ்த்துகள் தெரிவித்த அமைச்சர், கடந்த 15-ஆம் தேதி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திட்டக்குடி சொர்ணம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், தற்போதைய வட்டாட்சியர் ஜெயந்தி ஆகியோர் முன்னிலையில் திட்டக்குடி வட்டத்தில் சுமார் ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார்.

50 ஆண்டுகால பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கச்செய்த நக்கீரனுக்கு தங்களது நன்றிகளை பயனாளிகள் தெரிவித்துக்கொண்டனர். பயனாளி களுக்கு வீட்டுமனை பட்டா கிடைப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த வட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன், துணை வட்டாட்சியர் முருகன், வருவாய் ஆய்வாளர், மதி, (தற்போதைய வேப்பூர் துணை வட்டாட்சியர்) நில அளவையர்கள், அமுதா, சுந்தரமூர்த்தி, திருமலை, ஆய்வாளர் சதாசிவம், கிராம நிர்வாக அலுவலர் வீரநடராஜன் உட்பட சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

-சக்கரை

nkn271223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe