Advertisment

3000 கோடி நிலக்கரி ஊழல்! அதானி மீது ஆக்ஷன் எடுக்குமா தி.மு.க?- அறப்போர் போர்க்கொடி!

adani

மிழக மின்சார வாரியத் திற்கு சப்ளை செய்யப் பட்ட நிலக்கரியில் 3000 கோடி ஊழல் செய்திருக்கும் தொழிலதிபர் அதானியை தி.மு.க. அரசு பாதுகாக்கிறது என்கிற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த ஊழல் மீது நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசு தயங்குவது ஏன்? என்றும் கேள்வி எழுப்புகிறது அறப்போர் இயக்கம்.

Advertisment

தமிழக மின்சார வாரியத்துக்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரி வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதன் மூலம், அனல்மின் நிலையங்களின் மின் உற்பத்திக்கான தேவைகள் பூர்த்திசெய்யப் படுகிறது. இதற்காக இறக்கு மதி செய்யப்படும் நிலக்கரி டெண்டர்களில்தான் மெகா ஊழல்கள் நடக் கின்றன. அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல் வர் ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ய பிரபல இந்திய தொழிலதிபர் அதானியின் நிறு வனத்தோடு ஒப்பந்தம் போட் டுக்கொள்கிறது தமிழக மின்சார வாரியம். அந்த ஒப்பந்தத்தில் நடந் துள்ள ஊழல்கள் தான் தற்போது அம் பலத்துக்கு வந்தி ருக்கிறது.

adani

இதுகுறித்து தி.மு.க. அரசுக்கு புகார் தெரிவித் திருக்கும் அறப்போர் இயக்கத்தின் கன்வீனர் ஜெயராம் வெங்கடேசனிடம் நாம் பேசியபோது, "அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் தமிழக மின்சார வாரியத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி டெண்டரில் நடந்துள்ள ஊழல்கள் 6000 கோடி. இதில் 3000 கோடி ஊழல்களை அதானி நிறுவனம் மட்டுமே செய் திருக்கிறது.

Advertisment

அதா

அதாவது, தங்களின் அனல் மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருளான நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து மின்சார வாரியம் இறக்குமதி செய்கிறது. இதற்காக கடந்த அ.தி.மு.க.வின் 2012-2016 காலகட்டத்தில் 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியை இறக்குமதி செய்தது தமிழக மின்சார வாரியம்.

இதற்கான டெண்டர் விடுகிறார் வாரியத்தின் அன்றைய சேர்மனாக இருந்த ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ். பொதுவாகவே, டெண்டர்கள் யாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமென அரசும் வாரியமும் முடிவு செய்கிறதோ அதற்கேற்ப டெண்டர்களின் விதிகளை அதிகாரிகள் உருவாக்குவார் கள். அந்த வகையில், இந்த நிலக்கரி இறக்குமதிக்கான டெண்டரில் கலந்துகொள்ளும் நிறுவனம் 1000 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் கொண்டதாக இருக்க வேண்டும் என்று டெண்டர் கண்டிசன் போடப்படுகிறது. எதற்காக? அதானி உள்ளிட்ட சிலர் மட்டுமே டெண்டரில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காகத் தான்.

மேலும், நிறையபேர் கலந்துகொண்டால் கூட்டுச் சதி செய்வது கடினம். அதேசமயம், சந்தை மதிப்புக்கு (மார்கெட் வேல்யூ) தான் நிலக்கரியை வாங்க வேண்டிய நிர்ப்பந்தமும் உருவாகும். சந்தை மதிப்பில் வாங்கினால் கொள்ளையடிக்க முடியாதே! அதனால்தான், மூணு நாலு பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்கிற அளவுக்கு கண்டிசன்கள் உருவாக்கப்படும்.

அதன்படி உருவாக்கப்பட்ட டெண்டர்களில் அதானி நிறுவனம் உள்பட சில நிறுவனங்கள் கலந்துகொண்டன. எல்லோருக்கும் டெண்டர்கள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. 49 சதவீதம் அதானிக்கும், 51 சதவீதம் மற்ற நிறுவனங்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த டெண்டர்களில் தான் மிகப்பெரிய ஊழல்கள் தாண்டவமாடியிருக் கின்றன. அதாவது, சந்தை மதிப்புக்கு நிலக்கரியை வாங்காமல், ஒரு மெட்ரிக் டன்னுக்கு 21 அமெரிக்க டாலர்கள் அதிகமாக கொடுத்து வாங்கியுள்ளனர்.

adani

உதாரணத்துக்கு, சில பர்ச்சேஸ் ஆர்டர்களை பார்ப்போம். அதாவது, பிப்ரவரி 5, 2014-ல் தமிழக அரசுக்கு சொந்தமான தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம், ஒரு டன் நிலக்கரியை 70 டாலர் கொடுத்து 3 லட்சம் மெட்ரிக் டன் நிலக்கரியை வாங்கியுள்ளது. அதே காலகட்டத்தில், பிப்ரவரி 7, 2014-ல் நம்முடைய மின்சார வாரியம், அதானியிடமிருந்து 16,80,000 டன் நிலக்கரியை வாங்கியிருக்கிறது. இதற்காக ஒரு டன் நிலக்கரிக்கு கொடுக்கப்பட்ட விலை 91 டாலர். ஆக, ஒரு டன்னுக்கு 21 டாலர் கூடுதல் விலை கொடுத்து அதானியிட மிருந்து வாங்கியுள்ள னர்.

