பீகாரில் ஓட்டுத் திருட்டு விவகாரத்துக்கு எதிராக பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., அடுத்தடுத்து ஒன்றிய அரசுக்கு எதிராக பூகம்பத்தை கிளப்பிவருகிறார். பீகாரில் ஓட்டுத் திருட்டு நடைபெற்றதற்கு தேர் தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தால் குட்டுப்பட்ட நிலையில், குஜராத்தில் கடந்த பத்தாண்டுகளாக தேர்தல் நிதி முறைகேட்டில் பா.ஜ.க. ஈடு பட்டுள்ளதாகவும், அதற்காகவே போலியாக பத்து கட்சிகள் குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ள தாகவும் அடுத்த குண்டை வீசியுள்ளார்.

Advertisment

குஜராத்துக்கும் போலிக்கும் ரொம்பவே பொருத்தம்தான். ஏற்கெனவே கடந்த ஆண்டு அக்டோபரில்தான், குஜராத்தின் தலைநகர் காந்தி நகரின் பரபரப்பான மையப்பகுதியில் அமைந் துள்ள ஒரு வணிக வளாகத்தில் போலியான ஒரு கோர்ட்டே செயல்படுவதையும், அங்கே 500 வழக்குகள்வரை விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்ட தும் தெரியவந்ததில், போலி நீதிபதி மோரிஸ் சாமுவேல் கிறிஸ்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். அதேபோல், குஜராத்தின் மோர்பியிலிருந்து, கட்ச் வரையிலான தேசிய நெடுஞ்சாலை 27-ல் வகாசியா சுங்கச்சாவடிக்கு அருகில் இருபுறமும் சட்டவிரோதமாக போலி சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கட்டணம் வசூலித்துவந்தது கண்டறியப்பட்டது. இதே போல் போலி காவல் நிலையங்கள், போலி பிரதமர் அலுவலக அதிகாரிகளும் கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறார்கள். தற்போது லேட்டஸ்ட்டாக, போலி லெட்டர்பேடு கட்சிகளை அம்பலப் படுத்தியுள்ளார் ராகுல் காந்தி.

இதுகுறித்து ராகுல்காந்தி கூறுகையில், "குஜராத்தில் பத்துக்கும் மேற்பட்ட பெயர் தெரியாத கட்சிகள் உள்ளன. அவற்றின் பெயர்களை இதுவரை யாரும் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், அந்த கட்சிகள் 2019 -2024 காலகட்டங்களில் ரூ.4,300 கோடி மதிப்புள்ள தேர்தல் நன்கொடையை பெற்றுள்ளன. அதே காலகட்டத்தில் அங்கு நடந்த இரண்டு பாராளுமன்றத் தேர்தல், ஒரு சட்டமன்றத் தேர்தல் என 3 தேர்தல்களில், 10 கட்சிகளும் சேர்த்து மொத்தமாகவே ரூ.39.02 லட்சம் மட்டுமே தேர்தலுக்கு செலவு செய்துள்ளன. இக்கட்சிகளின் சார்பில் வெறும் 46 வேட்பாளர்கள் மட்டுமே களமிறங்கி, மொத்தம் 54,069 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளனர். இந்த கட்சிகளை நம்பி 4,300 கோடி ரூபாய் தேர்தல் நிதி என்பது நம்பமுடியவில்லைதானே?  தணிக்கை அறிக்கையிலோ ரூ.3,500 கோடி செலவிட்டதாக அந்த கட்சிகள் தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது'' என குறிப் பிட்டுள்ளார்.

அந்த கட்சிகள் பா.ஜ.க.வால் உருவாக்கப் பட்ட பினாமி கட்சிகளாகத்தான் இருக்கும். அந்த கட்சிகளின் பேரில் ஆயிரக்கணக்கான கோடிகளை தேர்தல் நிதியாகப் பெற்று, அவற்றை பா.ஜ.க.வின் தேர்தல் செலவுக்காக பயன்படுத்திக்கொள்ளும் குறுக்குப்புத்தி என்பதை ராகுல்காந்தி அம்பலப் படுத்தியுள்ளார். 

Advertisment

"அந்த ஆயிரக்கணக்கான கோடிகள் எங்கிருந்து வந்தன? கட்சிகளை யார் நடத்து கிறார்கள்? பணம் எங்கே போனது? தேர்தல் ஆணையம் விசாரிக்குமா? அல்லது பிரமாணப் பத்திரங்களைக் கேட்குமா? அல்லது இதையும் மறைப்பதற்காக சட்டம் இயற்றப்படுமா?' எனவும்  கேள்வி கேட்டுள்ளார் ராகுல்காந்தி.