பா.ஜ.க. -அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய நெருக்கடி, குற்ற வழக்குகளை த.வெ.க.வினர் எதிர்கொள்ளும் நெருக்கடி எனும் இடியாப்பச் சிக்கல்களில் தவித்துவருகிறார் நடிகர் விஜய். இந்தச்சூழலில், மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகளை விஜய்யுடன் பா.ஜ.க. நடத்தி முடித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. 

Advertisment

கரூர் சம்பவத்திற்கு சி.பி.ஐ. என்கொயரி கேட்பது குறித்து தமிழக கவர்னர் ரவியை சந்தித்து கோரிக்கை வைக்க வேண்டும் என திட்டமிட்ட விஜய்யிடம், "கவர்னரை நேரில்  சந்திப்பதைவிட அவரை தொடர்புகொண்டு பேசுங்கள்' என யோசனை சொல்லப்பட்டது. இதனையடுத்து கடந்த வாரம் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் கவர்னர் ரவியிடம் பேசியிருக்கிறார் விஜய். அப்போது, ராஜ்பவனிலிருந்து அரசியல் ரீதியாக பல்வேறு அட்வைஸ்கள் விஜய்க்கு தரப்பட்டதுடன், "ஒரு டீம் உங்களை சந்திக்கும்; அவர்களுடன் விவாதியுங்கள் எல்லாம் தெளிவாகும்' என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. 

Advertisment

இந்த நிலையில், டெல்லியின்  உத்தரவின்படி, டெல்லிக்கும் தமிழக ராஜ்பவனுக்கும் நெருக்கமான நான்குபேர் விஜய்யை சந்தித்துப் பேசியுள்ளனர். அந்த நான்குபேரில் அடையாறைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளரான ஆடிட்டர் ஒருவர் முக்கியமானவராக இருந்தார். 

அந்த நால்வரும் விஜய்யிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில், சில விசயங்கள் பட்டவர்த்தனமாகவே விஜய்க்கு சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. குறிப்பாக, "தி.மு.க.வை வீழ்த்துவது தான் உங்கள் நோக்கம் எனில் அரசியல்ரீதியாக சில முடிவுகளை நீங்கள் உறுதியாக எடுத்தாக வேண் டும். தன்னந்தனியாக நின்று தி.மு.க.வை நீங்கள் எதிர்ப்பது சாதாரணமானதல்ல;  அசாதாரண மானது. அதனால், பா.ஜ.க. கூட்டணிக்கு தயக்கமின்றி வாருங்கள். மற்றதை டெல்லி பார்த்துக்கொள்ளும்' என்று விவரித்துள்ளனர். 

Advertisment

பட்டினப்பாக்கத்தில் நடந்த அந்த சந்திப் பின் விபரங்களை ஆதவ் அர்ஜுனா, ஜான் ஆரோக் கியசாமி, நிர்மல்குமார், அருண்ராஜ், ஜெகதீஸ், விஷ்ணுரெட்டி ஆகியவர்களோடு விவாதித்துள் ளார் விஜய். அப்போது, பா.ஜ.க. தரப்பில் வைக்கப்பட்ட விபரங்களை விஜய் விவரித்துள்ளார். இதில் ஆதவ்வும், ஜானும் சில விசயங்களைச் சுட்டிக்காட்டி எதிர் கருத்துக்களைச் சொல்லியுள்ள னர். மற்றவர்கள் பார்வையாளர்களாவே இருந் துள்ளனர். மேலும், "இப்போதைக்கு எந்த முடிவும் உறுதியாக எடுக்கவேண்டுமென்கிற அவசியமில்லை, டெல்லிக்கு செல்கிறேன். அங்கு சிலரை சந்திக்கிறேன்... பிறகு முடிவு செய்து கொள்ளலாம்' என சொல்லியிருக்கிறார் ஆதவ் அர்ஜுனா. 

அந்த மீட்டிங்கை தொடர்ந்து டெல்லிக்கு பறந்தார் ஆதவ். ராகுல்காந்தியை சந்திக்க முயற் சித்தார்... வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதேசமயம், அமித்ஷாவை சந்திக்க முயற்சித்திருக்கிறார் ஆதவ். அதுவும் நடக்கவில்லை. ஆனால், விஜய்யை குழப்புவதில் ஆதவ் அர்ஜுனாதான் முன்னிலை யில் இருக்கிறார் என அறிந்த பா.ஜ.க.வின் டெல்லி மேலிடம், ஆதவ்வை எச்சரிக்கும் வகையில் சில விசயங்களை முன்னெடுத்துள்ளது. 

இதுகுறித்து விசாரித்தபோது, அமித்ஷாவை சந்திக்க முடியாத நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் முக்கிய பொறுப்பிலிருந்த முன்னாள் அதிகாரி ஒருவரிடம் பேசும் வாய்ப்பு ஆதவ் அர்ஜுனாவிற்கு கிடைத்தது. அந்த வாய்ப்பில், விஜய் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை விவரித்துவிட்டு, தங்களுக்கு உதவி செய்யவேண்டும் என்கிற கோரிக்கையை வைத்துள்ளார் ஆதவ். அதேசமயம், அந்த அதிகாரியோ, "கூட்டணி விசயத்தில் நடிகரை குழப்புவது நீங்கள் தான். தி.மு.க.வுக்கும் உங்களுக்கும்தான் ஆகாதே, பிறகேன் குழப்புகிறீர்கள்? நீங்கள் என்ன தி.மு.க.வின் ஸ்லீப்பர் செல்லா? அரசியலில் என்ன நடந்துக்கிட்டிருக் குன்னு உங்களுக்குத் தெரியுமா? என பல கேள்விகளைக் கேட்கவும், ஆதவ் மிரண்டு போய்விட்டார் என்கின்றன டெல்லி தகவல்கள்.

இதனைத் தொடர்ந்துதான் தமிழக பா.ஜ.க. வின் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்டிருந்த பைஜெயந்த் பாண்டே, முரளிதர் முஹோல் ஆகிய இருவரையும் சென்னைக்கு அனுப்பி வைத்தார் அமித்ஷா. தமிழக பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகள் அடங்கிய உயர்மட்ட குழுவின ருடன் ஆலோசனை நடத்துவதோடு, இருவருக்கும் தனித்தனி அசைன்மெண்டும் கொடுக்கப்பட்டி ருந்தது. அதில், எடப்பாடி பழனிச்சாமியை பைஜெயந்த் பாண்டேவும், விஜய்யை முரளிதர் முஹோலும் சந்தித்து விவாதிப்பது என அசைன்மெண்ட்கள் தரப்பட்டிருந்தன.  இதற்காக, 5-ந்தேதி முரளிதரும், 6-ந்தேதி பாண்டேவும் சென்னைக்கு வந்தனர். 5-ந் தேதி சென்னைக்கு வந்த முரளிதர் -விஜய் சந்திப்பு நடக்கவில்லை. அதற்கு மாறாக, போனில் நீண்டநேரம் விஜய்யிடம் விவாதித்தார் முரளிதர் (இதனை கடந்த இதழில் விரிவாக பதிவு செய்திருக்கிறோம்). அதேபோல, எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார் பைஜெயந்த் பாண்டே. 

இந்த சந்திப்பு குறித்து விசாரித்தபோது, "என்.டி.ஏ. கூட்டணிக்குள் விஜய் வருவது ஆல்மோஸ்ட் உறுதியாகியிருக்கிறது. இது குறித்து விஜய்யிடம் நடத்தப்பட்ட மூன்று தரப்பு ஆலோசனைகளில் இது உறுதியாகியிருக்கிறது. இதனை 100 சதவீதம் உறுதிசெய்யப்படணும்னா உங்களின் ஒத்துழைப்பு தேவை. அந்த ஒத்துழைப்பு என்னவென்பதை அமித்ஷாஜி உங்களுக்குச் சொல்லுவார் என தெரிவித்த பாண்டே, கூட்டணி வலிமையாக இருப்பதற்கும், மற்ற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவருவதற்குமான முயற்சிகள் குறித்தும் எடப்பாடியிடம் விவாதித்தார். அப்போது, "விஜய்யுடன் நானும் பேசியிருக்கிறேன். அந்த தம்பியிடம் பல மாற்றங்கள் தெரிகிறது. நிச்சயம் நம் கூட்டணிக்குள் வருவார்' என பகிர்ந்து கொண்டுள்ளார் எடப்பாடி'' என்கின்றனர் அ.தி.மு.க.வினர்.  

இதனையடுத்து மாலையில் பா.ஜ.க.வின் மூத்த நிர்வாகிகளுடன் பாண்டேவும், முரளித ரும் சீரியஸாக விவாதித்தனர். தமிழகத்தின் தேர்தல் கள சூழல், பா.ஜ.க. எடுத்துவரும் தேர்தல் பணிகள், வியூகங்கள் குறித்தெல்லாம் இவர்கள் ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து, "என்.டி.ஏ. கூட்டணிக்குள் நடிகர் விஜய் வருவார். அதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள் ளது. இதனை நீங்கள் எங்கும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாம். அ.தி.மு.க.வைப் பற்றியோ விஜய்யை பற்றியோ எதிர்மறை விமர்சனங்கள் செய்யக்கூடாது' என்று அறிவுறுத்திவிட்டு டெல்லிக்கு திரும்பினர் தேர்தல் பொறுப்பாளர்கள். 

டெல்லி எடுத்துவரும் இப்படிப்பட்ட பகீரத முயற்சியில் என்.டி.ஏ. கூட்டணிக்குள் மெல்ல மெல்ல நுழையும் விஜய், "அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்குள் த.வெ.க. வருவதை 100 சதவீதம் உறுதிசெய்ய வேண்டுமாயின், தமி ழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் வர் வேட்பாளராக யாரையும் முன்னிறுத்தக் கூடாது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதனை தீர்மானிக்கலாம்' என்று அமித்ஷா தூதரிடம் நிபந்தனை விதித்திருப்பதாக இறுதிக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

"இதனை எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்து அவரை எப்படி சம்மதிக்க வைப்பார்? அல்லது விஜய்யின் நிபந்தனையை ஏற்க மறுத்து என்.டி.ஏ. கூட்டணிக்குள் விஜய்யை எப்படி இணைப்பார்? என்கிற கேள்விகள் அமித்ஷாவின் அரசியல் அனுபவங் களுக்கு சவாலாக இருக்கும்' என்று சொல்லப்படுகிறது. 

இந்த நிலையில், விஜய்யிடம் பேசிய எடப்பாடி, அவருக்கு தைரியம் சொன்ன துடன்... "நம்முடைய இருவரின் நோக்கமும் ஒன்றுதான். அது நிறைவேறனும்னா ஓரணியில் நாம் இருக்கணும் தம்பி'' என்று வலியுறுத்தி யுள்ளார்.


_______________
இறுதிச் சுற்று!

கோவையில் முதல்வர்!

bjp-tvk-box

உலக புத்தொழில் இயக்க மாநாடு, அவினாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை கட்டப்பட்டுள்ள உயர்மட்ட சாலை திறந்து வைத் தல், உயிர் அமைப்பு - சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் பொற்கொல்லர் பூங்கா அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்காக 9ஆம் தேதி வியாழக்கிழமை அன்று கோவை வந்தடைந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். அவரை விமான நிலையத்தில் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் அமைச் சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். 

கொடிசியாவில் உலக புத்தொழில் இயக்க மாநாட்டில் கலந்து கொண்டு புத்தொழிலின் அவசியம் குறித்துப் பேசினார் முதல்வர்.  இதற்கிடையில்   அவி னாசி சாலை ஜி.டி உயர்மட்ட மேம்பாலத்தை, கோல்ட் விண்ட்ஸ் பகுதியில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  இதற்குப் போட்டியாக அந்தப் பாலம் முடியும் உப்பிலிபாளையம் பகுதியில் வரும் வாகன ஓட்டிகளை, அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா மற்றும் எடப் பாடி புகைப்படத்துடன் வரவேற்று இனிப்பு கொடுக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பானது.

ஏ1 குற்றவாளி மரணம்!

bjp-tvk-box1

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளி யாகக் கருதப்படும் நாகேந் திரன் கல்லீரல் பாதிப்பு காரணமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலை யில்... 9ஆம் தேதி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

-நாகேந்திரன்