Advertisment

2500 போலி ஆப்கள் நீக்கம்! மோசடிகள் தடுக்கப்படுமா?

ss

""சார் ஒரு உதவி பண்ணமுடியுமா? நான் தனியார் பள்ளி ஆசிரியரா இருக்கிறேன். எனக்கு அப்பப்ப மாதக்கடைசியில் சின்னதா பணச்சிக்கல் வரும். ஏற்கெனவே பலரிடம் கடன் பெற்றிருப்பதால் திரும்ப அவர்களிடம் சென்று கேட்க முடியாத சூழல். அப்படிப்பட்ட சூழலில்தான் எனக்கு லோன் ஆப்ஸ் பத்தி நண்பர்கள் சொன்னாங்க. அப்படித்தான் ஊஹள்ஹ் ப்ர்ஹய் மாதிரி லோன் ஆப்-பினைப் பயன்படுத்தி சின்னதா 2000, 3000 ரூபாய் அளவுக்கு அப்போதைய தேவைக்கு வாங்கினேன். அப்படி வாங்கும்போது என்னோட மொபைலில் இருக்கும் நம்பர்களை அக்சஸ் பண்ண அனுமதி கேட்டாங்க. கொடுத்தால் தான் கடனே வாங்க முடியும் என்பதால் நானும் ஓகே கொடுத்தேன்.

Advertisment

dd

அதேபோல நான் சரியாவே வட்டியோட திருப்பிச் செலுத்தினேன். ஆனாலும் அதிக வட்டி போட்டு பணம் பிடுங்கப் பார்த்தாங்க... நான் முடியாதுன்னு அவங்களுக்கு ரிப்ளை பண்ணினேன். உடனே

""சார் ஒரு உதவி பண்ணமுடியுமா? நான் தனியார் பள்ளி ஆசிரியரா இருக்கிறேன். எனக்கு அப்பப்ப மாதக்கடைசியில் சின்னதா பணச்சிக்கல் வரும். ஏற்கெனவே பலரிடம் கடன் பெற்றிருப்பதால் திரும்ப அவர்களிடம் சென்று கேட்க முடியாத சூழல். அப்படிப்பட்ட சூழலில்தான் எனக்கு லோன் ஆப்ஸ் பத்தி நண்பர்கள் சொன்னாங்க. அப்படித்தான் ஊஹள்ஹ் ப்ர்ஹய் மாதிரி லோன் ஆப்-பினைப் பயன்படுத்தி சின்னதா 2000, 3000 ரூபாய் அளவுக்கு அப்போதைய தேவைக்கு வாங்கினேன். அப்படி வாங்கும்போது என்னோட மொபைலில் இருக்கும் நம்பர்களை அக்சஸ் பண்ண அனுமதி கேட்டாங்க. கொடுத்தால் தான் கடனே வாங்க முடியும் என்பதால் நானும் ஓகே கொடுத்தேன்.

Advertisment

dd

அதேபோல நான் சரியாவே வட்டியோட திருப்பிச் செலுத்தினேன். ஆனாலும் அதிக வட்டி போட்டு பணம் பிடுங்கப் பார்த்தாங்க... நான் முடியாதுன்னு அவங்களுக்கு ரிப்ளை பண்ணினேன். உடனே என்னோட கான்டக்ட்ல இருக்கும் அனைவருக்கும் என்னோட போட்டோவை ஆபாசமா மார்பிங் பண்ணி என்னோட நம்பர்லருந்தே அனுப்பி அசிங்கப்படுத்திட்டாங்க. என்னோட பள்ளி ஆசிரியைகளுக்கெல்லாம் அது போனதால பெரிய அவமானமா போயிடுச்சு சார். எனக்கு இந்த பிரச்சனைல ருந்து மீள வழி சொல்லுங்க சார்''.

