Advertisment

3.3 கோடி லஞ்சம்! -அம்பலமாகும் இந்திய ரயில்வே ஊழல்!

tra

ச்சநீதிமன்ற வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் தனது முகநூல் பதிவொன் றில் இந்திய ரயில்வேயில் நடைபெற்ற 3.3 கோடி மதிப்பிலான ஊழல் குறித்த பதி வொன்றை இட்டிருக்கிறார். அதன் சாராம் சம், அக்டோபர் 2022-ல் அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமி ஷன் இந்திய ரயில்வேயின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்காக ஓரக்கிள் நிறு வனத்துக்கு 23 மில்லியன் டாலர் அபராதம் விதித்திருக்கிறது. ஓரக்கிள் நிறுவனம், இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு ஏன் லஞ்சம் கொடுக்கவேண்டும்?

Advertisment

train

இந்திய ரயி

ச்சநீதிமன்ற வழக்கறிஞரான பிரசாந்த் பூஷன் தனது முகநூல் பதிவொன் றில் இந்திய ரயில்வேயில் நடைபெற்ற 3.3 கோடி மதிப்பிலான ஊழல் குறித்த பதி வொன்றை இட்டிருக்கிறார். அதன் சாராம் சம், அக்டோபர் 2022-ல் அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கமி ஷன் இந்திய ரயில்வேயின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்காக ஓரக்கிள் நிறு வனத்துக்கு 23 மில்லியன் டாலர் அபராதம் விதித்திருக்கிறது. ஓரக்கிள் நிறுவனம், இந்திய ரயில்வே அதிகாரிகளுக்கு ஏன் லஞ்சம் கொடுக்கவேண்டும்?

Advertisment

train

இந்திய ரயில்வேயில் ஓரக்கிள் நிறு வனத்தின் மென்பொருளைப் பயன்படுத்து வதற்காக இந்த லஞ்சம் கொடுக்கப்பட்டி ருக்கவேண்டும். என்ன மென்பொருள் வாங்கினார்கள்? யாருக்கு லஞ்சம் போனது என எதுவும் வெளியில் வரவில்லை.

அந்தக் காலகட் டத்தில் இந்திய ரயில் வேயின் அமைச்சராக இருந்தவர் பியூஷ் கோயல். ராஜ்யசபாவில் இந்த விவகாரம் குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத்கோகலே ஜனவரி 3ஆம் தேதி கேள்வியெழுப்பியபோது, ரயில்வே போர்டின் செயலாளர் மிலிந்த் தியோஸ்கர், சி.பி.ஐ.யின் பரிசீலனைக்கு இந்த விஷயம் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். சி.பி.ஐ.க்கு இந்த விவகாரம் போய் 1 வருடமாகிவிட்டது. அவர்களோ, இதில் ஒரு வழக்குக்கூட பதியாமல், கிடப்பில் போட்டுவிட்டார்கள் என கோகலே ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

2016-2019க்கு இடையில் இந்தியா, துருக்கி, அரபு ஐக்கிய நாடுகளில் வணிகத்தைப் பிடிப்பதற்காக அதிகாரி களுக்கு லஞ்சம் கொடுத்ததற்காக, அமெரிக்க சந்தை வரன் முறைப்படுத்தல் அமைப்பான எஸ்.இ.சி. ஓரக்கிள் நிறு வனத்துக்கு 23 மில்லியன் டாலர் அபராதம் விதித்துள்ளது. அதுகுறித்த அறிக்கையில், "70% டிஸ்கவுண்ட் கொடுக்கா விட்டால் இந்த டீல் கைநழுவிப்போக வாய்ப்பிருக்கிறது' என இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டவர் தெரிவித்திருக் கிறார். உண்மையில், ஓரக்கிளுக்கு எந்தப் போட்டியும் இருக்கவில்லை. குறிப்பிட்ட இந்திய நிறுவனம் ஓரக்கிளின் மென்பொருளைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கி யிருந்தது. இந்த விற்பனைப் பரிமாற்றத்தில் ஈடுபட்டிருந்த விற்பனைப் பணியாளர், "குறிப்பிட்ட இந்திய நிறுவனத்தின் அதிகாரிக்கு 67,000 டாலர்கள் கொடுக்கப்பட்டதாக'த் தெரிவிக்கிறார். கிட்டத்தட்ட 4 லட்சம் டாலர்கள் இங்கே லஞ்சமாகக் கொடுக்கப்பட்டதாக அந்த அமெரிக்க அறிக்கை தெரிவிக்கிறது.

இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததற்காக, ஓரக்கிள் நிறுவனத்துக்கு அமெரிக்கா அபராதம் விதித்த தென்றால், இந்தியாவில் லஞ்சம் வாங்கிய ரயில்வே அதி காரிகளை இந்திய அரசு தண்டித்திருக்கவேண்டுமல்லவா?

எதிர்க்கட்சிகளின் மீது பாய்ந்து, பாய்ந்து சோதனைகளை நடத்தி கைதுகளை மேற்கொள்ளும் அமலாக் கத்துறையும் சி.பி.ஐ.யும் ரயில்வேயில் நடந்த ஊழல் குறித்து கண்டு கொள்ளவே மறுக்கின்றன. ஆளும் கட்சியோ பதுங்குகிறது.

நல்லா இருக்குங்க சார் உங்க நியாயம்!

nkn200124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe