Advertisment

3500 குடும்பங்கள் மகிழ்ச்சி! -வாக்குறுதியை நிறைவேற்றிய முதல்வர்

dd

ரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் பகுதியில், பூமிக்கடியில் தரமான நிலக்கரி இருப்பதாக மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. ஆய்வுசெய்து அறிவித்தது. அதனடிப்படையில் 1991-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி தோண்டியெடுத்து அனல்மின்நிலையம் அமைத்து மின்சாரம் தயாரிக்கப்போவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார்.

Advertisment

அதன்படி மேலூர், கல்லாத்தூர், தண்டலை, கூவத்தூர், தேவனூர், காட்டாத்தூர், இலையூர், புதுக்குடி, வாரியங்காவல், உடையார்பாளையம், புறஞ்சேரி, தேவாமங்கலம், கொளத்தூர், பெரிய வளையம் உள்ளிட்ட சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்த தமிழ்நாடு அரசின் சிட்கோ மூலம் நிலம் கையகப்படுத்தும் பணி 1993 முதல் தொடங்கி நடைபெற்றது.

Advertisment

ff

இதற்காக ஜெயங்கொண்டத்தில் தனி அலுவலகம் துவங்கப்பட்டது. இழப்பீட்டுத் தொகையாக ஒரு ஏக்கருக்கு 23 ஆயிரம் முதல் 35,000 வரை வழங்கப்பட்டது. இந்த இழப்பீடு போதாது என விவசாயிகள் அவ்வப்போது போராட்டம் நடத்திவந்தனர்.

1996-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அப்போ தும் நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்தது. 2001-ல் மீண்டும் அ.தி.மு.க., 2006-ல் தி.மு.க., மீண்டும் 2011 முதல் 2021 வரை அ.தி.மு.க., இப்படி இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்தபோதும் நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையடையவில்லை. இழப்பீட்டுத் தொகையும் கூடுதல் ஆக்கப்படவில்லை. சுமார் 7000 விவசாயிகள் கூடுதல் இழப்பீடு கோரி அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

2016-ஆம் ஆண்டு தனி நீதிமன்ற நீதிபதியாக இருந்த செம்மல், "ஒரு சென்ட் நிலத்திற்கு 3,750 ரூபாய் இழப்பீட்டுத் தொகை, அதில் 30% கூடுதல் இழப்பீடாக நிலம் கொடுத்த தேதியிலிருந

ரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் பகுதியில், பூமிக்கடியில் தரமான நிலக்கரி இருப்பதாக மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. ஆய்வுசெய்து அறிவித்தது. அதனடிப்படையில் 1991-ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, ஜெயங்கொண்டம் பகுதியில் நிலக்கரி தோண்டியெடுத்து அனல்மின்நிலையம் அமைத்து மின்சாரம் தயாரிக்கப்போவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார்.

Advertisment

அதன்படி மேலூர், கல்லாத்தூர், தண்டலை, கூவத்தூர், தேவனூர், காட்டாத்தூர், இலையூர், புதுக்குடி, வாரியங்காவல், உடையார்பாளையம், புறஞ்சேரி, தேவாமங்கலம், கொளத்தூர், பெரிய வளையம் உள்ளிட்ட சுமார் பதினைந்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்த தமிழ்நாடு அரசின் சிட்கோ மூலம் நிலம் கையகப்படுத்தும் பணி 1993 முதல் தொடங்கி நடைபெற்றது.

Advertisment

ff

இதற்காக ஜெயங்கொண்டத்தில் தனி அலுவலகம் துவங்கப்பட்டது. இழப்பீட்டுத் தொகையாக ஒரு ஏக்கருக்கு 23 ஆயிரம் முதல் 35,000 வரை வழங்கப்பட்டது. இந்த இழப்பீடு போதாது என விவசாயிகள் அவ்வப்போது போராட்டம் நடத்திவந்தனர்.

1996-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அப்போ தும் நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்ந்தது. 2001-ல் மீண்டும் அ.தி.மு.க., 2006-ல் தி.மு.க., மீண்டும் 2011 முதல் 2021 வரை அ.தி.மு.க., இப்படி இரு கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் அமர்ந்தபோதும் நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையடையவில்லை. இழப்பீட்டுத் தொகையும் கூடுதல் ஆக்கப்படவில்லை. சுமார் 7000 விவசாயிகள் கூடுதல் இழப்பீடு கோரி அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

2016-ஆம் ஆண்டு தனி நீதிமன்ற நீதிபதியாக இருந்த செம்மல், "ஒரு சென்ட் நிலத்திற்கு 3,750 ரூபாய் இழப்பீட்டுத் தொகை, அதில் 30% கூடுதல் இழப்பீடாக நிலம் கொடுத்த தேதியிலிருந்து 9 சதவீத வட்டியுடன் வழங்கவேண்டும். நிலத்தில் முந்திரி மரங்கள் உள்ளன. மரம் ஒன்றுக்கு ரூபாய் 3000 இழப்பீடாகத் தரவேண்டும்' என்று தீர்ப்பளித்தார். இந்த அளவிற்கு கூடுதல் இழப்பீடு வழங்கமுடியாது என அரசுத் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஜெயங்கொண்டம் பகுதி விவசாயிகளுக்காக 22-9-2000 நக்கீரனில் "முந்திரிக்காட்டு தீவிரவாதம்', 19-3-2005 இதழில் "ஊரைக் காலி பண்ணு! கிராமங்களை மிரட்டும் அரசு!', 2012 ஏப்ரல் 4-ஆம் தேதி இதழில் "குறட்டைவிடும் மின்சார உற்பத்தித் திட்டம்!', 2016 செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி இதழில் "சிங்கூர் பாதையில் ஜெயம் கொண்டம்' என்று பல்வேறு தலைப்பில் செய்திகள் வெளியிட்டோம்.

ff

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் "சிங்கூர் சம்பந்தமாக உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், ஜெயங்கொண்டத்தில் அனல்மின் நிலையம் அமைக்க விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய நிலத்தை விவசாயிகளிடமே மாநில அரசு திருப்பி ஒப்படைக்கவேண்டும், இல்லையேல் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மேற்கோள்காட்டி நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம்' என்று அறிக்கை வெளியிட்டார்.

கூடுதல் இழப்பீடு கேட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். இந்த நிலையில்தான் தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின், "ஜெயங் கொண்டம் பகுதி விவசாயிகளிடமிருந்து நிலக்கரித் திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் எந்தவித நிபந்தனையுமின்றி அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்' என்று அறிவித்துள்ளார். இது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டோம்.

புதுக்குடி பாண்டியன் நம்மிடம், "சுமார் 30 ஆண்டு காலமாக நிலம் கொடுத்த விவசாயிகளான நாங்கள் அகதிகளாகத்தான் இங்கு வாழ்ந்துவந்தோம். நிலத்தை கையகப்படுத்திய காரணத்தினால் அரசுத் திட்டங்கள், அரசு சலுகைகள் எங்களுக்கு மறுக்கப்பட்டது. விவசாயம் செய்ய மின்சார பம்புசெட்டுக்கு மின் இணைப்பு, புதிய வீடு கட்டுவதற்கு அனுமதி, அரசு வழங்கும் இலவச வீடு, ஊருக்கான அரசு சார்ந்த கட்டடங்கள், எங்கள் பிள்ளைகளுக்கு வங்கிகளில் கல்விக் கடன், விவசாய கடன் இப்படி அனைத்தும் மறுக்கப்பட்டது. தற்போது அரசு எங்கள் நிலத்தை எங்களுக்கே திருப்பித் தருவதாக அறிவித்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி சொல்கிறோம். கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் இழந்தது ஏராளம்... ஏராளம். எனவே அரசு எங்கள் பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய பம்புசெட்டுகளுக்கு சிறப்பு முன்னுரிமை அடிப்படையில் இலவச மின்இணைப்பு வழங்கவேண்டும். எங்களிடமிருந்து எடுக்கப்பட்ட நிலத்தின் உரிமையை விரைவாக ஆவணங்கள் மூலம் எங்களுக்கு ஒப்படைக்க வேண்டும்''’என்கிறார்.

மூத்த விவசாயி ராஜேந் திரனோ, “"அரசு நிலம் கையகப் படுத்த தனி அலுவலகம், அதற்கு அதிகாரிகள் ஊழியர்கள் என நிறைய வீண்செலவு செய்துள்ளது. தற்போது ஒரு தலைமுறையினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். காலம் தாழ்த்தாமல் அரசு இதற்கென தனி அதிகாரிகளை நியமித்து எங்களுக்குரிய நிலத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கு தனி அலு வலகம், அதிகாரிகள் அலுவலர் களை நியமிக்கவேண்டும். அப்போதுதான் விரைவில் அந்த பணி நிறைவேறும்''’என்கிறார்.

விவசாயி ராயரோ, "பூமியி லிருந்து நிலக்கரி தோண்டி யெடுத்து மின்சாரம் தயாரிப்பதில் செலவுகள் மிக அதிகம். அப்படி உற்பத்தி செய்யப்படும் மின் சாரத்தை அதிக விலைக்கு விற்பனை செய்து செலவு செய்த தொகையைப் பெறமுடியாது. இதனால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இதற்குப் பதில் வெளி நாடுகளில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து அதன்மூலம் மின்சாரம் தயாரிப்பது லாபகரமாக உள்ளது. இந்த காரணங்களால் ஜெயங்கொண்டம் திட்டம் கைவிடப்படுகிறது என்று நம்மிடம் தெரிவித்தார் என்.எல்.சி. அதிகாரி. ஜெயங்கொண்டம் திட்டம் கைவிடப்பட்டதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம்.

தற்போதைய சூழ்நிலையில் விவசாயிகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ள கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டுமானால் சுமார் 2000 கோடி வரை பணம் செலவாகும். தற்போது அரசுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியில் இது பெரும் சுமை. இப்படி பல்வேறு காரணங் களின் அடிப்படையில் திட்டம் கைவிடப் பட்டுள்ளது.

இந்தத் திட்டத்திற்காக இதுவரை விவசாயிகளுக்கு இழப்பீடாக கொடுக்கப்பட்ட தொகை இருபத்தி ஒரு கோடி. அதிகாரிகளுக்கும், அலுவலகக் கட்டட வாடகையாகவும் அரசு செலவு செய்துள்ள தொகை சுமார் 34 கோடி ரூபாய். "வெடிப்பில் விழுந்தது ஒத்த ரூபாய் அதை வெட்டியெடுக்க 10 ரூபாய்' என்ற பழமொழிதான் நம் நினைவுக்கு வருகிறது''’என்றார் ஆதங்கமாக

தமிழக முதல்வர், தேர்தலுக்கு முன்பாக அரியலூரில் நடைபெற்ற "உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பொதுக் கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மேலூர் கிராமத் தைச் சேர்ந்த விவசாயி முருகேசன் என்பவர் "ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்காக அரசு கையகப்படுத்திய நிலத்தை உரிமை யாளர்களுக்கே திரும்ப வழங்க வேண்டும்' என்று கோரிக் கை வைத்தார். அதற்கு பதி லளித்த ஸ்டாலின், "தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் ஜெயங் கொண்டம் நிலக்கரித் திட்டம் குறித்த பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்படும்' என்று உறுதியளித்தார்

"தமிழக முதல்வர் அளித்த வாக்குறுதிப்படி விவசாயிகள் எந்தவித போராட்டமும் நடத் தாமல் விவசாயிகளுக்கு நிலத்தை திருப்பிக் கொடுத்துள் ளார். 25 ஆண்டுகால பிரச் சினை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட 3500 குடும்பங்களில் நானும் ஒருவன் என்ற முறையிலும் இந்த பகுதி மக்கள் பிரதிநிதி களில் ஒருவன் என்ற முறை யிலும் முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்வதாக' அறிவித்துள்ளார்”அமைச்சர் சிவசங்கர். ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள் ஜெயங்கொண் டம் பகுதி விவசாயிகள்.

____________________

சிறைப் பதக்கத்தில் எடப்பாடி பழனிசாமியின் கையெழுத்து!

-நெடுநாள் தூக்கம் கலைத்த சிறைத்துறை!

ff

தி.மு.க. ஆட்சிப் பொறுப் பேற்று மு.க.ஸ்டாலின் முத லமைச்சராகி ஓராண்டு கடந்து விட்ட நிலையில், அப்போதைய முதல் வர் எடப்பாடி பழனி சாமி கையெழுத் திட்ட, 2021-ஆம் ஆண்டுக்கான ‘தமிழக முதலமைச்சரின் சிறை நற்பணி -பொங்கல் பதக்கத்தை மதுரை மத்திய சிறையில் ஜூன் 11-ஆம் தேதி வழங்கியிருக்கின்றனர்.

தமிழக சிறைத்துறை டி.ஜி.பி. சுனில்குமார் சிங், 2 மாதங்களுக்கு முன்பே மேற்கண்ட பதக்கங்களை வழங்க உத்தரவிட்ட நிலையில், இத்தனை தாமதமாகத் தந்துள்ளனர். இந்த நிகழ்வைத் தனது முகநூலில் பதிவுசெய்த மதுரை மத்திய சிறை முதல்நிலைக் காவலர் பொ.ராமராஜ், தனக்குக் கிடைத்த சான்றிதழை படத்துடன் வெளியிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தமிழக சிறைத்துறை தலைமையிடத்து டி.ஐ.ஜி. முருகேசன் குறித்து சிறைத்துறை வட்டாரத்தில் முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது. "சேலத்துக்காரரான முருகேசன் எடப்பாடி விசுவாசத்தை இன்றுவரையிலும் தொடர்கிறார். முருகேசனும் சரி, மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனியும் சரி, நான்கைந்து ஆண்டுகளாகியும் இடமாற்றம் செய்யப்பட வில்லை. தி.மு.க. ஆட்சியிலும் ‘பவர்ஃபுல்லாக இவர்களது ராஜ்ஜியமே தொடர்கிறது'’என்கிறார்கள்.

-ராம்கி

nkn180622
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe