ந்தியாவில் எந்த மாநிலத்தில் தேர் தல் நடந்தாலும், அந்த மாநிலத்தின் தேர்தலைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்பவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. அந்த வகையில், இன்னும் 5 மாதங் களில் தமிழகத்தில் நடக்க விருக்கும் சட்டமன்றத் தேர்தலை கவனிக்கும் பொறுப்பும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. பா.ஜ.க. தலைமையில் மாநிலத் தில் ஆட்சியமைப்பது அல்லது பா.ஜ.க. ஆதரவில் ஆட்சியை உருவாக்குவது என்பதுதான் அமித்ஷாவின் ஒரே அஜெண்டா.

Advertisment

இந்த நிலையில், தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளர்களாக பா.ஜ.க. எம்.பி. பைஜெயந்த் பாண்டே மற்றும் மத்திய விமானப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் முரளிதர் மொஹல் ஆகியோரை கடந்த மாதம் நியமித்தார் அமித்ஷா.

Advertisment

இந்த நிலையில், தேர்தல் பொறுப்பாளர்கள் பைஜெயந்த் பாண்டேவும், முரளிதர் மொஹ லும் கடந்தவாரம் சென்னை வந்தனர். பா.ஜ.க. மூத்த தலை வர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் பைஜெயந்த் பாண்டே.

இதற்கு முன்னதாக, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்குள் விஜய்யை கொண்டுவரும் நோக்கத்தில் முதல்நாள் நள்ளிரவில் விஜய்யுடன் நீண்டநேரம் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார் முரளிதர் மொஹல். பேச்சு வார்த்தையில் நடந்தவைகள் அமித்ஷாவிடம் ரிப்போர்ட்டாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில்தான், மீண்டும் தமிழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார் பைஜெயந்த் பாண்டே. சென்னை வந்த அவர், பா.ம.க. அன்புமணியை சந்தித்துப் பேசியிருக்கிறார். இதுகுறித்து பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, "அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியை வலிமைப்படுத்தும் நோக்கத்தில் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ள கட்சிகளை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சிகளை எடுத்துவருகிறது எங்கள் கட்சியின் (பா.ஜ.க.) தேசிய தலைமை. 

Advertisment

அந்த வகையில்தான் த.வெ.க. விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூட்டணிக்கு அவர் ஓ.கே. சொல்லிவிட்டார். ஆனால், சில நிபந்தனைகளை விதித்துள்ளார் விஜய்.  தேர்தலுக்கு முன்னதாக முதல்வர் வேட்பாளரை டிக்ளர் செய்யக்கூடாது என்கிற நிபந்தனை உட்பட த.வெ.க.விற்கான சீட் எண்ணிக்கை, தொகுதிகளை தேர்வு செய்யும் உரிமை உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தியிருந்தார் விஜய். விஜய்யின் நிபந்தனை எடப்பாடிக்கும் தெரிவிக்கப்பட்டது. அதனைக்கேட்டு அவர் ஷாக்காகியிருக்கிறார். 

இந்த நிலையில்தான், பா.ம.க. அன்புமணி யை அவரது இல்லத்தில் கடந்த 16-ஆம் தேதி சந்தித்துப் பேசினார் பைஜெயந்த் பாண்டே. டாக்டர் ராமதாஸ் அப்பல்லோவில் அட்மிட்டாகி யிருந்த சமயத்தில் அவரை சந்தித்து உடல்நலம் விசாரித்த பாண்டே, அன்றைக்கே அன்புமணியை யும் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அன்றைக்கு சென்னையில் அன்புமணி இல்லாததால் சந்திப்பு நடக்கவில்லை. தற்போது நடந்துள்ளது. இந்த சந்திப்பில், "தேசிய ஜனநாயக கூட்டணியை தமிழகத்தில் வலிமையாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கேன். கூட்டணியில் இணைவது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?'' என பாண்டே கேட்க, "தே.ஜ.கூ.வில்தானே இருந்துவருகிறேன். அது தொடரும்'' என அன்புமணி சொல்லியிருக்கிறார். 

"உங்களுக்கும், உங்கள் தந்தைக்குமிடையே ஏற்பட்டுள்ள விரிசலால் பா.ம.க.வில் யாருக்கு செல்வாக்கு என்கிற கேள்வியும் சந்தேகமும் எல்லோரிடமும் இருக்கிறது. எங்களுக்கும் இருக்கிறது. இதில் ஒரு க்ளாரிட்டியை அமித்ஷா எதிர்பார்க்கிறார்'' என பாண்டே சொல்ல, "இந்த விரிசல் தற்காலிகமானதுதான்; விரைவில் சரியாகும்'' என பொத்தாம்பொதுவாக கூறி யிருக்கிறார் அன்புமணி. சீட் ஷேரிங் உள்ளிட்ட அடிப்படை விசயங்களை இருவரும் விவாதித்தனர். 

அதில், "பா.ம.க.வுக்கு 2001-ல் 27 தொகுதி களை ஜெயலலிதாவும், 2006-ல் 30 தொகுதிகளை கலைஞரும், 2021-ல் 23 தொகுதிகளை எடப்பாடி பழனிச்சாமியும் ஒதுக்கினர். இப்போது எங்களின் எதிர்பார்ப்பு, ஜெயலலிதா ஒதுக்கியது போல 27 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் வேண்டும்'' என சொல்லியிருக்கிறார் அன்புமணி. 

"உங்களின் எதிர்பார்ப்பை மேலிடத்தில் தெரிவிக்கிறேன். ராஜ்யசபா சீட்டுக்கு அ.தி.மு.க. தலைமையிடம்தான் நீங்கள் பேசவேண்டும் என அழுத்தமாகச் சொல்லிவிட்டு கிளம்பினார் பாண்டே''”என்று விவரிக்கின்றனர் பா.ஜ.க.வினர். 

அன்புமணி ஆதரவு பா.ம.க.வில் விசாரித்த போது, "அய்யா ராமதாஸ் எப்படி பேச்சுவார்த்தை நடத்துவாரோ அதே பாணியில்தான் அன்புமணி பேசினார். பா.ஜ.க.வின் தேர்தல் பொறுப்பாளருக்கு இதில் திருப்திதான். ஆனால், கூட்டணி கட்சி களுக்கு சீட் எண்ணிக்கையை அ.தி.மு.க.தான் முடிவுசெய்யும். அப்படியிருக்கையில் பா.ஜ.க. விவாதிக்கிறதே என்பது மட்டும்தான் எங்களுக்கு சந்தேகம். விஜய்யின் செல்வாக்கு குறித்து அன்புமணியிடம் பைஜெயந்த் பாண்டே கேட்டிருக்கிறார். அவருக்கான செல்வாக்கு எந்தளவுக்கு இருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியாது. அதேசமயம் "அவரது வருகை, தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதுதான்' என விவரித்துள்ளார் அன்புமணி. 

"கூட்டணி விசயத்தில் அ.தி.மு.க.வின் ரோல் என்ன? கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க.வா?, பா.ஜ.க.வா? என்கிற கேள்விகள் அன்புமணிக்கு இருக் கிறது'’என்கிறார்கள் அன்புமணி ஆதரவாளர்கள். 

இப்படிப்பட்ட சூழலில், அ.தி. மு.க.வின் மேலிடத் தொடர்பாளர் களிடம் இது குறித்து விசாரித்தபோது, "தேசிய ஜனநாயக கூட் டணிக்கு தேசிய தலைமை பா.ஜ.க. தமிழகத்தில் அ.தி. மு.க.தான் தலைமை. இதில் மாற்றுக் கருத்தே கிடையாது.  பா.ஜ.க. தலைவர்களுக்கு ஒரு அஜெண்டா இருக்கிறது. அதாவது, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 134 தொகுதிகள் அ.தி.மு.க.வும், மீதமுள்ள 100 தொகுதி கள் பா.ஜ.க.வும் பகிர்ந்துகொள்வது;  தங்களிட முள்ள 100 தொகுதிகளிலிருந்து கூட்டணிக் கட்சிகளுக்கு பா.ஜ.க. பிரித்துக் கொடுப்பது என்பதுதான் பா.ஜ.க.வின் திட்டம். தற்போது அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணிக்கு வருவதற்கு விஜய் சம்மதித்திருப்பதால் அ.தி.மு.க. 118-ம், பா.ஜ.க. 116-ம் பிரித்துக்கொள்வது என்றும், விஜய் உள்ளிட்ட மற்றவர்களுக்கு பா.ஜ.க. சீட்டுகளை ஒதுக்கும் என்றும் பா.ஜ.க. கணக்குப்போடுகிறது. 

 அதனால்தான், விஜய்யை தொடர்ந்து அன்புமணியிடம் பேச பைஜெயந்த் பாண்டேவை அனுப்பி வைத்துள்ளார் அமித்ஷா. ஆனால், பா.ஜ.க.வின் இந்த கணக்குகளுக்கும், அஜெண்டா வுக்கும் எடப்பாடியும் சரி, அ.தி.மு.க. தலைவர் களும் சரி… ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள். விஜய், அன்புமணி உள்ளிட்ட யாரை வேண்டு மானாலும் கூட்டணிக்கு பா.ஜ.க. அழைத்து வரட்டும். அதில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை.  ஆனால், யார், யாரை கூட்டணியில் வைக்க வேண்டும், அவர்களுக்கான சீட் எண்ணிக்கை எவ்வளவு, எந்தெந்த தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவது என்பதையெல்லாம் அ.தி.மு.க. தலைமைதான் முடிவு செய்யும். இதற்கு உடன்பாடில்லையெனில் பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் எடப்பாடி தயங்கமாட்டார்'' என்று சுட்டிக்காட்டுகின்றனர் அ.தி.மு.க.வினர். 

anbumani-box1

anbumani-box