அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட ரெய்டு கள், அ.தி.மு.க. தரப்பை பதட்டத்தில் மூழ்க வைத்திருக்கிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என சென்ற 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்டமாக மொத்தம் 69 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். அதில், ரூபாய்
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட ரெய்டு கள், அ.தி.மு.க. தரப்பை பதட்டத்தில் மூழ்க வைத்திருக்கிறது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என சென்ற 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முதற்கட்டமாக மொத்தம் 69 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர். அதில், ரூபாய் இரண்டு கோடியே பதினாறு லட்சம் ரொக்கம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். இவற்றின் போது கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில்தான் 20-ஆம் தேதி இரண்டாம்கட்ட ரெய்டுகள் நடத்தப்பட்டன.
ஈரோட்டைப் பொறுத்தவரை, சந்தான்காடு பகுதியில், பெயிண்ட் மற்றும் கண்ணாடி விற்பனை உரிமையாளரான குமார் என்ற கோபாலகிருஷ்ணன் வீடு, ஒண்டிக்காரன் பாளையம் ஐஸ்வர்யா கார்டனிலுள்ள தங்கமணி மகன் தரணிதரனின் கல்லூரி நண்பர் செந்தில்நாதன் வீடு, சக்திநகர் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பாலசுந்தரம் வீடு ஆகிய மூன்று இடங்களில் போலீசார் சோதனை செய்தனர்.
கோபாலகிருஷ்ணன் வீட்டில் ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரும், செந்தில்நாதன் வீட்டில் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரும், பாலசுந்தரம் வீட்டில் கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் தொடர் சோதனையில் ஈடுபட்டனர். கோபாலகிருஷ்ணன், செந்தில்நாதன், பாலசுந்தரம் ஆகியோரது வீடுகளி லிருந்து கணக்கில் வராத பல லட்சம் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
இதேபோல் நாமக்கல்லில் பி.எஸ்.கே. கட்டுமான நிறுவன உரிமை யாளர், வீடு, அலுவலகம், உறவினர் வீடு என 9 இடங்களிலும், பள்ளிப் பாளையத்தில் தங்கமணியின் ஆடிட் டர் அலுவலகம், சேலத்தில் ஒரு உற வினர் வீடு என தொடர் சோதனையில் ஈடுபட்டனர். தங்கமணிக்கு பினாமிகள் மட்டும் 30 பேருக்கு மேல் இருப்பதாக வும், ஒவ்வொருவரின் பெயரிலும் லெட்டர் பேடு கம்பெனிகள், அவற்றின் மூலம் நூற்றுக்கணக்கான கோடிகள் வரவுசெலவு நடத்தியதையும் அதி காரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பத்து வருடம் அமைச்சர் பதவி யில் இருந்ததை வைத்து, அசையும் மற்றும் அசையா சொத்தாக தங்கமணி ஆயிரம் கோடிக்குமேல் சேர்த்திருக் கிறார் என்கிறார்கள் ரெய்டில் ஈடு பட்ட அதிகாரிகள். ரெய்டுக்குப் போன அதிகாரிகளையே ஆச்சரியத் தில் வாயைப் பிளக்க வைத்திருக்கிறார் ஜெகஜாலக் கில்லாடியான தங்கமணி.