சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அளவில் திருமணமான பெண்கள் கருத்தரித்து பிரசவிக்கும்போது பலர் இறந்துபோனார்கள். பலருக்கு சத்துக் குறைவான குழந்தைகள் பிறந்தன. பிறக்கும்போதே பல குழந்தைகள் இறந்தன. கர்ப்பிணிப் பெண்கள் போதிய சத்து இல்லாமல் ரத்தசோகையால் அவதிப்பட்டனர். இதனால் அவர்கள் வயிற்றில் வளரும் கரு முழுமையாக வளராமல் சிதைந்துபோனது. இந்த நிலை இந்தியா முழுவதும் பெரிய பிரச்சனையாக இருந்துவந்தது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவிக்க, மத்திய அரசு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு கர்ப்பிணிப் பெண்களையும் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைகளையும் பாதுகாக்க உருவாக்கப்பட்டதே இந்திய கிராமப்புற சுகாதார திட்டம்.
இதனடிப்படையில் மலைப்பகுதி கிராமங்களிலும் தரைப்பகுதி கிராமங்களிலும் உள்ள ஒவ்வொரு சுகாதார நிலையத்திலும் ஒரு பெண் பணியாளர் நியமிக்கப்பட்டார். இவர்களுக்கு பெயர்தான் ஆஷா பணியாளர்கள். இவர்கள் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள கிராமங்களில் புதிதாக திருமணமான தம்பதிகளை இனம்கண்டு, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் வரை குழந்தைப்பேறு இல்லாமல் பாதுகாப்பாக இருந்து அதன்பிறகு கருவில் குழந்தை உருவானால் அது ஆரோக்கியமான வளர்ச்சிபெற்ற குழந்தையாக இருக்கும் என ஆலோசனை சொல்வார்கள். அந்த இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் அந்தப் பெண் ணுக்குத் தேவையான சத்துள்ள மாத்திரைகள், அரசு அளிக்கும் ஊட்டச்சத்து சம்பந்தமான உணவுப் பொருட்கள் ஆகியவற்றை அவர்களுக்கு கொண்டுசென்று அளிப்பதோடு இது குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்துவார்கள்.

அப்பகுதியில் கருவுற்றி ருக்கும் தாய்மார்களை அடையாளம் கண்டு அவர்கள் வயிற்றில் வளரும் கரு நல்ல முறையில் வளர அவர்களுக்கு தேவையான சத்து மாத்திரைகள், ஊட்டச்சத்து சம்பந்தமான உணவுகள் வழங்கவேண்டும். அவர்களை அவ்வப்போது சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்சென்று மருத்துவப் பரிசோதனை செய்து தடுப்பூசிகள் போட்டு அழைத் துச் சென்று வீட்டில் விட வேண்டும். பிரசவத்தின்போது சுகாதார நிலையத்திற்கு அழைத்து வரவேண்டும். சுகாதார நிலையத்தில் சுகப்பிரசவம் ஆகவில்லை என்றால் உடனடியாக ஆம்புலன்ஸ் அல்லது வாகனங்கள் மூலம் அருகிலுள்ள அரசு மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்லவேண்டும். அவர்களுக்கு பிரசவமாகி உடல்நிலை சரியாகும் வரை கூடவே இருந்து மீண்டும் அவர்களை அவர்கள் வீட்டில் கொண்டுசென்று சேர்ப்பதோடு அவர்கள் பிரசவித்த குழந்தை ஆரோக்கியமாக வளர்வதற்குத் தேவையான உதவிகளை அவ்வப்போது செய்வது, அந்த குழந்தைகளுக்கு அவ்வப்போது தடுப்பூசிகள், சொட்டு மருந்து கொடுப்பது, அந்த குழந்தை மூன்று வயது வரும்வரை தாயையும் குழந்தையையும் அடிக்கடி சென்று கண்காணிக்க வேண்டும். நர்ஸ்களைப் போல இப்படி ஏராளமான பொறுப்புகள் நிரம்பியது இப்பணி.
இதுமட்டுமல்லாமல் மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய்கள் தடுப்பு நடவடிக்கை களில் கிராமப்புறங்களுக்கு சென்று சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அரசு வழங்கும் மருந்து மாத்திரைகள், தூய்மையாக வைத்திருக்க பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை வீடு வீடாக கொண்டு சென்று கொடுக்கவேண்டும். அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் அவ்வப்போது கிராமப் புறங்களில் நடத்தும் மருத்துவ முகாம்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யவேண்டும்.
இப்படி கிராமப்புற அடித்தட்டு மக்களுக்கும் சுகாதாரத் துறைக்கும் இணைப்பு பாலமாக இருந்து மக்களின் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு ஆஷா பணியாளர்களுடையதுதான். அரசு இவர்களிடம் 12 விதமான ஆவணங்கள் அளித்துள்ளது. அந்த ஆவணங்களின்படி அரசு கேட்கும் புள்ளிவிவரங் களை கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று சேகரித்து பதிவு செய்யவேண்டும். அதை அதிகாரிகள் கேட்கும்போது அது சம்பந்தமான புள்ளிவிவரங்களை உடனுக்குடன் கொண்டுசென்று கொடுக்கவேண்டும். பணிநேரமென எதுவும் கிடையாது. 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
இவ்வளவு கஷ்டப்படும் எங்களுக்கு உரிய சம்பளம் இல்லை, பணி பாதுகாப்பு இல்லை, உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்கிறார்கள் ஆஷா பணியாளர்கள் . தாங்கள் சம்பளம் வாங்கும் கதையை விவரித்தார் ஒரு ஆஷா பணியாளர்.
“எங்களுக்கு அரசு சம்பளம் வழங்குவது எப்படி தெரியுமா? ஒரு பெண் கருத்தரித்து அவர்களது வயிற்றில் பத்து மாதம் குழந்தை வளர்ந்து சுகப்பிரசவமாகி வீட்டுக்குச் சென்ற பிறகு ஊக்கத் தொகையாக 500 ரூபாய் வழங்குகிறார்கள். இதையும் மாதாமாதம் வழங்குவதில்லை. ஆறு மாதத்தில் எத்தனை பிரசவம் சுகமாக ஆகியுள்ளதோ அந்த அடிப்படையில் கணக்கிட்டு மாதம் 2000 முதல் 3000 வரை மட்டுமே எங்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது''’என்றார் வேதனையுடன்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகிலுள்ள புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலைய எல்லைக்குட்பட்ட கிராமங்களின் ஆஷா பணியாளராக வேலைசெய்தவர் சிட்டம் தாங்கல் கிராமத்தை சேர்ந்த மீனா. இவர் அப்பகுதியி லுள்ள ஜெயலட்சுமி என்ற பெண்ணுக்கு கருவுற்றது முதல் கூடவே இருந்து பிரசவம் வரை தேவையான உதவிகளைச் செய்துவந்தார். இந்த நிலையில் ஜெயலட்சுமிக்கு கடந்த 10.6.2021 அன்று இரவு பிரசவ வலி ஏற்பட்டது. அவரை ஆஷா பணியாளர் மீனா புதுப்பட்டு சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்தார்.
அங்கு அவருக்கு பிரசவம் ஆவதில் சிரமம் ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்ப்பிணி ஜெயலட்சுமி, அவரது மாமியார் செல்வி, நாத்தனார் அம்பிகா ஆகியோரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் மீனா. அந்த ஆம்புலன்ஸ் கள்ளக்குறிச்சி அருகே நிலைதடுமாறி சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் கர்ப்பிணிப் பெண், அவரது மாமியார், நாத்தனார் மூவரும் இறந்து போனார்கள்.
ஆஷா பணியாளர் மீனா கால்கள் உடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். உயிரிழந்த கர்ப்பிணிப் பெண் குடும்பத்திற்கு 5 லட்ச ரூபாயும் அவருடன் உதவிக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்ணின் மாமியார், நாத்தனார் ஆகிய இரு குடும்பத்திற்கும் தலா 3 லட்ச ரூபாய் என முதல்வர் நிவாரணமாக அளித்துள்ளார். ஆனால் ஆஷா பணியாளர் மீனாவுக்கு எந்தவித நிதி உதவியும் அரசு சார்பில் வழங்கவில்லை. இதேபோல ஆஷா பணியாளர் அமுதவல்லி கருவுற்ற பெண்ணை பிரசவத்திற்காக அழைத்துச் செல்லும்போது 108 ஆம்புலன்ஸ் விபத் தில் சிக்கி அதில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள் ளார். பணிக்கும் பாதுகாப்பில்லை… உயிருக்கும் பாது காப்பு இல்லை,…இதுதான் எங்கள் நிலை''…என வேத னையாக முறையிட்டனர் ஆஷா பணியாளர்கள்.
"எங்களின் நிலையை உணர்ந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கருணை உள்ளத் தோடு பணி நிரந்தரம் செய்யவேண்டும். அடிப் படை சம்பளமாக மாதம் 18,000 ரூபாய் சம்பளம் நிர்ணயம் செய்யவேண்டும் சமீபத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கள்ளக் குறிச்சிக்கு வருகைதந்தபோது அவரிடம் எங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனு கொடுத்துள்ளோம் அவரும் இதுகுறித்து முதல்வருடன் பேசி நல்ல முடிவெடுப்பதாக அறிவித்துச் சென்றுள்ளார்''’என எதிர்பார்ப்புடன் கூறுகிறார்கள் ஆஷா பணியாளர்கள்.
ஆஷா பணியாளர்களுக்காக போராடி வரும் சி.பி.ஐ. கட்சியின் திருப்பூர் நாடாளு மன்ற உறுப்பினரான சுப்பராயன், "பல மாநிலங்களில் ஆஷா பணியாளர்களை முன் களப்பணியாளர்கள் என தரம் உயர்த்தியுள்ளனர். அதேபோன்று தமி ழகத்திலும் இவர்களை முன் களப்பணி யாளர்கள் என அரசு அறிவிக்கவேண்டும். இவர்கள் உழைப்பு மிக அதிகம். இவர்களுக்கு மாதம் 18 ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளமாக வழங்கி பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவாக ஏற்கனவே அளித்துள்ளேன்''’என்கிறார் சுப்பராயன்
ஆஷா பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் வகிதா நிஜாமோ, “"கடந்த ஆட்சியில் இவர்கள் நிலை குறித்து 10 முறைக்கு மேல் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்து முறையிட்டோம், போராட்டம் நடத்தினோம். இப்படிப்பட்ட தொழிலாளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதே பலரின் கண்களுக்குத் தெரியவில்லை. தமிழக முதல்வர் தாயுள்ளத்தோடு இந்தப் பெண் பணியாளர்களின் பிரச்சினைகளை அணுகவேண்டும்''’என்கிறார் வகிதா நிஜாம்.