அதேபோல, 2015 மே மாதத்தில் மின்சார வாரியமும் செய்தித்தாள் நிறுவனமும் நிலக்கரியை வாங்கியிருக்கிறார்கள். அப்போது மின்சார வாரியம் அதானியிடமிருந்து ஒரு டன் நிலக்கரியை 77 டாலருக்கும், செய்தித் தாள் நிறுவனம் வெறும் 56 டாலருக்கும் வாங்கி யுள்ளன. இதிலும் 21 டாலர்கள் அதானி உள் ளிட்ட மற்ற நிறுவனங்களுக்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒவ்வொரு பர்ச்சேஸ் ஆர்டரும் அதானி உள்பட மற்ற நிறுவனங்களிடமிருந்து ஒரு டன் நிலக்கரியை 21 டாலர்கள் கூடுதலாக கொடுத்து மின்சார வாரியம் வாங்கியுள்ள வகையில், இந்த ஒற்றை டெண்டர் மூலம் வாங்கப்பட்ட 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியை கணக்கிடும் போது சுமார் 6,000 கோடி ரூபாய் கூடுதலாக கொடுத்து வாங்கியிருக்கிறது மின்சார வாரியம். இதில் 1.19 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியை அதானியிடமிருந்து மட்டுமே பர்ச்சேஸ் செய்திருக்கிறார்கள். இதன் தொகை மட்டுமே 3000 கோடி ரூபாய்.

ஆக, இந்த ஒரு டெண்டரில் மட்டுமே 6000 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு. மக்களின் பணத்தை அ.தி.மு.க. அரசும் அதானி உள்ளிட்ட நிறுவனங்களும் இப்படி சூறையாடியிருக்கின்றன.

இதுகுறித்து, சி.பி.ஐ.யிடம் புகார் கொடுத் தோம். ஆனால், சி.பி.ஐ. அதிகாரிகளோ, "அதானி நிறுவனமா? எங்களால் ஆக்சன் எடுக்க முடியாது. நீங்கள் மாநில அளவில் பார்த்துக்கொள்ளுங்கள்' என வெளிப்படையாகவே சொல்லிவிட்டனர். அதேபோல, வருவாய் புலனாய்வுத்துறையிடம் புகார் கொடுத்தபோதும், இதே பதில்தான் வந்தது.

இதனையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் 2018-ல் ஆதாரங்கள் அனைத்தையும் இணைத்து புகார் கொடுத்தோம். அவர்களும் கிடப்பில் வைத்துவிட்டனர். 2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. "இந்த ஊழலில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய முகாந்திரம் இருக்கிறது; ஊழல்கள் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. வழக்குப்பதிவு செய்ய அனுமதி கொடுங்கள் என தி.மு.க. அரசிடம் லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கை வைத்தது. ஆனால், கடந்த 11 மாதங்களாக இதற்கு அனுமதி தரப்படவில்லை.

தற்போதைய முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, இந்த நிலக்கரி ஊழல் மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஆக்சன் எடுக்க மறுப்பதால், நீங்கள் ஆக்சன் எடுக்க வேண்டுமென தமிழக கவர்னரிடம் புகார் கொடுத்தார். ஆனால், தற்போது அவரது ஆட்சியிலும் ஆக்ஷன் எடுக்க அனுமதி கிடைக்க மறுக்கிறது.

இந்த மெகா ஊழலில் அதானி உள்ளிட்ட நிறுவனங்கள் மட்டுமல்லாமல், மின்சாரத்துறையின் அன்றைய அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், வாரியத்தின் அன்றைய சேர்மன் ஞானதேசிகன் ஆகியோரும் குற்றவாளிகள் தான். இவர்கள் மீது குறைந்தபட்சம் எஃப்.ஐ.ஆராவது தி.மு.க. அரசு பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால், ஆக்சன் எடுக்கப்படவில்லை.

அதானியைக் கண்டு சி.பி.ஐ.யும், வருவாய் புலனாய்வுத்துறையும் பயப்படலாம். ஏன்னா, பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் அதானி. ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு அப்படி யில்லையே! பிறகு ஏன், அதானிக்கு எதிராகவும், நத்தம் விஸ்வநாதன் மற்றும் ஞானதேசிகன் ஐ.ஏ.எஸ்.சுக்கு எதிராகவும் ஆக்சன் எடுக்க தயங்க வேண்டும்? நேர்மையான நிர்வாகத்தை தருவதாகச் சொல்லப்படும் திராவிட மாடல் ஆட்சியிலும்கூட அதானியும் ஊழல் அதிகாரிகளும் காப்பாற்றப் படுகிறார்கள்''’என்று ஆவேசப்படுகிறார் அறப்போர் ஜெயராமன்.

2ஜி விவகாரத்தில் ஊழல் நடந்திருப்பதாக இப்போது தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. அண்ணாமலை அட்டாக் செய்கிறபோது, பிரதமர் மோடிக்கும் பா.ஜ.க.வுக்கும் வேண்டப்பட்டவரான அதானி மீது வழக்குப்பதிவு செய்து பா.ஜ.க.வுக்கு அட்டாக் கொடுக்க முதல்வர் ஸ்டாலின் முன்வரவேண்டும் என்கிறார்கள் தி.மு.க. ஆதரவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

adani

nkn200124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe