5 முறை முதல்வரின் அரிய சாதனைகள்!

kalaingar

சமூகநீதி

* சமூகநீதித் திட்டங்களை அரசுத் திட்டங்களாக மாற்றி அடித்தட்டு மக்களுக்கு பெரிதும் உதவியது தி.மு.க. தலைவர் கலைஞ ரின் மிகப்பெரிய சாதனையாகும். தமிழகத்தில் இடஒதுக்கீடு 50%-க் கும் அதிகமாக உயர வித்திட்ட கலைஞர், தாழ்த்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டை 16%-ல் இருந்து 18%-ஆக உயர்த்தினார். மேலும், பழங்குடியினருக்கு தனியாக ஒரு விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் வழங்கினார்.

* மத்திய அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு சட்டம் கொண்டுவந்த வி.பி.சிங்கிற்கு தோள்கொடுத்த கலைஞர், 1970-ல் சட்டநாதன் அளித்த பரிந்துரையை ஏற்று, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோ ருக்கான இடஒதுக்கீட்டை 25%-ல் இருந்து 31%-ஆக உயர்த்தினார்.

kalaingar

* சிறுபான்மை சமூகத் தினருக்கு காவலராக திகழ்ந்த கலைஞர், நபிகள் நாயகம் பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார். உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களை, தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ் லிம்களைப் போல, பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் கிடைக்க வழி செய்தார்.

* தமிழகத்தில் பிற் படுத்தப்பட்டோர் அனைவருக் கும் மொத்தமாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்த நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற பிரிவினை உருவாக்கிய தோடு, வன்னியர் மற்றும் சீர்மரபினர் உள்ளிட்ட சமுதாயத்தினரை அதன் கீழ்க் கொண்டுவந்து அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கினார்.

kalaingar

* தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடாக 3% இடஒதுக்கீடு வழங்கிய கலைஞர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் சட்டத்தைக் கொண்டுவந்த தோடு, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளையும் உருவாக்கினார்.

* இந்தியாவிலேயே முதன்முறையாக உருது அகாடெமியை தமிழகத்தில் தொடங்கியவர் கலைஞர்.

* கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை ரத்துசெய்தார் கலைஞர்.

* தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான தனித்தனி துறைகள் அமைக்கப்பட்டன. லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களைக் காக்கும் வகையில், தனித்தனி வாரியங்கள் அமைக்கப்பட்டன.

* அரவாணிகள் என்று அழைக்கப்பட்ட நிலையை மாற்றி, "திருநங்கைகள்' என பெயர்மாற்றம் செய்து, அவர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க உத்தரவிட்டவர் கலைஞர். அதேபோல், ஊனமுற்றோர் என்று அழைக்கப்பட்டவர்கள

சமூகநீதி

* சமூகநீதித் திட்டங்களை அரசுத் திட்டங்களாக மாற்றி அடித்தட்டு மக்களுக்கு பெரிதும் உதவியது தி.மு.க. தலைவர் கலைஞ ரின் மிகப்பெரிய சாதனையாகும். தமிழகத்தில் இடஒதுக்கீடு 50%-க் கும் அதிகமாக உயர வித்திட்ட கலைஞர், தாழ்த்தப்பட்டோருக் கான இடஒதுக்கீட்டை 16%-ல் இருந்து 18%-ஆக உயர்த்தினார். மேலும், பழங்குடியினருக்கு தனியாக ஒரு விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் வழங்கினார்.

* மத்திய அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு சட்டம் கொண்டுவந்த வி.பி.சிங்கிற்கு தோள்கொடுத்த கலைஞர், 1970-ல் சட்டநாதன் அளித்த பரிந்துரையை ஏற்று, தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோ ருக்கான இடஒதுக்கீட்டை 25%-ல் இருந்து 31%-ஆக உயர்த்தினார்.

kalaingar

* சிறுபான்மை சமூகத் தினருக்கு காவலராக திகழ்ந்த கலைஞர், நபிகள் நாயகம் பிறந்த தினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார். உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்களை, தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ் லிம்களைப் போல, பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் கிடைக்க வழி செய்தார்.

* தமிழகத்தில் பிற் படுத்தப்பட்டோர் அனைவருக் கும் மொத்தமாக இடஒதுக்கீடு வழங்கப்பட்டுவந்த நிலையில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்கிற பிரிவினை உருவாக்கிய தோடு, வன்னியர் மற்றும் சீர்மரபினர் உள்ளிட்ட சமுதாயத்தினரை அதன் கீழ்க் கொண்டுவந்து அவர்களுக்கு 20% இடஒதுக்கீடு வழங்கினார்.

kalaingar

* தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடாக 3% இடஒதுக்கீடு வழங்கிய கலைஞர், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்னும் சட்டத்தைக் கொண்டுவந்த தோடு, அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளையும் உருவாக்கினார்.

* இந்தியாவிலேயே முதன்முறையாக உருது அகாடெமியை தமிழகத்தில் தொடங்கியவர் கலைஞர்.

* கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்தை ரத்துசெய்தார் கலைஞர்.

* தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான தனித்தனி துறைகள் அமைக்கப்பட்டன. லட்சக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்களைக் காக்கும் வகையில், தனித்தனி வாரியங்கள் அமைக்கப்பட்டன.

* அரவாணிகள் என்று அழைக்கப்பட்ட நிலையை மாற்றி, "திருநங்கைகள்' என பெயர்மாற்றம் செய்து, அவர்களுக்கென தனி நலவாரியம் அமைக்க உத்தரவிட்டவர் கலைஞர். அதேபோல், ஊனமுற்றோர் என்று அழைக்கப்பட்டவர்களை "மாற்றுத் திறனாளிகள்' என்று அழைக்கச்செய்து அவர்களுக்கு அரசுப் பணிகளில் இடஒதுக்கீடு வழங்கினார்.

முன்னோடித் திட்டங்கள்

* சகமனிதர்களை கால் நடைகளைப் போல மனிதர்களே இழுத்துச்செல்லும் கை ரிக்ஷா முறையை தமிழகத்தில் ஒழித்தவர் கலைஞர். கை ரிக்ஷா இழுத்தவர் களுக்கு சைக்கிள் ரிக்ஷா வழங்கி, அவர்களது வாழ்வில் ஒளி யேற்றினார்.

kalaingar

* உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதமின்றி அனைத்து சாதி மக்களும் ஒரே இடத்தில் குடியிருக்கும் வகையிலும் ஒரே இடுகாட்டை பயன்படுத்தும் வகையிலும் மாபெரும் சமுதாய மறுமலர்ச்சியை உருவாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் சமத்துவபுரங்களை அமைத்தார்.

* நிலச்சுவான்தார் முறையை ஒழித்த கலைஞர், நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ், ஒரு குடும்பத்தின் மொத்த உச்சவரம்பு 15 ஏக்கர் என நிர்ணயம் செய்தார்.

* ஏழைப்பெண்களின் திருமணக் கனவை நனவாக்கும் வகையில், திருமண உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நிதியுதவித் திட்டத்தை கலைஞர் அறிமுகம் செய்தார்.

* இந்தியாவிலேயே முதன் முறையாக சட்டப்படிப்பிற்காக பல்கலைக்கழகங்களைத் தொடங்கி, அதற்கு "அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம்' என பெயரிட் டார். மாணவர் சேர்க்கையை நெறிப் படுத்தும் வகையில் நுழைவுத் தேர்வு முறையை ரத்துசெய்து பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்பிற்கு ஒற்றைச்சாளர முறையை அறிமுகம் செய்தார்.

* பொதுமக்களின் உதவி யுடன் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை அதிகரிக்கும் நமக்கு நாமே திட்டத்தைக் கொண்டு வந்தார். மேலும், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத் தின் கீழ் கிராமங்கள்தோறும் நூலகங்கள் தொடங்க தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உத்தரவிடப்பட்டது.

* அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில் "சமச்சீர் கல்வி'த் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

* சென்னை மக்களின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், பூண்டி மற்றும் நெம்மேலியில் "கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்' கொண்டுவரப்பட்டது.

* நதிகள் இணைப்புத் திட்டத்தைத் தொடங்கும் விதமாக, காவிரி-குண்டாறு நதிகளை இணைக்கும் திட்டம் ரூ.369 கோடியில் தொடங் கப்பட்டது. மேலும், தாமிரபரணி-கரிமேனி- நம்பியாறு திட்டத்தை ரூ.369 கோடி செலவில் செயல்படுத்தவும் கலைஞர் உத்தரவிட்டார்.

* சாலைப்பணிகளைத் துரிதப்படுத்தவும், சாலைகளைப் பராமரிக்கவும் தமிழக வரலாற்றில் முதன்முறையாக பத்தாயிரம் சாலைப்பணி யாளர்களை நியமித்தார்.

* தொழிலாளர்களின் நலனில் அக்கறை செலுத்திய கலைஞர், மே தினத்தன்று ஊதியத்துடன் விடுமுறை கிடைக்க வழிவகை செய்தார்.

* அண்ணா ஆட்சிக்காலத்தில் போக்கு வரத்துத்துறை அமைச்சராக இருந்த கலைஞர், தனியார் பேருந்துகளை நாட்டுடைமையாக்கினார்.

kalaingar

சமூகநலன்

* விவசாயிகளின் மீது தனி அக்கறை கொண்ட கலைஞர், வேளாண்மைக்கென தனி பல்கலைக்கழகத்தை கோவையில் தொடங்க உத்தரவிட்டார். மேலும், தி.மு.க. ஆட்சியில்தான் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் "இலவச மின்சாரம்' விவசாயிகளுக்காக வழங்கப் பட்டது.

* கிராமங்களுக்கு முக்கியத்துவம் அளித்த கலைஞர், ஆயிரத்து ஐந்நூறுக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட கிராமங்களுக்கு தார்ச்சாலை வசதியை ஏற்படுத்தித் தந்தார்.

* விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்கவேண்டும் என்பதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தொடங்கினார்.

* கிராமப்புற மக்களின் நலன்கருதி தமிழகத்தின் பல பகுதிகளில் 24 மணிநேரமும் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தொடங்கிய கலைஞர், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடல்நலனை பரிசோதித்துக் கொள்வதற்காக "வருமுன் காப்போம்' திட்டத்தைக் கொண்டுவந்தார்.

* வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலையுயர்ந்த நிலையில், ரேஷன் கடைகளில் ரூ.50-க்கு 10 பொருட்கள் வழங்கும் மலிவுவிலைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

kalaingar

* பள்ளிகளில் செயல்படுத்தப்படும் சத்து ணவுத் திட்டத்தை மேம்படுத்தும் வகையில் வாரத் திற்கு ஐந்து முட்டைகள் மற்றும் வாழைப்பழம் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

* விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில், விவசாயி களே நேரடியாக விளைபொருட்களை விற்பனை செய்யும் "உழவர் சந்தை'களைக் கொண்டுவந்தார்.

* அனைவருக்கும் எளிதில் மருத்துவம் கிடைக்கும் வகையில், மத்திய அரசின் ஒருங்கிணைப்போடு 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்தினார்.

* ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த மாணவர் களும் வெளியூருக்குச் சென்று கல்வி பயிலும் வகையில், அனைத்து மாணவர்களுக்கும் "இலவச பஸ் பாஸ்' வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்.

தேர்தல் வாக்குறுதியின்படி குடும்ப அட்டை உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டி வழங்கிய கலைஞர், இலவச எரிவாயு இணைப்புடன் கூடிய எரிவாயு அடுப்பு வழங்கும் திட்டத்தையும் கொண்டுவந்தார்.

* கர்ப்பிணி களுக்கு பிரசவத்திற்கு முந்தைய மற்றும் பிந் தைய மூன்று மாதங் களுக்கு தலா ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க உத்தரவிட்டவர் கலைஞர்.

* ஐம்பது வயதாகியும் திருமணம் ஆகாத ஏழை மகளிருக்கு, மாதம் ரூ.400 வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார் கலைஞர்.

* விவசாயிகளைப் போலவே நெசவாளர் களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தைக் கொண்டுவந்த கலைஞர், குடிசையில் வாழும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கிடைக்கும் வகையில் குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கினார்.

* சென்னை -கோட்டூர்புரத்தில் ரூ.100 கோடி செலவில் உலகத்தரம்வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அமைத்தார். கோயம்பேடு பேருந்துநிலையம், கோயம்பேடு மார்க்கெட் போன்றவை கலைஞர் முதல்வராக இருந்தபோது கொண்டுவரப்பட்ட திட்டங்களாகும்.

* மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்கிற அடிப்படையில் விழுப்புரம், திருவாரூர், தர்மபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்கினார்.

* ரேஷன் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, குறைந்த விலையில் பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் ஆகியவை தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் வழங்கப்பட்டன.

* அரசு பொறியியல் கல்லூரிகள் இல்லாத திண்டிவனம், விழுப்புரம், அரியலூர், பண்ருட்டி, திருக்குவளை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, தஞ்சை, திண்டுக்கல், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் அரசு பொறியியல் கல்லூரி கள் தொடங்கக் காரணமாக இருந்தவர் கலைஞர்.

* காவிரி பிரச்சனைக்கு தீர்வுகாண, தீர்ப்பாயம் அமைக்கவேண்டும் என மத்திய அரசிடம் முதலில் கோரிக்கை வைத்தவர் கலைஞர். பின்னர் பிரதமர் வி.பி.சிங் ஆட்சிக்காலத்தில் கலைஞரின் கோரிக்கை ஏற்கப்பட்டு, "நடுவர் மன்றம்' அமைக்கப்பட்டது.

* 2009-ஆம் ஆண்டில் அனைவருக்கும் இலவசமாக உயிர் காக்கும் உயர் சிகிச்சை வழங்குவதற்காக, "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' செயல்படுத்தப்பட்டது.

* 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரத்தநாடு, பெரம்பலூர், வால்பாறை, சுரண்டை, குளித்தலை, லால்குடி, மேட்டூர், புதுக்கோட்டை, தேனி, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் அரசின் கலை-அறிவியல் கல்லூரிகளை அமைத்தார்.

* சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகள் வறுமையில் வாடுவதைத் தடுக்க, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஓய்வூதிய உயர்வை அறிவித்தார்.

மாநில உரிமை + மொழி நலன்

* கூட்டாட்சித் தத்துவத்தை மிகவும் மதித்த கலைஞர், மாநில நலனுக்காக மத்திய அரசிடம் ஒருபோதும் அடிபணிந்து போனதில்லை. நெருக்கடி நிலையைத் துணிச்சலாக எதிர்த்த முதல் முதல்வர் என்னும் பெயர்பெற்ற கலைஞர், அதற்காக தனது ஆட்சியையே விலையாகக் கொடுத்தார்.

* 1974-ல் மாநில சுயாட்சித் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றினார்.

* தமிழறிஞர்களின் படைப்புகளை நாட்டுடைமை ஆக்கிய கலைஞர், தமிழ் மொழிக்காக போராடி உயிர்நீத்தவர்கள், தமிழ் மொழியறிஞர்களை நினைவுகூரும் வகையில் மணிமண்டபங்களைக் கட்டினார்.

* இந்திய அரசை வலியுறுத்தி, தமிழுக்குச் செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்தார் கலைஞர்.

* செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மைசூரிலிருந்து சென்னைக்கு இடம் மாற்றிய கலைஞர், சென்னையின் இதயப்பகுதியான அண்ணா மேம்பாலத்தின் அருகில் செம்மொழிப் பூங்காவையும் உருவாக்கினார்.

* சென்னையில் வள்ளுவர் கோட்டத்தை அமைத்த கலைஞர், குமரி முனையில் 133 அடி உயரத்தில் திருவள்ளுவருக்குச் சிலை நிறுவினார்.

* சுதந்திர தினத்தன்று ஆளுநர்கள்தான் கொடியேற்றுவார்கள் என்ற வழக்கத்தை மாற்றி, மாநில முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை இந்தியாவுக்கே பெற்றுத்தந்தவர் கலைஞர்.

* 1983-ல் ஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்து கலைஞர், பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தார் என எதிர்க்கட்சிகளாலும் மத்திய அரசாலும் குற்றம் சாட்டப்பட்டு 1991-ல் கலைஞர் தலைமையில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது.

* தமிழ் மொழியின்மீது தீராத காதல் கொண்டவர். 2010ஆம் ஆண்டு கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கலைஞரின் தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. மேலும் தமிழ்மொழியில் படித்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு அளித்து சட்டம் இயற்றினார்.

* சென்னை, மெட்ராஸ் என இரண்டு மொழிகளில் அழைக்கப்பட்ட நகரத்திற்கு, ‘சென்னை’ என்னும் தமிழ்ப்பெயரே அனைத்து மொழிகளிலும் இருக்குமாறு சட்டத்திருத்தம் கொண்டுவந்தார் கலைஞர்.

-தொகுப்பு: ச.ப.மதிவாணன்

இதையும் படியுங்கள்
Subscribe