Advertisment

எடப்பாடிக்கு குழி பறிக்கும் 4 தலைகள்! -போட்டுத் தாக்கிய பொன்னையன்!

ss

"எடப்பாடி அடுத்த 4 மாத காலத்திற்கு ஒன்றும் செய்யமாட்டார். பொதுக்குழு முடிந்த பிறகு வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த எடப்பாடிக்கு மிகப்பெரிய தலைவலிகள் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து எப்படி வெளியே வரவேண்டும் என தெரியாமல் அவர் திணறு கிறார்' என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.

Advertisment

dd

அ.தி.மு.க.வின் சீனியர் தலைவர் பொன்னையன், நாஞ்சில் கோலப்பனுடன் பேசிய பேச்சு வெளியானது. குமரி மாவட்டத்துக்காரரான நாஞ்சில் கோலப்பன், தளவாய்சுந்தரத்தின் எதிர்ப்பாளர் என்ற வகையில் அவர் பொன்னையனுடன் பேசுவார். அப்படி அவரிடம் பேசிய பொன்னையன், "எடப்பாடி முட்டாள்தனமாக செயல்படு கிறார். சி.வி.சண்முகத்திடம் 19 எம்.எல்.ஏ.க்கள், தங்கமணி, வேலுமணியின் கைகளில் 42 எம்.எல்.ஏ.க்கள். நாளை கே.பி.முனுசாமி எடப்பாடிக்கு செக் வைப்பார். இவர்கள் ஓ.பி.எஸ்.ஸுடன் சமரசமாகப் போகலாம் என்கிற எடப்பாடியின் முயற்சிக்கு எதிராக ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக கத்தி கோஷம் போட்டு எடப்

"எடப்பாடி அடுத்த 4 மாத காலத்திற்கு ஒன்றும் செய்யமாட்டார். பொதுக்குழு முடிந்த பிறகு வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த எடப்பாடிக்கு மிகப்பெரிய தலைவலிகள் ஏற்பட்டுள்ளது. அதிலிருந்து எப்படி வெளியே வரவேண்டும் என தெரியாமல் அவர் திணறு கிறார்' என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.

Advertisment

dd

அ.தி.மு.க.வின் சீனியர் தலைவர் பொன்னையன், நாஞ்சில் கோலப்பனுடன் பேசிய பேச்சு வெளியானது. குமரி மாவட்டத்துக்காரரான நாஞ்சில் கோலப்பன், தளவாய்சுந்தரத்தின் எதிர்ப்பாளர் என்ற வகையில் அவர் பொன்னையனுடன் பேசுவார். அப்படி அவரிடம் பேசிய பொன்னையன், "எடப்பாடி முட்டாள்தனமாக செயல்படு கிறார். சி.வி.சண்முகத்திடம் 19 எம்.எல்.ஏ.க்கள், தங்கமணி, வேலுமணியின் கைகளில் 42 எம்.எல்.ஏ.க்கள். நாளை கே.பி.முனுசாமி எடப்பாடிக்கு செக் வைப்பார். இவர்கள் ஓ.பி.எஸ்.ஸுடன் சமரசமாகப் போகலாம் என்கிற எடப்பாடியின் முயற்சிக்கு எதிராக ஓ.பி.எஸ்.ஸுக்கு எதிராக கத்தி கோஷம் போட்டு எடப்பாடியை சிக்கலில் மாட்டிவிட்டார்கள்'' என பேசிய ஆடியோ வைரலானது.

நள்ளிரவில் அவரைத் தொடர்பு கொண்ட எடப்பாடி, பொன்னையனை மறுப்பு வெளியிட வைத்தார். "என்னைப்போல் யாரோ மிமிக்ரி செய்திருக்கிறார்கள் என பொன்னை யன் வெளியிட்ட அறிக்கையை அ.தி.மு.க.வில் யாரும் நம்பவில்லை' என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள். எடப்பாடி இந்த விவகாரத்தில் டென்ஷனாகிவிட்டார்.

அவரைப் பொறுத்தவரை, "அடுத்த நான்கு மாதத்திற்கு சைலண்டாக இருந்து தொண்டர்கள் மூலம் தேர்தல் வைத்து வெற்றி பெற்று பொதுச்செயலாளராக வந்த பிறகு, தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரைப் பார்த்துக்கொள்ளலாம். அதுவரை எதுவும் செய்யக்கூடாது என தனக்கு நெருக்கமானவர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்' என்கிறது எடப்பாடிக்கு நெருக்கமான வட்டாரங்கள்.

இதற்கிடையே சி.வி.சண்முகம் மூலம் டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷனுக்கு பொதுக்குழுவில் நடந்ததைத் தெரிவித் திருக்கிறார். சபாநாயகருக்கும், அ.தி.மு.க. கணக்கு வைத்திருக்கும் இந்தியன் வங்கிக்கும் எடப்பாடி கடிதம் எழுதியிருக்கிறார். அத்துடன் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தை சீல் வைத்ததற்கு எதிராக கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருக் கிறார். வங்கியில் மட்டும் 300 கோடி ரூபாய் அ.தி.மு.க. நிதியாக உள்ளது. அதை என்னைக் கேட்காமல் யாருக்கும் தரக்கூடாது என ஓ.பி.எஸ். தரப்பு கடிதம் எழுதி தடுக்கிறார்கள். அதேபோல் தேர்தல் கமிஷன், கோர்ட் என அனைத்திலும் ஓ.பி.எஸ். மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்.

Advertisment

oo

இந்நிலையில், சுமார் 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் எடப்பாடிக்கு நெருக்கமான செய்யாதுரை என்கிற நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டரிடம் பிடிபட்டுள்ளது. "எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர், சந்திரபிரகாஷ், வேலுமணியின் உதவியாளர்கள் சந்தோஷ், அவரது தம்பி வசந்தகுமார் ஆகியோர் வீட்டில் மத்திய வருமானவரித்துறை நடத்திய ரெய்டில் பிடிபட்டது, இ.பி.எஸ்.ஸுக்கு எதிராக மோடி அரசு நிற்கிறது' என்கிற இமேஜை உருவாக்கியது.

பொதுக்குழுவில், பிரதமர் நரேந்திர மோடியை அவரது கொரோனா பணிகளுக்காக பாராட்டி ஓ.பி.எஸ். எழுதிக்கொடுத்த தீர்மானத்தை எடப்பாடி நிரா கரித்ததை பா.ஜ.க. ரசிக்கவில்லை. அதை பா.ஜ.க. தலைவர்களிடம் ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத் போன் போட்டு, "பார்த்தீர்களா...? இ.பி.எஸ்., பா.ஜ.க.வின் எதிரி' என வத்தி வைத்துள்ளார். அதற்குப் பதிலளித்த இ.பி.எஸ்., "அந்தத் தீர்மானத்தை நான் எடுக்கச் சொல்லவில்லை, அதை எடுக்க வைத்து, அ.தி.மு.க. நடுநிலை யான கட்சி என காட்ட ஏற்பாடு செய்தது சி.வி.சண்முகம்தான். அதற்காக நான் மேடையிலேயே சி.வி.சண்முகத்தை கண்டித்தேன். கே.பி.முனுசாமியும் அதைக் கண்டித்தார். அதனால் சி.வி.சண்முகமும், கே.பி.முனுசாமியும் மேடையிலேயே மோதிக் கொண்டார்கள். நான் பா.ஜ.க. ஆதரவாளன். என்னை பா.ஜ.க. சந்தேகப்பட்டு வருமான வரித்துறையை ஏவிவிட்டு எனக்கு நெருக்க மானவர்களைக் காயப்படுத்தியுள்ளது'' என தனக்கு நெருக்கமான நீதித்துறையின் முன்னாள் பிரமுகர் மூலமாகப் புலம்பியுள்ளார்.

அதன்பிறகுதான் வருமானவரித்துறை சோதனை முடிவுக்கு வந்தது. அத்துடன் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் முருகன், தமிழக பா.ஜ.க. செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடிக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.

poo

பா.ஜ.க.வை பொறுத்தவரை, "நாங்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., சசிகலா ஆகிய மூவரையும் ஆதரிக்கிறோம். அதில் ஒரிஜினல் கட்சியை கண்ட்ரோலில் வைத்திருப்பவர் எடப்பாடிதான். ஆனால் அவர் மட்டும் தனி ஆவர்த்தனம் செய்வûதை அனுமதிக்கமாட்டோம். ஏனெனில் எடப்பாடியை நெருங்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது. அதனால் தேவைப்பட்டால் இரட்டை இலையை முடக்கி, மூவரையும் ஒன்றிணைப்போம்'' என்கிறார்கள் தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள்.

"நித்திய கண்டம் பூரண ஆயுசு' என அ.தி.மு.க.வின் உள்ளேயிருக்கும் சிக்கல்களிலும், பா.ஜ.க.வின் தொல்லைகளிலும் சிக்கி நீந்துகிறது அ.தி.மு.க.' என்கிறார்கள் அக்கட்சியின் நிர்வாகிகள்.

nkn160722
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe