Advertisment

என்.எல்.சி.யில் 422 கோடி ஊழல்! -கோர்ட்டுக்குப் போன வில்லங்கம்!

NLC

ழல் மற்றும் முறைகேடு களுக்கு எதிராக சி.பி.ஐ. விசா ரணைதான் பெஸ்ட் என ஒரு பிம்பம் இங்கு கட்டமைக்கப் பட்டிருக்கும் நிலையில், ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.க்கு சென்ற புகார்கள் கண்டுகொள்ளப்படாததால் நீதிமன்றத்துக்கு சென் றுள்ளது என்.எல்.சி. அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் விவகாரம்! 

Advertisment

கடலூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன் றத்தில் சி.பி.ஐ. க்கு எதிராக ஒரு மனுவைத்  (W.P.Cr.No.852 of 2025) தாக்கல் செய்திருக்கிறார். அதில், "நெய்வேலியில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனத்தில் 2022-2025 காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளில் சுமார் 422 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி சி.பி.ஐ. இயக்குநர், இணை இயக்குநர், இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு புகார் அனுப்பியிருக்கிறேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஊழலில் தொடர்பு டையவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும்'’என்று கோரிக்கை வைத்திருக்கிறார் மணிகண்டன். 

Advertisment

நெய்வேலியிலுள்ள என்.எல்.சி. நிறுவனம், நிலக்கரி சுரங்கத்தை க

ழல் மற்றும் முறைகேடு களுக்கு எதிராக சி.பி.ஐ. விசா ரணைதான் பெஸ்ட் என ஒரு பிம்பம் இங்கு கட்டமைக்கப் பட்டிருக்கும் நிலையில், ஊழல் தொடர்பாக சி.பி.ஐ.க்கு சென்ற புகார்கள் கண்டுகொள்ளப்படாததால் நீதிமன்றத்துக்கு சென் றுள்ளது என்.எல்.சி. அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் விவகாரம்! 

Advertisment

கடலூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சென்னை உயர்நீதிமன் றத்தில் சி.பி.ஐ. க்கு எதிராக ஒரு மனுவைத்  (W.P.Cr.No.852 of 2025) தாக்கல் செய்திருக்கிறார். அதில், "நெய்வேலியில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனத்தில் 2022-2025 காலகட்டத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு திட்டப் பணிகளில் சுமார் 422 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக்கோரி சி.பி.ஐ. இயக்குநர், இணை இயக்குநர், இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு புகார் அனுப்பியிருக்கிறேன். ஆனால், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஊழலில் தொடர்பு டையவர்கள் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண் டும்'’என்று கோரிக்கை வைத்திருக்கிறார் மணிகண்டன். 

Advertisment

நெய்வேலியிலுள்ள என்.எல்.சி. நிறுவனம், நிலக்கரி சுரங்கத்தை கையாளுதல், எரிசக்தியை (மின்சாரம்) உற்பத்தி செய்தல் என இரண்டு பணிகளை முன்னெடுத்து வருகிறது. 

என்.எல்.சி.யில் நடந்துள்ள ஊழல் விவகாரங் கள் குறித்து விசாரித்தபோது, "என்.எல்.சி.யின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநராக இருப்பவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி. இவரது நிர்வாகத்தில்தான் ஊழல்              களும், முறைகேடுகளும் அதிகரித்து வருகின்றன. தலைமை பொது மேலாளர், பொதுமேலாளர் உள்ளிட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு 350 நபர்களை தேர்வு செய்வதற்காக அறிவிப்பு செய்யப்பட்டது. கேட் எக்ஸாம் நடத்தாமல், லேட்டரல் என்ட்ரி மூலமாக குஜராத் மற்றும் ஆந்திர மாநிலத்தவர்கள் பலரும் எடுக்கப் பட்டுள்ளனர். இதன் பின்னணியில் பல லகரங்கள் விளையாடியுள்ளது. 

ஒரிசா மாநிலத்தில் தலபிரா தெர்மல் பவர் திட்டத்திற்காக ஆர்.ஆர்.காலனியில் வீடு கட்டும் திட்டத்தை 137 கோடி மதிப்பீட்டில் முன்னெடுத்தார் சேர்மன் பிரசன்னகுமார். இந்த திட்டத்தில் மட்டும் சுமார் 36 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. 

அதேபோல, ஒருங்கிணைக்கப்பட்ட தலபிரா டவுண்ஷிப் எனும் திட்டம் தொடங்கப்பட்டது. 642 வீடுகள் கட்டும் திட்டம் இது. மொத்த மதிப்பீடு 191 கோடி ரூபாய். இதற்கான காண்ட்ராக்ட் ஹைதராபாத்தை சேர்ந்த கே.சி.பி. ப்ராஜெக்ட் லிமிடெட்டுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் 2021-ல் போடப்பட்ட இந்த ப்ராஜெக்ட்டின் மதிப்பை தற்போது 552 கோடியாக உயர்த்திக் கொடுத்துள்ளனர். இதன் மூலம் சுமார் 361 கோடி ரூபாய் இழப்பு. 

NLC1

வாய்ஸ் ஆஃப் வேர்ல்ட் எனும் ஒரு என்.ஜி.ஓ. அமைப்பில் ஒரு இயக்குநராக இருக்கும் சுப்ரதா சௌத்ரி என்பவர், என்.எல்.சி.யிலும் இயக்குந         ராக இருக்கிறார். அந்த என்.ஜி.ஓ.வுக்காக என்.எல்.சி.யிலிருந்து 5 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதற்கு சேர்மன் பிரசன்னகுமாரும் சௌத்ரியும் முடிவு செய்கின்றனர்.  அந்த நிதியை இருவரும் பகிர்ந்துகொள்வது அவர்களின் திட்டம். 

இதனையறிந்து என்.எல்.சி. சேர்மன் பிரசன்னகுமாருக்கும் விஜிலென்ஸுக்கும் சம்பந்தப்பட்ட என்.ஜி.ஓ. அமைப்பின் பொருளாளர், ஒரு கடிதம் அனுப்புகிறார். அதில், எங்கள் அமைப்புக்கு அதனை அனுப்பினால் அந்த பணம் எங்கள் அமைப்புக்கு வந்து சேராது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.  

இதற்கிடையே, என்.எல்.சி.யில் வெளியேறும் கழிவுகளை வைத்து கிராஃபைட் தயாரிக்கும் ஒரு திட்டத்தை 1700 கோடி ரூபாயில் செயல்படுத்த பிரச்சன்னகுமாரும் சில அதிகாரி களும் இணைந்து முனைகின்றனர்.  உட னே, என்.எல்.சி.யின் சுற்றுச்சூழல் பிரி வின் தலைமை அதிகாரி செந் தில்குமார் மூலமாக சில போலியான கடிதம் மற்றும் ஆவணங்கள் தயாரித்து, அதை வைத்து  இந்தியாவை சேர்ந்த எக்ஸிம் வங்கியிடம் என். எல்.சி. அதி காரிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 

இந்த நிலையில், செந்தில்குமாருக்கு எக்ஸிம் இந்தியா மின்னஞ்சலில் இருந்து என்.எல்.சி.க்கும் ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த கடிதம் ஜூன் 6-ஆம் தேதி வருகிறது. ஆனால், ஜூன் 1-ஆம் தேதியே செந்தில்குமார் ஓய்வு பெற்றுவிடுகிறார். செந்தில்குமார் பதவியில் புதிதாக வந்த அதிகாரி அனுராக் மிட்டல், அந்த கடிதத்தை பார்வையிடுகிறார். இதில் அவருக்கு சந்தேகம் வர... அதற்கு பிரசன்ன குமார், "இதையெல்லாம் கண்டுக்காதீங்க. நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் கிராஃபைட் ப்ராஜெக்டில் செய்யுங்கள்' என உத்தரவிடுகிறார். 

இந்த விசயத்தில் ஈடுபட்டால் நாம் மாட்டிக்கொள்வோம் என முடிவு செய்து, என்.எல்.சி.யில்  போலி ஆவணங்கள் உருவாக்கப் பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்கல் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்துள்ளார் அனுராக் மிட்டல். இப்படி ஊழல்களும், முறைகேடுகளும், தில்லுமுல்லுகளும் என்.எல்.சி.யில் நிறைய நடந்துகொண்டிருக்கிறது. இதற்கு சூத்திரதாரியாக என்.எல்.சி.யின் சேர்மன் இருந்து வருகிறார்''” என்று சுட்டிக்காட்டுகிறார்கள் என்.எல்.சி. நிறுவன தரப்பினர். 

ஆக, என்.எல்.சி. நிறுவனத்தில் பல்வேறு பணிகள் மூலமாக சுமார் 422 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது குறித்து சென்னையிலுள்ள சி.பி.ஐ. அதிகாரிகளை சந்தித்து புகார் அளிக்கிறார் மணிகண்டன் என்பவர். புகாரை படித்துப்பார்த்த அதிகாரிகள், அதை கிடப்பில் போட்டுவிட்டனர். இதனையடுத்து மத்திய சுரங்கம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சகமும் நடவடிக்கை எடுக்கத் தவறியதால் தற்போது இந்த ஊழல் விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு சென்றுள்ளது. விரைவில் இந்த ஊழல் விவகாரம் பூதாகர மாகலாம். 

தமிழக அரசுத் துறைகளில் ஊழல் நடப்பதாக அடிக்கடி அமலாக்கத்துறை ரெய்டு நடப்பதும், வழக்கு போடுவதுமான சூழலில், மத்திய அரசு நிறுவனத்தில் ஊழல் நடந்துள்ளதாக வந்த புகார் மீது சி.பி.ஐ.யும் மத்திய அரசும் ஏன் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது? 

"இதுதான் உங்களின் நேர்மையா?' என்கிற கொந்தளிப்பு தமிழக அரசு அதிகாரிகளிடம் எதிரொலிக்கிறது.

-இளையர்

nkn081125
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe