புதுச்சேரி நகரின் மையப்பகுதி யான பாரதி வீதி காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்த மாக ரெயின்போ நகர், ஏழாவது குறுக்குத் தெருவில், 64,035 சதுர அடி பரப்புள்ள சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தினை போலி ஆவணங்கள் தயாரித்து சிலர் அபகரித்து விட்டதாக கோவில் அறங்காவலர் குழு செயலாளர் சுப்பிரமணியன், சி.பி.சி.ஐ.டி போலீஸில் கடந்த 30.08.2022 அன்று புகார் கொடுத்தார்.
சி.பி.சி.ஐ.டி. போலீசார், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து டி.ஜி.பி. உத்தரவின் பேரில் எஸ்.பி. மோகன்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
அதில் காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 31,204 சதுர அடி பரப்பளவு இடத்திற்கு போலி ஆவணங்கள் தயாரித்து "அன்னை நகர் விரிவாக்கம்-01' என்ற பெயரில் மனைகளாகப் பிரித்து 17 பேரிடம் ஏமாற்றி விற்பனை செய்தது தெரியவந்தது. சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்த ரத்தினவேல், அவரது மனைவி மோகனசுந்தரி, குன்றத்தூரை சேர்ந்த மனோகரன், புதுச்சேரி கலிதீர்த்தான் குப்பத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் சின்னராசு என்கிற பழனி ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தது தெரியவந்தது.
இதையடுத்து ரத்தினவேல், மோகனசுந்தரி, மனோகரன் ஆகியோரை சென்னையிலும், சின்னராசுவை புதுச்சேரியிலும், தனிப்படை போலீசார் கடந்த 1.2.2023 அன்று கைதுசெய்து, நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து மீத முள்ள கோவில் நிலத்தை அபகரித்தவர்கள் குறித்து சிறப்பு குழுவினர் விசாரித்து வந்தனர்.
விசாரணையில், மோசடியில்

விசாரணையில், மோசடியில் தொடர் புடைய சார்பதிவாளர் சிவசாமி உட்பட 13 பேர் கைதுசெய்யப் பட்டனர். இந்த கோவில் நிலமோசடியில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜான்குமாருக்கும் தொடர்பிருப்பதாக தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளது.
இதற்கு பின்புலமாக இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஜான்குமார், மாவட்ட பதிவாளர் ரமேஷ் மற்றும் தொடர்புடைய வட்டாட்சியர் பாலாஜி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் சார்பில் கடந்த ஜூன் 27ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து புதுவை திராவிடர் விடுதலைக் கழக மாநில அமைப்பாளர் லோகு.அய்யப்பன் நம்மிடம், "இந்த மோசடியில் தொடர்புடைய சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு சாதகமாக செயல் பட்டதன் மூலம் ஜான்குமார் எம்.எல்.ஏ. அவரது உறவினர்கள் பெயரில் பல வீட்டுமனை களை லஞ்சமாக வாங்கி யுள்ளார். இவர்மீது மாவட்ட பதிவாளர் ரமேஷ், வட்டாட்சியர் பாலாஜி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரத் தையும் அரசியல் பின் புலத்தையும் பயன்படுத்தி இவர்கள் தப்பிக்கப் பார்க்கிறார்கள். எனவே இவர்கள் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.
அதேநாளில் புதுச்சேரியில் செய்தியாளர் களைச் சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, "காமாட்சியம்மன் கோயில் நில அபகரிப்பு தொடர்பாக புகாரளித்தபோது காவல்துறையும் அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியபிறகே வழக்கு பதிவுசெய்து சி.பி.சி.ஐ.டி. விசாரணை நடக்கிறது. காமாட்சியம்மன் கோயில் நில அபகரிப்பில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வுக்கும் தொடர்பு உள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால்தான் உண்மை நிலவரம் தெரியும்'' என குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத்தலைவர் கல்யாணசுந்தரம், "ரூபாய் 50 கோடி மதிப்பிலான காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 63,000 சதுரஅடி நிலம் பல்வேறு நபர்கள் பெயரில் போலி பத்திரங்கள் மூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதில் முக்கியமாக ஜான்குமார் தாயார் அடைக்கலமேரி, மனைவி ஜஸ்டின், மகள் விக்டோரியா ரினா, அவரது மருமகளும் ரிச்சர்ட் எம்.எல்.ஏ.வின் மனைவியுமான சுகந்தநான்ஸி ஆகியோரது பெயர்களிலும் மனைகள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த சொத்துக்களை மணிகண்டன் என்பவர், ஆரோக்கியதாஸ் லூர்துசாமியிடமிருந்து 'பவர்' வாங்கி அதன் மூலம் இந்த மனைகளை விற்றுள்ளார். இந்த மணிகண்டனின் தொழிலே, இறந்தவர் கள், வாரிசு இல்லாதவர்கள் பெயரில் போலியான உயிலை தயார் செய்து, தன் பெயருக்கு பவர் எழுதிக்கொண்டு அதன் மூலம் விற்பனை செய்வதுதான். இவரும் ஜான்குமாரும் தொழில்முறை பங்குதாரர்கள். இந்த மணி கண்டன் கூறும்போது ஆரம்பத்தில் இந்த நிலம் கோயில் நிலம் என்று ஜான்குமார் பிரச்சனை செய்ததாகவும், பின்னர் லீகல் ஆய்வுசெய்து கோவில் நிலம் இல்லை என்று கூறி வாங்கிக் கொண்டதாகவும் கூறுகிறார். ஜான்குமார் குடும்பத்தினர் 9000 சதுர அடி பரப்பளவு உள்ள மனைகளை 7 கோடி ரூபாய் பணம் கொடுத்து வாங்கியதாகக் குறிப்பிட்டுள்ளனர். பணம் கொடுத்து வாங்கி யிருந்தால் வருமான வரித்துறையில் தெரிவித்திருக்க வேண்டும். இவர் கேபிள் செட் ஆஃப் பாக்ஸ் தொழிலில் 40 கோடிக்கு மேல் அரசுக்கு கட்ட வேண்டிய வரியைக் கட்டவில்லை. ஜான்குமார் பணம் கொடுத்தே வாங்கியதாக இருந்தாலும் அரசுக்கு கட்டவேண்டிய பணத்தைக் கட்டாமல் குடும்பத்தினர் பெயரில் சொத்து வாங்கியது சட்டப்படி குற்றம்தானே?
சி.பி.சி.ஐ.டி விசாரணையில் கோவில் நிலம் என உறுதியானதால்தான் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலத்துக்கான போலியான உயிலை 1995-ஆம் ஆண்டு எழுதியது போல் 2019-ஆம் ஆண்டு ஒரு உயிலை உருவாக்கி பதிவுசெய்துள்ள னர். 95ஆம் ஆண்டு பாலசுப்பிரமணிய முதலியார் என்பவர் லூர்துசாமிக்கு சாரம் வருவாய் கிராமத் திற்கு உட்பட்ட தநசஞ.292/431 ஆர் 60 இடத்தை எழுதியுள்ளார். அந்த உயிலில் குறிப்பிட்டுள்ள பாலசுப்பிரமணிய முதலியாரின் உண்மையான தந்தை பெயர் வெங்கடாசல முதலியார், ஆனால் அந்த உயிலில் வேதாச்சல முதலியார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த சொத்துக் காக வழக்கறிஞர் ஒருவர் ஏல அறிக்கை அனுப்பிய தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதில் 'புதுச்சேரி' என உள்ளது. 1998-ல் "புதுவை' என்றுதான் இருந்தது. 2006-ல் தான் 'புதுச்சேரி' என அரசு அறிவித்தது. அதேபோல் பாலசுப்பிரமணிய முதலியார், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் முடியனூர் என்னும் கிராமத்தில் உள்ள சொத்தைப் பற்றியும் அந்த உயிலில் குறிப்பிட்டுள்ளார். 1995-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் என்று ஒன்று இல்லை. அப்போது ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டமாகத்தான் இருந்தது. மேலும் அந்த உயிலில் சாட்சிக் கையெழுத் திட்டதில் ஒருவரே ஒரு இடத்தில் கையெழுத்தும், ஒரு இடத்தில் கைநாட்டும் வைத்துள்ளார். இவற்றைவிட முக்கியமாக அனில்பாட்டா என்ற நோட்டரி முன்னிலையில் கையெழுத்திடப் பட்டுள்ளதாக உள்ளது. அந்த நோட்டரி இட்டுள்ள சீலில் பாண்டிச்சேரி என உள்ளது. மேலும் அந்த வழக்கறிஞர் செல்போன் எண்ணும் குறிப்பிடப்பட்டுள்ளது. செல்போன் புழக்கத்திற்கு வந்தது 2000 ஆண்டுக்குப் பிறகுதான்.
இப்படி பல்வேறு குளறுபடிகளுடன் போலியாக தயார்செய்யப்பட்ட உயிலை வைத்து 2021-ல் அப்போதைய உழவர்கரை சார்பதிவாளர் சிவசாமி, மாவட்ட பதிவாளர் ரமேஷ் அழுத்தத்தின் காரணமாக பத்திரப்பதிவு செய்கிறார். இதனை வைத்து வட்டாட்சியர் பாலாஜி பட்டா மாற்றித் தருகிறார். இவர்களுக்கு பின்புலமாகவும், தைரியமூட்டும் வகையிலும் ஜான்குமார் எம்.எல்.ஏ. இந்த விவகாரத்தில் செயல்பட்டுள்ளார். ஜான்குமார், அவரது மகன் ரிச்சர்ட் ஜான்குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் உயர்நீதிமன்றத்தை அணுக நாங்கள் திட்ட மிட்டுள்ளோம்'' என்றார்.
இந்த 15 பேர் மட்டுமல்லாமல், இவர்களுக்கு பின்புலமாக இருந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மற்றும் இந்த விவகாரத்தில் தொடர் புடைய அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும். கோயில் நிலங்களை பாதுகாக்கவேண்டும் என வலியுறுத்தி ஜூன் 11-ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதனிடையே புதுச்சேரியில் உள்ள பத்திரப் பதிவுத் துறைகளில் 2021 ஆம் ஆண்டு முதல் 2023 மார்ச் மாதம் வரை பட்டா தரவுகள் அனைத்தும் கம்ப்யூட்டரிலிருந்து மாயமாகி உள்ள விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் பட்டா தரவுகள் எடுக்க முடியாம லும், மாற்றிய பட்டாக்களின் தரவுகள் கலைக்கப் பட்டுள்ளதால், பட்டா மாற்றமுடியாமலும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். யாரைக் காப்பாற்றுவதற்காக இந்த சதி அரங்கேற்றம் என்பதை அரசு தெரியப்படுத்தவேண்டும்'' என்றார்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கமறிய ஜான்குமார் எம்.எல்.ஏ.வை 97லலலலல96 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டபோது, முதலில் எடுக்கவில்லை... பின்னர் சுவிட்ச் ஆப் என வந்தது.