Advertisment

25,500 ஏக்கர் நிலங்கள் எங்க சொத்து! -திருச்சியை திணறடிக்கும் வக்ஃபு வாரியம்!

tt

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ளது திருச்செந்துறை ஊராட்சி. இந்த ஊராட்சியில் பல தரப்பைச் சேர்ந்த 3500 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் மொத்தம் 389 ஏக்கர் நிலம் உள்ளது. 1800 வருட பழமைவாய்ந்த சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. அது மட்டுமல்லாது, தமிழக அரசின் சார் பில் வாழை பதப்படுத்தும் நிலையமும், விவசாய வணிக வளாகமும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெய ல-தா மீன்வளப் பல்கலைக்கழகமும் இங்குள்ளன.

Advertisment

tt

இந்நிலையில், கடந்த வாரம் இந்த ஊராட்சிக்குட்பட்ட முள்ளிகரும்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர், திருச்செந்துறையி லுள்ள தனக்கு சொந்தமான நிலத்தை விற்பதற்காக பதிவுத்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவரது பத்திரத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், "இந்த இடத்தை விற்பனை செய்ய முடியாது என்றும், இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து இடங்களும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது' என்றும் கூறவே, அதிர்ச்சியடைந் து

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ளது திருச்செந்துறை ஊராட்சி. இந்த ஊராட்சியில் பல தரப்பைச் சேர்ந்த 3500 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் மொத்தம் 389 ஏக்கர் நிலம் உள்ளது. 1800 வருட பழமைவாய்ந்த சந்திரசேகர சுவாமி கோவில் உள்ளது. அது மட்டுமல்லாது, தமிழக அரசின் சார் பில் வாழை பதப்படுத்தும் நிலையமும், விவசாய வணிக வளாகமும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெய ல-தா மீன்வளப் பல்கலைக்கழகமும் இங்குள்ளன.

Advertisment

tt

இந்நிலையில், கடந்த வாரம் இந்த ஊராட்சிக்குட்பட்ட முள்ளிகரும்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவர், திருச்செந்துறையி லுள்ள தனக்கு சொந்தமான நிலத்தை விற்பதற்காக பதிவுத்துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அவரது பத்திரத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், "இந்த இடத்தை விற்பனை செய்ய முடியாது என்றும், இந்த ஊராட்சியில் உள்ள அனைத்து இடங்களும் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது' என்றும் கூறவே, அதிர்ச்சியடைந் துள்ளார் ராஜகோபால். இந்த தகவல், மக்க ளிடையே காட்டுத்தீ போல பரவ, "காலங்காலமாக எங்கள் பெயரிலுள்ள நிலம் எப்படி வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமாகும்?'' என மக்கள் கேள்வியெழுப்ப, இப்போது இப்பிரச்சனையை பா.ஜ.க.வினர் கையிலெடுத்து தொடர் போராட் டங்களை நடத்திவருகின்றனர்.

இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் சிலரிடம் விசாரித்தபோது, "தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர், "பள்ளிவாசல் கள் மற்றும் தர்காவிற்கு என தானமாகக் கொடுக் கப்பட்ட சொத்துக்களை மீட்க வக்ஃபு வாரியத் திற்கு அரசு துணை நிற்கும்' என்று அறிவித்திருந் தார். அதன்படி, தென் மாவட்டங்களில் ஆக்கிர மிப்பு செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்றது. அதனடிப்படையில், வக்ஃபு வாரியம் சேகரித்து அனுப்பிய சொத்துக்களின் பட்டியல், பத்தி ரப்பதிவு அலுவலகங்களுக்கு ஒரு சுற்றறிக்கை யாக அனுப்பப்பட்டது. அதில், "பட்டியலில் உள்ள அந்த சொத்துக்களை எந்த காரணத் திற்காகவும் விற்கவோ, வாங்கவோ அல்லது பதிவுசெய்யவோ கூடாது' என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது'' எனக் கூறினார்கள். மன்னர்கள் ஆட்சிசெய்த காலத்தில் திருச்சியை ஆண்ட ராணி மங்கம்மாள், அதற்குமுன் ஆண்ட நிஜாம்கள், "நவாப்கள் கொடுத்த சொத்துக்கள் குறித்த உரிமை ஒப்பாவணம்' என்ற செப்புத்தகட்டின் அடிப்படையில்தான் இந்த சொத்துக்கள் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.

tt

Advertisment

தற்போது இப்பிரச்சனை வெகுவேகமாக விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், திருச்சி மாவட்ட வக்ஃபு வாரிய அதிகாரிகள் சில ரிடம் பேசியபோது, "திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரை, இன்றுள்ள சமயபுரம் கிராமத்தில் மட்டுமே சுமார் 1,414 ஏக்கர் நிலம் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தமானது'' எனக் கூறியவர்கள், "அதேபோல, பொதுத்துறை நிறு வனமான பி.எச்.இ.எல்., மத்திய பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள துப்பாக்கி தொழிற்சாலை, பாரதிதாசன் பல்கலைக்கழகம் என, கிட்டத்தட்ட 9 ஆயிரம் ஏக்கர் நிலம், நத்தர்வ- தர்ஹாவிற்கு சொந்தமானது என்பதற்கான சில பட்டயங்கள் உள்ளன. இவை மட்டுமல்லாமல், செம்பங்குளம் முழு கிராமமும், பெரியநாயகி சத்திரம் முழு கிராமமும், கோமகுடி, மணமேடு, பாகனூர் என 23 கிராமங்களும், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட புத்தூர், புலியூர், தென்னூர் என மாவட்டம் முழுக்க சுமார் 25 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் இனாம் செட்டில்மெண்ட் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன'' என நம்மை கிறங்கடித்தனர்.

இப்பிரச்சினையை முன்வைத்து சில தினங்களுக்கு முன்பு பொதுமக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டம் நடத்தியதன் விளைவாக ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் வைத்தியநாதன் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வக்ஃபு வாரியம் சொன்ன குறிப்பிட்ட சில பகுதி களில் பத்திரம் பதியலாம் என தற்காலிக முடிவு எட்டப்பட்டது. இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி திருச்செந்துறை சந்திரசேகர சுவாமி ஆலயத்திற்கு தரிசனத்திற்காக வந்த பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா நிருபர்களிடம் பேசும்போது, "நடப்பது தி.மு.க. ஆட்சியா அல்லது மாலிக்காபூர் ஆட்சியா? என சந்தேகம் எழுகிறது. இந்துக்களுக்கு சொந்தமான கிராமங்களில் அவர்களின் சொத்தை கொள்ளையடிக்க வக்ஃப் வாரிய தலைமை செயல் அதிகாரியான ரபியுல்லா முயற்சி செய்கிறார். எனவே, தமிழக அரசு அவரை உடனே கைது செய்ய வேண்டும். தவிர, இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலங்கள் என தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு வாசித்த அந்த பட்டியலில் உள்ள நிலங்கள் அனைத்தும் அறநிலை யத் துறைக்கு சொந்தமானது என 15 தினங்களுக்குள் தகவல் பலகையில் ஒட்டி வைக்க வேண்டும். இல்லை யென்றால், உணர்வுள்ள இந்துக்கள் ஒன்றுகூடி தொடர் போராட்டங்களை முன்னெடுப்பார்கள்'' என்றார்.

"திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட் டங்களில் வெடிக்கத் துவங்கியிருக்கும் இந்த விவகாரத் தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி முளையி லேயே கிள்ளி எறிய வேண்டும்' என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

nkn210922
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe