அடக்குமுறைக்கு எதிராக 37 குரல்கள்! -ஜோதிமணி பேட்டி

jothimani

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னதாகவே, கரூர் வேட்பாளர் ஜோதிமணி என்பதை தி.மு.க. தலைவரிடம் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாக, கரூர் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார் ஜோதிமணி. அவரைச் சந்தித்து இந்தியளவில் காங்கிரஸின் படுதோல்விக்கான காரணங்கள், எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்தோம்.

கரூர் மக்களின் அமோக ஆதரவு உங்களுக்குக் கிடைக்க காரணமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

ஜோதிமணி : மக்கள் என்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். பொதுவாகவே பணக்காரர்களாகவும், வாரிசுகளாகவும், நேர்மையற்றவர்களாகவுமே அரசியல்வாதிகள் இருப்பதான பிம்பம் மக்கள் மத்தியில் இருக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. இந்த பிம்பத்திற்கு நேரெதிராக நான் இருப்பதுதான் மக்களிடம் கிடைத்த அன்பிற்கும், பேராதரவிற்கும் காரணமென்று நினைக்கிறேன். குறிப்பாக, சகோதரர் செந்தில்பாலாஜியின் ரோல் இதில் மிகமுக்கியமானது. நாங்கள் இருவரும் வியூகம் அமைத்து தேர்தலுக்கு தயாரானோ

காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னதாகவே, கரூர் வேட்பாளர் ஜோதிமணி என்பதை தி.மு.க. தலைவரிடம் தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. அவரது நம்பிக்கைக்குப் பாத்திரமாக, கரூர் தொகுதியில் மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறார் ஜோதிமணி. அவரைச் சந்தித்து இந்தியளவில் காங்கிரஸின் படுதோல்விக்கான காரணங்கள், எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்ட கேள்விகளை முன்வைத்தோம்.

கரூர் மக்களின் அமோக ஆதரவு உங்களுக்குக் கிடைக்க காரணமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்?

ஜோதிமணி : மக்கள் என்மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். பொதுவாகவே பணக்காரர்களாகவும், வாரிசுகளாகவும், நேர்மையற்றவர்களாகவுமே அரசியல்வாதிகள் இருப்பதான பிம்பம் மக்கள் மத்தியில் இருக்கிறது. இது துரதிர்ஷ்டவசமானது. இந்த பிம்பத்திற்கு நேரெதிராக நான் இருப்பதுதான் மக்களிடம் கிடைத்த அன்பிற்கும், பேராதரவிற்கும் காரணமென்று நினைக்கிறேன். குறிப்பாக, சகோதரர் செந்தில்பாலாஜியின் ரோல் இதில் மிகமுக்கியமானது. நாங்கள் இருவரும் வியூகம் அமைத்து தேர்தலுக்கு தயாரானோம்.

jothimani

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அமேதியில் தோல்வி அடைந்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஜோதிமணி : ஜனநாயகத்தில் மக்கள் தீர்ப்பே இறுதியானது. வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தி, வெற்றிபெற்றதும் அந்தத் தொகுதியைத்தான் தக்க வைத்துக்கொள்வார் என்று அமேதியில் பா.ஜ.க.வினர் வீடுவீடாக பிரச்சாரம் செய்ததுதான், அங்கு ராகுல்காந்தி தோல்வியடைந்ததற்கான காரணம். இது ராகுல்காந்தியின் தோல்வி கிடையாது. இந்த தேசத்திற்கான தோல்வி என்றே நான் கருதுகிறேன்.

தி.மு.க. ஆதரவோடுதான் தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றிபெற்றது என்ற விமர்சனம் வைக்கப்படுகிறதே?

ஜோதிமணி : காங்கிரஸ் தமிழகத்தில் பலவீனமாக இருப்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிதான், எல்லா கூட்டணிக்கட்சி வேட்பாளர்களும் வெற்றிபெறக் காரணம். இதைக் கட்சிகளாகப் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை. நாங்கள் கூட்டணியாக போட்டியிட்டோம். அந்தக் கூட்டணிக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமைதாங்கினார். அவர்தான் அந்தக் கூட்டணியை அமைத்தார். அதேசமயம், கேரளாவில் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 20 தொகுதிகளில் 19-ல் வெற்றி பெற்றிருக்கிறது.

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக கொண்டு சேர்க்காததுதான் காங்கிரஸின் தோல்விக்குக் காரணமா?

ஜோதிமணி : கட்சியைவிட, தனிநபரைவிட தேசம் முக்கியம். ஜனாதிபதி தேர்தல் அல்ல நம்முடைய தேர்தல்முறை. பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில் தேர்தலை ஜனாதிபதி தேர்தலாக மாற்றுவதன்மூலம், அதற்கான பேரழிவுகளையும் எதிர்கொள்ள நாம் தயாராகவேண்டும். மோடியின் ஐந்தாண்டு கால ஆட்சியின் கொடுங்கோன்மையை பார்த்திருக்கிறோம் அல்லவா. அரசியல் சாசனத்தை உருவாக்கி, அதற்கு பின்புலமாக இருந்த ஒரு கட்சி, பன்முகத்தன்மையை மதிக்கும் காந்தி, நேரு வழிவந்த கட்சி, தேர்தலை ஜனாதிபதி தேர்தலைப்போல மாற்றவேண்டுமா என்கிற கேள்வியை தனக்குள் எழுப்பிக் கொண்டிருக்கிறது.

வளர்ச்சித் திட்டங்கள் தொடர்ச்சியாக தமிழகத்திற்குக் கிடைக்கப் போகிறது. அதனால் எங்களுக்கு பிரச்சனையில்லை என்கிறாரே பா.ஜ.க. தலைவர் தமிழிசை?

ஜோதிமணி : வளர்ச்சி என்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். வேதாந்தாவை வளர்ச்சி என்று நினைத்தால் அது தமிழிசையின் பிரச்சனை. அதற்கான பாடத்தை தமிழிசைக்கும், பா.ஜ.க.வுக்கும் தமிழக மக்கள் புகட்டி இருக்கிறார்கள். நரேந்திரமோடியின் அடக்குமுறைகளுக்கு எதிராக இந்த 37 குரல்களும் தமிழகத்தின் உரிமையை, வளர்ச்சியைப் பாதுகாக்க நாடாளுமன்றத்தில் ஒலிக்கும். இந்தத் தேர்தல் ஒரு கடினமான காலத்தை இந்தியாவின்மீது திணித்துவிட்டதோ என்கிற அச்சம் எனக்குள் ஏற்பட்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.-ன் இந்தியாவிற்கும், இந்து மதத்திற்கும் எதிரான சிந்தாந்தத்தைக் கைவிட்டுவிட்டு, இந்தியாவை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுசெல்லும் வாய்ப்பு மோடிக்குக் கிடைத்திருக்கிறது. அதைத் தவறாக பயன்படுத்தினால் நாடாளுமன்றத்திலும், களத்திலும் காங்கிரஸ் வலிமையாக எதிர்க்கும்.

சந்திப்பு - பெலிக்ஸ்

தொகுப்பு - ச.ப.மதிவாணன்

படம் : விக்னேஷ்

___________

தம்பிதுரை படுதோல்விக்குக் காரணம்!

கரூர் மக்களவைத் தொகுதியில் நான்குமுறை எம்.பி.யாக இருந்து, சென்றமுறை மக்களவைத் துணை சபாநாயகராக செயல்பட்டவர் தம்பிதுரை. இந்தமுறை தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் முன்னரே கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளைக் கூட்டிக்கொண்டு, கரூர் முழுவதுமுள்ள கிராமங்களைப் பார்வையிட்டார்.

சிட்டிங் எம்.பி. யாக இருந்த அவருக்கு பல கிராமங்கள் எதிர்ப்பையே பரிசாக அளித்தன. வையம்பட்டி ஒன்றியத்தில் உள்ள சின்னமனைப்பட்டி கிராமத்திற்குள் சென்றபோது, மக்கள் கூட்டத்தில் இருந்த பழனிச்சாமி என்பவர், ""நீங்க எதுக்குய்யா வர்றீங்க, நாங்க எல்லாம் நொந்து போயிட்டோம். உங்களை கையெடுத்து கும்பிட்டு கேக்கிறேன். தயவுசெய்து போயிடுங்க. இங்க நடக்க பாதைகூட கிடையாது'' என்றார். இதுதான் கரூரின் ஒட்டுமொத்த குரலாக எலெக்ஷனுக்கு முன்பாகவே ஒலித்தது.

ஏமூர் புதூர் காலனியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, இதேபோன்று பொதுமக்கள் சிலர் குறுக்கிட, ஆவேசமடைந்த தம்பிதுரை, ""ஓட்டுக்கேட்பது எங்க கடமை, ஓட்டு போடுறதும், போடாததும் உங்க உரிமை. ஓட்டு போடுங்க. போடாட்டி போங்க. ஓட்டுக்காக கைல, காலுல விழமுடியாது'' எனப்பேசி அதிர்ச்சியடையச் செய்தார். அதுதான், 4,20,546 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் படுதோல்வி அடையக் காரணமானது.

-ஜெ.டி.ஆர்.

nkn040619
இதையும் படியுங்கள்
Subscribe