p

தென்சென்னை

s

19 லட்சத்து 75 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்ட தென்சென்னையில் அ.தி.மு.க.வில் சிட்டிங் எம்.பி. ஜெயவர்த்தன், தி.மு.க.வில் தமிழச்சி தங்க பாண்டியன், அ.ம.மு.க.வில் இசக்கி சுப்பையா, மக்கள் நீதி மையத்தில் ரெங்கராஜன் மோதுகின்றனர். இருப்பினும் அ.தி.மு.க., தி.மு.க.விற்கிடையேதான் கடும் போட்டி.

Advertisment

தென்சென்னையில் அடங்கிய 6 சட்டமன்ற தொகுதிகளில் தலா மூன்று தொகுதிகளை அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் வைத்திருக்கின்றன. ஆனால், தி.மு.க. மா.செ. மா.சுப்ரமணியனின் சைதை தொகுதியில் மட்டுமே இப்போதைக்கு லீடிங் காட்டுகிறது தி.மு.க. பிராமணர், வன்னியர், மீனவர், தலித் சமூகத்தினரும் சிறுபான்மையினர் மற்றும் அரசு ஊழியர்களும் வெற்றியை தீர்மானிப்பவர்களாக இருக்கின்றனர். கூட்டணி வலிமை இரு கட்சிகளுக்குமே ஏற்ற இறக்கத்தைத் தருகிறது.

தொகுதி பக்கம் வருவதில்லை; தொகுதிக்கு எதையும் செய்ததில்லை என்கிற குற்றச் சாட்டுகள் ஜெயவர்த்தனுக்கு சிக்கலைத் தருவதால் முழுவீச்சில் களமிறங்கியுள்ளார் ஜெயவர்த்தனின் தந்தையான அமைச்சர் ஜெயக்குமார். 2 லட்சம் மீனவர் வாக்குகள், 4 லட்சம் வன்னியர் வாக்குகள், 3 லட்சம் பிராமணர் வாக்குகளில் 70 சதவீதத்தை ஜெயக்குமார் வளைத்திருக்கிறார். அ.தி.மு.க. மா.செ.க்கள் விருகைரவி, தி.நகர் சத்யா, சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் 6 பகுதிச் செயலாளர்களை ஜெயக்குமார் கவனித்திருப்பதால், அவர்களின் களப்பணி அ.தி.மு.க.வை தூக்கி நிறுத்துகிறது. இந்து அமைப்புகளை ஒருங்கிணைத்து தி.மு.க.வுக்கு எதிராக பிராமணர்கள் அரசியல் செய்வதும்; சமூக அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள், கிராம சபைகள், தொழிலாளர் சங்கங் கள் என அமைப்புரீதியாக உள்ள அனைத்தையும் ஜெயக் குமார் கவர் செய்திருப்பதும் இலைக்கு கூடுதல் பலம்.

தொகுதியை பலமுறை வலம் வந்துள்ள தமிழச்சியின் பிரச்சாரம் வாக்காளர்களை வசீகரித்திருக்கிறது. மாவட்டச்செயலாளர் மா.சு.வின் தீவிர களப்பணி, எடப்பாடி அரசுக்கு எதிரான அதிருப்திகள், அ.தி.மு.க.மீது அரசு ஊழியர் களின் கோபம், தலித்துகளின் ஆதரவு ஆகியவை தமிழச்சிக்கு ப்ளஸ் பாயிண்ட். கல் லூரி மாணவிகள் மற்றும் 300-க்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களுடன் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை பெண் வாக்காளர் களிடம் கொண்டு செல்லும் மாவட்ட மகளிர் அணி அமைப் பாளர் ரத்னா லோகேஸ்வரனின் பிரச்சாரம் தமிழச்சிக்கு கூடுதல் பலம். அ.தி.மு.க. வாக்கு களை இசக்கி சுப்பையாவும், ரெங்கராஜனும் உடைப்பது உதயசூரியனுக்கு வலிமை. சில தொகுதிகளில் மந்தமான களப் பணி, கரன்சி பஞ்சம் ஆகியவை தமிழச்சியை மிரட்டுகின்றன.

Advertisment

அ.தி.மு.க.-தி.மு.க.விற்கிடை யான கடும்மோதலில் கரன்சி கட்டுகளை உடைக்கும் சத்தம் அ.தி.மு.க.வில் அதிகம் எதி ரொலிக்கிறது.

-இளையர்

திருநெல்வேலி

t

திருநெல்வேலி தொகுதிக்கு நன்கு அறிமுகமான பி.எச்.பாண்டியனின் மகன் தான் தற்போதைய அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியன். தனது அப்பாவின் செல்வாக்கு மனோஜுக்கு பலம். பாளை மற்றும் தொகுதி முழுக்க பரவலாக இருக் கும் சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ மக்களை இரட்டை இலை பக்கம் இழுக்க மகளிரணி மா.செ. விஜிலாஆனந்த் முயன்றாலும், டயோ சீசனின் எதிரணியோடு அவர் கைகோர்த் திருப்பது குடைச்சலைத் தருகிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் பிஷப்பின் பக்க மிருப்பது தி.மு.க. வேட்பாளருக்கு ப்ளஸ்.

மா.செ. தச்சை கணேசராஜாவுடன் கரன்சி விஷயத்தில் மனஸ்தாபம், சுதா.பரமசிவன், சங்கரலிங்கம் போன்றோர் ஒதுங்கியிருந்து மனோஜுக்கு பலவீனத்தை ஏற்படுத்துகின்றனர். பா.ஜ.க. உடன் கூட்டணி வைத்திருப்பதால்... சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாளை, மேலப்பாளையம், பேட்டை பகுதிகளில், மனோஜ் மறந்தும்கூட மோடி யின் பெயரைச் சொல்ல மறுக்கிறார்.

சென்றமுறை தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட மைக்கேல் ராயப்பன், அ.ம.மு.க. வேட்பாளராக நிற்கிறார். அப்போதே 94,562 வாக்குகளைப் பெற்ற இவர், இசக்கி சுப்பையாவின் செல்வாக்குள்ள பகுதிகளில் பிரகாசமாக இருக்கிறார். தேவர் சமுதாய வாக்குகளைப் பிரிப்பதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு இடைஞ்சல் தருகிறார்.

அ.ம.மு.கவின் வாக்குப்பிரிப்பு, இலைத் தரப்பிற்கான மைனஸ்கள் போன்றவற்றை வாய்ப்பாகப் பயன்படுத்தி, இடம் -பொருள் -ஏவல் பார்த்து கரன்சியை நகர்த்துகிறார் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியம். தென்னிந்திய கிறிஸ்தவ சபையில் முக்கியப் பொறுப்பில் இருப்பதால், கிறிஸ்தவர்களின் வாக்குகளை அள்ளுகிறார். கணிசமான இஸ்லாமியர்களின் வாக்குகளையும் பெறுகிறார். இவற்றோடு கூட்டணிக் கட்சிகளின் வாக்குவங்கியையும் பெறுவதால் உபரி பலத்தோடு நிற்கிறார் ஞானதிரவியம்.

-பரமசிவன்

நாமக்கல்

n

.தி.மு.க. வேட்பாளர் டி.எல்.எஸ்.பி.காளியப்பன், தி.மு.க. கூட்டணியின் கொ.ம. தே.க. ஏ.கே.பி.சின்ராஜ், அ.ம. மு.க. வேட்பாளர் பி.பி.சாமி நாதன் ஆகிய மூவருமே கொங்கு வெள்ளாள கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

சங்ககிரி தொகுதியில் வசிக்கும் எடப்பாடியின் மைத்துனரான வெங்கடேஷ், கவுண் டர் + வன்னியர் வாக்குகளைப் பெற்றுத்தரும் அசைன் மெண்ட்டில் முழுமூச்சாக உழைத்துக் கொண்டிருக்கிறார். சின்ராஜ் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இதன் துணைத்தலைவ ரான வாங்கிலி சுப்ரமணியம், சின்ராஜுக்கு எதிரான நிலைப் பாட்டோடு இருப்பதுடன், அமைச்சர் தங்கமணியைச் சந்தித்து ஆத ரவும் தெரி வித்துவிட்டார். இதன்மூலம், பண்ணை உரி மையாளர்கள், தொழிலாளர் களின் கணிச மான வாக்குகள் காளியப்பனைச் சென்றடையும்.

சின்ராஜ் எல்லா வகை யிலும் அ.தி. மு.க. வேட்பாளருக்கு கடும் நெருக் கடி கொடுக்கிறார். காளியப்பன் 70 வயதான முதியவர், மக்களிடம் கொஞ்சமும் பரிச்சயமில்லாதவர், சிட்டிங் எம்.பி. பி.ஆர்.சுந்தரம் தலைமை மீதான அதிருப்தியில் செய்யும் உள்ளடி வேலைகள் போன்றவை கொ.ம.தே.க.வுக்கு சாதகமான அம்சங்கள். அ.ம.மு.க. வேட்பாளர் பி.பி.சாமிநாதனும் கணிசமான வாக்குகளை பிரித்து சின்ராஜுக்கே சாதகமான வழிகளை ஏற்படுத்துகிறார்.

அதேசமயம், கொ.ம.தே.க. ஈஸ்வரன் "வி.சி.க. இருக்கும் கூட் டணியில் இடம்பெற மாட் டோம்' என தீர்மானம் போட்டு விட்டு, அதை மறந்து கூட்டணி சேர்ந்து கவுண்டர் சமுதாயத்தின் அதிருப்தியைச் சம்பாதித்திருக் கிறார். அதேபோல், சாதி வாக்குகள் மட்டுமல்லாமல், இந்து வாக்குகள் என்ற பெயரில் நாமக் கல்லில் தலையெடுத்திருக்கும் புதிய காரணி தி.மு.க.வுக்கு எதிராக நெருக்கடி தருகிறது.

நாமக்கல், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதிகள் கொ.ம. தே.க.வுக்கு சாதகமாக இருந்தா லும், மற்ற நான்கில் அ.தி.மு.க. வுக்கே ஆதரவு அதிகமாகவும் இருக்கிறது. அ.தி.மு.க. அள்ளிக் கொடுப்பதும், தி.மு.க. கிள்ளிக் கொடுப்பதும் இதற்குக் காரண மாக சொல்கிறார்கள்.

நெருக்கடியான பந்தயத்தில் அ.தி.மு.க. வேட்பாளரின் கடைசி கட்ட வியூகங்களில் இருக்கிறது கொ.ம.தே.க.வின் பலமும் பலவீனமும்.

-இளையராஜா

வடசென்னை

n

டசென்னை மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கும், அ.தி.மு.க. கூட்டணியான தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜுக்குமே நேரடியான போட்டி நிலவுகிறது.

சிட்டிங் எம்.பி.யான அ.தி.மு.க. வெங்கடேஷ்பாபு தொகுதிப் பக்கமே வராததால், அதற்கான விளைவை மோகன்ராஜ் அனுபவிக்கிறார். ஆர்.கே. நகர், ராயபுரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய பகுதிகளில் இடைத்தேர்தலுக்காக ஆர்.எஸ்.ராஜேஸ் கொட்டியிருக்கும் உழைப்பு ஓரளவுக்கு இதனை சரிசெய்கிறது. இருப்பினும், பெரம்பூர், திரு.வி.க.நகர் மற்றும் கொளத்தூர் தொகுதிகள் தி.மு.க. கோட்டையாக இருக்கின்றன.

தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜ் முக்கியத் தலைவர்களின் பிரச்சாரத்தின்போது மட்டுமே வாக்கு சேகரிக்கச் செல்கிறார். முக்கிய நிர்வாகிகளை சந்தித்துப் பேசுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. அதேபோல், கூட்டணிக் கட்சிகளுக்குள் இணக்கமான சூழல் ஏற்படாததும், இரட்டைஇலைச் சின்னம் இல்லாததும் தே.மு.தி.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

ஆர்.கே.நகரின் 20 ரூபாய் டோக்கன் வியூகம் அம்பலமாகி விட்டதால், அ.ம.மு.க. வேட்பாளர் சந்தானகிருஷ்ணன் அதைக் கையிலெடுத்தாலும் பெரிய அளவு வாக்குகளைப் பிரிக்கமுடியுமா என்பது கேள்விக்குறி. அ.தி.மு.க. அதிருப்தி வாக்குகளைப் பிரித்தாலும், அது தி.மு.க.வுக்கே சாதகமாக அமையும். அதுபோக நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் மற்றும் ஜெயின் அமைப்புகள் என ஓரளவுக்கு வாக்குகளைச் சிதறடிக்கின்றன. அதுவும் தி.மு.க.வுக்கு ப்ளஸ்பாயின்ட்.

பா.ஜ.க. மீதுள்ள கோபம், சிட்டிங் எம்.பி. மீதுள்ள அதிருப்தி போன்ற காரணங்கள் இருக்க... தி.மு.க.வின் வாக்குறுதிகளோடு வடசென்னையில் வலம் வருகிறார் கலாநிதி வீராசாமி.

அ.அருண்பாண்டியன்

மயிலாடுதுறை

m

தி.மு.க. சார்பில் ராமலிங்கமும், அ.தி.மு.க. சார்பில் ஆசைமணியமும், அ.ம.மு.க. சார்பில் செந்தமிழனும் போட்டி யிடுகிறார்கள். இந்தத் தொகுதி யைப் பொறுத்தமட்டில் தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.வுக்குமே நேரடிப் போட்டி நிலவுகிறது.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என இரண்டு லட்சம் வாக்குகள் உள்ள இந்தத் தொகுதியில் வன்னியர் மற்றும் தலித் வாக்காளர்களே பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அ.தி.மு.க., தி.மு.க., அ.ம. மு.க. கட்சிகளின் வேட்பாளர்கள் மூவருமே வன்னியர்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர் ஆசைமணி மீது ஏராளமான சர்ச்சைகள் இருக்கின்றன. அடுத்த தொகுதிக்காரர் என்பதால் சொந்தத் தொகுதி அ.தி.மு.க.வினர் அதிருப்தியில் இருக்கிறார்கள். ஆனால், பணத்தை வாரியிறைத்து அதிருப்தியைப் போக்கி, உற்சாகமாக வேலை செய்ய வைக்கிறார்.

தி.மு.க. வேட்பாளர் செ.ராமலிங்கம் நான்குமுறை திருவிடைமருதூர் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்திருக் கிறார். தொகுதி முழுவதும் நன்கு அறிமுகமானவர். 28 ஆண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிடுகிறது என்பதால் அந்தக் கட்சியினர் உற்சாக மாக இருக்கிறார்கள். எல்லா வகையிலும் தி.மு.க.வுக்கு சாதகமாக இருந்தாலும், தி.மு.க. வேட்பாளர் மெத்தனமாக இருப்ப துடன், கூட்டணிக் கட்சியினருக்கு மரியாதை கொடுக்கவில்லை என்ற முணுமுணுப்பை சம்பாதித்துள்ளார்.

அ.ம.மு.க. வேட்பாளர் தி.மு.க. கூட் டணியில் உள்ள அதிருப்தியை பணத்தால் அறுவடைசெய்கிறார். அந்தக் கட்சியின் வேட்பாளர் செந் தமிழன், டி.டி.வி.தினகரனின் முக்குலத்தோர் வாக்குளை பெருமளவு பிரிக்கிறார். தி.மு.க. எளிதில் ஜெயிக்கக்கூடிய இந்தத் தொகுதி, அ.தி.மு.க.வின ரின் பணத்துக்கு விலை போய்விடுமோ என்ற கவலை வெளிப்பட, இதுகுறித்து மு.க.ஸ்டாலின்வரை புகார் போனதால் பணிகள் முடுக்கிவிடப்பட, அ.தி.மு.க. தரப்பில் ஓட்டுக்கு எவ்வளவு என கணக்கிடப்படுகிறது.

-க.செல்வகுமார்

மதுரை

m

ங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில், தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரும் சாகித்திய அகாதமி வென்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் ராஜன்செல்லப்பா வின் மகன் ராஜ்சத்யன் அவரை எதிர்கொள்கிறார். அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களும் களத்தில் இருக்கின்ற னர்.

கம்யூ. கட்சியின் மாணவர் அமைப்புகள், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தோழமைக் கட்சிகள் போன்ற வற்றின் பிரச்சாரத்தால் மதுரை தொகுதியின் மூலை முடுக்குகள் வரை கவனம் பெற்றிருக்கிறார் சு.வெங்கடேசன். அரசு ஊழியர்களின் ஆதரவும் இவருக்கிருக்கிறது. ராஜ்சத்யனின் பணவீச்சை எதிர்கொள்ள வேண்டி யதுதான் வெங்கடேசனுக்கான முதன்மைச் சவால். ராஜன் செல் லப்பாவின் பிரபலம் இருந்தபோதும், அதை மட்டும் நம்பாமல் தொகுதி முழுக்க சுற்றிச்சுழன்று வாக்கு சேகரிக்கிறார் சத்யன். மதுரையின் சவுராஷ்ட்ரா வாக்குகள், முக்குலத் தோர் வாக்குகள் ஆகியவற்றுக்கு குறிவைத்துச் செயல்படுகிறார். அ.தி.மு.க.வின் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கத் தாமதமானது ராஜ்சத்யனை வேட்பாளராக அறிவிக்க எடப்பாடி தயங்கியதால் என்பதும், அவருக்குப் போட்டியாக சீட்டு கேட்டவர்களின் எதிர்ப்பை சமாளிக்கவேண்டியிருப்பதும் அ.தி.மு.க.வுக்கான முட்டுக் கட்டைகள்.

அ.தி.மு.க. முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை அ.ம.மு.க. சார்பாக இறங்கி கள்ளர் வாக்குகளில் கணிசமாகப் பிரிப் பதும், அமைச்சர் உதயகுமார் தரப்பின் பாராமுகமும் ராஜ்சத்ய னுக்குப் பின்னடைவு.

வெங்கடேசனின் மனைவி சவுராஷ்ட்ரா சமூகத்தவர் என்பதால், அவர் கணிசமான சவு ராஷ்ட்ரா வாக்குகளைப் பிரிப்பார். அ.தி.மு.க.வின் ஓட்டு வங்கி பெரிதாக இருந்தாலும், அதில் பல மான ஓட்டை விழுவ தால், மதுரையில் அரி வாள் சுத்தியல் கூர்மையாகிறது.

அப்பாவைப் போல மகனும் தேர்தலுக்கு முந்தைய நாள் பணி களில் கில்லாடி என்கிறார்கள் அ.தி.மு.க. வேட்பாளரின் ஆதரவுகள்.

-அண்ணல்

கிருஷ்ணகிரி

k

கிருஷ்ணகிரியில் மும்முனைப் போட்டி நிலவு கிறது. அ.தி.மு.க.வின் கே.பி. முனுசாமி, தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸின் செல்லகுமார், அ.ம.மு.க.வில் கணேச குமார் மூவரும் வாள்சுழற்றுகிறார்கள்.

முனுசாமி கிருஷ்ணகிரியில் மட்டுமே தனக்கென தனி வாக்கு வங்கியை வைத்துள்ளார். ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம், முனுசாமி ஆதரவாளர். ஆனால் வெற்றிபெற்ற பின் தொகுதிக்கு எதுவுமே செய்யாததால், அவரை எதிர்கொள்ளும் மக்கள் கேள்விமேல் கேள்வி கேட்டதால், பிரச்சாரத்தில் மனோரஞ்சிதம் பெரிதாக தலைகாட்டவில்லை. தொகுதியில் உள்ள வாக்குகள் அனைத்தும் தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவு வாக்குகளாக இருக்கும் நிலையில் முனுசாமி திக்குமுக்காடி வருகிறார். பணத்தை இறைத்தாலும், வாங்குவதை வாங்கிக்கொண்டு போடவேண்டி யவர்களுக்கு போடும் மனநிலை மக்களிடம் தெரிகிறது.

தி.மு.க.வின் கோட்டையாக இருந்தாலும், ராகுல் நேரடியாக கேட்டு வாங்கிய தொகுதி கிருஷ்ணகிரி. முதலில் முணுமுணுப்பிருந்தாலும் செல்லகுமார் தனது அணுகு முறையால் தி.மு.க. நிர்வாகிகளுடன் நெருக்கமாக, அவர்களுக்கேற்ப வளைந்துகொடுத்துச் செல்லும் போக்காலும் பிரச்சாரத்தில் வேகம்பிடித்திருக்கிறது.

அதேசமயம் கே.பி.முனுசாமி உள்ளூர் வேட்பாளர், செல்லகுமார் வெளியூர் வேட் பாளர் என்பதும் முக்கியமானது. காங்கிரஸ் வேட்பாளர் வாழப்பாடி ராமமூர்த்தி பலமுறை போட்டியிட்டு வென்ற தொகுதி. காங்கிரஸுக்கும் நல்ல அடித்தளம் உள்ள தொகுதி என்பது செல்லகுமாருக்கு ப்ளஸ்.

அ.ம.மு.க., அ.தி.மு.க.வின் வாக்குகளைப் பிரிப்பது செல்லகுமாரின் வெற்றிக்கு உதவலாம். சீனியரான கே.பி.முனுசாமி இதையும் கவனத்தில் எடுத்துச் செயல்படுவதால் பரபரக்கிறது தொகுதி நிலவரம்.

-அ.அருண்பாண்டியன்

தர்மபுரி

பா.ம.க. வேட்பாளராக அக்கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி களமிறங்க, தி.மு.க.வில் டாக்டர் dசெந்தில்குமாரும், அ.ம.மு.க. வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் களம் காண்கிறார்கள்.

மூன்று கட்சிகளுமே வன்னியர் வேட்பாளரையே நிறுத்தியிருக்கின்றன. கடந்த தேர்தலில் பா.ம.க. வெற்றிவாகை சூடிய தொகுதி. சென்றமுறை அ.தி.மு.க.வை எதிர்த்துநின்று வென்ற அன்பு மணி இம்முறை அ.தி.மு.க. ஆதரவுடன் களமிறங்குவது கூடுதல் வசதி. எதிர்மறை அம்சம் என்று பார்த்தால் வன்னியர் சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி குரு மகன் கலையரச னின், அன்புமணிக்கு எதிரான பிரச்சாரம், அ.தி.மு.க.-பா.ஜ.க. ஆட் சிக்கெதிரான மனநிலை, மூன்று கட்சி வேட்பாளர்களும் வன்னியர் கள் என்பதால் வாக்குகள் பிரிவது, அரூர் சட்டமன்றத் தனித் தொகுதியின் பெரும்பான்மை வாக்குகள் எதிரணிக்கே செல்லும் சாத்தியம் ஆகியவற்றைச் சொல்லலாம்.

வெற்றிபெற்றால் தர்மபுரியி லேயே வீடு எடுத்துத் தங்குவேன் என்றதை வெற்றிக்குப் பின் அன்புமணி மறந்தாலும் தொகுதி மக்கள் மறக்கவில்லை. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய இத்தொகுதிக்கு தொழிலையோ, வளர்ச்சியையோ கொண்டுவர குறிப்பிடத்தகுந்த நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

தி.மு.க. மா.செ.வான தடங்கம் சுப்பிரமணியின் விருப்பத்துக்குரிய சிபாரிசான மணியைப் புறம்தள்ளி விட்டு, முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனின் சிபாரிசால் எஸ்.செந்தில்குமார் வேட்பாள ராகத் தேர்வுபெற்றிருக்கிறார். மா.செ.வின் கோபத்தைத் தணித்து அவரை தனக்காக பணியாற்ற வைத்து ஆரம்பகட்ட தடையைத் தகர்த்திருக்கிறார் தி.மு.க. வேட்பாளர். எதிரணிக்குச் சளைக்காத பிரச்சாரமும், ஸ்டாலின் வாக்குச் சேகரிப்பும் தி.மு.க. கூட்டணிக்கு உற்சாகத் தைத் தந்திருக்கின்றன.

அன்புமணி வெளியூர்க் காரர், செந்தில்குமார் உள்ளூர்க்காரர்’’ என அடிக்கோடிட்டுக் காட்டியிருப்பது எத்தனை பலனளிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அ.ம.மு.க. வேட்பாளர் முன்னாள் அமைச்சர் பழனி யப்பன், அ.தி.மு.க.வின் பாரம்பர்ய வாக்குகளிலும் வன்னியர்களின் வாக்குகளிலும் கணிசமான பங்கை தன் பக்கம் ஈர்ப்பார். இதர சமூகத்தின் வாக்குகள் யார் பக்கம் திரும்பும் என்பதும் இத்தொகுதியில் முக்கியமான ஒன்றுதான். ராமதாஸ், அன்புமணி, முதல்வர் பழனிசாமி என பிரபலங்கள் தொடர்ந்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுவருவதும், கடைசிக் கட்ட கவர் கவனிப்புகளில் தாராளம் காட்டுவதும் கணிசமான விளைவுகளை ஏற்படுத்தும். தவிரவும் கடகத்தூர் பகுதியில் பிரச்சாரத்தின் போது அன்புமணி கண்ணீர் விட்டு அழுது சென்ட்டி மெண்டுக்கும் குறைவில்லாமல் செய்திருக்கிறார்.

சூரியன் வெப்பம் காட்ட, மாங்கனி பழுக்க நினைக்க, வன்னியர் வாக்கு எப்படிப் பிரிகிறது என்பது குறித்து இரு தரப்பும் கணக்குப் போடுகின்றன.

-அ.அருண்பாண்டியன்

ஸ்ரீபெரும் புதூர்

s

ளும்கட்சிக் கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக டாக்டர் வைத்தியலிங்கமும். மதச் சார்பற்ற முற் போக்குக் கூட்டணியின் தி.மு.க. வேட்பாளராக டி.ஆர்.பாலுவும், அ.ம. மு.க. சார்பில் தாம்பரம் நாராயணனும் இறுதிக் கட்ட விறுவிறுப்பில் பரபரப்பில் இருக்கிறார் கள். புகழ் பெற்ற செல் போன் கம்பெனியான நோக்கியாவை மூடிய தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நடுத் தெருவில் நிற்கிறார்கள். கொரியா கார் கம்பெனி யான கியா மோட் டார்ஸ் ஸ்ரீபெரும் புதூரில் தனது தொழிற் சாலையை திறக்க எத்தனித்த போது, மேலிடம் கேட்ட கட்டிங்கால் கதறியபடி ஆந்திராவுக்குப் போனது.

இதே சிப்காட் வளாகத்தில் ஏராளமானபேருக்கு வாழ்வு கொடுத்துக்கொண்டிருந்த சின்னச் சின்ன தொழிற்சாலைகள் பல சைலண்டாக மூடப்பட்டன. இதையெல்லாம் இப்போதைய அ.தி.மு.க. எம்.பி.யான கே.என். ராமச்சந்திரன் கண்டுகொள்ள வேயில்லை என்ற மக்களின் கடுப்பு, டாக்டர் வைத்தியலிங்கத் தின் மீது திரும்புகிறது.

வேட்பாளர் பா.ம.க. என்பதால் வழக்கம்போல் தே.மு.தி.க.வும் புரட்சி பாரதமும் பிரச்சாரம் பண்ணாமல் டிமிக்கி கொடுக்கின்றன. இத்தொகுதிக்குட்பட்ட அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக ஆளும்கட்சி யின் அலெக்சாண்டர் இருப்பதால், இங்கு பா.ம.க. வேட்பாளருக்கு நம்பிக்கை தரும் உழைப்பு வெளிப்படுகிறது.

தொகுதி மக்களுக்கு நன்கு தெரிந்த முகம் என்ற கெத்துடன் தெம்பாக பிரச் சாரத்தை முன்னெடுக்கிறார் தி.மு.க.வின் டி.ஆர்.பாலு. கட்சியின் முதன்மைச் செய லாளர் என்பதால், மா.செ. தா.மோ. அன் பரசன் தலைமையிலான கட்சி நிர்வாகி களும் உ.பி.க்களும் ரொம்பவே உற்சாகமாக களத்தில் பவனிவருகிறார்கள். மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைத்துறை அமைச்சராக டி.ஆர்.பாலு இருந்தபோது தமிழகத்திற்கு கொண்டு வந்த திட்டங்கள், கட்சி கடந்தும் தொகுதி கடந்தும் வரவேற்பைப் பெற்றிருப்பது உதயசூரியனுக்கு வலுச் சேர்க்கிறது.

மேலும் தாம்பரம், பல்லாவரம், ஆலந்தூர், மதுரவாயல், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. வலு வாக இருப்பதும் வெற்றிக்கோடு பாலுவின் பக்கம் நெருங்கிவரக் காரணமாக இருக் கிறது. தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி யுள்ளதால் நவீனசிகிச்சை வசதி கொண்ட அரசு மருத்துவமனை, அரசு கலைக் கல்லூரி, சிப்காட்டில் மூடப்பட்ட தொழிற் சாலைகலை திறக்க வேண்டும். இது இத் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பும், அதை டி.ஆர்.பாலு நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையும் அந்த மக்களிடம் இருக்கிறது.

அ.தி.மு.க.வின் கணிசமான வாக்கு களை வாங்கியே ஆகவேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் சுற்றி வருகிறார் அ.ம.மு.க.வின் தாம்பரம் நாராயணன். ஓரளவுக்கு கௌரவமான வாக்குகளை வாங்கினால் டார்ச் லைட்டுக்கு சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம் என்ற கணக்குடன் இருக்கிறார் ம.நீ.ம.வின் வேட்பாளர் வழக்கறிஞர் ஸ்ரீதர்.

-அரவிந்த்

தூத்துக்குடி

t

ல மாதங்களுக்கு முன்னரே தொகுதியில் கவனம் செலுத்தத் தொடங்கியவர் கனிமொழி. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், கனி மொழி குறித்து பேசிய உணர்வுபூர்வமான வார்த்தை கள் தி.மு.க.வினரை நெகிழ்ச்சியுடன் கலங்க வைத்தது என்னவோ உண்மை.

தூத்துக்குடி மக்களின் நாடியைப் பிடித்துப்பார்த்து பிரச்சாரம் செய்கிறார் கனிமொழி. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் 13 உயிர்களை கொன்றதை நியாயப்படுத்திப் பேசிய பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை, தனது பிரச்சாரத்தில் தன்னை ஒரு குறிப்பிட்ட சாதியின் பிரதிநிதியாக முன்னிறுத்துவதுடன், இந்து மத சென்ட்டிமென்ட்டையும் பயன் படுத்துகிறார்.

தமிழிசை அ.தி.மு.க. கூட் டணியில் இருந்தாலும், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் சண்முகநாதன் உள்பட எல்லா நிர்வாகிகளுமே அவ்வப்போது மட்டுமே தலைகாட்டி, தாமரை இலைத்தண்ணீர் போல ஒட்டாமல் ஒதுங்குகிறார்கள். அ.தி.மு.க. மட்டுமல்ல மற்ற கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள். தமிழிசை போகிற இடங்களில் எல்லாம் அவருக்கு ஆரம்பத்தில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது. அதன்பின் நிலைமை முன்னேறியது. எம்.பி. தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் 3 தனக்கு கை கொடுக்கும் என தாமரைத் தரப்பு நினைக்கிறது. அதற்கு அ.தி.மு.க.வின் ஒத்துழைப்பு தேவை. ஆனால் அ.தி.மு.க. வாக்குகளை அ.ம.மு.க. வேட்பாளர் புவனேஸ்வரன் பெருமளவு பிரிக்கிறார்.

அதேசமயம், கனிமொழி தனக்கு எதிராக பா.ஜ.க.வினர் பயன்படுத்தும் அஸ்திரங் களை சாதகமாக மாற்றி பிரச்சாரத்தை வலுப்படுத்துகிறார். கனிமொழிக்கு ஆதர வாக தேவேந்திர குல நிர்வாகிகள் பலர் தீவிரமாக வேலை செய்கின்றனர். வேட்புமனு தாக்கல் செய்யும்போது தனக்கு மாற்று வேட்பாளராக தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த வேல்முருகனை கனிமொழி பரிந்துரைத்தார். இப்படியாக எல்லாச் சமூகத் தினரையும் அரவணைத்துச் செல்லும் போக்கு அவருடைய வாக்கு பலத்தை அதிகரிக்கிறது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் உள்ள ஆறு தொகுதிகளில் தூத்துக்குடி, திருச் செந்தூர், ஸ்ரீவைகுண்டம், விளாத்திகுளம் ஆகிய நான்கு தொகுதிகள் கனிமொழிக்கு மிகப்பெரிய பலம்பொருந்திய தொகுதிகளாகவும், ஓட்டப் பிடாரம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகள் பலம் குறைந்த தொகுதி களாகவும் கருதப்படுகிறது.

நட்சத்திர தொகுதியான தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் கனிமொழி வேகம் காட்ட... கடைசிக்கட்ட வியூகங் களை நம்புகிறது அ.தி.மு.க. + பா.ஜ.க. கூட்டணி.

-நாகேந்திரன்

கள்ளக்குறிச்சி

k

முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியை தி.மு.க. வேட்பாளராக அறிவித்தவுடன் தொகுதி தி.மு.க.வினர் மத்தியில் நிலவிய அதிருப்தி இப்போது காணாமல் போய்விட்டது. அதுமட்டுமின்றி கௌதம சிகாமணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வேகத்துடன் தி.மு.க. கூட்டணியினர் ஓய்வின்றி உழைப்பதை பார்க்க முடிகிறது.

வலுவான வேட்பாளர் கிடைக்காத நிலையில்தான் கௌதம சிகாமணியை அறிவிக்க நேர்ந்தது என்று தலைமை விளக்கம் அளித்தபிறகு சமாதானம் அடைந்த தி.மு.க.வினரை, பொன்முடியும் தனித்தனியாக சந்தித்து இணக்கமான சூழலை உருவாக்கிய தாக கூறுகிறார்கள்.

களத்தில் வேலை செய்யும் கூட்டணிக் கட்சியினருக்கு கொஞ்சம்கூட சோர்வு ஏற் பட்டுவிடாத அளவுக்கு கவனிப்பு இருப்பதால் களைப்பின்றி வேலை செய்கிறார்கள். வேட் பாளரும் எந்தச் சங்கடமும் இல்லாமல் சந்துபொந்தெல் லாம் நுழைந்து வாக்காளர் களை சலிப்பின்றி சந்திக்கிறார். அதேசமயம், தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் சுதீஷ் பணத்தையும் உழைப்பையும் வெளிப்படுத்தவே மறுக்கிறார் என்கிறார்கள். அவருக்காக உழைக்கும் அ.தி.மு.க.வினரே செலவைச் சரிக்கட்டுவதாக வும், அவர்களையும் தே.மு. தி.க.வினருக்கு பணம் கொடுக் கத் தேவையில்லை என்று சுதீஷ் தடுப்பதாகவும் புலம்பு கிறார்கள்.

"தேர்தல் வியூகங்களில் நல்ல அனுபவம் மிக்கவரான சுதீஷ், இம்முறை அடக்கி வாசிப் பது ஆச்சரியம் தருகிறது. வாக்காளர்களை வேனில் இருந்தபடியே சந்திப்பதுடன், சில இடங்களில் கீழே இறங்கினாலும் உடனே வேனுக்குள் நுழைந்துகொள்கிறார்' என்கிறார்கள்.

"கடந்தமுறை காட்டிய சுணக்கத்தால் சுதீஷுக்கு டெபாசிட் போச்சு. இப்போது தானும் தராமல் தருகிறவர்களையும் தடுக்கிறார்' என்ற குற்றச்சாட்டு தே.மு.தி.க.வினர் மத்தியில் எதிரொலிக்கிறது.

"கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் கௌதம சிகாமணி, சுதீஷ் தவிர, அ.ம.மு.க. சார்பில் கோமுகி மணியன் மட்டுமே குறிப் பிடத்தக்க வேட்பாளராக இருக்கிறார். ஆனால், அவர் அ.தி.மு.க. வாக்குகளை எந்த அளவுக்கு பிரிக்கிறார் என்பது புதிராக உள்ளது. "தி.மு.க. வுக்கு இந்தத் தொகுதியில் உள்ள இஸ்லாமியர் வாக்குகள் பெரிய பிளஸ்பாயிண்ட்' என்கிறார்கள்.

கொங்கு வேளாளர், வன்னியர், தலித்துகள், பிள்ளைமார், உடையார் ஆகிய சாதி வாக்குகள் கணிசமாக நிறைந்த இந்தத் தொகுதி யில் கௌதம சிகாமணிக்கு தொடக்கத்தி லிருந்தே நிலைமை சாதகமாக இருக் கிறது. முக்கிய வேட்பாளர்கள் இரு வருமே தொகுதிக்கு சம்பந்தமில்லாத விருந்தாளிகள் என்றாலும், பொன்முடி யின் தேர்தல் வியூகங்களை ஏற்றுக் கொள்ள வாக்கா ளர்கள் தயாராக இருப்பதாக தி.மு.க.வினர் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

இறுதிக் கட்டத்தில் சுதீஷ் என்ன வியூகம் வகுக்கப்போகிறார் என அ.தி.மு.க. கூட்டணி எதிர்பார்த்துள்ளது.

-எஸ்.பி.சேகர்

சிதம்பரம்

c

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன்தான் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடுவார் என்பதால் பா.ம.க.வே தொகுதியை அ.தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்துவிட்டது. ஆனால், திருமாவுக்கு எதிரான பிரச்சாரத்தை அ.தி.மு.க.வைக் காட்டி லும் பா.ம.க.வினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வன்னியர் பகுதியில் வி.சி.க. வினர் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கும் நிலையும், தி.மு.க.வில் உள்ள வன்னியர்கள்கூட திருமாவின் சின்னமான பானைச் சின்னத்தை வரைய அனுமதிக்காத நிலையும் தொடக்கத்தில் இருந்தது. ஆனால், "திருமாவின் வெற்றியை உறுதிப்படுத்த வேண்டும்' என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டதைத் தொடர்ந்து... தி.மு.க. நிர்வாகிகள் கூடுதல் கவனம் செலுத்தி வேலை செய்கிறார்கள். பானை சின்னம் வரைந்ததை பா.ம.க.வினர் அழித்த தால் வன்னியர் உறவுக்காரர்கள் இடையே வாக்குவாதம்கூட ஏற்பட் டது. "தொகுதியில் நிற்கும் எல்லா வேட்பாளர்களுமே தலித்துகள் எனும்போது திருமாவுக்கு மட்டும் ஏன் வேலை செய்யக்கூடாது' என்று எதிர்க்கேள்வி கேட்பதால் பா.ம.க. வினர் பதிலளிக்க முடியாமல் செல்கிறார்கள்.

"வேறு கட்சிகளில் போட்டியிடும் தலித் வேட்பாளர் கள் அந்தந்த கட்சிகளுக்கு அடிமைகளாக இருப்பார்கள். திருமா தலித் மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பார் என்பதால்தான் பா.ம.க.வினர் கடுமையாக எதிர்க்கிறார்கள்' என்று வி.சி.க. நிர்வாகிகள் குமுறுகிறார்கள். திருமாவுக்கு எதிரான அவதூறுப் பிரச்சாரங்களை முறியடிப்பதில் வி.சி.க.வினர் வெற்றி பெற்றுள்ளதாகவே தெரிகிறது.

திருமாவும் எல்லா பகுதியினரையும் பாரபட்சம் இல்லாமல் சந்திக்கிறார். வன்னிய இளைஞர்களும், சிதம்பரம் தீட்சிதர்களும்கூட திருமாவை வரவேற்று ஆதரவு அளிக்கும் நிலையே நிலவுகிறது. சாதி அரசியலுக்கு அப்பாற்பட்ட தலைவராக தன்னை உயர்த்திக்கொள்ள திருமா முயற்சிக்கிறார் என்ற உண்மையை உணர்ந்தவர்கள் அவரை வரவேற்கிறார்கள். இதையும் தாண்டி திருமாவுக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும், காடுவெட்டி குருவின் குடும்பத்தினரும் குரல் கொடுக்கிறார்கள். அ.தி.மு.க. வேட்பாளர் சந்திர சேகர் இத்தொகுதியில் நிரந்தரமாக உள்ள இரட்டை இலை வாக்குகளை குறிவைத்து வேலை செய்கிறார். பா.ம. க.வினர் காட்டும் வேகம் அவருக்கு ஆறுதல் அளிக்கிறது.

அ.தி.மு.க.வினர் கடந்த மக்களவைத் தேர்தல் வாக்குகளை வைத்து மனக்கணக்கு போட, தி.மு.க. கூட்டணியினரோ கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. அணி பெற்ற வாக்குகளையும், அ.தி.மு.க. வாக்குகளை அ.ம.மு.க. வேட்பாளர் இளவரசன் பிரிக்கப் போவதையும் கணக்கிடுகிறார்கள். கடைசி நேரம் வரை பதற்றத்திற்குரியதாக மாறிவிட்ட சிதம்பரம் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் வி.சி.க. வேட்பாளர் திருமாவிடம் கூடுதல் தெம்பு தெரிகிறது.

-எஸ்.பி.சேகர்

ராமநாதபுரம்

r

ப்போதைய அ.தி.மு.க. எம்.பி. அன்வர் ராஜா கடந்த தேர்தலில் வாங்கிய 4,05,945, வாக்குகள், தனியாக நின்று பா.ஜ.க. வாங்கிய 1,71,082 வாக்குகள் இதையெல்லாம் கணக்குப் போட்டு, இப்போதைய பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஈஸியாக கரை ஏறிவிடுவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ஆளும் கூட்டணியினர். ஆனால் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கீழக்கரை, ஏர்வாடி, பெரியபட்டணம், மணக்குடி, ஆர்.எஸ்.மங்கலம் போன்ற பகுதிகளில் நயினாருக்கு எழுந்த எதிர்ப்பைப் பார்த்து ஆடிப் போய்விட்டனர். இதனால் தே.மு. தி.க. மா.செ. சிங்கை ஜின்னா, பா.ம.க. மா.செ. ஹக்கீம் ஆகியோரை பள்ளிவாசல் களுக்கு அனுப்பி ஓட்டுக் கேட்டு வருகின்ற னர். நயினார் நாகேந்திரனை இன்னும் அ.தி. மு.க.காரராகவே பார்ப்பதால், பா.ஜ.க.வினரின் ஒத்துழைப்பு அவ்வளவாக அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் ஒரு தரப்பு நயினாரின் "செல்வாக்கை' அறிந்து தீவிரமாக வேலை செய்கிறது.

ஏணி சின்னத்தில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நவாஸ்கனி, முழுக்க முழுக்க இஸ்லாமியர்களை நம்பி வலம் வந்து கொண்டிருப்பதால், தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க்கள் முகாமில் சுணக்கம் தெரிகிறது. "செலவுக்கு பணம் கேட்டுப் போனால், எங்களோட கம்பெனி ஊழியரிடம் லிஸ்டைக் கொடுத்து வவுச் சரில் கையெழுத்துப் போட்டு வாங்கிட்டுப் போங்க' என்கிறது நவாஸ்கனி தரப்பு. இதனால் உ.பி.க்கள் மத்தியில் கொந்தளிப்பு இருக்கிறது. தொகுதியில் இருக்கும் 13% முஸ்லிம் வாக்குகள், 4% கிறிஸ்தவ வாக்குகள், இதனுடன் தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க்கள் ஓட்டுக்களால் தனது வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நவாஸ்கனி. அ.ம.மு.க.வின் வ.து.ந.ஆனந்தோ, தங்க ளது கூட்டணியில் இருக்கும் எஸ்.டி.பி.ஐ. கட்சியால் இஸ்லா மிய வாக்குகளைக் கவர்ந்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக் கிறார். பிரச்சாரக் களத்திலும் முன்னணியில் இருக்கிறார் ஆனந்த்.

தாமரையும் ஏணியும் வெற்றிக் கோட்டை எட்ட கடும் முயற்சியில் இருக்கின்றன.

-நாகேந்திரன்

கோயமுத்தூர்

j

"மோடி புகழ் ரஃபேல் விமானத்தை நேர்ல பார்க்கணுமா, சி.பி.எம். வேட்பாளர் பி.ஆர்.நட ராஜன் பிரச்சாரத்திற்கு வரும்போது பாருங்கள்' என தோழர்கள் உற்சாகத்துடன் பிரச்சார பவனி வரு கிறார்கள். தோழர் பாலாஜி டீம் உருவாக்கிய ரஃபேல் விமான பிரச்சார ஜீப், வாக்காளர்களை ரொம்பவே கவர்கிறது. "மூணு வருஷமா உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமலேயே எல்லா வரிகளையும் உயர்த்தி விட்டார்கள். நான் வெற்றி பெற்றால் உயர்த்தப்பட்ட அநியாய வரிகளை ரத்து பண்ணுவேன்'’என தோழர் பி.ஆர்.என். பிரச்சாரத்தில் கொடுக்கும் வாக்குறுதியும் மக்களிடம் எடுபடுகிறது. வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் இருக்கிறார் பி.ஆர்.என்.

ஓட்டுக்கு 300 ரூபாய் என முதல்கட்ட பட்டு வாடாவை முடித்துவிட்டு, வலம் வருகிறார் பா.ஜ.க.வின் சி.பி.ராதாகிருஷ்ணன். "மோடியின் திட்டங்களால் நான் வெற்றி பெறுவேன்' என்கிறார் சி.பி.ராதா கிருஷ்ணன். "கடந்த தேர்தலில் அ.தி.மு.க.விற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்திற்கு வந்தது பா.ஜ.க. மூன்றாம் இடத் திற்குத் தள்ளப் பட்டது தி.மு.க. இதுதான் இப்போதைய வெற்றியின் சூட்சுமம்' என் கிறார் சி.பி.ஆர். ஆனால் "அம்மா இல்லாத இரட் டை இலைக்கு ஓட்டுப்போட மனசே வரலீங்க' என்கிறார்கள் இரட்டை இலை விசுவாசிகள். "கேஸ் சிலிண்ட ருக்கு எங்ககிட்ட ஆயிரம் ரூபாய் வாங்கி, எங்களுக்கே மானியம் தருவாராம் மோடி, அவருக்கு நாங்க ஓட்டுப் போடணுமாம்' என்ற கோபக் குரல்களும் கோவை மக்க ளிடம் எதிரொலிக்கிறது. ஜி. எஸ்.டி.யால் தொழில் நகரமான கோவை முடங்கிப் போனதும் சி.பி.ஆருக்கு மைனஸாக இருக் கிறது. தோழர் பி.ஆர்.நடராஜ னின் எளிமையான அணுகு முறை, காம்ரேடுகளின் களப் பணி, தி.மு.க.வினரின் உழைப்பு இவை அந்தக் கூட்டணிக்கு சாதகமாக இருந்தாலும், சாதி ஓட்டுகளையும் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியையும் நம்புகிறது பா.ஜ.க. வேட்பாளர் தரப்பு.

கடைசிகட்ட வில்லங்கத்தை தடுத்து வெற்றியை எதிர் பார்க்கிறார்கள் தோழர்கள்.

-அருள்குமார்

விழுப்புரம்

v

விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க., அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் என வேட்பாளர்கள் வரிசை கட்டினாலும் வி.சி.க.வின் ரவிக்குமாருக்கும் பா.ம.க.வின் வடிவேல் ராவணனுக்கும் இடையேதான் கடும் போட்டி. தலித் மக்கள் ஏரியாவில் பா.ம.க. வேட்பாளரும் வன்னியர் ஏரியாவில் வி.சி.க. வேட்பாளரும் வாக்கு கேட்பதில் டென்ஷன் நிலவியதால், போலீஸ் சமாதானப்படுத்தும் நிலைக்கு போனது. குறிப்பாக கோலியனூர், தாதாம்பாளையம், மூங்கில்பட்டு ஆகிய கிராமங்களில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டுப் போனவர்களிடம் வி.சி.க.வினர் கடுமை காட்டியதால் போலீஸ் தரப்பு ரொம்பவே திணறியது. விழுப்புரம் தி.மு.க. மா.செ.க்களான பொன்முடியும் செஞ்சி மஸ்தானும் வி.சி.க. வேட்பாளர் ரவிக்குமாருக்காக வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இருக்கிறார்கள்.

தலித் மக்கள் பல்வேறு கட்சிகளில் இருந்தாலும் கட்சி கடந்து ரவிக்குமாரை ஆதரிக்கும் மனநிலையில் உள்ளனர். உதயசூரியனில் நிற்பது அவருக்கு கூடுதல் பலம். வன்னியர் அல்லாத மற்ற சமூக வாக்குகளை கவர்வதில் வடிவேல் ராவணன் கவனம் செலுத்துகிறார்.

இரட்டை இலைக்கு ஓட்டுப் போட்டுப் பழக்கப்பட்ட அ.தி.மு.கவில் இருக்கும் தலித்துகள், மாம்பழத்திற்கு ஓட்டுப் போடுவதில் தயக்கம் காட்டுவதை தெரிந்து கொண்ட அ.தி.மு.க. மா.செ.க்களான குமரகுருவும் சண்முகமும், கட்சிப் பொறுப்பில் இருக்கும் தலித்துகளை அழைத்து கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்க வற்புறுத்தி வருகின்றனர். கடந்த 10-ஆம் தேதி, முதல்வர் எடப்பாடி பிரச்சாரம் செய்துவிட்டுப் போன பின்பு, பா.ம.க. தரப்பில் உற்சாகம் தெரிகிறது.

கடைசிக்கட்ட நிலவரப்படி, வடிவேல் ராவணனை, ரவிக்குமார் முந்துவதற்கு நிறைய உழைப்பு தேவை.

-எஸ்.பி.சேகர்

அரக்கோணம்

a

மாஜி மத்திய மந்திரிகளான தி.மு.க. ஜெகத்ரட்சகனும், பா.ம.க.வின் ஏ.கே.மூர்த்தியும் புழுதி பறக்கக் கடுமையாக முட்டிமோதும் வி.ஐ.பி. தொகுதி இது. மொத்தம் 19 வேட் பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள்.

அ.ம.மு.க. பார்த் திபனும் விர்விர்ரென்று வாள் சுழற்றுகிறார். தொகுதியில் பலமாக இருக்கும் வன்னிய சமூக வாக்கு வங்கியை குறிவைத்துதான், அதே சமூகத்தைச் சேர்ந்த வர்களைத் தி.மு.க.வும், பா.ம.க.வும் கள மிறக்கிவிட்டுள்ளன. பா.ம.க. இளைஞர்களும் அ.தி.மு.க.+ பா.ஜ.க., தே.மு.தி.க.வுடன் இணைந்து பணியாற்றுவதில் சுணக்கம் காட்டுகிறார்கள். இதையறிந்த தி.மு.க. ஜெகத் தரப்பு, அவர்களைத் தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டு... பா.ம.க. கிராமங்களிலும் உலா வருகிறது. பா.ம.க. மூர்த்தியோ, ""நான் சாமானியன், ஜெகத்தோ பணக்காரர். சாமானியனே சாமானியர் களுக்காக உண்மையாகப் போராடுவான்'' என்றபடி டீக்கடைகள் வரை இறங்கி நின்று பிரச்சாரம் செய்கிறார். பா.ம.க. தரப்போடு ஒட்டமுடியாத இலைத் தரப்பினரை, அ.ம.மு.க. பார்த்திபன், பாசம் காட்டி தன் பக்கம் இழுத்துக்கொண்டிருக்கிறார்.

சோளிங்கர், இராணிப்பேட்டை, ஆற்காடு இந்த மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் பா.ம.க. பலமாக உள்ளதால், இங்கு தீவிர கவனம் செலுத்துகிறது ஜெகத் தரப்பு. ராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் ஜெகத்துக்காக அவர் மகள், தி.மு.க. மா.செ. காந்தி மனைவியோடு, கைகோத்து மகளிர் புடைசூழ கேன்வாசிங் செய்துகொண்டிருக்கிறார்.

சோளிங்கர், ஆற்காடு பகுதிகளில் பலமாக இருக்கும் முதலியார் சமூக வாக்குகளுக்காக, அதே சமூகத்தைச் சேர்ந்த அ.ம.மு.க. பார்த்திபன் வேகமாகச் சென்றார். இலைத் தரப்புக்கு விழவேண்டிய அவர்களின் வாக்குகளை பார்த்திபன், அறுவடைசெய்து விடுவாரோ என்று மிரண்டு போன பா.ம.க. தரப்பு, ஆளும் தரப்பின் துணையோடு அ.ம.மு.க. பார்த்திபனிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன்பின் அவரது பிரச்சார வேகம் குறைந்துவிட்டது என்கிறார்கள். இதையெல்லாம் கவனித்த ஜெகத் ரட்சகன், முதலியார் வாக்குகளை ஈர்க்க, ’முதலியார் முன்னேற்ற சங்கம்’ உள்ளிட்ட சிறு சிறு அமைப்புகளையும் வசீகரித்துள் ளார். இதே சமூகத்தைச் சேர்ந்த ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப் பனையும் தன் கையருகிலேயே வைத்துக்கொண்டு களத்தைக் கலக்கு கிறார்.

பா.ம.க. மூர்த்தி, தான் எம்.பி.யாகவும், மத்திய அமைச்ச ராகவும் இருந்தபோது செய்த சாதனைகளைப் பட்டியலிட்டு ஓட்டுக் கேட்கிறார். அவரது பேச்சு, கிராம மக்களை கவனிக்க வைக்கிறது. இவை எல்லாவற்றையும் "கவனித்து' செயல்படக்கூடியவராக காய் நகர்த்துகிறார் தி.மு.க. வேட்பாளர் ஜெகத்ரட்சகன்.

கடைசி நேர கவனிப்புகள்மீது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு உள்ளது.

-து.ராஜா

திண்டுக்கல்

d

ங்களின் முதல் வெற்றித் தொகுதியான திண்டுக்கல்லை பா.ம.க.வுக்கு தாரை வார்த்ததில் அதிர்ச்சியடைந்த ர.ர.க்களின் மனநிலை இன்னும் மாறவில்லை. மேலும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது ஸ்டைலில் ஆப்பிளுக்கு ஓட்டுக் கேட்டு, பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவை ஜெர்க்காக்கி வருகிறார். கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், அந்த சமூக மக்களிடமே ஜோதிமுத்துவுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை. அதேபோல் கிறிஸ் தவ வன்னியர்களும் பா.ம.க. வேட்பாளரை ஆதரிக்கவில்லை. இறுதிக்கட்டம் வரை பின்னோக்கியே தான் இருக்கிறது ஜோதிமுத்து தரப்பு.

1999-க்குப் பிறகு இப்போதுதான் நேரடியாக களம் இறங்குகிறது தி.மு.க. கட்சியின் து.பொ.செ. ஐ.பெரியசாமி, கொறடா சக்கர பாணி, ஐ.பி.செந்தில்குமார், ஆண்டி அம்பலம் என மாவட்டத்தில் நான்கு தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருப்பது, எம்.பி.வேட்பாளர் வேலுச்சாமிக்கு சகல திசைகளிலும் சாதகமாகவே இருக்கிறது. கட்சி நிர்வாகிகள் யாரையும் விட்டுவிடாமல் அனைவருக்கும் ஏரியாக்களைப் பிரித்துக் கொடுத்து, வேலை வாங்குகிறார் ஐ.பி. தி.மு.க. மற்றும் காங்கிரசின் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பும் வேலுச்சாமிக்கு ப்ளஸ்ஸாக இருக்கிறது.

பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த ஜோதி முருகன்தான் அ.ம.மு.க.வின் வேட் பாளர். அந்த சமூக ஓட்டுகளும் டி.டி.வி. ஆதரவால் கிடைக் கும் பிறமலைக் கள்ளர் ஓட்டுகளும் ஜோதிமுருகனுக்கு பிரகாசமாக தெரிந்தாலும் மற்ற அம்சங்கள் எல் லாமே டல்லாகத் தான் இருக்கிறது.

35 வருடங் களுக்குப் பிறகு, பூட்டு நகரான திண்டுக்கல்லில் உடன்பிறப்புகளிடம் புதிய நம்பிக்கை தெரிகிறது.

-சக்தி

தஞ்சாவூர்

t

.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா. வேட்பாளரான என்.ஆர்.நட ராஜன், ஆட்டோ சின்னத்தில் களம் காண்கிறார். இரண்டு முறை தொகுதியைச் சுற்றி வந்திருந்தா லும், கஜா, ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய மூன்று புயல்கள் சேர்ந்து நடராஜனை கடுமையாகத் தாக்குகின்றன. அதிலும் நடராஜனின் சொந்த ஊரான பட்டுக் கோட்டை மற்றும் பேராவூரணி சட்ட மன்றத் தொகுதிகளில்தான் தென்னை விவசாயிகளும் மீனவர்களும் கஜாவால் வாழ்விழந்து நிற்பவர்கள். இந்த ஏரியாக்களில் நடராஜனால் நுழையக்கூட முடியவில்லை. ஆளும் கட்சி மீதிருக்கும் மொத்த கோபமும் நடராஜன் பக்கம் திரும்புவதால் திண்டாட்டத்தில் இருக்கிறது ஆட்டோ.

2014-க்கு முன்பு வரை தொடர்ந்து ஐந்து முறை வெற்றிவாகை சூடியவர் தி.மு.க.வின் பழனி மாணிக்கம். தஞ்சை, மன்னார்குடி, திருவையாறு தொகுதிகளில் தி.மு.க. வலுவாக இருப்பது பழனி மாணிக்கத்திற்கு பல வழிகளிலும் தெம்பைத் தருகிறது. சில உள்ளடி வேலைகளை, கட்சித் தலைவர் ஸ்டாலின் சரிப்படுத்தி யிருப்பதில் சந்தோஷமாக இருக்கும் பழனி மாணிக்கம், அதிருப்தியாளர்களை குளிர்ச்சியூட்டியுள்ளார். முக்குலத்து இளைஞர்கள் வாக்குகள், தின கரன் அமைத்துள்ள பூத் கமிட்டி, எங்கு சென்றாலும் தனக்கு கூடும் கூட்டம் இவற்றையெல்லாம் கணக்குப் போட்டு, வெற்றியை எதிர்பார்க்கிறார் அ.ம.மு.க.வின் முருகேசன். ஆனால் மக்கள் மனதை இவரின் பிரச்சார பாணி ஈர்க்கவில்லை.

கள நிலவரம் அறிந்துதான், அ.தி. மு.க. ஒதுங்கிக் கொண்டு தங்களி டம் தொகுதியை தள்ளிவிட்டதோ என யோசிக்கி றார்கள் "ஆட்டோ' வில் தள்ளாடிப் பய ணிக்கும் த.மா.கா.வினர்.

-இரா.பகத்சிங்

சிவகங்கை

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி, திருமயம் சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் வலுவாக இருப்பதால், சிவகங்கை எம்.பி. தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் சற்று தெம்பாகவே இருக்கிறார். சிவகங்கை sமாவட்டத்தில் இருக்கும் ஏனைய 4 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்குகளைக் கைப்பற்ற ரொம்பவே மெனக்கெடும் கார்த்தி, பெண்களுக்குப் பிடித்த டி.வி.சீரியல் கதைகளைச் சொல்லி, வாக்காளர்களை கவர்கிறார். "சீமான் வீட்டுப் பிள்ளை இப்படி வேகாத வெய்யில்ல சுத்துறியே, கொஞ்ச இளைப்பாறிட்டு, ஒரு வாய் காப்பித் தண்ணி குடிச்சுட்டுப் போ ராசா'’என அன்போடு அழைக்கும் பெண்மணியுடன் செல்ஃபி எடுத்து உற்சாகமாகிறார் கார்த்தி. கூட்டணிக் கட்சிகளின் ஒன்றிய, நகர நிர்வாகிகளுக்கு கொஞ்சமே கொஞ்சம்தான் பணம் போயிருக்கிறதாம். "எங்க கைக்காசையா போட்டு செலவழிக்க முடியும்? பெரிய தொகையா வாங்கிக் கொடுங்க' என தி.மு.க. மா.செ. பெரியகருப்பனிடம் நிர்வாகிகள் கேட்டபோது, "அவர்ட்ட எப்படிய்யா கேக்குறது'’என தயங்குகிறாராம்.

தன் மீதிருக்கும் வெறுப்பு அரசியலை மூலதனமாக்கி, அதில் தாராளமாக பணத்தை அள்ளி இறைத்து, சொந்தக் கட்சியினரையும் கூட்டணிக் கட்சியினரையும் ஈஸியாக ஈர்க்கிறார் பா.ஜ.க.வின் எச்.ராஜா. என்ன ஒண்ணு ராஜாவின் மேனரிசம்தான் மக்களை எரிச்சலாக்குகிறது. அமைச்சர் பாஸ்கரன் மானாமதுரையில் டேரா போட்டுவிட, சாக் கோட்டை சின்னையா அம்பலத்தை வைத்துக் கொண்டு சமாளிக்கிறார் எச்.ராஜா.

தனது சமுதாய வாக்குகள் தன்னைக் கரை சேர்க்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் அ.ம.மு.க.வின் தேர்போகி பாண்டி. ஆனால் மா.செ. உமாதேவனின் உள்ளடி வேலைகள், பாண்டியை பதற வைக்கின்றன.

எச்.ராஜாவின் செயல்பாடுகளால் அவர் மீது மக்களுக்கு இருக்கும் வெறுப்புதான் கார்த்தி சிதம்பரம் முன்னிலைபெற முக்கிய காரணமாக அமையும்.

-நாகேந்திரன்

வேலூர்

வெற்றியும் தோல்வியும் பரமபத ஆட்டத்தில் வரும் பாம்பும் ஏணியும் போலத்தான். வேலூர் நாடாளுமன்றத் தொகுதி vநிலவரமும் இப்படித்தான் ஒருவர் முந்தி… ஒருவர் பிந்தி என மாறி மாறி நிலவும் சூழலே உள்ளது.

பெரும்பணத்தைச் செலவழித்து தொகுதி மக்களின் மத்தியில் தன்னை பிரபலப்படுத்தி வைத்திருக்கிறார் ஏ.சி. சண்முகம். அப்பா துரை முருகனின் பிரபல வெளிச்சத்தில் தன் முகமும் தெரியும்படி பார்த்துக்கொண்டார் கதிர் ஆனந்த்.

இரண்டு பலமிக்க கரங்கள் பலப்பரீட்சை யில் இறங்கும்போது, உச்சகட்ட போட்டி நிலவுவது தவிர்க்கமுடியாதது. முதல்கட்ட பிரச்சாரத்தில் ஏ.சி.எஸ்.ஸின் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருந்தது. கதிர் ஆனந்த் தீவிர பிரச்சாரத்தில் இறங்கினார். மக்கள் மத்தியில் துரைமுருகனும் கதிர் ஆனந்தும் சூறாவளியாய்ச் சுற்றினார்கள். இந்நிலையில் ஏ.சி.எஸ்.ஸின் வெற்றிக்கான உத்தரவாதம் குறைந்தது.

துரைமுருகனின் வேகத்தைக் குறைக்கத் திட்டமிட்ட எதிரணி, அவரது வீடு, கல்லூரி, அலுவலகம், ஆதரவாளர் வீடுகளில் ரெய்டு நடத்தி 10.4 கோடி ரூபாயை சிக்கவைத்தது. அதோடு வருமானவரித் துறை அறிக்கையை வைத்து தேர்தல் செல வின பார்வையாளர் சிலுப்பன் மூலமாக காட்பாடி காவல் நிலையத்தில் புகார் தரவைத்து கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. அவர் வெற்றிபெற்றாலும் நாளை, வெற்றிசெல்லாதென நீதிமன்றம் மூலம் அறிவிக்க வைக்கலாம் என்கிற வியூகமாம்.

இதற்கிடையில் மீண்டும் களத்தில் தீவிரம்காட்டி தனது முதலியார் சமூக வாக்குகள், கிறிஸ்துவ வாக்குகளை தன் பக்கம் ஈர்ப்பதில் குறிப்பிடத்தக்க வெற்றிபெற்றுள்ளார் ஏ.சி. சண்முகம்.

ரெய்டு டென்ஷனிலிருந்து வெளியே வந்த கதிர்ஆனந்த், வன்னியர் வாக்குகள், இஸ்லாமிய வாக்குகள், கிறிஸ்துவ வாக்குகள்மீது தீவிர கவனம் செலுத்தி வாக்கு சேகரிப்பை நடத்தி முடித்துள்ளார்.

அ.ம.மு.க. வேட் பாளரும் முன்னாள் அமைச்சருமான பாண்டுரங்கன், தொகுதியில் கணிச மாகவுள்ள நாயுடு வாக்குகளை தன் பக்கம் ஈர்ப்பதில் ஓரளவு வெற்றிபெற்றுள்ளார். கூடுதலாக தி.மு.க. தன் பக்கம் திருப்பியுள்ள இஸ்லாமிய வாக்குகளிலும் ஓட்டையைப் போட்டுள்ளார். தி.மு.க. வேட்பாளருக்கு உட்கட்சி எதிரிகள் அதிகமாகவுள்ளதால் வைட்டமின் "ப'வையும் வெளியே எடுக்கமுடி யாமல் தடுமாறுகிறார்கள். தொகுதியை வருமானவரித்துறையும், தேர்தல் ஆணையமும் கண்கொத்திப்பாம்பாக கவனிக்கிறது.

மீண்டும் இத்தொகுதிப் பக்கம் பிரச்சாரத்துக்கு ஸ்டாலின் வருவது நிலைமையை மாற்றும் என்கிறார்கள் தொண்டர்கள்.

முந்திச் செல்லும் ஏ.சி.சண்முகத்தை விரட்டிப் பிடித்துவிட முடியும் என நம்புகிறது தி.மு.க.

-து.ராஜா

தென்காசி

ற்கனவே இரண்டு முறை போட்டியிட்டு அனுபவம் பெற்ற தென்காசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி. இந்தமுறை இரட்டைஇலைச் சின்னத்துடன் tகளத்திற்கு வருகிறார். தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் வாழும் தாழ்த்தப்பட்ட மக்களிடம் முன்பிருந்த வரவேற்பு சற்று குறைந்துள்ளது.

"தென்காசியை மாவட்டமாகவும், குற்றாலத்தை சுற்றுலா மையமாகவும்' ஆக்குவேன் போன்ற திட்டங்களை முதன்மையாக முன்வைக்கிறார். கடந்த தேர்தலில் வாக்குறுதிகளை அள்ளிவீசி தொகுதியில் பதவியைப் பிடித்த அ.தி.மு.க.வின் சிட்டிங் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளே டாக்டருக்கு சவாலாக இருக்கின்றன.

அ.ம.மு.க. வேட்பாளர் பொன்னுத்தாய் நெருக்கடி கொடுக்கிறார். தொகுதியில் இருக்கும் அ.தி.மு.க. சார்புநிலை கொண்ட அதிருப்தி தேவர் சமுதாய வாக்குகளை தன்பக்கம் இழுப்பதில் முனைப்பு காட்டுகிறார். அதோடு சேர்த்து முஸ்லிம் கூட்டணி மூலம் இசுலாமியர்கள் வாக்குகளையும் பிரிக்கிறார். முதற்கட்ட கரன்சி சப்ளை முடிந்து அடுத்த ரவுண்டுக்காக காத்திருக்கும் பொன்னுத்தாய், அ.தி.மு.க. வாக்குகளை கணிசமாக கவர் செய்வார்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு தொகுதியில் தி.மு.க. களம் காணும் நிலையில், தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமாருக்கு, எதிரணியினரின் பலவீனங்களே பலம் சேர்க்கின்றன. தொகுதிப் பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியனின் அனுபவம் கூடுதல் பலம் சேர்க்கிறது. சமய, சமுதாய பேதங்களைக் கடந்து திட்டங்களைச் செயல்படுத்திய கடையநல்லூர் எம்.எல்.ஏ. அபுபக்கர் மீதான நன்மதிப்பு தி.மு.க.வுக்கு கை கொடுக்கிறது. வைகோவின் பூர்வீகமான குருவிக்குளம் யூனியனில் இருக்கும் நாயக்கர் சமுதாய வாக்குகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கிகளும் தனுஷ் குமாருக்கே சாதகமாக இருக்கின்றன.

-பரமசிவன்

திருவண்ணாமலை

.தி.மு.க. வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி ஊர்ஊராகச் சுற்றி தீவிரமாக வேலைபார்க்கிறார். கட்சிக்குள் அவருக்கு tஎதிரானவர்களான மாஜி அமைச்சர் ராமச்சந்திரன், மாஜி மா.செ. ராஜன் போன்றோர் ஒத்துழைக்கவில்லை. மற்றவர்கள் வேண்டாவெறுப்புடன் வேலை பார்ப்பதைத் தெரிந்துகொண்ட அக்ரி, திருப்பத்தூர் கூட்டத்தில் கட்சியினர் மத்தியில் "உங்களை நம்பித்தானே நிற்கிறேன்' என கண்கலங்கிவிட்டார்.

தி.மு.க. வேட்பாளர் அண்ணாதுரை சென்றமுறை போட்டி யிட்டு தோற்றவர் என்கிற பரிதாபம் மக்கள் மத்தியில் இருக்கிறது. அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. வேட்பாளர்கள் மூவருமே முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். அந்தச் சமுதா யத்தைச் சேர்ந்த சிலர், "மற்ற இருவரைவிட அண்ணாதுரை சாதுவானவர் என்பதால் அவரை ஆதரிக்கலாம்' என்று கூடிப் பேசுவது அவருக்குப் ப்ளஸாக இருக்கிறது.

ஏற்கனவே அக்ரி மீது மக்களுக்கு இருக்கும் நெகட்டிவ் இமேஜ், அரசு ஊழியர்களுக்கு இருக்கும் கோபம் எல்லாவற்றோடும் சேர்த்து, "வேளாண் அதிகாரி தற்கொலைக்குக் காரண மானவர்'’என பிரச்சாரம் செய்து ஸ்கோர் செய் கிறது தி.மு.க. தரப்பு. திருவண்ணாமலை தி.மு.க. மா.செ.வும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு, கீழ் பென்னாத்தூர் எம்.எல்.ஏ. பிச்சாண்டி, செங்கம் எம்.எல்.ஏ. கிரி, திருப்பத்தூர் எம்.எல்.ஏ. நல்ல தம்பி மற்றும் ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ள மா.செ. முத்தமிழ்ச்செல்வி ஆகிய ஐந்துபேரும் தங்களது தொகுதிகளில் தி.மு.க.வை வெற்றிபெறச் செய்ய கடுமையாக உழைக்கின்ற னர். கூட்டணிக் கட்சிகளும் ஒத்துழைக்கின்றன. அக்ரிக்கு இப்படி உழைப்பைக் கொட்ட ஆளில்லை. பா.ம.க. மற்றும் தே.மு.தி.க.வுக்கு பல முள்ள பகுதிகளின் வாக்குகளையே நம்பியிருக் கிறார் அவர். தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளுந்தரப்பின் பணம் புரளப்போகிறது. அதை சமாளிக்க, தி.மு.க. வியூகம் வகுத்து முன்னேறு கிறது.

-து.ராஜா

நாகப்பட்டினம்

.தி.மு.க. வேட்பாளர் மா.சரவணன் தொகுதி மட்டுமல்லாமல், கட்சிக்குள்ளேயே அறிமுக மில்லாத நபர். மண்ணின் nமைந்தர்களாக எத்தனையோ சீனியர்கள் இருந்தாலும், சென்னையில் வசித்து வருபவரும் நான்கு மாதங்களுக்கு முன்பே கட்சியில் சேர்ந்தவருமான சரவணனுக்கு சீட் கொடுத்திருப்பது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம், தி.மு.க. கூட்டணி வேட்பாளரான சி.பி.ஐ. கட்சியின் செல்வராஜ், மூன்றுமுறை இதே தொகுதியில் எம்.பி.யாக இருந்த வர். போராட்டக் களங்களில் நின்றவர். “""எங்களால அ.தி.மு.க., அ.ம.மு.க. போல பணம் கொடுக்க முடியாது. உங்க கிட்ட உண்டியல் வசூல் பண்ணிதான் செலவு செய்யுறோம். கஜா புயல் சமயத்துல உங்ககூடவே சாப் பிட்டு உறங்கி இருக் கோம்''’என சென்ட்டி மெண்டாக பேசி கவர் செய்கிறார். அதே சமயம், ஆலோசனைக் கூட்டங்களை நடத்தாதது, செலவு செய்யாதது, கூட்டணிக் கட்சிகளைச் சந்திக்காதது உள்ளிட்ட சிக்கல்களும் இவருக்கு இருக்கிறது.

இதற்கிடையே அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீதான கஜா நேர வெறுப்பு, சிட்டிங் எம்.பி. டாக்டர்.கோபால் மீதான கடுப்பு, கஜா புயலின்போது கண்டுகொள்ளாத பா.ஜ.க. உடனான கூட்டணி என இத்தனை சறுக்கல்களுக்கு மத்தியில், அ.ம.மு.க. பிரிக்கும் வாக்குகள் மூலம் சி.பி.ஐ. செல்வராஜுக்கு பலம்சேர்க்கிறார் சரவணன். இருப்பினும், ஏப்.08 முதல் தொடங்கியிருக்கும் பணமழை ஓரளவுக்கு எதிர்ப்பு வெப்பத்தைத் தணிக்கும் என்று அ.தி.மு.க. எதிர்பார்க்கிறது.

அ.ம.மு.க. வேட்பாளர் செங்கொடிக்கும் பெரிய அளவில் அறிமுகம் கிடையாது. தொகுதியை வேளாண் மண்டலமாக அறிவிப்போம் என்கிற அறிவிப்பும், கடைசி நேரத்தில் கொடுக்கப்போகும் கரன்சியும் மூன் றாவது இடத்தை அவருக்குப் பெற்றுத் தரும். கஜா புயல் தாக்கிய தொகுதியில் தேர்தல்நேரப் பணப்புய லையும் எதிர்த்து நிற்க முடியும் என நம்புகிறது கதிர் அரிவாள். தி.மு.க. தலைமைக்கும் இது குறித்து தெரிவிக் கப்பட்டுள்ளது.

-க.செல்வக்குமார்

பெரம்பலூர்

பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் ஐ.ஜே.கே. பாரிவேந்தரும், அ.தி.மு.க.வில் இருமுறை அமைச்சராக இருந்த சிவபதியும், அ.ம.மு.க. சார்பில் ராஜசேகரனும் களமாடிவரு கின்றனர்.

p

முத்தரையர் செல்வாக்குள்ள தொகுதி யென்பதால், ஆர்.விஸ்வநாதன், செல்வகுமார் ஆகியோரை சரிக்கட்டி ஆதரவை வாங்கி யிருக்கிறார் அமைச்சர் சிவபதி. ஆனால் செல்வகுமார் ஆரம்பத்தில் பாரிவேந்தருக்கு ஆதரவளித்ததும், வேந்தரும் செல்வகுமாரின் மனம் குளிரும் வண்ணம் நடந்து கொண்டதும் அவர் சமூக மக்களிடையிலேயே உறுத்தலாக இருக் கிறது. புதிய ஃபார்சூனர் கார் புக் செய்யு மளவுக்கு வேந்தரின் கடைக்கண் பார்வை செல்வகுமாருக்கு கிடைத்திருக்கிறது என்கிறார்கள் தொகுதிக்காரர்கள்.

சிவபதி, தமக்கு முழுமையாக முத்தரையர் ஆதரவு இருக்கிறது. தாம் ஜெயித்து எம்.பி. ஆகிவிட்டோம் என்று நினைப்பதை மற்ற சமூகத்தினர் ரசிக்கவில்லை. பெரம்பலூரில் உள்ள சிறுபான்மையின மக்க ளிடையே அவரது பாரபட்சம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.ம.மு.க.வைச் சேர்ந்த ராஜசேகரன், முத்தரையர் சங்கத் தலைவர் ஆர். விஸ்வநாதனின் உறவுக்காரர் என்பதாலும், அ.தி.மு.க. அதிருப்தி ஓட்டுக்களைப் பிரிப்பதாலும் உதயசூரியனில் நிற்கும் பாரிவேந்தருக்கு அது சாதகமாக அமையும் என்கிறார்கள். இந்தத் தொகுதியில் பாரிவேந்தரின் மருத்துவக் கல்லூரி இருப்பதும் விலையில்லா மருத் துவம், குறைந்த விலை மருத்துவம் இங்கு அளிக்கப்படுவதும் கூடுதல் சாதகம்.

ஏற்கெனவே இந்தத் தொகுதியில் ஜெயித்த அ.தி.மு.க. மருதராஜை தொகுதிப் பக்கமே காணாததும், அவர் பெரம்பலூர் தொகுதிக்கு சொல்லிக்கொள்கிற மாதிரி எதுவுமே செய்யாததும் ஆளும்கட்சி மீதான அதிருப்தி அதிகரிக்கக் காரணமாகிறது.

போதாக்குறைக்கு ஆளும்கட்சியினரே சிவபதிக்கு சீட்டுக்கொடுக்கக்கூடாதென முதல்வரிடம் முறையிட்டும், பழக்கத்தின் காரணமாக அவருக்கு சீட்டு கொடுக்கப்பட்டி ருப்பதும், எதிர் பார்த்த தொகை யைச் செல விடாமல், மேலே யிருந்து பணம் வரும்போது செலவழித்துக் கொள்ளலாமென 2 ரவுண்டோடு பணப் பட்டுவாடாவை நிறுத்திக்கொண்டதும் கட்சியினரிடையே அதிருப்தியை உண்டாக்கி யுள்ளது. கூட்டணிக் கட்சியினரை உற்சாக மாக வைத்துக்கொள்வது, தேவைக்கேற்ப பணம் செலவழிப்பது இவற்றில் பாரிவேந்தர் முன்னணியில் இருக்கிறார். முத்தரையர் வாக்குகளை அ.தி.மு.க.வுக்கு ஈர்ப்பதற்காக சிவபதிக்கு துணையாக 6 பேரை எடப்பாடி நியமித்துள்ளார்.

கடைசி நேர கணக்குகளில் கவனமாக இருக்கிறது அ.தி.மு.க.

-ஜெ.டி.ஆர்.

தேனி

ள்ளூர் ஆட்கள் முட்டி மோதிக்கொண்டிருக்கும் தேனி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் ஈ.வி.கே.எஸ். tஇளங்கோவனை வெளியூர் வேட்பாளர் என்று விமர்சனம் செய்தாலும், தன்னை தமிழகத்தின் பொதுவேட்பாளராக அறிவித்துக்கொண்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.

அ.தி.மு.க. சார்பில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் குமார், அ.ம.மு.க. சார்பில் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் அ.தி.மு.க.வின் வாக்குகளை யார் அதிகமாக கூறு போடுவது என்று பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று அறிவிக்கும் ஈ.வி.கே.எஸ்., "இது ராகுல் எதிர்பார்க்கும் வெற்றித் தொகுதி' என்ற தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார். அவருடைய போல்டான பேச்சு தமிழக மக்களுக்கு அறிமுகமானதுதான். தேனி தொகுதியில் கிராமப்புற வாக்காளர்கள் பெரியாரின் பேரன் பேசும் பேச்சை கேட்க அதிக அளவில் கூடுகிறார்கள். வெற்றிபெற்றால் மத்திய அமைச்சர் என்ற வாய்ப்பு இருப்பதால், தொகுதிக்கு நல்லது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடம் அதிகரித்துள்ளது.

லேட்டாக பிரச்சாரத்தை தொடங்கிய ஈ.வி.கே.எஸ்., தொகுதியில் முக்கியமான இடங்களைத் தேர்வு செய்து பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். அவருக்குத் துணையாக ஈ.வி.கே.எஸ்.சின் மனைவி, மகன் திருமகன் ஈ.வெ.ரா. ஆகியோர் கூட்ட ணிக் கட்சித் தலைவர்களுடன் கிராமங்களில் முக்கிய பிரமுகர்களிடம் ஆதரவு கேட்கிறார்கள்.

ஈ.வி.கே.எஸ்.சுக்காக தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும் நிர்வாகி களும் ஆர்வத்துடன் பிரச்சாரம் செய்வதை பார்க்க முடிகிறது. இவருடைய வெற்றிக்கு ஸ்டாலினும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என் கிறார்கள்.

அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமாருக்கு பலம்+பலவீனம் இரண்டும் அவரது அப்பா ஓ.பி.எஸ். தான். ரவீந்திரநாத் தரப்பு ஆரம்பத்திலிருந்தே தாராள மாக செலவு செய்கிறது. அதற்கேற்ப கூட்டமும் அசத்துகிறது. வாக்குப் பதிவுக்கு முன்பாக பெரிய தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப் பையும் தேனி தொகுதி வாக்காளர் களிடம் ஏற்படுத்தி யிருக்கிறார் ரவீந்திர நாத். அதேநேரத்தில் பாரம்பரியமான அ.தி.மு.க. வாக்கு களை பிரித்து மேய்கிறார் அ.ம.மு.க.வின் தங்க தமிழ்ச் செல்வன்.

பண பலமும் சாதி செல்வாக்கும் மிக்க இரண்டு வேட்பாளர்களுக்கிடையே நிற்கும் இளங்கோவனுக்கு இரண்டு அரசுகள் மீதான மக்களின் அதிருப்தியே சாதகமாக இருக்கிறது. அந்த அதிருப்தியை பணம் தணிக்குமா என்பதே தேனி யின் இறுதிக் கட்டம்.

-சக்தி

திருச்சி

t

கொஞ்சம் அசந்தாலும் திருநாவுக்கரசருக்கு அடி சறுக்கும் என்பதே திருச்சி மக்களவைத் தொகுதியின் இறுதிக்கட்டம். வெளியூரிலிருந்து வந்து திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார் திருநாவுக்கரசர் என்ற எதிரணியின் பிரச்சாரம் யோசிக்க வைக்கிறது. அதுமட்டுமில்லை... தனக்கு ஆதரவு தருவதாக சொல்லி பிரச்சாரம் செய்கிறவர்களுக்கு திருநாவுக்கரசர் உரிய மரியாதை கொடுப்பதில்லை என்ற அதிருப்தி தெரிகிறது.

உதாரணமாக, ஓட்டுப் பலம் உள்ள ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த முத்தரையர் செல்வகுமாரையும், தேவேந்திரகுல வேளாளர் சமூகத் தைச் சேர்ந்த பொன் முருகேச னையும் அரவணைப்பதில் சுணக்கம் என்கிறார்கள்.

"" இதெல்லாம் எதிர்த்தரப்பினர் வேண்டுமென்றே பரப்பும் அவதூறு. திருநாவுக்கரசர் தனக்குரிய தனிப்பட்ட செல்வாக்கு, தி.மு.க. மாவட்டச் செயலாளர் கே.என்.நேருவின் அரசியல் கணக்கு, இஸ்லாமியர், கிறிஸ்தவர்களின் வாக்குகள் என்று தனது வெற்றிக்கணக்கிற்கு வியூகம் வகுத்துள்ளார்'' என்கிறார்கள் அவர் தரப்பினர். ஆனால், கள யதார்த்தம் அவ்வளவு எளிதாக இல்லை என்றே சொல்கிறார்கள் கூட்டணியில் உள்ளவர்கள்.

தி.மு.க. கூட்டணிக்கு சாதகமான இஸ்லாமியர் வாக்குகளை அ.ம.மு.க. அணியில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பிரிப்பார்கள் என்ற அச்சமும் நிலவுகிறது.

இந்தத் தொகுதியைப் பொறுத்தமட்டில் அ.ம.மு.க. வேட்பாளர் சாருபாலா, திருநாவுக்கரசருக்கு போட்டியாக இருக்கிறார். திருச்சியின் முன்னால் மேயர், மன்னர் பரம்பரை என்ற முறையிலும் சமுதாயச் செல்வாக்கிலும் குறிப்பிடத்தக்க வலிமை உள்ளவர். தொகுதியைச் சார்ந்த வேட்பாளர் என்பதெல்லாம் சாருபாலாவுக்கு சாதகம். அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன், தர்மபுரியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு அ.தி.மு.க.வினரே வேலைசெய்வதில் சுணக்கம் காட்டுகிறார்கள். திருநாவுக்கரசரும், இளங்கோவனும் வெளியூர்க்காரர்கள் என்றும், தான் மட்டுமே மண்ணின் மகள் என்றும் சாருபாலா பிரச்சாரம் செய்கிறார்.

எல்லா தொகுதிகளிலும் அ.ம.மு.க. வேட்பாளர்கள் அ.தி.மு.க. வேட்பாளர்களின் வாக்குகளை கணிசமாக பிரிப்பார்கள் என்ற நிலைதான் இருக்கிறது. ஆனால், திருச்சியில் அ.தி.மு.க.வினரே அ.ம.மு.க.வுக்கு வாக்க ளிப்பார்களோ என்ற நிலை உருவாகி இருக்கிறது. எனவே திருச்சியில் காங் கிரஸுக்கும் அ.ம.மு.க.வுக்கும் போட்டி என்ற நிலை உருவாகியுள்ளது.

இறுதிக்கட்ட வியூகங்களை கச்சிதமாக அறிந்தவர், அரசியல் அனுபவஸ்தர் திருநாவுக் கரசர் என்கிறார்கள்.

-ஜெ.டி.ஆர்.

மத்திய சென்னை

தி.மு.க. சார்பில் இருமுறை எம்.பி.யான தயாநிதிமாறன், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக சாம்பால், அ.ம. cமு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. வேட்பாளராக தெகலான் பாகவி ஆகியோர் மும்முனைப் போட்டி யில் இருக்கிறார்கள்.

கடந்தமுறை குடும் பத்துடன் வாக்குச் சேகரித்து மக்களை கவர்ந்த தயாநிதி மாறன், இந்தமுறை காலையில் பிரச்சாரத்துக்கு வருவதில்லை என்று உ.பி.க்களே குறைப்பட்டுக் கொள்ளும் நிலை இருந்தது. 70 லட்ச ரூபாய்தான் செலவுசெய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் சுயேட்சை வேட்பாளர் களுக்குத்தான் பொருந் தும் போலிருக்கிறது என்று யோசிக்கு மளவுக்கு பா.ம.க. வேட் பாளரும் தொழி லதிபருமான சாம்பால் பணத்தை தண்ணீராய் செலவு செய்கிறார். ஆர்.கே.நகர் ஃபார்முலாவை தினகரன் பயன்படுத்துகிறாரோ இல்லையோ, அந்த ஃபார்முலாவை மட்டுமே நம்பியிருக்கிறார் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரான சாம்பால்.

அதேசமயம், தயாநிதி வெற்றிபெற்றால் மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதால் வாக்காளர்கள் அவருக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

கூட்டணி வேட்பாளரை ஜெயிக்கவைக்க டி.டி.வி. தினகரன் சகல விதத்திலும் உதவுகிறார். முஸ்லிம் வாக்குகளைக் கவர்வதில் முனைப்பாக இருக்கிறது அ.ம.மு.க. + எஸ்.டி.பி.ஐ. கூட்டணி. கிறிஸ்துவர் சாம்பாலுக்கு ஓட்டு போட்டாலும் அது மோடிக்கு போட்ட மாதிரிதான். முஸ்லிமான தெகலான் பாகவிக்கு ஓட்டுப் போட்டாலும் மோடிக்கு போட்ட மாதிரிதான். எனவே, மோடிக்கு எதிரான காங்கிரஸ் கூட்டணியில் உள்ள தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று சர்ச்சுகளில் பாதிரி யார்களும் இஸ்லாமிய நிர்வாகிகள் பள்ளிவாசல்களிலும் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள்.

தி.மு.க. தரப்பினர், வாக்காளர் களுக்கு செலவு செய்யவில்லை என் றால்கூட சமாளித்து விடலாம். ஆனால், வேகாத வெய்யிலில் அலைந்து திரியும் நிர்வாகிகளுக் காவது செலவு செய்யவேண்டும் என்ற குரல் கடைசி நேரம்வரை கேட் டது. மார்வாடி களின் வாக்குகளை அறுவடை செய்வதில் துறைமுகம் எம்.எல்.ஏ.வும் தி.மு.க. மா.செ.வுமான சேகர்பாபு ஈடுபட்டுள்ளார். மத்திய சென்னையில் 6 தொகுதிகளிலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால் தயாநிதி மாறனுக்கு வாக்குகளை வளைப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். அது, தயாநிதிமாறனுக்கு தெம்பாக உள்ளது.

கடைசி நிமிடம்வரை களத்தில் இறங்கி கடுமையாக ஒர்க்பண்ணியே ஆகவேண்டும் என்பதால் இறுதிக்கட்ட பணிகள் வேகமெடுத்துள்ளன.

-மனோசௌந்தர்

கன்னியாகுமரி

k

சென்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வின் தாமரை மலர்ந்த ஒரே தொகுதி கன்னியாகுமரி. அங்கு வெற்றிபெற்று மத்திய அமைச்சரானவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் மார்த்தாண்டம், பார்வதிபுரத்தில் மேம்பாலங்கள் கட்டினார். ஆனால் அது வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியது என புகார் கிளம்பியது. சுசீந்திரம், கொட்டாரம், புத்தேரி பகுதிகளில் சாலை விரிவாக்கத்திற்காக நெடுஞ்சாலைத் துறையால் வீடுகளை இடித்துத் தள்ளியதிலும் அதிருப்தி. இது பா.ஜ.க.வின் நிரந்தர இந்து வாக்காளர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல், வர்த்தகத் துறைமுகம் வருவதால் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் இருக்கும் மணக்குடியைச் சுற்றியுள்ள 15 கிராமங்களைச் சேர்ந்த இந்து நாடார் வாக்குகளும் பொன்னாருக்கு எதிராக திரும்புகின்றன. இதையெல்லாம் கடைசி நேரத்தில் சரிக்கட்டிவிடலாம் என்ற கணக்குடன் தேவாலயங் களில் ஏறி இறங்கு கிறார் பொன்னார். கூட்டணிக் கட்சி களின் ஒத்துழைப்பு இல்லாதது பொன் னாருக்கு மைனஸ்.

காங்கிரஸ் வேட்பாளர் வசந்த குமாரைப் பொறுத்த வரை, சென்ற முறை கூட்டணியின்றிப் போட்டியிட்டு இரண்டாம் இடத்தைப் பிடித்தவர் என்பதால் நல்ல பயிற்சியில் இருக்கிறார். பா.ஜ.க. ஆட்சியில் நிலங்களை இழந்தது, வேலைவாய்ப்பின்மை போன்ற விஷயங்களைப் பேசி வாக்காளர்களை யோசிக்க வைக்கிறார். மோடி அலையால் பொன்னாருக்கு விழுந்த மீனவர்களின் ஓட்டுகள் ஓகி புயலுக்குப் பிறகான மத்திய அரசின் புறக்கணிப்புகளால் வசந்தகுமாரை நோக்கி திரும்புகின்றன. அதேபோல், பா.ஜ.க.வின் இந்துத்வா கொள்கைகளால் கிறிஸ்தவர்களின் ஓட்டுகளையும் வசந்தகுமாரே அள்ளுகிறார்.

அ.ம.மு.க. வேட்பாளர் லெட்சுமணன், மக்களை மதிக்கும் நல்லவர் என்றாலும் வாக்குகளைப் பிரிக்கும் அளவுக்கான பெரிய செல்வாக்கோ, பலமோ அவருக்குக் கிடையாது. மதம் தீர்மானிக்கும் கன்னியாகுமரியில் கடந்த முறை பொன்னான காலம் இந்தமுறை வசந்த காலம்.

-மணிகண்டன்

திருவள்ளூர்

y

மிழகத்தின் நுழை வாயில், முதல் தொகுதி என்றழைக்கப்படும் திருவள்ளூரில் காங்கிரஸ் சார்பில் ஜெயக்குமாரும் அ.தி.மு.க. சார்பில் டாக்டர் வேணு கோபாலும் அ.ம.மு.க. சார்பில் பொன்.ராஜாவும் குஸ்தி போடுகின்றனர்.

2009, 2014 தேர்தலில் வெற்றிபெற்ற சிட்டிங் எம்.பி. யான வேணுகோபாலுக்கே திரும்பவும் சீட்டு வழங்கப் பட்டுள்ளது கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந் தது. ஒருவழியாக இப்போது தான் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் இதர பொறுப்பாளர் களைச் சமாதானப்படுத்தியுள்ளார். திருவள்ளூர், திருத்தணி அரசு மருத்துவமனைகளுக்கு டயாலிசிஸ் எந்திரம், தாய்சேய் நல மையம் போன்றவற்றைச் செய்துதந்துள்ளார். ஆனால் நீண்டநாள் கோரிக்கை யான அரசு மருத்துவக்கல்லூரி, அரசு கலைக் கல்லூரி நிறைவேற்றப்படா தது ஏமாற்றம்தான். தொகுதிப் பக்கமே தலைகாட்டாதவர் என்ற விமர்சனமும் எழுந் துள்ளது.

காங்கிரஸ் வேட்பாளர் தொகுதிக்குப் புதியவர் என் பது பலவீனம்தான் என்றா லும், மாதவரம் தொகுதியின் தி.மு.க. மா.செ. சுதர் சனத்தின் தீவிர செயல்பாடு, அ.தி.மு.க.வின் பொன் னேரி ராஜா தினகரன் அணிக்குத் தாவியது, மீனவர் கள் பிரச்சினையில் வேணுகோபால் நடவடிக்கை எடுக்காதது ஆகியவை ஜெயக்குமாருக்கு சாதகமாக மாறும். கும்மிடிப்பூண்டியில் தி.மு.க.- அ.தி.மு.க. கிட்டத்தட்ட சமபலத்துடன் இருக்கிறது. ஆவடி தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு இறங்குமுகம். போதாதற்கு முன்னாள் அமைச்சர் ரஹீம், தற்போதைய அமைச்சர் பாண்டியராஜன் கோஷ்டியின் பூசலும் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பே. புரட்சி பாரதம் கட்சியின் செல்வாக்கு இத் தொகுதியில் அ.தி.மு.க.வுக்கு பலம் கூட்டும்.

தி.மு.க. கூட்டணியின் வாக்கு, ஆளும் கட்சி களுக்கு எதிரான எதிர்ப் பலை, அ.ம.மு.க.வுக்கு தாவிய பொன்.ராஜா பிரிக்கும் வாக்குகள் இவற்றின் துணையுடன் ஜெயக்குமாருக்கு வாய்ப்பிருந்தாலும், அதே அளவு வாய்ப்பு வேணுகோபாலுக்கு இருக்கிறது என்பதுதான் இந்தக் கடும்போட்டி தொகுதியின் கடைசிகட்ட சூழல்.

-அரவிந்த்

சேலம்

39 ஆண்டுகளுக்குப் பிறகு சேலம் தொகுதியில் நேரடியாக களமிறங்குகிறது தி.மு.க. அதன் வேட்பாளரான எஸ்.ஆர்.பார்த்திபன், முன்பு தே.மு.தி.க. மேற்கு மா.செ., மேட்டூர் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் என்பதால் நல்ல அறிமுகம் sஇருக்கிறது. இருப் பினும் வீரவன்னியர் பேரவை யில் இருந்தபோது செய்த கட்டப்பஞ்சாயத்து விவ காரங்கள் அவருக்கு எதிராகவே திரும்பி நிற்கிறது.

வேட்பாளர் பயணத் திட்டத்தை சேலம் தி.மு.க. மத்திய மா.செ. ராஜேந் திரன் முன்னின்று செய் கிறார். மற்ற முக்கிய நிர்வாகிகள் தாமரைஇலை மேல் நீர்போல் ஒதுங்கி நிற்கின்றனர்.

அரசு ஊழியர்களில் 80% வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கே ஆதரவாக உள்ளன. இருப்பினும், தி.மு.க.வில் தலைதூக்கும் அடாவடிகளால் பலர் இன்னமும் தயங்கவே செய்கின்றனர்.

அ.ம.மு.க. வேட் பாளர் எஸ்.கே.செல்வம் தனது சொந்தத் தொகுதியான வீரபாண்டி யில் கணிசமான வாக்கு களைப் பிரிப்பார் என்று அ.தி.மு.க. கருதுகிறது. செல்வம் சட்டமன்றத் தொகுதிகளில் தலா 20ஆயிரம் வாக்குகளைப் பிரிப்பார் என்று நம்புகிறது அ.ம.மு.க. தரப்பு.

முதல்வர் எடப்பாடியின் சொந்த மாவட்டம் என்பதால், வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அ.தி.மு.க. அதன் வேட்பாளராக களமிறங்கி யிருப்பவர் கே.எஸ்.ஆர்.சரவணன். சமீபத்தில் மத்திய-மாநில அரசுகள் கொடுத்த உதவித் தொகை ஓரளவுக்கு அ.தி.மு.க.வுக்கு நன்மதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது புதிய வாக்காளர்கள், படித்த வாக்காளர்களைக் கவர்வது சந்தேகம்தான்.

பூத்வாரியாக ஆட்களை நியமித்து, வைட்டமின் "ப'-வை கொண்டுசேர்க்கும் வேலையில் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் தீவிரம் காட்டினாலும், எடப்பாடி கொடுத்துள்ள அழுத்தத்தில் வேலைகளை தீவிரமாக்கியுள்ளது அ.தி.மு.க.

-இளையராஜா

நீலகிரி

n

தேர்தல் அனல், மலை களின் அரசி எனப்படும் நீலகிரியையே சூடேற்றியுள்ளது. இத்தொகுதியில் தி.மு.க. சார்பாக ஆ. ராசாவும், அ.தி.மு.க. சார்பில் தியாகராஜனும், அ.ம.மு.க. சார்பில் எம்.ராமசாமியும் போட்டியிடுகின்றனர்.

தேயிலைத் தொழிலும் சுற்றுலாவும்தான் நீலகிரியின் பிரதான தொழில். 2009-ல் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக வெற்றிபெற்றபோது தொகுதிக்காக நிறைய பணிசெய்துள்ளார் ராசா.

இந்த நாடாளுமன்றத் தொகுதிக்குள் தலித்துகளின் வாக்குகள் அதிகம். மேட்டுப் பாளையத்தில் முஸ்லிம்கள் கணிசமாக வசிக் கின்றனர். அவர்களின் முதன்மைத் தேர்வு ஆ.ராசாதான். அவிநாசி- அத்திக்கடவு திட் டத்தை நிறைவேற்றாமல் தேர்தல் நெருக்கத்தில் அடிக்கல் நாட்டி வாக்குகளைக் கவரலாம் என அ.தி.மு.க. போட்ட வியூகம் அந்தளவுக்கு எடுபடவில்லை. அ.தி.மு.க. வேட்பாளர் தியாக ராஜன் பொள்ளாச்சியில் ஒருமுறை ஜெயித்து, ஒருமுறை தோற்றவர். அவிநாசியில் 1996-ல் தேர்தலில் நின்றபோது, ஜாலியாகப் பேசுகிறேன் என நினைத்து "தேர்தலில் வெற்றி பெற்றால் கவுண்டர் சமூகப் பெண்ணையே திருமணம் செய்வேன்' எனக் கூறி அந்த சமூகத்து மக்களின் அதிருப்திக்கு ஆளானவர். மேலும் கடந்தமுறை நீலகிரி தொகுதியில் வென்ற அ.தி.மு.க.வின் கோபால கிருஷ்ணன் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற கோபமும் அ.தி.மு.க.வுக்கு ஓவர்லோடு.

தி.மு.க.வில் கட்சிக்குள் இருக்கும் நிர்வாகிகள் யார், யார் வேலை செய்யாமல் இருக்கிறார்கள்? தொண்டர்களுக்கு என கொடுக்கப்படும் பணம் சரியாய்ப் போய்ச் சேருகிறதா எனக் கண்டறிந்து களையெடுக்க ஒரு டீமை உருவாக்கியிருக்கிறார் ராசா. சேரம்பாடி பாலவாடி வளவு பகுதியிலுள்ள ஆதிவாசி குடும்பங்கள் நெடுங்காலமாய் சாலைவசதி செய்துதரச் சொல்லி வலியுறுத்தியும் நிறைவேறாததால், வாக்குப் புறக்கணிப்பு என போர்க்கொடி தூக்க... அதையறிந்த அந்த டீம்... சாலை உருவாக்கப் படும் என உறுதியளித்து அவர்களை வாக்குச் சாவடியை நோக்கி நகர வைத்திருக்கிறது.

100 சதவீதம் முஸ்லிம்களைக் கொண்ட பாக்கனா எனுமிடத்தில் நிலவும் அதிருப்தி யையும் அந்த வாக்குகளை அ.ம.மு.க. அறுவடை செய்யவிருப்பதையும் அறிந்து அந்த டீம்... அப்பகுதி முஸ்லிம் மக்களுடன் நெருங்கி தி.மு.க. பக்கம் ஈர்த்திருக்கிறது. இந்த வியூகங்கள் இல்லாமல் திண்டாடுகிறார் அ.தி.மு.க.வின் தியாகராஜன். தமிழக அரசின் 16ஏ வனச்சட்டத் திருத்தம், அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளுக்கு இடைஞ்சலாக மாறுமென்ற அச்சம் நிலவுகிறது. ஜெயித்துவந்தால் இந்தப் பிரச்சினையைச் சரி செய்வேன் என உத்தரவாதமளித்திருக்கிறார்.

நீலகிரி மலைமேல் உள்ள 3 சட்டமன்றத் தொகுதிகள் தி.மு.க.வுக்கு சாதகம். கீழே உள்ள 3-ல் 2 நெருக்கடி. மற் றொன்று ஓரளவே சாதகம். இந்த 3 தொகுதி களில் ஏற்படும் இழப்பை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக் கிறார் ஆ.ராசா.

-அருள்குமார்

விருதுநகர்

n

தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் மாணிக்கம் தாக்கூர், அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் அழகர்சாமி, அ.ம.மு.க. சார்பில் பரமசிவன் அய்யப்பன் ஆகியோர் களத்தில் இருக்கிறார்கள். தொகுதி வாக்காளர்களில் 23 சதவீதம் முக்குலத் தோரும், 14 சதவீதம் நாயக்கரும் இருக்கிறார்கள். முன்னாள் எம்.பி.யான மாணிக்கம் தாக்கூருக்கு தொகுதியில் நல்ல பெயர் இருக்கிறது. கடந்தமுறை ஆக்டிவ் ஆக பணிபுரிந்ததால் இவர் கொடுக்கும் வாக்குறுதிகள் அடிப்படையிலும், முக்குலத்தோர் என்ற அடிப்படையிலும் வாய்ப்பு அதிகமுள்ளவ ராக கருதப்படுகிறார். தி.மு.க. வாக்குளுடன் ம.தி.மு.க. வாக்குகள் இவருக்கு பிளஸ் ஆகிறது.

அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமாரும், ராஜேந் திர பாலாஜியும் "தொகுதியில் உள்ள அ.தி.மு.க. வாக்குகள் எந்த வகையிலும் பிரிக்க முடியாதவை' என்கிறார்கள். எனவேதான் 6 சதவீதம் வாக்குகளே உள்ள செட்டியார் பிரிவைச் சேர்ந்த அழகர்சாமிக்கு அ.தி.மு.க. வாக்குகள் சப்போர்ட்டாக இருக்கும் என் கிறார்கள். ஆனால், அ.தி.மு.க.வின ரின் ஒத்துழைப்பு போதுமான அளவு இல்லை என்று தே.மு.தி.க.வினர் முணுமுணுக்கிறார்கள். அ.தி.மு.க. வாக்குகளை குறிவைத்து அ.ம.மு.க. தீவிரமாக பணப்பட்டுவாடாவில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், மாணிக்கம் தாக்கூருக்குதான் வெற்றி என்று காங்கிரசும் தி.மு.க.வும் கூறுகின்றன. வைகோவையே தோற்கடித்த தொகுதி இது என்ப தால் இந்தத் தொகுதி வாக்காளர்களின் மனநிலையை கணிக்க முடியாது என்றும் கூறுகிறார்கள். எனவே தான் சாமானியன், அப்பாவி என்று கூறப்படும் தே.மு. தி.க. வேட்பாளருக்குக்கூட வாய்ப்புக் கிடைக்கலாம் என்று அ.தி.மு.க. கூட்டணியினர் எதிர்பார்க்கிறார்கள். வாக்குகள் சிதறாமல் பெறக் கூடிய வேட்பாளர் என்ற வகையில் மாணிக்கம் நம்பிக்கையாக இருக்கிறார்.

-சி.என்.இராமகிருஷ்ணன்

கரூர்

jரண்டு முறை கரூர் தொகுதியில் நின்று ஜெயித்த தம்பிதுரை, ஹாட்ரிக் சாதனைக்கு முயன்றுகொண்டிருக்கிறார். ஆனால் சூழல் எவ்வளவுதூரம் சாதகமாக இருக்கிறது?

கடந்தமுறை கரூர் தொகுதியில் தம்பிதுரை ஜெயித்தார். அதற்குக் காரணம் இரட்டை இலை. ஏற்கனவே அ.தி.மு.க.வில் நின்று ஜெயித்த எம்.பி. கரூர் சின்னசாமி, கடந்தமுறை உதயசூரியன் சின்னத்தில் தி.மு.க. வேட்பாளராக நின்றபோது, அவரை அ.தி.மு.க வேட்பாளராக நினைத்து இரட்டை இலைக்குப் போட்டது இன்னொரு காரணம். கூடவே செந்தில்பாலாஜி, போதும் போதுமென்கிற அளவுக்கு தம்பிதுரைக்காக பணத்தை வாரியிறைத்தார். இந்தமுறை எல்லாமே தலைகீழ். அதே செந்தில்பாலாஜி தற்போது தம்பிதுரையை எதிர்க்கும் ஜோதிமணிக்காக திட்டமிட்டு வாக்குச் சேகரித்துக்கொண்டிருக்கிறார். இடைத்தேர்தலுக்காக அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி போன்ற சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதிகளை தயார்நிலையில் வைத்திருக்கிறார். அது ஜோதிமணிக்கும் பயன்படுவது கூடுதல் ப்ளஸ்.

கரூரில் கடந்த பத்தாண்டுகளாக பேருந்து நிலை யம், மருத்துவக் கல்லூரி, முருங்கைக்காய் தொழிற் சாலை, ஜவுளிபூங்கா எல்லாம் அறிவிப்பாகவே இருக் கிறது. ஜி.எஸ்.டி. தாக்கம் கரூர் ஜவுளி டெக்ஸ்டைல் களை ரொம்பவே பதம் பார்த்திருக்கிறது. ஜோதிமணி பாரம்பர்யமான கை சின்னத் தில் நிற்கிறார். கரூர் காங்கிரஸ் கட்சி உட்பூசல் இருந்தா லும் தம்கட்டி சமாளிக் கிறார் ஜோதிமணி. கடைசி நேரத்தில் தொகுதி மக்களை எவ்வளவு தூரம் தம்பிதுரை கவனிக்கிறாரோ… அதே கவ னிப்பை செந்தில்பாலாஜி யும் அளிக்க ஆயத்தமாகி வரு கிறார். அ.ம.மு.க. சார்பில் தங்க வேல் போட்டியிடுகிறார். களத்தில் பெரிய பேச்சு இல் லாத போதும், பிரச்சாரத்தில் மும்முரம் காட்டிவருகிறார்.

செந்தில்பாலாஜியின் வியூகம் ஜோதிமணிக்கு நம்பிக்கை தர, தம்பிதுரை தரப்பு புது யோசனையில் உள்ளது.

-ஜெ.டி.ஆர்.

ஈரோடு

தி.மு.க. அணியில் ம.தி.மு.க. சீனியரான கணேசமூர்த்தியும் அ.தி.மு.க.வில் வெங்கு மணிமாறனும் ஈரோட்டில் பலமாக முட்டிமோதுகின்றனர். அ.தி.மு.க. மணிமாறன் காங்கேயம் நகராட்சி தலைவ ராக இருந்தபோது, எல்லா வற்றிற்கும் ’கை erநீட்டினார்’ என்ற புகார், எங்கனும் வலுத்துள்ளது. இதன் தாக்கத்தைப் பல பகுதிகளிலும் தர்மசங்கடத்தோடு தரிசித்துக்கொண்டிருக்கிறார் மணிமாறன். குமார பாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்னப்ப நாயக்கன் பாளையத்துக்கு அவர் ஓட்டுக்கேட்டுப் போன போது, அங்குள்ள விசைத் தறித் தொழிலாளர்கள், "எல்லா வகையிலும் நலிஞ்சி நூலா இளைச்சிப் போய்க்கிடக் கிறோம். கொஞ்ச நஞ்சம் இருக் குற எங்க உசுரையும் உருவிக்கிட்டுப் போலாம்னு வந்தீங்களா? ஒழுங்கா வந்தவழியே ஓடிப்போயி டுங்க'’என ஆவேசமாகத் துரத்தியடித்தனர்.

இதேபோல் இவருக்கு வாக்கு கேட்க மரப் பாலம் பகுதிக்குச் சென்ற எம்.எல்.ஏ. தென்னரசு, ‘"மாதந்தோறும் உங்க கணக்கில் மோடி 2 ஆயிரம் போடுவார். நாங்க 2 ஆயிரம் போடுவோம்'’’ என்று நீட்டி முழக்கிச் சொல்ல... "நீங்க ’’எப்படி நாமம் போடுவீங்கன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும். இடத்தைக் காலி பண்ணுங்க'’என பெண்கள் ஆவேசம் காட்டி அவரைத் திக்குமுக்காட வைத்தனர். அதேபோல் அ.தி.மு.க.வில் இருக்கும் கோஷ்டி யுத்தமும் மணிமாறனுக்குச் சோதனையை உண்டாக்குகிறது. ம.தி.மு.க. கணேசமூர்த்திக்கு பரவலாக ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. சென்னிமலையில் கூடிய விவசாயிகள் சங்கத்தினர், ஆதரவுத் தீர்மானம் போட்டுள்ளனர்.

அ.ம.மு.க. சரவணகுமாரும் முண்டியடிக்கிறார். எனினும், ம.தி.மு.க. கணேசமூர்த்தி தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர், எளிமையானவர் என்று பெயரெடுத்தவர். அதோடு மத்திய -மாநில அரசுகளுக்கு எதிரான அதிருப்தியும் அவருக்கு வலுச்சேர்க்கிறது.

அதிருப்தி அலையை கரன்சி அலையால் சரிக்கட்ட நினைக்கிறது ஆளுந்தரப்பு.

-ஜீவாதங்கவேல்

திருப்பூர்

t

தி.மு.க. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன், அ.தி.மு.க. வேட்பாளர் ஆனந்தன், அ.ம. மு.க. வேட்பாளர் செல்வம் ஆகியோருக்கு இடையேதான் போட்டி நிலவுகிறது. இந்தத் தொகுதியின் முடிவை திருப் பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை தொகுதி மக்கள்தான் தீர்மானிக்கப் போகிறார்கள். ஏனெனில் இந்த இரண்டு தொகுதிகளும் தொழில்கள் நிறைந்த பகுதி. ஆனால், பணமதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு பிறகு தொழில்கள் நசிந்து, வேலைவாய்ப்பு இழந்து வாடிநிற்கும் பகுதி.

தி.மு.க. கூட்டணி வேட்பாளர் சுப்பராயன் தனது பிரச்சாரத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஆனந்தனை நோக்கி இந்தப் பிரச்சினை களைத்தான் கேள்வி களாய் தொடுக்கிறார். திருப்பூரின் ஜவுளித் தொழில், பனியன் தொழில், சிறுகுறு தொழிற்கூடங்கள் எல்லாம் போனது யாரால்? இவற்றை அழித்த மோடியுடன் கூட்டணி அமைத்திருக்கும் நீங்கள் எப்படி இவற்றை சீரமைக்க முடியும்? "திருப்பூரில் தொழிலாளர்கள் மட்டு மல்ல, முதலாளிகளுமே தொழில்கள் முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் கள். தொழில்கள் எல்லாவற்றையும் புதைக்கத்தான் வாக்குக் கேட் கிறார்கள்' என்கிறார் சுப்பராயன்.

அ.தி.மு.க. வேட்பாளர் "அம்மா வைப் போல நாங்கள் சொன்னதை செய்வோம். நதிகளை இணைத்து விவசாயத்தை செழிக்கச் செய்வோம்' என்கிறார். அவருக்குப் போட்டியாக அ.ம.மு.க. வேட்பாளர் செல்வமோ, "அம்மாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஆனந்தனுக்கா உங்கள் ஓட்டு' என்கிறார். இருவரும் அ.தி.மு.க. வாக்குகளை பங்கு போடுவதால், சுப்பராயனுக்கு லாபம் என்றாலும், அ.தி.மு.க.வுக்கு சாதகமான கொங்கு பெல்ட் என்ற வகையில் சில மூவ் களை இறுதிக் கட்டத்தில் விறு விறுப்பாக்கியுள்ளது அ.தி.மு.க.

-அருள்குமார்

கடலூர்

தொகுதியில் தி.மு.க.வைச் சேர்ந்த ‘முந்திரி வணிகர்’ டி.ஆர்.வி.எஸ்.ரமேஷும், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. டாக்டர் கோவிந்தசாமியும் நேரடி ஃபைட்டில் குதிக்க, இவர்க ளோடு அ.ம.மு.க. தங்கவேல், மக்கள் நீதி மய்யம் அண்ணா மலை, ’நாம் cதமிழர்’ சித்ரா ரவி உள்ளிட்டவர்களும் களத்தில் வரிந்துகட்டுகின்றனர்.

தி.மு.க. ரமேஷ், அதிக அறிமுகம் இல்லாதவர் என்கிற முணுமுணுப்பு ஆரம்பத்தில் தி.மு.க.விலேயே இருந்தது. எனினும், நெருக்கமாகப் பழகி சொந்தக் கட்சி யினரோடு ஒட்டிக்கொண்டுவிட்டார் ரமேஷ். கடலூர் கிழக்கு மா.செ. எம்.ஆர்.கே., மேற்கு மா.செ.கணேசன், எம்.எல்.ஏ. சபா.ராஜேந்திரன் ஆகியோர் ரமேஷுக்காக ஓடியாடி வேர்வை சிந்துகின்றனர். கூட்டணிக் கட்சியினரும் துடிப்போடு உழைப்பதால் சூரியத் தரப்பு நம்பிக்கையோடு சுற்றிவருகிறது. என்.எல்.சி. தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற தி.மு.க.வின் தொ.மு.ச.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் டின் சி.ஐ.டி.யூ.வும் இந்த அணிக்கு உபரி பலம்.

பா.ம.க. கோவிந்தசாமி ஏற்கனவே விருத்தா சலம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். தொகுதியின் மூலை முடுக்கெல்லாம் தெரிந்தவர். தொகுதியில் வன்னிய சமூக வாக்குபலத்தை முழுதாக நம்புகிறார் கோவிந்தசாமி. எனினும் அ.தி.மு.க. மற்றும் தே.மு.தி.க.வில் இருக்கும் பா.ம.க. அதிருப்தியாளர்கள் வாக்கும் தலித்துகள் வாக்கும் எதிரணிக்குப் போவது மாம்பழத் தரப்புக்கு பலவீனம். அதேநேரம் தி.மு.க. கூட்டணியில் உள்ள வன்னியர்களின் வாக்குகளைக் கவர பா.ம.க. ‘அண்டர்கிரவுண்ட்’ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநேரம் பார்த்து அ.தி.மு.க.வில் இருந்த எக்ஸ் எம்.எல்.ஏ. ஐயப்பன் டீம் மொத்தமாய் சூரியத் தரப்போடு ஐக்கியமாகி விட்டது. அ.ம.மு.க. தங்கவேல் மூன்றாம் இடத்தை நோக்கி முண்டியடிக்கிறார்.

தி.மு.க.வின் தெம்பை கடைசி நேர கரன்சிப் பாய்ச்சல் தடுக்குமா?

-ராஜா

காஞ்சி

காஞ்சிபுரத்தில் ஜெ.’ அறிமுகம் செய்த சிட்டிங் எம்.பி. மரகதம் குமரவேல், கடந்தமுறை தி.மு.க. செல்வத்தை ஒன்றரை லட்சம் வாக்குகளில் வென்றார். கடந்தமுறை தி.மு.க.வில் போட்டியிட்ட செல்வம் மீண்டும் களமிறங்குகிறார். தொகுதி நலனில் எம்.பி.யான மரகதம் அக்கறை காட்டாததில் தொகுதி முழுக்க அவருக்கு எதிரான அலையடிக்கிறது.

k

காஞ்சி நகரத்தில் தி.மு.க. ஆதரவு பலமாகவே இருக்கிறது. சுற்றுப்புற கிராமங்களில் இருக்கும் பா.ம.க. தரப்பு வாக்குகள், அ.தி.மு.க.வுக்கு வலுச்சேர்க்கக் கூடியவை என்றாலும், அங்கே முழுமையான ஒருங்கிணைப்பு இல்லை. உத்தரமேரூர் தொகுதியில் அ.தி.மு.க. மா.செ. வாலாஜா கணேசன், விறு விறுப்பாகக் களமிறங்கினாலும், தி.மு.க. தெற்கு மா.செ. சுந்தர், தன் வன்னிய சமூக மக்களின் வாக்குகளையும் ஒருங்கிணைத்து, ஆதரவு அலையை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்.

அதேபோல செய்யூர் -மதுராந்தகம் தொகுதி களில் உள்ள வாக்காளர்கள் அ.தி.மு.க. வேட்பாளரை பார்த்து, "இதுவரை எங்கே போனீங்க?'’ என்று விரட்டியடித்து மிரள வைத்துள்ளனர். மது ராந்தகத்தில் இலைக்கு, மாம்பழம் இனிப்பு கொடுத்தாலும், சுற்றுவட்டாரத்தில் உள்ள செய்யூர், சித்தாமூர் பகுதிகளில் சிறுத்தைகளின் பலம், தி.மு.க.வுக்கு உற்சாகத்தைத் தந்துகொண்டிருக்கிறது. அ.ம.மு.க. முட்டுக்காடு முனுசாமியும், அங்கங்கே முண்டியடிக்கிறார். தி.மு.க. வடக்கு மா.செ.வான தாமோ.அன்பரசனின் விறுவிறு உழைப்பும் தொண்டர்கள் மத்தியில் பலத்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிட்டிங் எம்.பி. மரகதத்துக்கு பரவலாகத் தொகுதி முழுக்க அதிருப்தி எழுந்திருப்பதால், தி.மு.க. செல்வத்தின் பக்கம் வெளிச்சம் கூடுதலாகத் தெரிகிறது. எனினும் கடைசிக்கட்ட கரன்ஸி விளையாட்டுக்கள், சூழலைக் குழப்பியடிக்கலாம் என்ற பதட்டமும் உள்ளது.

-அரவிந்த்

ஆரணி

arani

ளத்தில் 15 வேட்பாளர்கள் வரிந்து கட்டினாலும், கடும் யுத்தம், காங்கிரஸ் விஷ்ணு பிரசாத்துக்கும் அ.தி.மு.க. செஞ்சி.ஏழுமலைக் கும் இடையில்தான். இவர்களோடு மாஜி மந்திரியான அ.ம.மு.க. செந்தமிழனும் வீரிய மாய் முண்டியடிக்கிறார். எம்.பி.யாக இருந்த போது ஏழுமலை தொகுதிக்கு எதுவும் செய்ய வில்லை என்ற அதிருப்தி பரவலாகவே இருக் கிறது. அதேபோல் கட்சிக்காரர்களையும் அவர் அரவணைக்கவில்லை என்கிறார்கள். இதைப் புரிந்துகொண்ட ஏழுமலை, "இனி எந்த நிலை யிலும் இப்படிப்பட்ட தவறைச் செய்யமாட் டேன்' என்று அழாத குறையாய்ச் சொல்லி ஓட்டுக் கேட்கிறார். இருப் பினும் இலைத்தரப்பு ஆர் வம் இல்லாமல் ஏனோ தானோ என்று ஓட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறது.

காங்கிரஸ் விஷ்ணு பிரசாத், முழுக்க முழுக்க தி.மு.க. பலத்தையே நம்பு கிறார். ஏற்கனவே 2 முறை எம்.பி.யாக இருந்த அவரது அப்பாவும் தொகுதிப் பக்கம் வந்ததில்லை என்ற விமர் சனம், இவரையும் பாதிக் கிறது. செஞ்சி, மயிலம், வந்த வாசி, போளூர் ஆகிய 4 தொகுதிகளில் உள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் விஷ்ணுவுக்காக ஜரூராகக் கள மாடுவதால், கை தரப்பு தெம்பாக இருக்கிறது. விஷ்ணு, பா.ம.க. அன்புமணியின் மச்சான் என் பதால், அந்தத் தரப்பு அடக்கியே வாசிக்கிறது.

அ.ம.மு.க. செந்தமிழன் சென்னைக்காரர் என்ற பார்வையும் மக்களிடம் இருக்கிறது. அதே நேரம், அ.தி.மு.க. வேட்பாளர் மீது அதிருப்தி யில் உள்ள அ.தி.மு.க.வினரும், பா.ஜ.க.வினரும், தே.மு.தி.க.வினரும் தினகரனின் அ.ம.மு.க. பக்கம் வந்துகொண்டிருப்பது செந்தமிழனுக்கு பலம். தொகுதியில் ஏழுமலையும் விஷ்ணுவும் கடும் போட்டியில் இருக்கிறார்கள்.

நம்பிக்"கை' கூடுகிறது.

-து.ராஜா

பொள்ளாச்சி

po

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தையே முக்கியப் பிரச்சனையாக பிரச்சாரத்தில் முன்வைக்கிறார் தி.மு.க. வேட்பாளர் சண்முக சுந்தரம். முந்தைய காலங்களைவிட பேச்சில், உடையில் முன்னேற்றம் காட்டி, கூட்டத்தையும் கவர் செய்கிறார். அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரனுக்கோ எதிர்பார்த்த கூட்டம் சேரவில்லை. அவரது வாக்குறுதிகளும் போய்ச் சேரவில்லை.

எம்.பி. தொகுதிக்குட்பட்ட அமைச்சர் வேலுமணியின் தொண்டாமுத்தூர் தொகுதியே போதும். மொத்த வாக்குகளையும் அள்ளிவிடுவோம் என்பது அ.தி.மு.க.வினரின் நம்பிக்கை. வேலுமணியை வளர்த்துவிட்ட கே.பி.ராஜு, அவருக்கு எதிரான உள்ளடி வேலைகளைத் தொடங்கி அதற்கு நெருக்கடி கொடுக்கிறார். இருப்பினும், ஏப்ரல் 16, 17 இரவுகளில் மேற்கொள்ளும் வியூகங்கள் 18-ந்தேதி காலை விடியலில் சூரியன் மங்கலாக உதிக்கும் என்று வெளிப்படையாகவே பேசுகின்றனர் மகேந்திரன் தரப்பினர்.

""தபால் ஓட்டுகளை விசாரித்த வரையில் திருப்தியாக இருக்கிறது. ஆனால், அவற்றை எண்ணும்போது கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம். பாலியல் வன்கொடூர சம்பவத்துக்குப் பிறகு இரட்டைஇலை பெயரைச் சொன்னாலே மக்கள் முகம் சுழிப்பது நிலவரத்தைக் காட்டுகிறது'' என்கிறார்கள் சண்முக சுந்தரம் தரப்பு உ.பி.க்கள்.

அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.முத்துக்குமார், கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். அந்த சமுதாயத்தில் இருக்கும் அ.தி.மு.க. அதிருப்தி வாக்குகளைப் பிரிப்பாரே தவிர பெரிய தாக்கத்தை ஏற் படுத்துவது சந்தேகமே.

மாநிலத்தையே அதிரவைத்த பாலியல் கொடூரம் நடந்த தொகுதி யில் மக்களின் மனசாட்சியா -கடைசிநேர கரன்சியா என்ற கடும் போட்டி நிலவுகிறது.

-அருள்குமார்

புதுச்சேரி (எம்.பி. தொகுதி)

றத்தாழ ஒன்பதரை லட்சம் வாக்காளர்களைக் கொண்ட ’கிறுகிறு’ தொகுதியான புதுவையில், அனல் பறக்கிறது. இங்கே pகளத்தைக் கலக்கும் அணிகளில் எது எது தள்ளாடுகிறது? எது ஸ்டெடியாக இருக்கிறது? என்பதைப் பார்ப்போம்.

இங்கே காங்கிரஸ் வைத்திலிங்கம், என்.ஆர். காங்கிரஸ் நாராயணசாமி, அ.ம.மு.க. தமிழ்மாறன், மக்கள் நீதி மய்யம் டாக்டர் சுப்பிரமணியன், நாம் தமிழர் கட்சி ஷர்மிளா பேகம் உள்பட 18 பேர் வரிந்துகட்டுகின்றனர். இவர்களில் கடும் ஃபைட் என்றால் 69 வயது சீனியரான காங்கிரஸ் வைத்திலிங்கத்துக்கும், 29 வயது ஜூனியர் என்.ஆர். காங்கிரஸ் நாராயணசாமிக்கும்தான்.

வைத்தி மூத்த அரசியல்வாதி. அமைச்சராக இருப்பவர். ஏற்கனவே முதலமைச்சர், சபாநாயகர் என பொறுப்பான பதவிகளில் அமர்ந்த அனுபவஸ் தர். எந்த கெட்ட பெயரும் இல்லாதவர் என்கிற ‘இமேஜ்’ அவருக்கு பிளஸ். அவரை வெற்றி பெற வைக்க புதுவை முதல்வரான நாராயணசாமி முனைப்பு காட்டுகிறார். ஆனால் அமைச் சர்கள் தரப்பில் சிலர் பணத்தை செலவு செய்வதில் சிக்கனம் காட்டுவதால் காங்கிரஸ் தொண் டர்களிடமும், கூட்டணிக் கட்சியினரிடமும் லேசாய் சுணக்கம் தென்படுகிறது. தி.மு.க.வில் கோஷ்டி கானம் பண்ணிக் கொண்டிருந்த சீனியர் சிவா, சிவக்குமார் ஆகியோர் மு.க.ஸ்டாலினின் பிரச்சாரத்துக்கு பிறகு வெற்றிக்கு உற்சாகமாக ’ஒத்து’ ஊது கின்றனர். தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள வன்னியர் வாக்கு வங்கியை அப்படியே அள்ளி விடலாம் என மனக்கணக்கு போடுகிறார் என்.ஆர்.காங்கிரஸ் ரங்கசாமி. ஆனால் காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் கிராமப்புறங்களிலுள்ள வன்னியர் வாக்கு வங்கியை குறி வைத்து தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

ஆந்திராவின் ஏனாம், கேரளா வின் மாஹே ஆகிய 2 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு செல்வாக்கு காணப் படுகிறது. காரைக்காலின் 5 தொகுதிகளில் இருவருக்கும் சமமான ஆதரவு தெரிகிறது. கடந்த 2014 தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 2,55,826 வாக்குகள், அ.தி.மு.க. 1,32,657, பா.ம.க. 22,754 ஆக 4 லட்சம் வாக்குகளை கணக்கு போடுகிறார் ரங்கசாமி. ஆனால் 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு அதிகரித்த வாக்குகள், ஆளும் கட்சி பலம், பா.ஜ.க. மீதான அதிருப்தி, அ.தி.மு.கவுக்கு ஜெ. தலைமை இல்லாமை, அ.தி.மு.க வாக்குகளை அ.ம.மு.க. வேட்பாளர் தமிழ்மாறன் பிரிப்பது என ரங்க சாமிக்கு ஏகப்பட்ட பின்னடைவுகள்.

நம்பிக்கைமிக்க காங்கிரசை வீழ்த்த வியூகம் வகுக்கிறது என்.ஆர். காங்கிரஸ்.

-சுந்தரபாண்டியன்

தட்டாஞ்சாவடி(இடைத்தேர்தல் தொகுதி)

pதொகுதி எம்.எல்.ஏ.வான என்.ஆர். காங்கிரஸ் அசோக் ஆனந்த், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பதவியைப் பறிகொடுத்தார். அதனால் இடைத் தேர்தலைச் சந்திக்கிறது தட்டாஞ்சாவடி.

இங்கே தி.மு.க. சார்பில் ’தங்கம் நல்லெண்ணெய்’ வெங்கடேசன் களத்தில் வாள் சுழற்றுகிறார். கட்சிக்காக உழைத்த சீனியர்களை ஓவர்டேக் செய்து சீட் வாங்கியவர் என்பதால், சொந்தக் கட்சியிலேயே சலசலப்பு இருக்கிறது. இங்கே சீட் கிடைக்காத இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், கூட்டணி தர்மத்துக்காக சுரத்தில்லாமல் ஓட்டு சேகரிக்கிறார்கள். இந்தத் தொகுதி மாஜி முதல்வர் ரங்கசாமியின் கோட்டையாகும். போதாக்குறைக்கு வேட்பாள ராக நிறுத்தப்பட்டிருக்கும் நெடுஞ்செழியன், ரங்கசாமியின் அக்காள் மகன் என்பதால் தொகுதிவாசிகளிடம் விறுவிறுப்பு தெரிகிறது. இவருக்காக அசோக் ஆனந்த் சகல அஸ்திரங் களையும் எய்துகொண்டிருக்கிறார். இவர் பொங்கல், தீபாவளி நேரங்களில் வீட்டுக்கு வீடு அனுப்பிவைத்த பரிசுப் பொருட்களும், வாக்காளர்கள் மனதில் நல்ல விதமாக வேதிவினை புரிகிறது.