திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீமான் வேத பாடசாலையில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 16 மாணவர்கள் தங்கி வேத பாடங்களை பயின்று வருகின்றனர். இந்த ஆசிரமத்தை நிர்வகித்து வருபவர் பத்ரி பட்டர். பாடசாலையின் விதிமுறைப்படி தினமும் காலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும். 5 மணி வரை பாடசாலைக்குள் உள்ள சில பணிகளை செய்துமுடித்த பின்பு அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் குளிக்கச் செல்வது வழக்கம்.
இதில் சில தினங்களுக்கு அதிகாலையில் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத், ஆந்திராவை சேர்ந்த அபிராம், மன்னார்குடியை சேர்ந்த ஹரி பிரசாத், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகிய மாணவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கொஞ்சம் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். கொள்ளி
திருச்சி ஸ்ரீரங்கம் பட்டர்தோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீமான் வேத பாடசாலையில் தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 16 மாணவர்கள் தங்கி வேத பாடங்களை பயின்று வருகின்றனர். இந்த ஆசிரமத்தை நிர்வகித்து வருபவர் பத்ரி பட்டர். பாடசாலையின் விதிமுறைப்படி தினமும் காலை 3 மணிக்கெல்லாம் எழுந்துவிட வேண்டும். 5 மணி வரை பாடசாலைக்குள் உள்ள சில பணிகளை செய்துமுடித்த பின்பு அருகில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் குளிக்கச் செல்வது வழக்கம்.
இதில் சில தினங்களுக்கு அதிகாலையில் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்த விஷ்ணு பிரசாத், ஆந்திராவை சேர்ந்த அபிராம், மன்னார்குடியை சேர்ந்த ஹரி பிரசாத், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் ஆகிய மாணவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கொஞ்சம் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பு அணையிலிருந்து குடிநீருக்காக 1,900 கனஅடி நீர் திறந்துவிடப் பட்டுள்ளதால், வழக்கமாக ஓடிக்கொண்டிருந்த நீரைவிடக் கொஞ்சம் கூடுதலாக தண்ணீர் ஓடியுள்ளது. அது தெரியாமல் குளித்ததில் 3 பேர் சுழலில் சிக்கி உள்ளே இழுக்கப்பட்டுள்ளனர். இதில் கோபாலகிருஷ்ணன் மட்டும் நீந்தி தப்பிவந்து கரை சேர்ந்துள்ளார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், காவல்துறையின ரும், தீயணைப்பு வீரர்களும் இணைந்து 3 சிறுவர் களையும் தேடினர். சிறுவர்களின் உடல்கள் கிடைக்காததால், முக்கொம்பு கல்லணையிலிருந்து கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை நிறுத்துவதற்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து விஷ்ணு பிரசாத் முதலில் பிணமாக மீட்கப்பட்டார். மற்ற இருவரையும் 30 மணி நேரத்திற்கும் மேலாகத் தேடி பிணமாக மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் திருச்சி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பெற்றோர்களிடம் வழங்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து அங்குள்ளவர்களிடம் விசாரித்தபோது… "அந்த பாடசாலையின் காப்பாளர் பத்ரி பட்டர் மிகவும் கடுமையாக நடந்துகொள்வார். பாடசாலையில் பயின்றுவரும் சிறுவர்களை பெற்றோர்கள் சந்திக்க அனுமதிப்பதே இல்லை. இவருக்கு மிகவும் நெருக்கமானவரான ரெங்கராஜன் நரசிம்மன் தான் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் மீது தொடர்ந்து பல வழக்குகள் போட் டுள்ளவர். ஆனால் சிறுவர்கள் உயிரிழந்த சம்ப வத்தை இதுவரை அவர் கண்டுகொள்ளவில்லை. அதேபோல் பத்ரி பட்டருக்கும் இச்சம்பவம் குறித்து எந்தவித பதட்டமும் இல்லை என்றே சொல்லலாம். எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கொள்ளிடத்தில் நீர் திறந்துவிட்டுள்ளதால் சிறுவர்களின் உயிரிழப்புக்கு தமிழ்நாடு அரசுதான் காரணமென்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் கூறியதாகத் தெரிகிறது. பா.ஜ.க.வும் இதுகுறித்து வாய்திறக்கவில்லை." என்றனர்.
இந்நிலையில், பத்ரி பட்டர், திருச்சி மாவட்ட பா.ஜ.க. முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் சேது அரவிந்துடன் சென்று அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து அமைச்சரிடம் கேட்டபோது, "சிறுவர்களின் உடலை மீட்க கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை தற்காலிகமாக நிறுத்தி வைத்ததற்காக நன்றி சொல்ல வந்தார். சிறுவர்கள் உயிரிழப்பு விவகாரத்தில் யார் மீது தவறு இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையருக்கு அறிவுரை வழங்கி உள்ளேன்" என்றார்.
சாதாரணமாக ஒருவர் உயிரிழந்தாலே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரை கைது செய்வது வழக்கமான நடைமுறையாக இருக்கும்போது, இங்கே 3 சிறுவர்கள் உரிய பாதுகாப்பில்லாமல் அதிகாலையில் ஆற்றில் குளிக்க அனுப்பப்பட்டு உயிரிழந்தபோதும், தமிழ்நாடு அரசு பத்ரி பட்டர் மீது இதுவரை நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த உயிரிழப்புக்கான பழியிலிருந்து தப்புவதற்கான முயற்சியில் அவர் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறை ஆணையர் சத்யபிரியா உத்தரவின்படி, எச்சரிக்கை பலகைகளை வைக்கத் திட்டமிட்டுள்ளனர். மேலும் அவரிடம் பேசியபோது… "உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு யார் மீது இருந்தாலும் நடவடிக்கை எடுக்கபடும். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும்." என்று கூறினார்.
இந்த உயிரிழப்பு தொடர்பாக பத்ரி பட்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனியாவது திருந்துவாரா என்று பார்ப்போமென் றும் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர்களே குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர். இதுதொடர் பாக விளக்கம் கேட்பதற்காக பத்ரி பட்டரை 95******80 என்ற எண்ணில் தொடர்பு கொண்ட போது, அந்த எண் அணைத்து வைக்கப்பட்டி ருந்தது. 0431******9 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் பதிலளிக்கவில்லை.