5, 8-ஆம் வகுப்பு மாண வர்களுக்கு நடப்பாண்டிலேயே பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டுதலை முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கி யிருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித்துறை. இந்தத் தேர்வு முறையின்படி பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவருக்கு அடுத்த இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடைபெறும். அதி லும் தோல்வியடைந்தால் அதே வகுப்பிலேயே மீண்டும் படிக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், “பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த, குறிப்பாக பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல், இடைநிற்றல் விகிதம் கணிசமாக அதிகரிக்கும்’’என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் கல்வி யாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஆறு முதல் பதினான்கு வயது வரை பள்ளிக்கல்வியை இலவச மற்றும் கட்டாயமாக்க வகை செய்கிறது கல்வி உரிமைச் சட்டம், பிரிவு 21ஏ. 2009-ல் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு, 2010-ல் இந்தியா முழுவதிலும் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, எட்டாம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பொதுவான தேர்வுமுறைக்கு பதிலாக, தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையில் தேர்வு நடத்தப்படும். ஆ
5, 8-ஆம் வகுப்பு மாண வர்களுக்கு நடப்பாண்டிலேயே பொதுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டுதலை முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கி யிருக்கிறது தமிழக பள்ளிக் கல்வித்துறை. இந்தத் தேர்வு முறையின்படி பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவருக்கு அடுத்த இரண்டு மாதங்களில் மறுதேர்வு நடைபெறும். அதி லும் தோல்வியடைந்தால் அதே வகுப்பிலேயே மீண்டும் படிக்க வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், “பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த, குறிப்பாக பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல், இடைநிற்றல் விகிதம் கணிசமாக அதிகரிக்கும்’’என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் கல்வி யாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் ஆறு முதல் பதினான்கு வயது வரை பள்ளிக்கல்வியை இலவச மற்றும் கட்டாயமாக்க வகை செய்கிறது கல்வி உரிமைச் சட்டம், பிரிவு 21ஏ. 2009-ல் இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டு, 2010-ல் இந்தியா முழுவதிலும் நடைமுறைக்கு வந்தது. இதன்படி, எட்டாம்வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பொதுவான தேர்வுமுறைக்கு பதிலாக, தொடர்ச்சியான மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையில் தேர்வு நடத்தப்படும். ஆனால், 1980களிலேயே எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறையை அரசின் கொள்கை முடிவாக நடைமுறைப்படுத்தி இருந்தார் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். தற்போது, இந்தக் கட்டாய தேர்ச்சி முறையை நீக்கும் மத்திய அரசின் முடிவையே தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த, எம்.ஜி.ஆர். நிறுவிய அ.தி.மு.க. பெயரில் ஆட்சி நடத்துபவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
2016, அக்.25-ல் மத்திய கல்வி ஆலோசனை குழுமத்தின் 65-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் கட்டாயத் தேர்ச்சிமுறை அல்லது இடை நிற்றல் இல்லாத் தேர்வை ரத்துசெய்கிற ஆலோசனையை முன்வைத்தது மத்திய அரசு. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர்கள் ஆட்சேபம் தெரிவித்ததோடு, முந்தைய முறையையே கடைப்பிடிக்க விரும்புவதாக கூறினர்.
தமிழகம் தவிர்த்து மற்ற சில மாநிலங் களும் எதிர்ப்பு காட்டியதால், "இது தொடர் பான சாதகமான முடிவை எடுக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே வழங்கப்படும்' என்றார் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். அதன்பிறகு, கடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவரப் பட்ட இதற்கான சட்டத் திருத்தத்திலும், மாநில அரசுகள் முடிவெடுக்கும் உரிமை அங்கீ கரிக்கப்பட்டுள்ளது. தொடக்கத் தில் எதிர்ப்பு காட்டினாலும், தற்போது பொதுத்தேர்வு நடத்த ஆலோசிக்கிறது தமிழக அரசு.
சில மாதங்களுக்கு முன்னர் தமிழக பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுவதாகவும், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இடைநிற்றல் விகிதம் இங்குதான் மிகமிகக் குறைவு என்றும் பெருமைபேசியது தமிழக அரசு. அதை உண்மை யாக்கும் விதமாக வெளியான ஆய்வறிக்கை, இந்தியாவிலேயே தமிழ்நாடு, கேரளா, இமாச்சல்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாவட்டங்கள்தான் குறைந்த இடைநிற்றல் விகிதம் கொண்டிருப்பதாக தெரிவித்தது. தமிழகத்தில் நூறு மாணவர்களில் எட்டாம் வகுப்புவரை 99 பேரும், 9 - 10ஆம் வகுப்புகளில் 89 பேரும், 11 - 12ஆம் வகுப்புகளில் 86.2 பேரும் படிப்பதாகவும், இதுதான் நாட்டிலேயே மிகக்குறைவான இடைநிற்றல் விகிதம் என்று அந்தத் தகவல் கூறுகிறது. பழங்குடிகளும், ஆதிவாசிகளும் அதிகமுள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில், இந்த விகிதம் வெறும் 30ஆக இருக்கிறது. ஆக, மாணவர்களின் கற்றல்திறனை அவர்களின் வாழ்விடச் சூழல் மிகத்தீவிரமாக தீர்மானிப்பதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
தமிழகம் கல்வித்துறையில் முன்னேறி யிருப்பதற்கான காரணமே இடைநிற்றல் விகிதம் குறைவு என்பதால்தான் என்றாலும், மாணவர்களின் மேற்படிப்பு விவகாரத்தில் கட்டாயத் தேர்ச்சிமுறை பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமை 2016-17ல் நடத்திய ஆய்வில், மேல்நிலை வகுப்புகளை நோக்கி மாணவர்கள் நகர்வதற்கு தடையாக போதுமான ஆர்வமின்மையும், கட்டாயத் தேர்ச்சி முறையுமே காரணமாக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
அனைவருக்கும் சமமான கல்வி உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டமே வழங்கும் போது, அந்த நோக்கத்திற்கு எதிரானதாக இந்த பொதுத்தேர்வு முறை இருப்பதாகக் கண்டிக்கிறார் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு. இதுதொடர் பாக நம்மிடம், “""மாணவர்களின் வாழ்விடச் சூழலுக்கேற்ப கற்றல் சூழல், கற்றல் செயல்பாடுகளை ஏற்படுத்தித் தராமல், எல்லாவற்றுக்கும் மாணவர்களையே குறைகூறுவது முறையாகாது. இது சமத்துவக் கோட்பாடு, வாழ்வுரிமை போன்ற அடிப்படை மனித உரிமைகளையே மறுக்கும் செயலாகும். தேர்வு என்றாலே என்னவென்று புரியாத 5-ஆம் வகுப்பு படிக்கும் பருவத்தில் தேர்வு, மறுதேர்வு என குழந்தைகளின் வாழ்வில் வன்முறை நிகழ்த்தாதீர்கள்''’என்கிறார் அழுத்தமாக.
பல தரப்புகளிலிருந்தும் எதிர்ப்புகள் வலுத்துள்ள நிலையில்... ""துறைரீதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டோமே தவிர, அரசாணை வெளியிட்டால்தான் முடிவு தெரியவரும்'' என்றிருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.
பள்ளிகளில் குறிப்பாக கிராமப்புற அரசுப் பள்ளிகளில் முழுமையான உட்கட்டமைப்பு வசதி, ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் காலிப் பணியிடங்கள் போன்ற குறைகளை வைத்துக் கொண்டு, சரியாகப் படிக்காததற்கு மாணவர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும் கட்டாய பாஸ் என்பதும் உண்மையான பிரச்சினைகளைப் புறந்தள்ளும் போக்கேயாகும். 5, 8 வகுப்புகளில் பொதுத்தேர்வு நடத்த முனைவது அரசும் கல்வி அமைப்புகளும் செய்த தவறுக்கு மாணவர்களுக்கு தரும் உளவியல் தண்டனையன்றி வேறில்லை.
கிராமப்புறங்கள் நிறைந்த தொகுதியில் தொடர்ச்சியாக வெற்றிபெற்று, தற்போது கல்வித்துறை அமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் செங்கோட்டையனுக்கும் இது நன்றாகவே புரியும்.
-ச.ப.மதிவாணன்