இதேபோல நமக்கு அடிக்கடி புகார்கள் வரும். அப்படி வரும் போதெல்லாம் அவர்களை தைரியமாக அதனை எதிர் கொள்ளும்படி ஆலோசனை கூறுவோம். ஏனென்றால், இப்படியான மோசடி ஆப்களின் அதிகபட்ச உத்தியே நம்மிடமிருக்கும் கான்டக்ட் எண்களுக்கு நம்மைப்பற்றி அசிங்கமாக செய்தி அனுப்புவது மட்டுமே. அதாவது, நம்முடைய மரியாதையை சிதைக்கப் பார்ப்பார்கள். அதன்மூலம் மிரட்டுவார்கள். அடுத்ததாக, சம்பந்தப்பட்ட ஆப், அவர்களின் தொடர்பு எண்கள் குறித்து சைபர் கிரைமில் புகாரளிக்கச் சொல்வோம். தேவைப் பட்டால் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் வங்கியிலும் புகாரளிக்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் தொடர்ந்து டார்ச்சர் செய்வது தடுக்கப்படும். அடுத்ததாக, அவர்களைப் பிடிக்க சைபர் க்ரைம் போலீசார் முயற்சியெடுப்பார்கள். பலர், இப்படி ஏமாறும்போது வெளியில் சொல்ல கூச்சப்பட்டு அப்படியே விட்டுவிடுவார்கள். அதுதான் மோசடி கும்பலுக்கு தோதாக அமையும்.

இதுபோன்ற மோசடியாளர்கள் பெரும் பாலும் பாகிஸ்தான், பங்களாதேஷ், இந்தோனே ஷியா போன்ற வெளிநாடுகளிலிருந்தும், ஹரியானா, அஸ்ஸாம் போன்ற வட மாநிலங்களிலிருந்தும் தான் இதுபோன்ற மோசடிகளில் ஒரு குழுவாக ஈடுபடுகிறார்கள். இந்தியாவுக்குள் இயங்கும்வரை தீவிர தேடுதல் வேட்டையில் சிலசமயம் சிக்குகிறார்கள். பெரும்பாலும் சிக்காமல் வெவ்வேறு பெயர்களில் தப்பித்துவிடுகிறார்கள். இந்த மோசடி ஆப்களை நம்பி பணத்தையும் இழந்து, மன நிம்மதியையும் இழந்து தவிப்பது தான் வாடிக்கையாகிவருகிறது. படித்த, விவர மானவர்களே சில இக்கட்டான சூழல்களில் இத்த கைய மோசடி ஆப்களில் சிக்கிக்கொள்கிறார்கள்.

இந்நிலையில்தான் இந்த ஆப்களை தடைசெய்ய வேண்டுமென்று இந்தியா முழுவதுமிருந்து தொடர்ந்து குரலெழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக இப்படியான மோசடி ஆப்கள் குறித்து காவல் துறைக்கும் வங்கிகளுக்கும் புகார்கள் வர வர, அது குறித்து ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு செல்லச் செல்ல, ரிசர்வ் வங்கி, இதுபோன்ற ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாத போலி லோன் ஆப்கள் குறித்த லிஸ்ட்களை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்பி, அதன் ப்ளே ஸ்டோரிலிருந்து அந்த ஆப்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது. இத்தகைய போலி லோன் ஆப்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டதென்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கடந்த 18ஆம் தேதி, திங்களன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த நிதியமைச்சர், ""கடந்த ஏப்ரல் 2021 முதல் ஜுலை 2022 வரை 2500 போலி லோன் ஆப்கள், கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டன. இத்தகைய ஆப்கள் குறித்து கூகுள் நிறுவனத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி அளித்த விவரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த போலி ஆப்கள் குறித்து ஒன்றிய அரசு தீவிர கவனம் செலுத்துகிறது'' என்று தெரிவித்தார்.

Advertisment

aa

2500 போலி லோன் ஆப்கள் ஒழிக்கப்பட்டது நல்ல சேதியென்றாலும், புற்றீசல் போல அடுத்தடுத்து லோன் ஆப்கள் உருவாகிக்கொண்டே இருப்பது அபாயகரமான ஒன்று! எனவே இத்தகைய போலி லோன் ஆப்களை நடத்து வோர் மீது மிகக்கடுமை யான தண்டனை வழங்கு வதோடு, இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதே இதனைக் கட்டுப்படுத்த சிறந்த வழி என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

nkn271223
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe