செப்டம்பர் 1-ஆம் தேதியில் இருந்து, 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாண வர்களுக்கு பள்ளிகள் திறப்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச் சர் அன்பில் மகேஷ் அறிவித்ததிலிருந்து, ஒருபுறம் மகிழ்ச்சியும் மறுபுறம் அச்சமும் வெளிப்படுகிறது. பெற்றோர் சிலரின் கருத்துகளைக் கேட்டோம்.

முருகன்

பிள்ளைங்களுக்கு ரெண்டு வருஷ படிப்புல ரொம்பவே பாதிப்புதான். ஆன்லைன் வகுப்புன்னா லும் வழக்கம் போலவே ஃபீஸ் வாங்கிடறாங்க. என்ன இருந்தாலும் நேரடியா ஸ்கூலுக்கே போயி, வாத்தியார் சொல்லிக் கொடுக்கிறத கவனிச்சு படிக்கிற மாதிரி வராது. ரெண்டாம் அலை தடுப்பு நடவடிக்கைல தி.மு.க. கவர்மென்ட் செயல்பாடு திருப்தியாத்தான் இருக்கு. ஆனாலும். மூணாவது அலை சிறுவர்களைப் பாதிக்கும்னு சொல்லும் போது கொஞ்சம் பயமாத்தான் இருக்கு. கொஞ்சம் பொறுத்தே பள்ளிக்கூடங்களைத் திறக்கலாம்.

onlineclass

Advertisment

சங்கீதா

பிள்ளைங்க படிப்பையே மறந்திட்டாங்க. எந்த நேரமும் விளையாட்டுதான். ஆன்லைன் படிப்பை முழுசா ஏத்துக்கமுடியாது. அது மனசுல தங்கவும் செய்யாது. ஸ்கூலுக்கு போக பிள்ளைங்க ரெடியா இருக்காங்க. பயந்தா சரிவராது. அரசாங்கம் தப்பான ஒரு முடிவை எடுக்காதுன்னு நம்பித்தான் அனுப்பிவைக்கணும்.

பாஷா

Advertisment

மூணாவது அலை அடுத்த மாசம் எந்த நேரத்துலயும் தாக்கும்னு இப்பத்தான் பேப்பர்ல படிச்சேன். அக்டோபர் மாசம் உச்சத்தை எட்டும்னு பிரதமர் அலுவலகமே சொல்லிருக்கு. மூணு லட்சம் பேரை பாதிக்குமாம். மொத்த ஜனத்தொகைல 80 சதவீதம் தடுப்பூசி போட்டாத்தான், பரவலைக் கட்டுப்படுத்த முடியும்கிறாங்க. ஆனா... நம்ம நாட்டுல வெறும் 7.6 சதவீதம் பேர்தான் தடுப்பூசி போட்டிருக்காங்க. புதுசு புதுசா கொரோனா உருமாறிட்டு வருது. மக்கள்கிட்ட நோய் எதிர்ப்பு சக்தி எதிர்பார்க்கிற அளவுக்கு இல்ல. அப்புறம் எப்படி மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகும்? மூணாவது அலைல குழந்தைகளும் ஆபத்தை எதிர்நோக்கும் வாய்ப்பு இருக்குங்கிறாங்க. என்னைப் பொறுத்தமட்டிலும், குழந்தைகளின் படிப்பா? உயிராங்கிற கேள்விக்கு உயிர்ன்னுதான் பதில் சொல்லுவேன். இப்ப இருக்கிற மாதிரியே சில மாதங்கள் விட்டுட்டு, டிசம்பர்ல ஜனவரில ஸ்கூல் திறக்கலாம். பள்ளிக்கூடம் திறக்கப்போறோம்னு அரசாங்கம் சொன்னதுல இருந்து ஒரே குழப்பமா இருக்கு.

onlineclass

துரைராஜ்

ஆன்லைன் படிப்புல ஸ்டூடன்ட்ஸ் எந்தமாதிரி படிக்கிறாங் கன்னு பெற்றோர் தெரிஞ்சுக்கிற அளவுகோல் இல்ல. மரம் பட்டுப் போகாம இருக்கணும்ல. அந்த மாதிரிதான் இந்த ஆன்லைன் படிப்பு. மூணாவது அலை பீதி இருந்தாலும்.. மக்கள்கிட்ட இப்ப முன்னமாதிரி கொரோனா பயமில்ல. மனசுல தைரியத்த வர வழைச்சுக்கிட்டு பிள்ளைங்கள ஸ்கூலுக்கு அனுப்ப வேண்டியது தான். எதுன்னாலும் விதிப்படிதான் நடக்கும். பயந்து ஒண்ணும் ஆகப்போறதில்ல. எதிர்கொள்ளத் தயாராவே இருக்கணும்.

சுந்தரவள்ளி

எங்க புள்ளைங்ககிட்ட டச்சு போனு இல்ல. பட்டன் போன்தான் வீட்ல இருக்கு. அதை வச்சி எப்படி படிக்கும்? தெருவுல சுத்திக்கிட்டு திரியுதுக. சொன்ன பேச்சு கேட்கிறதுல்ல. பள்ளிக்கூடம் திறந்தாத்தான் பெத்தவங்களுக்கு நிம்மதி.

விநாயகமூர்த்தி

வேற வழியில்லாம புள்ளைங்க கையில போனைக் கொடுத்து ஆன்லைன் கிளாஸ் அட்டென்ட் பண்ணச் சொன்னா.. வாட்ஸப்பு பேஸ்புக்குன்னு போயி ஏமாத்துறவன்கிட்ட மாட்டிக்கிட்டு பெத்தவங்க வயித்துல நெருப்ப அள்ளிப் போட்ருதுங்க.. தமிழ்நாடு முழுக்க போலீஸ் ஸ்டேஷன்ல இந்தமாதிரி கேஸ்தான் அதிகம் வருதுன்னு சொல்லுறாங்க. வெளிய தெரியாம நடந்த தப்ப மறைச்சு குழந்தை திருமணம் பண்ணி வச்சிடறாங்க. இன்னொரு பக்கம்.. ஸ்கூல் மூடியாச்சுன்னு படிக்கிற பசங்க குழந்தைத் தொழிலா ளரா உருவாயிட்டு வர்றாங்க. படிப்படியா ஸ்கூல், காலேஜுன்னு எல்லாத்தயும் திறந்தாத்தான் இதுக்கு ஒரு விமோசனம் வரும்.

onlineclass

மல்லிகா

கல்வித் தொலைக்காட்சி, மொபைல் மூலம் ஆன்லைன் வகுப்புன்னு டிஜிட்டல் வடிவத் துல சொல்லித்தரப்படும் கல்வி முறைகள் புரிதல் நிறைந்த கல்வியா இருக்கிறது இல்ல. குறிப்பா.. 1 முதல் 5 வகுப்பு வரை பயிலும் ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளால் எந்தப் பயனும் இல்ல. தினமும் பள்ளிச் சூழலுடன் நேரடி தொடர்பு, ஆசிரியர்- மாணவர் உறவுமுறை, வகுப்பறையில் நேரடி கல்வி கற்பித்தல், இதுதான் ஒரு முழுமை யான புரிதல் நிறைந்த கல்வியை மாணவர்களுக்கு வழங்கமுடியும். கிராமப்புறங்கள் மட்டுமின்றி நகர்ப்புறங்களில் கூட, ஆன்லைன் கல்வியை தங்களது குழந்தை களுக்கு கற்றுத் தருவதற்கு, வழிகாட்டுவதற்கு, அடிப்படை வழிமுறைகள் பெரும்பாலான பெற் றோருக்கு தெரியாது. வேலைக்குச் செல்லும் பெற்றோருக்கு, தங்கள் குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை செலுத்துவதற்கு போதிய நேரம் கிடைப்பதில்லை. அதனால தான் எப்ப பள்ளிகள் திறப்பாங் கங்கிற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கிட்டே இருக்கு.

ராமமூர்த்தி

தமிழ்நாட்டுல கொரோனா பாதிப்பு முழுமையா நீங்கல. தடுப்பூசி போடுறதுல அரசு மருத்துவமனைல அலைக்கழிப்பு நெறய இருக்கு. கிராமப்புறங்களில் விழிப்புணர்வு நடவடிக்கைய அதிகப்படுத்தி,. வீடுவீடா போயி தடுப்பூசி போடணும். பொது போக்குவரத்துல பொது இடங்கள்ல கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றுவது இல்ல. சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை இடையே பணி ஒருங்கிணைப்பு சரியா இல்ல. இதையெல்லாம் சரிபண்ணாம ஸ்கூலை திறக்கிறது ரிஸ்க்கோ ரிஸ்க்.

ddகவிதா

ஒண்ணரை வருஷமா ஸ்கூலுக்கு போகாம, பிள்ளைகளுக்கு கல்வி அறிவு மட்டுமல்ல.. நல்லொழுக்கமும் கெட்டுப்போச்சு. அதைவிட, வீட்ல காட்டுற தொந்தரவுகள எங்களால பொறுத்திட்டு இருக்க முடியல. கொரோனா அச்சம் முழுசா இன்னும் எங்கள விட்டு நீங்கல. அரசாங்கம், கொரோனா தொற்று குறைஞ்சிருச்சுன்னு சொல்லுது. ஆனா.. வேறமாதிரி கருத்துகளும் வந்துகிட்டே இருக்கு. பள்ளிக்கூடம் திறந்தாலும், அரசு கூறியிருக்கும் விதி முறைகளை 10-ஆம் வகுப்பு.. அதுக்கு மேல படிக்கிற பிள்ளைகள்தான் பின்பற்றுவாங்க. அதுக்கு கீழே உள்ள வகுப்புல படிக்கிறவங்களுக்கு இந்த நோயோட ஆபத்து தெரியாது. அதனால.. விதிமுறைகளை எந்த அளவுக்கு பின்பற்று வாங்கன்னு தெரியாது. மூணாவது அலை 11 வயசு குழந்தைகளை தாக்கும்கிறாங்க. ரெண்டாவது அலையைக் கட்டுப்படுத்தின மாதிரி, மூணாவது அலைய கட்டுப்படுத்திட்டு பள்ளிக்கூடங்களைத் திறக்கலாம்.

முருகமணி

என்னோட ரெண்டு பிள்ளைங்களும் பள்ளி, கல்லூரில படிக்கிறாங்க. அவங்களுக்கு இன்னும் கொரோனா அச்சம் போகல. தஞ்சாவூரு அம்மாபேட்டைல பள்ளி மாணவிகள் 56 பேருக்கு கொரோனா, கும்பகோணத்துல 25 மாணவிகளுக்கு கொரோனா, திருவாரூர் மன்னார்குடில் பிளஸ் 2 மாணவிகள் 11 பேருக்கு கொரொனான்னு போன மார்ச் மாசம் பரபரப்பா நியூஸ்ல சொன்னாங்க. இந்தியா முழுக்க 37 மாவட்டங்கள்ல கொரோனா கேஸ் கூடிட்டே வருதுன்னு சொல்லுற ஒன்றிய அரசு, தமிழ்நாட்டுல 7 மாவட் டங்கள் உஷாரா இருக்கணும்னு எச்சரிச்சிருக்கு. பக்கத்துல இருக்கிற கேரளாவுல 11 மாவட்டங்கள்ல கொரோனா பரவல் அதிகமா இருக்காம். மூணாவது அலை ஆகஸ்ட்ல தொடங்கி அக்டோபர்ல வேகம் காட்டும்கிறாங்க. நிலைமை இப்படி இருக்கும்போது, ஸ்கூலை திறக்கணும்னு அரசாங்கம் முடிவெடுத்திருப்பது தவறானது.

மாணவர்களின் மனநிலை அறிய பிளஸ் 2 மாணவர்கள் ப்ரனாப்காந்த் உள்ளிட்டோரிடம் பேசினோம் -

கொரோனாங்கிறது ஒரு வைரல் டிசீஸ். மாறிட்டே இருக்கும். நாம வேக்சின் போடப்போட டெல்டா மாதிரி வைரஸ் வந்துட்டே இருக்கும். ஸ்டூடண்ட்ஸ் மனசுல பயம் இருக்கா இல்லையான்னு சரியா சொல்லத் தெரியல. ஸ்கூலுக்கு போறது தள்ளிட்டே போனா நல்லாயிருக்காது. கொரோனாவுக்கு ரொம்ப பேரு பலியாயிருக்காங்க. ஒவ்வொரு உசிரும் அவங்கவங்க கையில. நாமதான் பாதுகாப்பா இருந்துக்கணும். கொரோனாவா டெல்டாவோ மாறிமாறி வரத்தான் செய்யும். சலிக்கிற அளவுக்கு வீட்ல இருந்தாச்சு. எங்களுக்கு ஸ்கூல் திறந்துட்டா குஷிதான்.

dd

பொது சுகாதாரத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்படுவதை, அச்சம் கலந்த வருத் தத்தோடு, பெற்றோரும் மாணவர்களும் வரவேற்கவே செய் கின்றனர்.

-ராம்கி, சக்தி, அண்ணல், மணிகண்டன், நாகேந்திரன்,

ராம்குமார்