Advertisment

41 உயிர் மாறும் அரசியல் வியூகங்கள்!

karur

ரூர் சம்பவம் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மேல் விஜய் எப்படி அரசியல் செய்வார்? அவர் பொதுமக்களை சந்திப்பாரா? அவரது கூட்டங்களுக்கு போலீஸ் அனுமதி தருமா? நீதிமன்றங்கள் கண்டனங்கள் தெரிவிக்காதா? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன. 

Advertisment

இறந்துபோன நாற்பதுக்கும் மேற்பட்ட உயிர்களைப் பற்றிய சிந்தனை பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கும்பமேளா சாவுகளைப் போல நடந்த இந்த கொடுமை, அகில இந்திய அரசியல்வாதிகளின் மனசாட்சிகளையும் உலுக்கியுள்ளது. இதில் முக்கியமானவர் ராகுல்காந்தி. ராகுலுக்கு நடிகர் விஜய்யையும் தெரியும். முதல்வர் ஸ்டாலினையும் தெரியும். ஸ்டாலினுக்கு போன் போட்ட ராகுல், கரூரில் என்ன நடந்தது என இருபது நிமிடம் விசாரித்துள்ளார். விஜய் எப்படி அவருக்கு வந்த கும்பலை தவறாக வழி நடத்தினார், கும்பலைக் காட்டியே அரசியல் செய்ய நினைத்த விஜய் எப்படி நாற்பதுக்கும் மேற்பட்ட இறப்பின் ச

ரூர் சம்பவம் தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மேல் விஜய் எப்படி அரசியல் செய்வார்? அவர் பொதுமக்களை சந்திப்பாரா? அவரது கூட்டங்களுக்கு போலீஸ் அனுமதி தருமா? நீதிமன்றங்கள் கண்டனங்கள் தெரிவிக்காதா? எனப் பல கேள்விகள் எழுந்துள்ளன. 

Advertisment

இறந்துபோன நாற்பதுக்கும் மேற்பட்ட உயிர்களைப் பற்றிய சிந்தனை பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கும்பமேளா சாவுகளைப் போல நடந்த இந்த கொடுமை, அகில இந்திய அரசியல்வாதிகளின் மனசாட்சிகளையும் உலுக்கியுள்ளது. இதில் முக்கியமானவர் ராகுல்காந்தி. ராகுலுக்கு நடிகர் விஜய்யையும் தெரியும். முதல்வர் ஸ்டாலினையும் தெரியும். ஸ்டாலினுக்கு போன் போட்ட ராகுல், கரூரில் என்ன நடந்தது என இருபது நிமிடம் விசாரித்துள்ளார். விஜய் எப்படி அவருக்கு வந்த கும்பலை தவறாக வழி நடத்தினார், கும்பலைக் காட்டியே அரசியல் செய்ய நினைத்த விஜய் எப்படி நாற்பதுக்கும் மேற்பட்ட இறப்பின் சோகத்துக்கு காரணமாக இருந்தார் என ஸ்டாலின் விளக்கினார். அதை அப்படியே உள்வாங்கிக்கொண்ட ராகுல், விஜய்யிடம் பேசினார். விஜய் தனது தரப்பு விளக்கத்தை அளித் தார். அதை மீண்டும் ஸ்டாலினுடன் பகிர்ந்து கொண்டார் ராகுல். த.வெ.க.வுடன் காங் கிரஸ் கட்சி கூட்டணி அமைக்கும் என வந்த செய்திகளின்படி ஓர் அடிப்படைத் தொடர்பு ராகுலுக்கும், விஜய்க்கும் இருக்கிறது என்பதை இந்த பேச்சு உறுதிப்படுத்துகிறது. 

Advertisment

பா.ஜ.க. தரப்பில் இந்த சம்பவத்தில் விஜய்க்கு எதிராகக் கடுமையான கோபத்தில் இருந்தார்கள். ஆனால் இந்த சம்பவத்தில்  விஜய்க்கு எதிராகப் பேசினால் அரசியலில் விஜய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடுவார், அது தி.மு.கவுக்கு சாதகமாக அமையும் என ஆர்.எஸ்.எஸ். களத்தில் இறங்கி பா.ஜ.கவுக்கு அட்வைஸ் செய்தது. குருமூர்த்தி விஜய்யுடன் பேசினார். அதனால் நயினார் நாகேந்திரன், "இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்' என கருத்து தெரிவித்தார். கரூரை சொந்த ஊராகக் கொண்ட அ.மலை, இந்த சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாகப் பேசினார். தமிழ்நாடெங்கும் "விஜய்யை கைது செய்!' என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ள சூழ்நிலையில்... அந்த போஸ்டர்களை ஒட்டிய தி.மு.க.வினரின் உணர்வுகளுக்கு எதிராக, "விஜய் மீது எப்.ஐ.ஆர். போடப்படவில்லை. எப்.ஐ.ஆரில் முதல் குற்றவாளியாக குறிப்பிடப்பட்டுள்ள கரூர் மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன் தலைமறை வாக இருக்கிறார். அவரை கைதுசெய்த பிறகுதான் அடுத்த குற்றவாளிகளான நிர்மல்குமார், புஸ்ஸிஆனந்த் மற்றும் பலர் கைது செய்யப்படுவார்கள்' எனத் தெரிவிக்கின்றனர். விஜய் மீது எப்.ஐ.ஆர். போடப்படாததற்கு காரணம் ராகுல்காந்தி என ஊடகங்களில் செய்தி
ள் பரவிவரும் சூழலில், விஜய் "இந்த சம்பவத்தில் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்' என மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். 

சி.பி.ஐ. விசாரணைக்கு இந்த சம்பவம் சென்றால் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு விஜய் சென்றுவிடுவார். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என மத்திய பா.ஜ.க. உறுதி அளித்ததால்தான் விஜய் சி.பி.ஐ. விசாரணை கேட்கிறார் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள். இப்படி மாநில அரசு எப்.ஐ.ஆர். போடாமல், கைது செய்யாமல் இருக்க ராகுல்காந்தியை பயன்படுத்திக்கொண்ட விஜய் தொடர்ந்து இந்த கடுமையான பழியிலிருந்து தப்பிக்க மத்திய அரசின் சி.பி.ஐ. விசாரணையில் ஒளிந்து கொள்கிறார். இது ஒரு புதுவிதமான அரசியல் என்கிறது த.வெ.க. வட்டாரங்கள். த.வெ.கவில் இருக்கும் ஆதவ்அர்ஜுன் மற்றும் அருண்ராஜ் ஆகியோர் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்தால் மத்திய அரசு நம்மைக் காப்பாற்றும் என விஜய்யுடன் பேசி வருகிறார்கள் என்கிறது த.வெ.க. வட்டாரங்கள். 

இந்நிலையில் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிச்சாமி விஜய்யை எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. இத் தனைக்கும் நாமக்கல்லில் பேசிய விஜய், அ.தி.மு.க.வை அதன் தலைவர் எடப்பாடியை கிண்டலடித்துப் பேசியிருந்தார். ஆனால் எடப்பாடி விஜய்யை திருப்பித் தாக்குவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தும் திருப்பித் தாக்கவில்லை. இதைப்பற்றிச் சொல்லும் அ.தி.மு.கவினர், “"இனி விஜய் தனியாக செயல்பட முடியாது. அவர் தி.மு.க. பக்கம் செல்ல முடியாது. எனவே அவர் அ.தி.மு.க., பா.ஜ.க. பக்கம்தான் வர வேண்டும். அ.தி.மு.கவோடு சேர்ந்துதான் அவர் கூட்டங்களை நடத்த முடியும். எனவே விஜய்யை அ.தி.மு.க. பக்கம் கொண்டுவரத்தான் எடப்பாடி முயல்கிறார். அதனால்தான் அவர் விஜய்யை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்நிலையில் விஜய்யை அ.தி.மு.கவும் எதிர்த்தால் விஜய் காணாமல் போய்விடுவார். விஜய் கைது செய்யப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் வரும். அதை எடப்பாடி விரும்பவில்லை. எப்படியாவது விஜய்யை இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கூட்டணிக்குள் கொண்டு வர எடப்பாடி விரும்புகிறார். இதுதான் அ.தி.மு.கவின் அரசியல் கணக்கு' என்கிறார்கள்,’அ.தி.மு.க. வட்டாரங்களில். 

"யார் செத்தால் என்ன? நமக்குத் தேவை அரசியல்' என்கிறார்கள் இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள். 

nkn011025
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe