Advertisment

தலைக்கு 25 ஆயிரம்! தமிழகத்திற்கு கடத்தப்படும் வடமாநில சிறுவர்கள்!

child

டிசம்பர் 16-ந் தேதி அதிகாலை 2.50.

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தின் 5 ஆவது பிளாட் பாரத்தில் சென்னையிலிருந்து வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் பலத்த மூச்சிரைப்போடு வந்து நின்றது. குளிரால் நடுங்கிய மூன்று சிறுவர்களோடு, சில நபர்கள் அதிலிருந்து இறங்க... அவர்கள் முகத்தில் திருட்டுத் தனம் தெரிந் தது. அப்போது ஸ்டேஷனில் இருந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர், சந்தேகமாகி, அந்த childநபர்களை விசாரிக்க... அந்தக் கடத்தல் புள்ளிகள் வசமாகச் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

அந்த குழந்தைகள் நல ஆர்வலரிடம் இது குறித்து விசாரித்த போது... ""ரயில்ல இருந்து சிறுவர்களோடு இறங் கிய அந்த நபர்களைப் பார்த்த துமே தப்பான ஆளுங்க மாதிரி தெரிஞ்சாங்க. அதனால் தீவிர மாக கவனிக்க ஆரம்பிச்சேன். அவர்கள் அந்த சிறுவர்களை... "ஹே, ஜல்தி ஜா, ஜல்தி ஜா...' என மிரட்டி வேகமாக அழைத்துச் செல்ல முயன்றனர். உடனே நான் அந்த சிறுவர்களை விசாரித்தேன். அவர்கள் பீகார் மாநிலம் முசாபர் பூர் அருகிலுள்ள லவுட்டான் என்ற கிராமத்தை சேர்ந்த பாலேஷ், மாலேஷ் மற்றும் ராகேஷ் என்று தங்கள் பெயர் விபரத்தைச் சொன்னார்கள். இதில், இருவருக்கு வயது 16. ஒரு சிறுவனுக்கு மட்டும் 14 வயது. பால் வடியும் முகத்தோடு இர

டிசம்பர் 16-ந் தேதி அதிகாலை 2.50.

திருச்சிராப்பள்ளி ரயில் நிலையத்தின் 5 ஆவது பிளாட் பாரத்தில் சென்னையிலிருந்து வந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் பலத்த மூச்சிரைப்போடு வந்து நின்றது. குளிரால் நடுங்கிய மூன்று சிறுவர்களோடு, சில நபர்கள் அதிலிருந்து இறங்க... அவர்கள் முகத்தில் திருட்டுத் தனம் தெரிந் தது. அப்போது ஸ்டேஷனில் இருந்த குழந்தைகள் நல ஆர்வலர் ஒருவர், சந்தேகமாகி, அந்த childநபர்களை விசாரிக்க... அந்தக் கடத்தல் புள்ளிகள் வசமாகச் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

அந்த குழந்தைகள் நல ஆர்வலரிடம் இது குறித்து விசாரித்த போது... ""ரயில்ல இருந்து சிறுவர்களோடு இறங் கிய அந்த நபர்களைப் பார்த்த துமே தப்பான ஆளுங்க மாதிரி தெரிஞ்சாங்க. அதனால் தீவிர மாக கவனிக்க ஆரம்பிச்சேன். அவர்கள் அந்த சிறுவர்களை... "ஹே, ஜல்தி ஜா, ஜல்தி ஜா...' என மிரட்டி வேகமாக அழைத்துச் செல்ல முயன்றனர். உடனே நான் அந்த சிறுவர்களை விசாரித்தேன். அவர்கள் பீகார் மாநிலம் முசாபர் பூர் அருகிலுள்ள லவுட்டான் என்ற கிராமத்தை சேர்ந்த பாலேஷ், மாலேஷ் மற்றும் ராகேஷ் என்று தங்கள் பெயர் விபரத்தைச் சொன்னார்கள். இதில், இருவருக்கு வயது 16. ஒரு சிறுவனுக்கு மட்டும் 14 வயது. பால் வடியும் முகத்தோடு இருந்தனர்.

Advertisment

உடனே எங்கள் சைல்ட் லைன் ஒருங் கிணைப்பாளருக்கு நான் தகவல் தெரிவிக்க, அவர் விரைந்து வந்தார். அவர் விசாரித்த போது, சிறுவர் களை அழைத்து வந்திருந்த அந்த நபர்கள், தங்களை முசாபர்பூரை சேர்ந்த சூரத்குமார் ஷைனி மற்றும் கமலேஷ் என்றும் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் சென்னை வரை விமானத்தில் வந்ததாகவும், பிறகு அங்கிருந்து திருச்சிக்கு ரயிலில் வந்ததாகவும் கூறினார்கள். மேலும், திருச்சியில் பல இடங்களில் கிளை பரப்பி கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் ஒரு முன்னணி நிறுவனத்தில், காரின் சீட் தைக்கும் பணிக்காக இவர்களை அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ரயில்வே காவல் துறையில் புகார் அளித்து விட்டு அவர்களை பாதுகாப்பாக குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் சென்றோம்'' என்றார் விபரமாக.

வந்த மூவரில் சூரத்குமார் ஷைனி யார் யாருக்கோ போன் செய்து விசயத்தைக் கூறிய தோடு, "அந்த மூவரும் தனக்கு உறவுக்கார பையன்கள்' என்றும், ஊர் சுற்றிப்பார்ப்பதற்காக அவர்களை திருச்சி அழைத்து வந்ததாகவும் சொல்லி அவர்களை அங்கிருந்து மீட்டுச் செல்வதிலேயே குறியாக இருந்திருக்கிறார். இந்தப் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு நபரான கமலேஷ் அங்கிருந்து நழுவி விட்டார். இந்த சம்பவம் நடக்கும் போதே எந்த நிறுவனத்திற்கு அந்த சிறுவர்கள் வேலைக்கு வந்ததாக கூறினார்களோ அதன் உரிமையாளர் எனக் கூறிக் கொண்டு வந்த நபரும், அவர்களை விடுவிக்க எவ்வளவோ முயன்றிருக்கிறார். ஆனால், குழந்தை பாதுகாப்பு களப்பணியாளர்கள் எதற்கும் அசையாததால் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார் அவர். அவரோடு கடத்தல் ஏஜன்ட் சூரத் குமார் ஷைனியும் ‘எஸ்கேப்’ ஆகிவிட்டார்.

child

அந்த சிறுவர்களிடம் விசாரித்த போது அவர்கள் தெரிவித்த தகவல் அத்தனையும் பகீர் ரகம். அவர்களை அவர்கள் குடும்பத்தினருக்குத் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் கொடுத்து விட்டு, இங்கு அழைத்து வந்தார்களாம். எப்போது ஊர் திரும்புவோம் என்பது எங்களுக்கே தெரி யாது என்றவர்கள், தங்களோடு மொத்தம் 9 பேர் சென்னை வந்து இறங்கியதாகவும், மற்ற 6 பேர் எங்கு சென்றார்கள் என்பது தெரியாது என்றும் கூறி யிருக்கிறார்கள். இதுபோல் வடமாநில சிறுவர்கள் பலரும் தமிழகத்துக்கு குழந்தைத் தொழி லாளர்களாகக் கடத்தப்படுவதாக வும் அவர்கள் பரிதாபத்தோடு தெரிவித்தனர்.

வடமாநில சிறுவர்கள் மீட்கப்பட்டிருக் கும் நிலையில் சைல்ட் லைனைத் தொடர்பு கொண்ட ஒரு நபர்,“""நான் ஐ.எஸ். ஏ.சி பேசுறேன். அந்த மூன்று சிறுவர் களையும் வெளியே அனுப்புங்கள்''’ என்று பலமுறை மிரட்டல் தொனியில் பேசியிருக்கிறார். இது கமிஷனர் ஜே.லோகநாதன் கவனத்திற்குச் செல்ல, விசாரணையில், அந்த நபர் மாநகர நுண்ணறிவுப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி என்பது தெரிய வந்ததாம். அதன் பிறகு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பான ‘சியர்ஸ்’சின் தலை வரும், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவருமான சு.சிவராசு மற்றும் திருச்சி ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் ஆகியோரின் தீவிர முயற்சியால் கடத்தல் நபர்கள் மீது செக்சன் 370-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து, திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பிரும் வழக்கறிஞருமான என்.கிருஷ்ணமூர்த்தி யிடம் கேட்டபோது, ""இதற்கு ஏஜென்டாக செயல்பட்ட சூரத்குமார் ஷைனி மீது ஜாமீனில் வெளிவர முடியாத ஐ.பி.சி. கடத்தல் தடுப்புச் சட்டத்தின்படி வழக்கைப் பதிவு செய்திருக்கிறது ரயில்வே போலீஸ். அந்த மூன்று சிறுவர்களையும் அவர்களின் பெற் றோர் வந்தால் மட்டுமே நாங்கள் அனுப்பி வைப்போம்'' என்றார் அழுத்தமாக.

""கடைக்குக் கடை, "இங்கு குழந்தை தொழிலாளர்கள் இல்லை' என எழுதப்பட்டி ருக்கும் சூழலில், திருச்சியில் மட்டும் சுமார் நூற்றுக்கணக்கான வடமாநில குழந்தை தொழிலாளர்கள் பணியில் இருக்கலாம்'' என அதிர்ச்சியளிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சமீபகாலமாக, திருச்சி, சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகமாக குடியேற்றப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், வட மாநில குழந்தை கடத்தல் ஏஜண்டுகளின் சொர்க்க புரியாகவும் மாறிக்கொண்டிருக்கிறது தமிழகம்.

-பாரதிவேந்தன்

____________________________

குழந்தை பாதுகாப்பு மையத்தில் வைத்து அந்த சிறுவர்களை விசாரித்துக் கொண்டிருந்த போது, அங்கு திடீரென வந்த ஒரு வட மாநில நபர், ""தனது பெயர் கல்யாண் சிங் என்றும், இவர்கள் அனைவரும் எனக்கு நன்கு தெரிந்தவர்கள். ஊர் சுற்றிப் பார்ப்பதற்காக வந்தார்கள்'' என்றும் கூறியதோடு, அவர்களைத் தன்னோடு அனுப்பிவைக்கும்படியும் வலியுறுத்தியிருக்கிறார். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையைத் தொடங்கியதும், "இதோ வர்றேன்' என்றபடி "எஸ்கேப்' ஆகிவிட்டாராம். அன்றாடங் காய்ச்சிகளான இந்த சிறுவர்கள் ஊர் சுற்றிப் பார்க்க ஃபிளைட்டில் வந்தார்கள் என்பதை யாராவது நம்புவார்களா? இந்த சிறுவர்கள் கடத்தலின் பின்னணியில் ஒரு பெரிய நெட் ஒர்க்கே இருப்பதை அறியமுடிகிறது.

nkn301220
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe