ட்ட விரோத கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் ஆனந்தி திருவண்ணாமலையில் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரவைத்தது. மீண்டும், சட்டவிரோதமாக 4,000 கருக்கலைப்புகளை செய்ததாக கவிதா- பிரபு ஆகிய மற்றொரு போலி டாக்டர் தம்பதி கைது செய்யப்பட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக் கிறது திருவண்ணாமலை.

a

கீழ்பென்னாத்தூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் திடீரென்று செக்-அப்புக்கு செல்வதை நிறுத்திவிட்டார். கிராம செவிலியர் அப்பெண்ணிடம் விசாரித்தபோது கர்ப்பம் கலைந்து விட்டது என்று சொல்லியிருக்கிறார். ஏற்கனவே, அப்பெண்ணுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதால் சந்தேகத்துக்குள்ளான மருத்துவ அலுவலர் அதுகுறித்து ஆய்வுசெய்ய ஆரம்பித்தபோதுதான் கரு தானாக கலையவில்லை… கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்தது. அதுவும் பெண் குழந்தை என்பதால் சட்டத்துக்குப்புறம்பாக கருக்கலைப்பு செய்யப்பட்ட தகவல் மாவட்ட ஆட்சியர் கந்தசாமிக்கு போக, மாவட்ட எஸ்.பி. சிபி சக்கரவர்த்தியிடம் நடவடிக்கை எடுக்கச் சொல்லி உத்தரவிட்டார்.

aaதிருவண்ணாமலை டூ அவலூர்ப் பேட்டை சாலையிலுள்ள கவிதா- பிரபு தம்பதி தாங்கள் நடத்திவரும் காவ்யா ஃபேன்சி ஸ்டோருக்குள் வைத்து பல பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துவந்ததாக கண்டுபிடித்து மே 28-ந்தேதி அதிரடியாக கைதுசெய்தது மாவட்ட மருத்துவ அதிகாரி (பொறுப்பு) அசோக் மற்றும் காவல்துறை டீம்.

Advertisment

இதுபோன்ற குற்றங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் குழுவிலுள்ள விருத்தாசலம் அரசு மருத்துவமனை சீஃப் மெடிக்கல் ஆபீசரும் (பொறுப்பு) அரசு மருத் துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான டாக்டர் சுவாமிநாதனிடம் நாம் கேட்டபோது, ""எம்.பி. பி.எஸ். படித்த டாக்டரிடம் அதுவும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கருக்கலைப்பு மையங்களில்தான் எம்.டி.பி. (Medical Termination of Pregnancy (MTP) Act) விதிப்படி கருக்கலைப்புகள் செய்துகொள்ள வேண்டும். கர்ப்பமடைந்தது 4 –வாரத்தில் தெரிய ஆரம்பித்துவிட்டால் மெடிக்கல் ‘கிட்’ மூலம் சிறுநீரக பரிசோதனையில் கண்டறிந்து அபார்ஷன் செய்துகொள்வது குற்றமல்ல. திருமணத்துக்கு முந்தைய கர்ப்பத்தைக்கூட குறிப்பிட்ட வாரங் களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட கருக்கலைப்பு மையங்களில் அபார்ஷன் செய்துகொள்ளலாம்.

மேலும், குழந்தை பிறக்கும்போது தாயின் உயிருக்கு ஆபத்தாகிவிடும் என்றாலோ, குழந்தை மாற்றுத்திறனுள்ளதாக aaஇருந்தாலோ, இதயபாதிப்புகள் இருந்தாலோ கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். ஆனால், ஆணா? பெண்ணா? என்பதை 12-வது வாரத்தில் கண்டறிந்து, பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்வதுதான் பாலினத் தேர்வை கண்டறியும் தடை சட்டத்தின்படி (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques Act) குற்றம். காரணம், கருக் கலைப்பு என்றாலே பெண் குழந்தைகள்தான் அழிக்கப்படுகிறார்கள்.

அதுவும், மருந்துக்கடைகளில் சட்டத் துக்குப் புறம்பாக கொடுக்கப்படும் கருக்கலைப்பு மாத்திரை மருந்துகளை பயன்படுத்தித்தான் இதுபோன்ற அபார்ஷன்களை செய்கிறார்கள். அப்படிப்பட்ட மருந்து மாத்திரைகளால் அபார்ஷன் ஆகாத பெண்களுக்கு சிகிச்சையும் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். எம்.பி.பி.எஸ். படிக்காமல் ஏதாவது ஒரு மருத்துவரிடம் நர்ஸாக அல்லது உதவியாளராக வேலைபார்த்துவிட்டு அந்த அனுபவத்தை பயன்படுத்திக்கொண்டு இப்படி அபார்ஷன்கள் செய்யும்போது கர்ப்பிணியின் உயிருக்கே ஆபத்தாகிவிடும். 200 கிராம் கருவை கலைத்து வெளியில் எடுக்கும்போது 5 கிராம் எடுக்காமல் கவனக்குறைவுடன் அப்படியே விட்டுவிட்டால்கூட இரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழக்க நேரிடலாம். கருக்கலைப்பு மாத்திரை மருந்துகளை யார் யாருக்கு விற்பனை செய்தீர்கள் என்ற விவரங்களை மெடிக்கல் ஷாப் ஓனர்களிடம் ட்ரக் இன்ஸ்பெக் டர்கள் கேட்பதில்லை. அப்படியே சட்டவிரோதமாக விற்கப்படுகிறது என்று புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விடுவார்கள்.

Advertisment

"போலி டாக்டர்கள் சட்ட விரோத கருக்கலைப்பு செய்வதற்கு மிகமுக்கிய காரணம், கருக்கலைப்பு செய்துகொள்கிறவர்களின் வறுமையும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும்தான். பெண்களின் வளர்ச்சிக்கு ஏதுவான நட வடிக்கைகளை எடுக்காதவரை சட்டவிரோத கருக்கலைப்புகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அதே நேரத்தில் இதைவைத்து பணம் கொழிக்கும் போலி மருத்துவர்கள், ஆணா- பெண்ணா? என்று ஸ்கேன் மூலம் கண்ட றிந்து சொல்லும் ஸ்கேன் மையங்கள், சட்டத் துக்குப்புறம்பாக கருக் கலைப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்''’ என்கிறார் கோரிக்கையாக.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ""கடந்த 10 வருடங்களாக கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா? என்பதை கண்டறிந்து பெண் குழந்தைகளை சட்டவிரோத கருக்கலைப்பு செய்திருக்கிறார்கள் என்பதும், இதுவரை 4,000 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்ததும் விசாரணை யில் தெரியவந்துள்ளது. இவர்களைப்போல் வேறு யார் ஈடுபட்டாலும் மிகக்கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்தார்.

இது ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தின் பிரச் சனை அல்ல… மாநில பிரச்சனை. வறுமை மற்றும் வரதட்சணை ஒழிப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதோடு குற்றவாளிகளை காப்பாற்ற ஆளுங்கட்சியின் பரிந்துரைகளை நிராகரித்து கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.

-ராஜா