"இன்னும் 15 வருஷத்துக்கு பா.ஜ.க. அவ்வளவுதான். 420 மலையாக இருக்கும் நபரால் தமிழக பாஜகவுக்கு மட்டுமல்ல தமி ழகத்திற்கே மிகப்பெரிய கேடு'' என கடுமையாக அண்ணாமலையை குற்றம்சாட்டி வெளியேறி யிருக்கிறார் தமிழக பா.ஜ.க. ஐ.டி. விங் தலை வராக இருந்த ஈபத நிர்மல்குமார். நக்கீரனுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி...

420 மலை என கடுமையாக இருக்கிறதே உங்களது அறிக்கை...

அந்த அளவுக்கு மனவலியை ஏற்படுத்தியிருக்கிறார்கள். நான் மட்டும் அல்ல, கட்சியில் உள்ளவர்கள் யாரைச் சந்தித் தாலும், பேசி னாலும் அவர் களை சந்தேகத்துடன் பார்ப்பது, வேவு பார்ப்பது என்பதை ஜீரணிக்க முடியவில்லை. இந்த ஒரு நிகழ்வு மட்டுமல்ல. சொல்லிக்கொண்டே போகலாம்.

கட்சியில் மாநில ஐ.டி. பிரிவு தலைவராக இருந்தவர் நீங்கள். உங்கள் கவனத்துக்கு வராமல் வார் ரூம் செயல்பட முடியுமா?

Advertisment

dd

வார் ரூம் வேண்டாம். அது மிகப்பெரிய சங்கடத் தை ஏற்படுத்தும் என நான் தெரிவித்தேன். அவர்கள் கேட்கவில்லை. இது கட்சிக்குள்ளேயே மிகப்பெரிய குழப் பதை ஏற்படுத்தியிருக்கிறது. தவறை திருத்திக்கொள்ள ணும் என மாநில தலைமை நினைக்கவில்லை.

Advertisment

பா.ஜ.க.வில் இருந்து ஆட்களை கூட்டிக் கொண்டு போனால்தான் திராவிட கட்சிகள் வளரும் என்ற நிலைமை வந்துவிட்டது என்கிறாரே அண்ணாமலை?

அவ்வளவுதான், அண்ணாமலையின் புரிதல். அரசியலில் பண்பு இல்லை. தோன்றியதை பேசி கோபத்தை மட்டுமே வெளிப்படுத்துகிறார். அது தலைமைக்கு அழகல்ல. பா.ஜ.க.விலிருந்து நிர்வாகி களை அழைத்துசென்று வளர்க்கவேண்டிய இடத்தில் அ.தி.மு.க. ஒரு சதவீதம் கூட கிடையாது.

மேனேஜர் மாதிரி இருக்க முடியாது என்கிறாரே?

இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க.வில் உள்ள முன்னாள் தலைவர்கள் பலர் வருத்தப்படுகின்றனர். தமிழிசை சௌந்தரராஜன், பொன்னார் உள்பட எல்லோரையும் சொல்கிறாரா? ஒரு பெண்ணாக இந்தக் கட்சிக்கு தலைவராக இருந்த தமிழிசை சௌந்திரராஜன் விடியற்காலை 2 மணி, 3 மணிக்கு கட்சிப் பணிக்காக காரில் புறப்பட்டதை நான் பலமுறை பார்த்திருக் கிறேன். அவர்களைப் போன்றவர்களின் உழைப்பை ஒரே வார்த்தையில் கொச்சைப்படுத்துவதா? அதுதான் அரசியலில் பக்குவம் இல்லை. இன்னும் 15 வருஷத்துக்கு தமிழக பா.ஜ.க. எழுந்திருக்காது. நம்பிக்கை போய்விட்டது.

அண்ணாமலையைத் தாண்டி நீங்கள் டெல்லியில் தொடர்பு வைத்திருந்ததால் அவருக்கு பிடிக்கவில்லையா?

நான் தொடர்பு வைத்திருக்கிறேன் என்பதைவிட, எனது பணிகளை பார்த்து டெல்லியில் இருந்து அழைத்து பாராட்டுகிறார்கள். எனது பணி தனி. அவருடைய உயரம் தனி. ஆனால் ஏன் என்னுடன் கம்பேர் பண்ணுகிறார் என தெரியவில்லை. ஏன் நெருக்கடி கொடுக்கிறார் என்று தெரியவில்லை. அண்ணாமலை தலைமைக்கு வந்த பிறகுதான் தமிழக பா.ஜ.க. வித்தியாசமான கோணத்தில் செல்கிறது. தொண்டர்களை நடத்தும் விதம், பார்க்கும் விதம் என இப்படி ஒரு கட்சியை எங்குமே பார்க்க முடியாது.

நீங்கள் அ.தி.மு.க.வில் இணைந்த பிறகு எடப் பாடி உருவப்படத்தை பா.ஜ.க.வினர் எரித்தார்களே?

aaஅ.தி.மு.க.வில் இருந்து பா.ஜ.க.வில் முக்கிய நிர்வாகிகள் கடந்த காலத்தில் இணைந்தபோது படங்களை எரித்தார்களா? மற்ற கட்சி விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பதை அவர்கள் பின்பற்றவில்லை. அதுதான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம்.

ஆதாயம் பெற நினைத்தார். அதனை அண்ணாமலை தட்டிக் கேட்டார். அதனால்தான் நிர்மல்குமார் வெளியேறுகிறார் என...

நாளைக்கே பா.ஜ.க. ஆட்சிக்கு வரக்கூடிய கட்சி இல்லை என தெரிந்துதான் சேர்ந்தேன். ஆதாயம் அடையணும் என்றால் பா.ஜ.க.வில் சேர்ந்திருக்க மாட்டேன். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு.

மோசடியில் ஈடுபட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனத்தின் முக்கிய நிர்வாகி ஹரீஸ் என்பவருக்கு மாநில பொறுப்பு வழங்குவதா என கட்சிக்குள்ளேயே கேள்வி எழுகிறதாமே?

"இவ்வளவு குற்றச்சாட்டுக்கள் இருக்கும் நபருக்கு ஏன் பொறுப்பு கொடுத்தீர்கள்?' என நான் கேள்வி எழுப்பினேன். இது தவறு. மாற்றுங்கள் என கடித மாகவே கொடுத்தேன். இந்த நிகழ்வு மட்டுமல்ல, கட்சிக்கு எது நல்லது இல்லையோ உடனே தெரிவித்து விடுவேன். ஆனால் எதையும் கண்டுகொள்ளவில்லை.

ஊர் உலகமே கேவலமாகப் பேசும் ரெட்டியை கூடவே வச்சு சுற்றுவதுதான் இந்த புனிதரின் வேலை போல என உங்களை தொடர்ந்து வெளியேறிய திலீப் கண்ணன் குற்றம் சாட்டியிருக்கிறாரே?

நிர்வாகி ஒருவர் சரியில்லை என தலைமைக்கு புகார் போனால் தலைமைதான் அழைத்து மாற்றணும். அமர்பிரசாத் ரெட்டியோ, மற்ற நிர்வாகிகளையோ நான் குற்றம் சொல்ல மாட்டேன். தலைமைதான் அத்தனைக்கும் பொறுப்பு.

-வே.ராஜவேல்

படங்கள் :அபினேஷ்

____________

இறுதிச்சுற்று!

dd

முதல்வர் ஸ்டாலின் குறித்த புகைப்படக் கண்காட்சியைக் காண, 8ஆம் தேதி இரவு 7 மணிக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கே ஒருமணி நேரத்திற்குமேல் நேரத்தைச் செலவிட்டு ரசித்தார். கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு புகைப்படத் தையும் நின்று நிதானமாகப் பார்த்து நெகிழ்ந்தவர், அங்கு அமைக்கப்பட்டிருந்த மிசா சிறைக் கொட்டடியைக் கண்டதும் உருகிப்போய் நின்றார். பின்னர் கொட்டடியைத் திறந்து, அதற்குள் இருந்த திண்டில் அமர்ந்து, சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். நிறைவாகப் பார்வையாளர்கள் குறிப் பேட்டைப் புரட்டி, வந்து சென்றவர்கள் எழுதிய குறிப்புகளை எல்லாம் கவனமாகப் படித்தார். அவரது கடந்த காலத்தை மலரும் நினைவுகளாக்கிய அந்தப் புகைப்படங்கள், முதல்வரை எந்த அளவிற்கு நெகிழவைத்தன என்பதை அவரது முகத்தில் படர்ந்த நிறைவே உணர்த்தியது.

-நாடன்