Advertisment

450 டன் மருத்துவக் கழிவுகள் ரிட்டர்ன்! -கேரளாவுக்கு தமிழகம் பதிலடி!

ss

கேரளாவின் இறைச்சிக் கழிவுகள், மருந்துக் கழிவுகள், ஹோட்டல் கடசல்களை, கேரளா சென்று காலியாகத் திரும்புகிற கனிம லாரிகளில் மும்மடங்கு வாடகைகளில் கேரள புரோக்கர்கள் மூலமாக ஏற்றி, தென்காசி பிரானூர் எல்லைப்பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் கொண்டா நகரம், கோடகநல்லூரிலுள்ள தனியார் தோட்டப்பகுதி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களிலும் லாரி லாரியாகக் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வந்தன. அங்கு கிளம்புகிற கரும்புகையினால் சுற்றுச்சூழல் கெட்டுப் போவது குறித்து அப்பகுதி மக்கள் குரலெழுப்பியும் மாவட்ட நிர்வாகங்கள் அசையாமலிருந்தன.

Advertisment

nn

கொட்டப்பட்ட கழிவுகள், சுத்தமல்லி, கொண்ட நகரம், கோடகநல்லூர் மேய்ச்சல் புறம்போக்குப் பகுதிகளில் குன்றுகள் போன்று பரந்து கிடந்தன. இந்நிலையில்தான் திருவனந்த புரம் மண்டல கேன்சர் மைய மருத்துவமனை யின் ஆபத்தான கேன்சர் நோயின் சிகிச்சைக் கழிவுகளை இப்பகுதியிலுள்ள நீர் நிலைகளில் கொட்டப்ப

கேரளாவின் இறைச்சிக் கழிவுகள், மருந்துக் கழிவுகள், ஹோட்டல் கடசல்களை, கேரளா சென்று காலியாகத் திரும்புகிற கனிம லாரிகளில் மும்மடங்கு வாடகைகளில் கேரள புரோக்கர்கள் மூலமாக ஏற்றி, தென்காசி பிரானூர் எல்லைப்பகுதிகள், நெல்லை மாவட்டத்தின் கொண்டா நகரம், கோடகநல்லூரிலுள்ள தனியார் தோட்டப்பகுதி மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களிலும் லாரி லாரியாகக் கொட்டப்பட்டு எரிக்கப்பட்டு வந்தன. அங்கு கிளம்புகிற கரும்புகையினால் சுற்றுச்சூழல் கெட்டுப் போவது குறித்து அப்பகுதி மக்கள் குரலெழுப்பியும் மாவட்ட நிர்வாகங்கள் அசையாமலிருந்தன.

Advertisment

nn

கொட்டப்பட்ட கழிவுகள், சுத்தமல்லி, கொண்ட நகரம், கோடகநல்லூர் மேய்ச்சல் புறம்போக்குப் பகுதிகளில் குன்றுகள் போன்று பரந்து கிடந்தன. இந்நிலையில்தான் திருவனந்த புரம் மண்டல கேன்சர் மைய மருத்துவமனை யின் ஆபத்தான கேன்சர் நோயின் சிகிச்சைக் கழிவுகளை இப்பகுதியிலுள்ள நீர் நிலைகளில் கொட்டப்பட்டிருந்தது பிரளயத்தைக் கிளப் பியதுடன், நெல்லை மாவட்ட கலெக்டரான கார்த்திகேயன் மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் வரை விவகாரம் சென்றுவிட்டது. கேன்சர் கழிவுகளின் பின்விளைவுகள் குறித்தெல்லாம் தெரியவர, நிலைமையின் விபரீதம் அனைவ ருக்கும் புரிந்து பகீரூட்டியது.

Advertisment

இவற்றுக்கு எதிராகத் தொட ரப்பட்ட வழக்குகளால் களமிறக்கப் பட்ட போலீசாரின் விசாரணையில், கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது தொடர்பாக சுத்தமல்லிப் பகுதியைச் சேர்ந்த லாரி ஏஜண்டுகளான மாயாண்டி, மனோகர் ஆகிய இருவரும் கேரள நிறுவனங் களிடமிருந்து செழுமையான பணத் தைப் பெற்றுக்கொண்டு இடைத்தரகர் களாகச் செயல்பட்டது தெரியவர, அவர்களைக் கைது செய்திருக் கிறார்கள். மேலும், விசாரணையில் தீவிரமாகச் செயல்பட்ட சேரன்மகா தேவி சப்-டிவிசன் டி.எஸ்.பி.யான சத்யராஜ், பல்வேறு சி.சி.டி.வி. புட்டேஜ்களை ஆய்வு செய்து, கேன்சர் மருத்துவக் கழிவுகளை நெல்லை பகுதியில் கொட்டிய லாரி பற்றிய விபரம் தெரிய வர, அதனடிப்படையில் சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்த லாரி டிரைவர் செல்லத் துரையை கைதுசெய்து, லாரியையும் பறிமுதல் செய்திருக்கிறார்.

இதனிடையே, கேன்சர் கழிவு கொட்டப்பட்ட விவகாரம் சென்னை உயர்நீதி மன்றம் வரை போனதில் நெல்லை கலெக்டருக்கு நெருக்கடி யானது. ஏனெனில், கேரளாவிலிருந்து கொண்டு வரப்படும் கழிவுகள் நெல்லைப் பகுதிக்குள் கொட்டப்படுவதைக் கண்காணிக் கிற குழுவின் தலைவராக கலெக்டர் செயல்படுவார் என்று நீதிமன் றத்திற்குத் தரப்பட்ட உத்தரவாதம் தான். அதையும் மீறி நடந்ததுதான் இந்த சம்பவம்.

n

இந்நிலையில், கேரளாவிலிருந்து கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை ஆய்வு செய்ய வந்த குழுவினர், மருத்துவக் கழிவுகளை வெளியேற்ற நாங்கள் கண்ட்ராக்ட் முறையில் செயல்பட்டோம் என்று ஜால்ஜாப்பு சொன்னவர்களிடம், கலெக்டர் கார்த்திகேயன் கேள்வி மேல் கேள்வி கேட்டு கடுமை காட்ட, அவர்களால் பதில் சொல்லவே முடியவில்லையாம். அதேபோல், அபாயகரமான கேன்சர் கழிவுகள் கொட்டப்பட் டது சர்ச்சையான விவகாரம் கேரள உயர்நீதிமன்றம் வரை எதிரொலிக்க, கேரள அரசிடம் இது தொடர்பான விரிவான அறிக்கை சமர்ப் பிக்கும்படி உத்தரவிட்டிருக்கிறது கேரள உயர் நீதிமன்றம்.

nn

தமிழ்நாடு -கேரளா நட்பு மாநிலம் என்றாலும் பொது மக்களின் உடல்நலம் சம்பந்தப் பட்டதால் கேரள அரசு, திருவனந்தபுரம் மாவட்ட சப்-கலெக்டர் சாக்சி தலைமையில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மூன்று பேர், இரண்டு பயிற்சி ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், கேரள சுகாதார அலுவலர், மருத்துவர் கோபிகுமார் ஆகியோர் அடங்கிய குழுவை நெல்லைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. அந்த குழுவிற்கு சேரன்மகாதேவி சப்-கலெக்டர் அர்பித் ஜெயின், நெல்லை சப்-கலெக்டர் அம்பிகா ஜெயின், நெல்லை ஆர்.டி.ஓ. உள்ளிட்ட அதிகாரிகள் வழிகாட்டுதலில் ஈடுபட்டு ஆறு குழுக்களாகச் செயல்பட்டனர். இதனிடையே, மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் கேரளாவின் கண்ணூர் இடாவேலியைச் சேர்ந்த ஜிரசத்தன் ஜேர்ச் என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கிறாராம்.

இந்த சம்பவத்தில் தலையிட்ட தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம், கொட்டிய கழிவுகளை கேரளாவுக்கு எடுத்துச்செல்ல உத்தரவிடவே, தமிழ்நாடு, கேரள அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து கேரள மருத்துவக் கழிவுகளை அகற்றும் நிறுவனத்துடன் இணைந்து, கழிவுகளை அகற்றுகிற பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் இரண்டு நாட்கள் இரவும் பகலுமாகக் கற்பனையையும் தாண்டிய அளவில், சுமார் 450 டன் மருத்துவக் கழிவுகள் 5 ஜே.சி.பி.க்களின் மூலம் 38 லாரிகளில் அள்ளப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவுக்கு திருப்பிக் கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது.

எந்த வினைக்கும் ஓர் எதிர் வினை உண்டு. சீறிப்பாய்ந்து வந்த அம்புகள், வீசப்பட்ட இடம் நோக்கித் திரும்பிப் பாய்ந் திருக்கிறது. தமி ழகம் கேரளா வுக்கு கற்றுத்தந்த பாடம் இதுதான்.

-பி.சிவன்

படங்கள் : ப.இராம்குமார்

nkn010125
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe